Thursday, February 18, 2010

பெண்களே! தயவு செய்து பெற்றவர் பேச்சைக் கேட்காதீர்கள்!

அவர்கள் இதுபோலெல்லாம் பேசினால்:

"ஏய் சாப்ட்டியா? அண்ணன் தட்டையும் சேர்த்து எடுத்துட்டுப் போ."

"போதும் நீ ப‌டிச்ச‌து. இதைப் போல‌ ந‌ல்ல‌ வ‌ர‌ன் இனிமே கிடைக்காது. உன‌க்க‌ப்புற‌மும் ஒருத்தி இருக்கா க‌ட்டிக் கொடுக்க. "

"மெட்ராஸ்ல‌ போய் வேலை பார்க்க‌ப் போறியா? ஒண்ணும் வேண்டாம். உன‌க்குச் சீத‌னமாக் குடுக்க‌ நாங்க‌ சேர்த்து வெச்சிருக்க‌ற‌து போதும்."

"ச‌தா என்ன புக் ப‌டிக்க‌ற‌? போற‌ இட‌த்துல‌ ச‌மைக்க‌த் தெரிய‌ல‌ன்னு குட்டு வாங்க‌ப் போற. வ‌ந்து இந்த‌ப் புளியைக் க‌ரைச்சுக் கொடு."

"உன் ஜாத‌கப்ப‌டி இருப‌த்தி ரெண்டு வ‌ய‌சுக்கு முன்னாடி க‌ல்யாண‌ம் ப‌ண்ணாட்டி அப்புற‌‌ம் உன‌க்கு க‌ல்யாண‌மே ந‌ட‌க்காதாம். அத‌னால‌ இப்போ கல்யாண‌த்துக்கு ஒத்துக்கோ."


"அவ‌ன் எவ்ளோ ந‌ல்ல‌வ‌னா இருந்தாலும் ச‌ரி, உன‌க்குப் பிடிச்சிருக்கான்னெல்லாம் எங்க‌ளுக்குக் க‌வ‌லையே இல்லை. நீ சாதி விட்டுக் க‌ல்யாண‌ம் ப‌ண்ன‌னும்னு நென‌ச்சா நாங்க‌ த‌ற்கொலை ப‌ண்ணிக்குவோம்"

"என்ன எதுத்துப் பேச‌ற‌? பொம்ப‌ளைப் பிள்ளைக்கு இவ்வ‌ள‌வு ஆங்கார‌ம் ஆகாதுடிம்மா."

"எல்லாத்துக்கு அவ‌ன் கூட‌ப் போட்டி போட‌ற‌? அவ‌ன் ஆம்ப‌ள‌டி!"

"ஆம்ப‌ள‌ துடைப்ப‌த்தை எடுத்தா வீட்டுக்கு ஆகாது. தம்பி ரூமையும் கூட்டிச் சுத்த‌ம் ப‌ண்ணு."


"ஹேய், தீட்டோட கிச்சனுக்குள்ள‌ வராதே. போ கொல்லைப்பக்க‌ ரூமுக்கு..."

ஆண்க‌ளுக்கு!

//"டேய்! பொம்ம‌னாட்டியோட‌ என்னடா ச‌ண்டை! பாவ‌ம் விட்டுக் கொடுத்துடு"//
வேண்ட‌வே வேண்டாம். ச‌ண்டை போடுங்க‌ள். :)

Labels: , ,

32 Comments:

At February 18, 2010 at 5:39 AM , Blogger அகநாழிகை said...

நல்லா எழுதியிருக்கீங்க.
எல்லாமே நானே கேட்டதுதான்.
ஆண்களுக்கும் நிறைய சொல்லலாமே.
ஒண்ணுதான் சொல்லியிருக்கீங்க.

 
At February 18, 2010 at 6:14 AM , Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)) ம்

 
At February 18, 2010 at 6:26 AM , Blogger VINCY said...

நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.
இதையே தான் நான் எழுதினால் உடனே சண்Tஐக்கு வந்துவிடுகிறார்கள்.
நீ என்ன 1930ல் வாழ்கிறாயா? இப்போதெல்லாம் ஆணும் பெண்ணும் சமம்
என்றெல்லாம் சொல்கிறார்கள். உண்மையில் கல்வியிலும் சம்பாத்தியத்திலும்
கை ஓங்கி நிற்கும் பெண்களிடம் சில ஆண்கள் சமமாக நடப்பதாய்
பாசாங்கு செய்யலாம். அது பெண்களின் வளர்ச்சியினால் அவர்கள் பெற்றுக்கொள்வதே தவிர ஆண்களின் பெருந்தன்மை அல்ல.
மேலும் அது ஒரு சிறு வழுக்காடு என்பது கம்ப்யூட்டர் வரை உபயோகிக்க தெரிந்Tஹ ஆண்களின் பார்வையில் காட்டுக்கு சுள்ளி பொறுக்கப்போகும் அப்பாவி பெண்ணின்
துயரம் தெரியவா போகிறது.

