Thursday, May 20, 2010

நேஹா நேர‌ம்!

"அம்மா ‍ போய்க் குளிச்சி.. டெச்சு மாத்தி."

மாலை அம்மா வீட்டிலிருந்து அவ‌ளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தவுடன் குளித்து உடை மாற்றி வ‌ந்த‌ பின் தான் வந்து கொஞ்சுகிறாள்.

"அம்மா பச்சிக்குதும்மா..."

"இதோ ஒரு நிமிஷ‌ம்டா க‌ண்ணா" (ப‌த‌றிப் போய் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய் எடுத்து வைக்கிறேன்.)

"ல்ல‌.. டூ மினிஸ்" என்று கை காட்டி விட்டு ஓடுகிறாள். அட‌க்க‌ஷ்ட‌மே மாகி விள‌ம்ப‌ர‌ம்!

நாம், சோஃபாவில் என்று எங்கு உட்கார்ந்தாலும்
"பீஸ் எந்துக்கோங்க‌" என்று நம்மை அப்புற‌ப்படுத்தி விட்டு கையில் ஒரு புத்த‌க‌த்தோடு ஏறி உட்கார்ந்து கொள்கிறாள்.

"பாப்பா உன் சேரில உட்காரக் கூடாதா?" என்று கேட்டால்

"ம்ஹூம். .பாப்பாக்கு சோஃபா. பாப்பாக்கு சோஃபா"

அரை டிராய‌ரோ ஸ்கார்ட்டோ எதுவுமே போட்டு விட‌ முடிவ‌தில்லை. நீள‌ பேன்ட் தான் போட‌ வேண்டுமாம். குளித்து விட்டு வ‌ந்தாலே
"பான்ட்டு போட்டு, ச‌ட்டை போட்டு...பான்ட்டு போட்டு ச‌ட்டை போட்டு" - அதற்கென்று ஒரு ராக‌ம் வேறு!
"ஏன் வேற ட்ரெஸ் போட மாட்டியா?"
"ம்ஹூம்...அம்மா பேன்ட்..பாப்பாக்கு பேன்ட்" என்று என் சுடிதாரைக் காட்டுகிறாள்.

ஒரு நாள் வீட்டுக்கு வந்தபின் அவளை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்று தேங்காய் வங்கினேன். அதன்பின் தினமும்,
"அம்மா! வண்டி போலாமா..? தேங்கா வாங்கி..." என்று ஒரே அட‌ம்.

இன்னும் சில‌:

"வெளிளிளிளில‌ போ..." (வெளில‌ போ.)

"ட‌கேஷி ஏன்னனனன‌னும்" - (போகோ சானலில் 'ட‌கேஷிஸ் காஸில்' வைக்க‌ வேண்டும்)

"நேஹா! என்ன‌ சாப்டே?" (வெளியில் எங்களுடன் சாப்பிட்டு விட்டு வந்த‌ அவளைத் தாத்தா கேட்டார்.

"சூப்பு, ஃபிஷ்ஷூ, இன்னோரு ஃபிஷ்ஷூ, (அது சிக்க‌ன்) மாகி" ‍ :)


ஊரிலிருந்து வ‌ந்திருக்கும் அவ‌ள் பெரிய‌ம்மா, அக்கா, அண்ண‌னோடு தான் இப்போது நாள் பூரா ஆட்டம். அது என்ன‌வோ ஆசையோடு கொஞ்சும் அவ‌ள் அக்காவோடு எல்லாவ‌ற்றுக்கும் ம‌ல்லுக்கு நிற்கிறாள். அத‌ட்டிக் கொண்டே இருக்கும் நிகிலிடம் (எட்டு வ‌ய‌து) 'நிகில‌ண்ணா நிகில‌ண்ணா' என்று ஒரே ப‌க்தி தான். அவ‌னிட‌ம் சொல்லித் தான் பால் குடிக்க‌ வைப்பது, தூங்க‌ வைப்ப‌து என்று எல்லாமும் ந‌ட‌க்கிற‌து!

அவ‌ர்க‌ள் எல்லாரும் ஊருக்குச் சென்ற பின் குழ‌ந்தை முக‌த்தைச் சில நாட்கள் எப்ப‌டிப் பார்ப்ப‌து என்றே ப‌ய‌மாக‌ இருக்கிற‌து!

11 comments:

சந்தனமுல்லை said...

/"ல்ல‌.. டூ மினிஸ்" என்று கை காட்டி விட்டு ஓடுகிறாள். /

ஹஹ்ஹா! நேஹா நேரம் - கலக்கல் நேரம்! :-)

நேஹா...உங்கம்மா எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க...;-))

நேசமித்ரன் said...

இந்தக் காலைப் பொழுது அழகானது

நன்றி நேஹா

Radhakrishnan said...

மிகவும் ரசித்தேன். மழலைச் செல்வம். நேஹாவுடன் எப்போதும் விளையாட விரைவில் அவளுக்கு தம்பியோ தங்கையோ வேண்டும்.

ஈரோடு கதிர் said...

நல்ல நேரம்

Vidhoosh said...

:)

குழந்தைகள் வரம். பெண் குழந்தைகள் தெய்வம். :) நேஹாவுக்கு என் அன்பு.

ஜெய்லானி said...

//அவ‌ர்க‌ள் எல்லாரும் ஊருக்குச் சென்ற பின் குழ‌ந்தை முக‌த்தைச் சில நாட்கள் எப்ப‌டிப் பார்ப்ப‌து என்றே ப‌ய‌மாக‌ இருக்கிற‌து! //

எல்லாரையும் தேடும் பார்க்கவே பாவமா இருக்கும்.

Radhakrishnan said...

//Vidhoosh(விதூஷ்) said...

:)

குழந்தைகள் வரம். பெண் குழந்தைகள் தெய்வம். :) நேஹாவுக்கு என் அன்பு. //

ஆண் குழந்தைகளும் தெய்வம் என எழுதினா தப்பு இல்லைதானே விதூஷ்.

Anonymous said...

நேஹா...உங்கம்மா எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க...;-))

கன்னாபின்னா ரிப்பீட்டு முல்லை :))

Uma said...

//"பீஸ் எந்துக்கோங்க‌"// அடடா, என்ன மரியாதை பாருங்க!

Deepa said...

@மயில் & சந்தனமுல்லை:

ஏய்! இன்னா இது சின்னப் புள்ளத்தனமா?
ம்ம்.. ஆடுங்க ஆடுங்க!

நன்றி நேசமித்ரன், இராதாகிருஷ்ணன், கதிர், விதூஷ், ஜெய்லானி, உமா!

@இராதாகிருஷ்ணன்:

//ஆண் குழந்தைகளும் தெய்வம் என எழுதினா தப்பு இல்லைதானே விதூஷ்.//
நோ! அதுங்க குட்டிப் பிசாசுகள்! ;-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

//"பீஸ் எந்துக்கோங்க‌"//

chooo chweet neha

//ஆண் குழந்தைகளும் தெய்வம் என எழுதினா தப்பு இல்லைதானே விதூஷ்.//
நோ! அதுங்க குட்டிப் பிசாசுகள்! ;-)

ப்ளீஸ், இனிமே இப்படி சொல்லாதீங்கப்பா ;)