இருண்ட கூட்டுக்குள் சுருண்டு கிடந்தேன்
இமைகளே தேவையற்ற கண்களோடு;
நிசப்தமும் சூன்யமும் விழுங்கிவிடும்முன்
உடைத்தெறிந்தேன் கூட்டின் கதவை;
முதன் முதலாக ஸ்பரிசித்த ஒளி
சுட்டெரித்தது சருமத்தை;
அனுபவித்தறியா குளிர் காற்று
உடலுக்குள் கூசி உன்மத்தம் தந்தது;
புதிதாக முளைத்த சிறகுகளால்
விலாவில் கொஞ்சம் சுகமாய் வலித்தது
இளைப்பாற வாவென அன்பொழுக அழைக்கின்றன
புதிதாகக் கூடொன்று செய்து வைத்து, கூகைகள்.
17 comments:
beautiful. plan the book.
Beautiful!
அருமை தீபா! Big Big World...:-)
ஆஹா
supper
super
நல்லாயிருக்கு தீபா! வரிகளும் செறிவாக இருக்கின்றன. கவிதைக்கு சிறகு முளைத்துவிட்டது!
/*இளைப்பாற வாவென அன்பொழுக அழைக்கின்றன
புதிதாகக் கூடொன்று செய்து வைத்து, கூகைகள் */
வஞ்சகம் ... அருமையாக சொல்லி இருக்கீங்க
அமுதா said...
/*இளைப்பாற வாவென அன்பொழுக அழைக்கின்றன
புதிதாகக் கூடொன்று செய்து வைத்து, கூகைகள் */
வஞ்சகம் ... அருமையாக சொல்லி இருக்கீங்க
அதே, வழிமொழிகிறேன்.
ரொம்ப பிடிச்சிருக்கு தீபா.
தாமதமாயிருச்சு...
நேகாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
பூங்கொத்து தீபா!
anaivarukkum anbum nanRiyum!
:)
\\நிசப்தமும் சூன்யமும் விழுங்கிவிடும்முன்
உடைத்தெறிந்தேன் கூட்டின் கதவை;\\
அழகா வந்திருக்கு தீபா
நேஹாவுக்கு பிறந்தநாளா?
வாழ்த்துக்களும், அன்பும்.
//முதன் முதலாக ஸ்பரிசித்த ஒளி
சுட்டெரித்தது சருமத்தை;
அனுபவித்தறியா குளிர் காற்று
உடலுக்குள் கூசி உன்மத்தம் தந்தது;//
கவிதையும் அதன் வரிகளும் அழகோ அழகு...
excellent !
Dear deepa You have really a very good sense of humor. This is my first time visiting your blog.
அழகு நிறைந்த கவிதை...........
வாசித்தேன்...........
.வசதியிருந்தால் நம்ம பக்கமும் வரலாம்தானே..........
Post a Comment