 
At February 18, 2010 at 6:46 AM , Blogger Sangkavi said...

தீபா நீங்க சொல்றது எல்லாம் பத்து வருடத்திற்கு முன் இப்ப இல்ல...

இப்ப பொண்ணு பொறந்தாதான் அதிஷ்டமே....

எனக்கு பொண்ணு தான் பிறக்க வேண்டும் என நட்பாசையில் சொல்றேனுங்க..

 
At February 18, 2010 at 7:05 AM , Blogger அகல்விளக்கு said...

நல்லா எழுதியிருக்கீங்க...

அந்த கடைசி மேட்டர் சூப்பர்...

:-)

 
At February 18, 2010 at 7:21 AM , Blogger மாதவராஜ் said...

சிலவற்றைத்தவிர மற்ற பெரும்பாலான உரையாடல்கள் இன்னும் நம் சமூகத்தின் குடும்பங்களுக்குள் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஓரளவுக்கு படித்து, சொந்தக் காலில் நிற்கும் பெண்கள், நம் அமைப்பில் இன்னமும் குறைந்த விழுக்காடுதான். அவர்களுக்கு வேண்டுமானால், இந்த வார்த்தைகளை உடைக்கும் வேகமும் ,தெளிவும் இருக்கலாம். மற்றவர்களுக்கு?

பெற்றவர்கள் என்றால், இந்த அமைப்பினால் வார்க்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற புரிதலோடு இந்த பதிவை மக்கள் படிப்பார்களாக!

 
At February 18, 2010 at 7:36 AM , Blogger க.நா.சாந்தி லெட்சுமணன். said...

இங்க பாதிக்கு + ஓட்டும்,பாதிக்கு - ஓட்டும் குத்தமுடியாதா? தீபா.ம்ச்..

 
At February 18, 2010 at 7:48 AM , Blogger SanjaiGandhi™ said...

அது சரி

 
At February 18, 2010 at 7:55 AM , Blogger அம்பிகா said...

இதில் ஒன்றிரண்டை தவிர மற்றவை சாதாரணமாக அநேக வீடுகளில் கேட்க கூடியவை தான். நான் கூட சின்ன வயசுல அம்மாட்ட சண்டை போட்டிருக்கேன்.

 
At February 18, 2010 at 9:37 AM , Blogger The Analyst said...

:) இதில் பெரும்பாலானவற்றை எமது சமுகத்திலும் கேட்டுள்ளேன். இவை எல்லாம் இப்போதைக்கு மாறும் என்ற நம்பிக்கையில்லை. :(

 
At February 18, 2010 at 9:45 AM , Blogger ~~~Romeo~~~ said...

பல வார்த்தைகளை நான் எங்கள் வீட்டிலே கேட்டு இருக்கிறேன்.

 
At February 18, 2010 at 1:53 PM , Blogger Ravi said...

நீங்கள் சொல்லியிருப்பது எல்லாமே உண்மை தான். ஆனால் அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்கு அப்புறம் குடும்பப்பொறுப்புகள் அதிகம். சில injustice தவிர்க்க முடியாதது. சரியான அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால் இவை பெண்களை தயார் படுத்தும் சொற்களாகவே எனக்கு தெரிகிறது.

 
At February 18, 2010 at 6:48 PM , Blogger அகநாழிகை said...

//க.நா.சாந்தி லெட்சுமணன். said...
இங்க பாதிக்கு + ஓட்டும்,பாதிக்கு - ஓட்டும் குத்தமுடியாதா? தீபா.ம்ச்..//

நான் கூட இதை நிறைய பதிவுல யோசிச்சிருக்கேன். இதுபோல பாதி + பாதி - ஓட்டு போடற வசதியிருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்...?

 
At February 18, 2010 at 7:58 PM , Blogger அண்ணாமலையான் said...

சும்மா நச்சுனு சொல்லியிருக்கீங்க...

 
At February 18, 2010 at 9:35 PM , Blogger ☀நான் ஆதவன்☀ said...

:)) விடாதீங்க சண்டை போடுங்க!

