என் கல்லூரிக்குச் சென்று நான் "ஞாபகம் வருதே" பாடிய கதையைச் சென்ற இடுகையில் எழுதி இருந்தேன். அதே அளவுக்கு மிக இனிமையான அனுபவம் விஜி ராம் அவர்கள் வீட்டில் கிடைத்தது.
காலையில் கோவை சென்று இறங்கியதுமே என்னை அழைத்த விஜி, "உங்க காலெஜ் ஃபங்க்ஷன் முடிஞ்சதும் ஃபோன் பண்ணுங்க, நான் வந்து அழைச்சிட்டுப் போறேன்" என்றார். 'முகவரி சொல்லுங்கள் நானே வருகிறேன்' என்றதை அவர் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
முதல்முறையாகப் பார்க்கப் போகும் தோழியை அழைத்துச்செல்ல நாலரை மணி வெயிலில்,ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டு ஐந்தாறு கிலோமீட்டர் வந்ததை எண்ணி இன்னும் பிரமிப்பு விலகாமலே இருக்கிறேன்.
சிலரிடம் ஃபோனிலும் சாட்டிலும் நிறைய பேசி இருந்தாலும் முதல் முறை நேரில் பேசும் போது சிறிதளவு தயக்கம் ஏற்படும். விஜியிடம் அது இலல்வே இல்லாததால், எனக்கும் ஏற்படவில்லை.
சிறிது நேரத்தில் பூங்காவுக்குச் சென்ற குழந்தைகளை அழைத்துக் கொண்டு ராம் வந்தார். விஜியும் ராமும் உண்மையில் Made in heaven couple.
"அம்மா நான் ஊஞ்சல்லேந்து விழுந்துட்டேன்..." என்றாள் பப்பு.
"பார்க்குக்கு ஒண்ணும் ஆகலையேடா? அது பப்ளிக் ப்ராப்பர்ட்டி..பாத்து விளையாடும்மா..." இது தான் விஜி.
வர்ஷா அம்மாவுக்கு ஈடாகப் பளிச் பளிச் என்று பேசிக் கொண்டிருந்தாள்.
குழந்தைகளுக்குப் பொறுப்பான அம்மாவாக மட்டுமல்ல, நல்ல தோழியாகவும் இருப்பது எப்படி என்று விஜி க்ளாஸ் எடுக்கலாம். (எவ்வளவு லூட்டி அடித்தாலும் எட்டரை மணிக்குள் வீட்டுப் பாடம் முடித்து, சாப்பிட்டுத் தூங்கியும் விடுவார்களாம். என் நேஹாவை என்றைக்கு இப்படிப் பழக்கப் போகிறேனோ தெரியவில்லை.
வீட்டுப் புறா சக்தியை அலைபேசியில் அழைத்துப் பேச வைத்தார். மிகவும் கலகலப்பாகப் பேசினார். வர முடியாததற்கு உண்மையிலேயெ வருத்தம் தெரிவித்தார்.
ஆறரை மணிக்கு ஆரவாரமாக வந்தார் செல்வேந்திரன்.உடன் அவரது இனிய தோழி கேண்டி என்கிற திரு..வும். Cho chweet couple இவர்கள்.
செல்வேந்திரனை ஏனோ ரொம்பத் தலைக்கனம் பிடித்தவர் என்று எண்ணி இருந்தேன். நேரில் பார்த்துப் பேசியதும் 'ரொம்ப' அல்ல, இருக்க வேண்டிய அளவு தானென்று புரிந்தது! :)
சிறிது நேரத்துக்குப் பிறகு சஞ்சய் காந்தி வந்தார். கலகலப்பு அதிகமாகியது.
பதிவுலகம் மூலமே நண்பர்களாக ஆன இவர்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் எத்தனையோ சிறப்புகள் இருந்தும் சொந்தப் பெருமைகளைப் பேசுபவர்களாக இல்லாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், பரஸ்பரம் அன்பையும் உற்சாகத்தையும் பரிமாறிக் கொள்ளவே நட்பு பாராட்டுகிறார்கள். Hats off to them!
அரட்டைக்கு இடையே விஜி அற்புதமாக இரவு உணவும் தயாரித்து முடித்தார். ராம் குழந்தைகளுக்கு உணவூட்டினார், மேஜையை set செய்தார். சாப்பிட்டு முடித்ததும், விடைபெற மனமில்லாமல் பேசிக் கொண்டு நின்ற எங்களிடம்,"பஸ் காலையிலயா" என்று கேட்டு நேரமானதை உணர்த்தினார் செல்வேந்திரன். பத்து மணியாகி விட்ட போதும் பஸ் கிளம்பும் வரையில் கூட இருந்து என்னை வழியனுப்பி வைத்தார் விஜி.
என் கல்லூரி மட்டுமல்ல, இவர்களின் அன்பும் இனி கோவையை என் மனதில் இருந்து என்றுமே பிரிக்க முடியாத ஊராக்கி விட்டது.
"ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே"
பெரியோர் என்று குறிப்பிட்டது கண்டிப்பாக என்னை அல்ல. அவர்களைத் தான்! :)
18 comments:
தனைத்தலைவலி விஜி வாழ்க :)
விஜியை சந்திக்கும் ஆர்வம் மிகுதியாகிறது :-)
மயில் விஜி..இவரை நினைத்ததும் கலகலப்பான முகமும் சிரிக்க சிரிக்க பேசும் குரலுமே நினைவில் வரும்! கோவை பதிவர் பாசறை - விஜியக்கா வீடு! :-)
ஓக்கே இங்க ஒரு பாசப்பட்டறையை எதுக்கும் உருவாக்கி வச்சுக்கலாம் :)
மயில் விஜி பாசப்பட்டறை
அமீரக கிளை
நட்பு பாராட்டுவது என்பது மிகவும் அழகிய ஒன்றுதான், விஜி, வித்தியாசமாகத்தான் இருக்கிறார்.
/கோவை பதிவர் பாசறை - விஜியக்கா வீடு! :-)/
நானும் வரப்போறேன் கோவைக்கு!
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?!
//விஜியும் ராமும் உண்மையில் Made in heaven couple.//
ஹய்யோ.. ஹய்யோ.. நீங்க டாம் & ஜெர்ரி பார்க்க மாட்டிங்களா தீபா? :))
//வீட்டுப் புறா சக்தியை அலைபேசியில் அழைத்துப் பேச வைத்தார். மிகவும் கலகலப்பாகப் பேசினார். வர முடியாததற்கு உண்மையிலேயெ வருத்தம் தெரிவித்தார்.//
பதிலுக்கு நீங்க ரொம்ப சந்தோஷம்னு சொன்னதா சக்தி ஆண்டி சொன்னாங்களே.. :)
//அரட்டைக்கு இடையே விஜி அற்புதமாக இரவு உணவும் தயாரித்து முடித்தார்.//
உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வுங்க.. கீப் இட் அப்..
//ராம் குழந்தைகளுக்கு உணவூட்டினார், மேஜையை set செய்தார். //
நீங்க சப்பாத்தி செய்ய உதவி செஞ்சிங்க.. திரு, காளான் குருமா செஞ்சாங்க.. ராம் டேபிள் அரேஞ் பண்ணார்.. குழந்தைகளுக்கு சாப்பாடு குடுத்தார்.. இதுல விஜியோட பார்ட் என்னங்க ஆபிசர்? எதுக்கு அவங்க அற்புதமா உணவு தயாரித்தாங்கன்னு சொல்றிங்க.. ஜோக் தான?
ஹ்ம்ம்ம்.. அடுத்தவாட்டி எங்க வீட்டுக்கும் வாங்க ஆபிசர்..
ஹ்ம்ம்ம்.. என்னவோ போங்க.. கடைசி வரைக்கும் சுகந்தியை கண்லையே காட்டாம கிளம்பிட்டிங்க.. :(
ஆரவாரம் ; தேவையான அளவு தலைக்கனம் ம்...ம் நோட் பண்ணிக்கிட்டேன் :)
ரைட்டு
அரட்டைக்கு இடையே விஜி அற்புதமாக இரவு உணவும் தயாரித்து முடித்தார்.//
உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வுங்க.. கீப் இட் அப்..
//ராம் குழந்தைகளுக்கு உணவூட்டினார், மேஜையை set செய்தார். //
நீங்க சப்பாத்தி செய்ய உதவி செஞ்சிங்க.. திரு, காளான் குருமா செஞ்சாங்க.. ராம் டேபிள் அரேஞ் பண்ணார்.. குழந்தைகளுக்கு சாப்பாடு குடுத்தார்.. இதுல விஜியோட பார்ட் என்னங்க ஆபிசர்? எதுக்கு அவங்க அற்புதமா உணவு தயாரித்தாங்கன்னு சொல்றிங்க..//
லொள்ளு சஞ்சய் இங்க வந்து கும்மியா? சரி ஒரு பன்ச் டயலாக் .. வேலை செய்யறது பெரிசில்ல, மத்தவங்க கிட்ட வேலை வாங்கறதுதான் பெரிது. இது தெரியாம என்ன தொழிலதிபரோ :))
மயில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..!!!
அனைவருக்கும் நன்றி.
//SanjaiGandhi™ said...
ஹ்ம்ம்ம்.. என்னவோ போங்க.. கடைசி வரைக்கும் சுகந்தியை கண்லையே காட்டாம கிளம்பிட்டிங்க.. :(
//
இதெல்லாம் த்ரீ மச்! :-)))
//ஹ்ம்ம்ம்.. அடுத்தவாட்டி எங்க வீட்டுக்கும் வாங்க ஆபிசர்..//
நன்றி பாஸ். கண்டிப்பா வரேன்.
@மயில்:
//வேலை செய்யறது பெரிசில்ல, மத்தவங்க கிட்ட வேலை வாங்கறதுதான் பெரிது. இது தெரியாம என்ன தொழிலதிபரோ :))
//
நல்லாருங்க விஜி!
நல்ல நட்பு . சந்திப்பு சுவரசியமானதாக உள்ளது. வளர்க நட்புடன்.வாழ்த்துக்கள்
//தனைத்தலைவலி விஜி வாழ்க :)//
:D
ஆமா தீபா உங்களை நேரில் பார்க்க முடியலைன்னு ரொம்பவே வருத்தமாக உள்ளது அடுத்த முறை வரும் போது மறக்காமல் முன் கூட்டியே சொல்லிவிடுங்கள் பா கண்டிப்பாக உங்களை வந்து பார்க்கிறேன் :)
Post a Comment