 
At February 18, 2010 at 9:35 PM , Blogger ☀நான் ஆதவன்☀ said...

:)) விடாதீங்க சண்டை போடுங்க!

 
At February 18, 2010 at 10:31 PM , Blogger கண்ணகி said...

அப்படிப்போடுங்க....

 
At February 18, 2010 at 10:54 PM , Blogger விக்னேஷ்வரி said...

ரொம்ப சரியா சொன்னீங்க. அதே மாதிரி இந்த மாதிரி பேச்சுக்களில் எதிர்த்துப் பேசாமல் தார்ஜா பண்ணி காரியத்தை எப்படி சாதிப்பதுன்னும் எழுதுங்கள். அது தான் இன்றைய தேவை. உரிமைகளுக்குப் போராடுகிறேன் என பெற்றோர் மனம் வருந்த வைப்பது தவறு.

 
At February 18, 2010 at 11:33 PM , Blogger ponraj said...

//"உன் ஜாத‌கப்ப‌டி இருப‌த்தி ரெண்டு வ‌ய‌சுக்கு முன்னாடி க‌ல்யாண‌ம் ப‌ண்ணாட்டி அப்புற‌‌ம் உன‌க்கு க‌ல்யாண‌மே ந‌ட‌க்காதாம். அத‌னால‌ இப்போ கல்யாண‌த்துக்கு ஒத்துக்கோ."//


//"அவ‌ன் எவ்ளோ ந‌ல்ல‌வ‌னா இருந்தாலும் ச‌ரி, உன‌க்குப் பிடிச்சிருக்கான்னெல்லாம் எங்க‌ளுக்குக் க‌வ‌லையே இல்லை. நீ சாதி விட்டுக் க‌ல்யாண‌ம் ப‌ண்ன‌னும்னு நென‌ச்சா நாங்க‌ த‌ற்கொலை ப‌ண்ணிக்குவோம்"//

//"என்ன எதுத்துப் பேச‌ற‌? பொம்ப‌ளைப் பிள்ளைக்கு இவ்வ‌ள‌வு ஆங்கார‌ம் ஆகாதுடிம்மா."////////"டேய்! பொம்ம‌னாட்டியோட‌ என்னடா ச‌ண்டை! பாவ‌ம் விட்டுக் கொடுத்துடு"//
வேண்ட‌வே வேண்டாம். ச‌ண்டை போடுங்க‌ள். :) ///

அனைத்தும் நிஜமானவை!!!

என்று மாறுமோ எந்த நிலமை!!!

அருமையான பதிவு!!!

 
At February 18, 2010 at 11:42 PM , Blogger Barari said...

nalla puththi mathi solli irukkireekal.muthalil ungal kudumbaththil thodangungal.urupputtaplathaan.

 
At February 19, 2010 at 12:09 AM , Blogger Jo Amalan Rayen Fernando said...

Seriatum my comments are:

1. இதில் தவறேதும் இல்லை. அண்ணன் தட்டையெடுப்பதில் கவுரவம் பார்ப்பதா?

2. பெற்றொரின் தவறாக இதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? பெண்ணுக்குத் திருமணம் செய்துஅனுப்பும்போது ஒரு பாரம் குறைகிறது என் நினைக்கிறார்கள். இன்றைக்கு சாதாரண மாப்பிள்ளைக்கு 50 சவரண். மாப்பிள்ளை அமையும் போது கபக்கென்று பிடிக்காமல் விட்டுவிட்டால், பின்னர் என்ன செய்வது? அப்படிவிட்டுவிட்டு பெண்ணை வீட்டுக்குள்ளே வைத்திருக்க பெற்றொரு விரும்புவரா?

3. சென்னை போன்ற பட்டணங்களில் பெண்ணுக்கு நல்ல பாதுகாப்பு இருக்கிறது என்ற உத்தரவாதம் இருந்தால் தன்னாலேயே பெற்றோர் தடை சொல்ல மாட்டார்கள்.

4. Both are important: as a wife and mother in a home; and a working woman. இரண்டையும் எப்படி திறமையாகச் செய்கிறீர்கள் என்பதில் உங்கள் வாழ்க்கையின்பம் இருக்கிறது. இதுதான் நம்பர் 4ல் உள்ளர்த்த்ம்.

5. This is bound up with religious superstitions. You cant blame parents for that. Everyone of us believes this. If we dont, we are extraordinary.But all of us are ordinary.

6. Same as in 5. சாதிகளின் இறுக்கம் சமுதாய்த்தில் புரையோடியிருக்க, அச்சமுதாயத்தில் புணைபோல் ஆருயிராக பெற்றோருக்க, யாரை குறை சொல்ல முடியும்.?

‘உலகத்தோடு ஒட்ட ஒழுகார்...என்ற குறள் இதைத்தானே சொல்கிறது.

வனத்திலே மேய்ந்து இனத்திலே அடை’

7 to 9. This I dont like. It is insulting. However, we can understand the parents because they act only as society wants them to.

10. இது மதசம்பந்தப்பட்டது. பெற்றொர் இந்துமதத்தை ஏற்றுக்கொண்டால், இதற்கு கட்டுப்பட்டேயாக வேண்டும்.

--------------------

யார் கண்டா..பதிவாளர் தீபா தன் வயதுக்குவந்த மகளை என்ன பாடுபடுத்துகிறாரோ?

Because, there is an increasing evidence in society that idealism and practical life make strange bedfellows.

In many cases, fathers are liberal, but they receive flak from their wives for being sugar daddies to their daughters.

அப்பாகிட்டே எனக்கு எந்த பிரச்னையெல்லாமில்லை. அம்மாதான் என்னை பாடா படுத்றா.

I hope I have turned the tables upon you.

 
At February 19, 2010 at 12:26 AM , Blogger சந்தனமுல்லை said...

நல்ல கலெக்‌ஷன், தீபா! பெற்றவர்கள் என்று இல்லை, இது போல சொல்பவர் எவர் பேச்சையும் கேட்காதீர்கள், for that matter! lol!

ரேணுவையும், சரளாவையும் நினைத்துக்கொண்டேன், கூட ப்ரியாவையும்!

கூட, “என்ன அப்படி ஒரு அவுட்டு சிரிப்பு, ஆம்பளை மாதிரி ஹாஹ்ஹான்னு, சத்தமில்லாம சிரிக்க கத்துக்கோ” அப்புறம், “ஆம்பிளைங்க நிக்கற இடத்துலே உனக்கென்ன வேலை, போனோமா வந்தோமான்னு இருக்கணும்” - என்னோட ரெண்டு பைசாவையும் சேர்த்துக்கோங்க!

 
At February 19, 2010 at 12:29 AM , Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

சதா ஆம்பளப்புள்ள மாதிரி ரோடுல என்ன ஆட்டம், வீடு தங்காம?

பொட்டப்புள்ளயா அடக்க ஒடுக்கமா துணியப் போடு, இதுன்னா இப்படி?
(அஞ்சு வயசு குழந்தை ஸ்கர்ட் போட்டிருந்தா)

லிஸ்ட்ல இன்னும் நிறைய சேர்த்துக்கிட்டே வரலாம் தீபா :(

மேற்கூறியவைகள் வீட்டருகில் அடிக்கடி புழங்கப்படும் வாசகங்கள். சென்சார் கட் இல்லன்னா இன்னும் நிறைய சேர்க்கலாம். :)

 
At February 19, 2010 at 12:37 AM , Blogger tamil said...

எதுவானாலும் பெற்றோருடன் போராடலாம்,பேசலாம்,புரியவைக்க முயற்சி செய்யலாம்.அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்காதீர்கள் என்று ஒரேயடியாக சொல்லிவிட முடியாது.காதலித்து,வீட்டை விட்டு ஒடிப்போய் பின் காதல்/திருமண வாழ்வில் சிக்கலாகி தவிக்கும் பெண்களும் உண்டு.காதலனை நம்பி மோசம் போன பெண்களும் உண்டு.
இன்றைய சமூகத்தில் பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றுவது எளிது. பெற்றோர் சொல்வதை கேட்காவிட்டால் பிரச்சினை வரலாம், பூசல் வரலாம்.அதற்காக பென்ணை வீட்டை விட்டு வெளியே போகுமாறு சொல்லும் பெற்றோர் எத்தனை பேர்.
காதல் வாழ்வு கசந்த பின் தூக்கி எறியும் ஆண்கள் இல்லையா.
நண்பர்களுடன் நாம் அட்ஜஸ்ட் செய்த் கொள்கிறோமே, பணியிடத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோமே அங்கெல்லாம் தூக்கி எறிந்து விட்டு போய்விட முடிகிறதா.
பெர்றோருடன் பேசுங்கள், உரையாடுங்கள், அவர்கள் பார்வையில் மாற்றம் கொண்டு வர போராடுங்கள்.அவர்களும் இந்த சமூகத்தின் விழுமியங்களை உள வாங்கியிருக்கிறார்கள் என்பதால் அவர்களை புரிந்து கொள்ள முயலுங்கள், எதிரியாக, பிற்போக்கு என்ற முத்திரை குத்தி தூக்கி எறியாதீர்கள். போலி முற்போக்குவாதிகளிடம் எச்சரிக்கை தேவை.

 
At February 19, 2010 at 8:32 AM , Blogger முகுந்த் அம்மா said...

நல்ல பதிவு. அடிக்கடி நான் என் வீட்டில் கேட்ட வார்த்தைகளை ஞாபகப்படுத்தியது. இப்போதும் சில வாக்கியங்கள் கேட்டு இருக்கிறேன்.

 
At February 19, 2010 at 10:08 AM , Blogger Jo Amalan Rayen Fernando said...

Well done. Important post everyone should read and remember

 
At February 19, 2010 at 10:22 AM , Blogger Deepa said...

அனைவருக்கும் நன்றி. சிலருக்கு இதில் சிலவற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லையென நினைக்கிறேன்.
அவை எவை என்றும் குறிப்பிட்டிருக்கலாமே.

தெளிவாக இருப்பதாகவே நம்பிய ஒன்றை மீண்டும் தெளிவு படுத்த விழைகிறேன்.

1. ”கேட்காதீர்கள்” என்பதை அப்படியே அர்த்தப்படுத்திக் கொள்வதோ, பெற்றோரை அவமதிப்பதாகவோ எடுத்துக் கொள்ள வேண்டாம்.

முந்தைய தலைமுறையின் அழுக்குகளைச் சலவை செய்ய வேண்டியது நமது கடமையல்லாவா.
நமது பேச்சால், செயல்களால் நம்பிக்கை ஏற்படுத்தி அன்புடன் தான் புரியவைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.


2. //அந்தப் புளி கரைக்க அம்மா அழைப்பது //
ஆணானாலும் பெண்ணானாலும் பெற்றவருக்கு வீட்டு வேலைகளில் உதவ வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்க முடியாது. என்ன காரணத்தைச் சொல்லிப் பெண் குழந்தைகள் அதற்கு உட்படுத்தப் படுகிறார்கள் என்பது தான் பிரச்னை.

மீண்டும் நன்றி.

 
At February 19, 2010 at 1:16 PM , Blogger V.Radhakrishnan said...

எனக்கெல்லாம் சொல்லப்பட்ட கதைகள் வேறு! பெண்கள் என்றாலே பொறுப்புடன் வேலை செய்வார்கள் என ஆண்களின் மீது பொறுப்பற்ற தன்மை திணிக்கப்பட்டு இருந்தது. பெண்கள் மனதளவில் பலவீனமானவர்கள், மிகவும் மென்மையான எண்ணம் கொண்டவர்கள் என்பதாலேயே பெண்களுடன் சண்டையெல்லாம் போடக்கூடாது என சொல்வார்கள். எது எப்படியோ, பெற்றவரும் ஒரு பெண் தான். பெண்களே உங்கள் குழந்தைகளுக்கு இப்படிச் சொல்லாதீர்கள் என சொன்னால் சரியாக இருக்கும்.

 
At February 19, 2010 at 9:54 PM , Blogger thenammailakshmanan said...

படிக்கிற பெண் குழந்தைகளை யாரும் இப்ப இப்படி எல்லாம் சொல்லுறது இல்லை தீபா

சொல்லப்போனா ரெண்டு குழந்தைக்கும் வேலையே கத்துத் தரதில்லை

 
At February 19, 2010 at 10:00 PM , Blogger சின்ன அம்மிணி said...

//On February 19, 2010 12:29 AM , அமிர்தவர்ஷினி அம்மா said...

சதா ஆம்பளப்புள்ள மாதிரி ரோடுல என்ன ஆட்டம், வீடு தங்காம? //

இந்த டயலாக் நான் கேட்டிருக்கேனே.

 
At February 19, 2010 at 10:37 PM , Blogger அமுதா said...

சூப்பர். அதுவும் கடைசியில் சொன்னது குட். நிறைய வீடுகளில் இது மாறியுள்ளது.. ஆனால் இன்னும் நிறைய வீடுகளில் மாறவேண்டும்

 
At February 19, 2010 at 11:08 PM , Blogger கண்மணி/kanmani said...

எல்லாம் சரிதான்னாலும் இப்போ அப்படியில்லை தீபா...சரிக்கு சரி மல்லு கட்ட பெண்கள் ரெடி.
பழைய காலத்தையே இன்னும் ரீ வைண்ட் பண்ணனுமா?

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home