Thursday, February 25, 2010

என்னத்தச் சொல்ல‌!

பொக்கை வாய் மாப்பிளைக்குப்
பொன்னும் ம‌ணியும் அல‌ங்கார‌ம்;
த‌ங்க‌த்தில‌ ப‌ல்கட்டிச் சிரிக்கச் சிரிக்கச் சிங்காரம்.

மிர‌ட்டி மிர‌ட்டி மொய் வாங்கினான்
மீசைக்கார மன்னாரு;
அரட்டி அரட்டி ஆள்சேத்தான்
அருவாக்கை அய்யாவு.

ஒத்துக்கிட்ட கச்சேரியை
ஒத்தி வெச்சிட்டு ஓடிவந்து
ஒத்துக்கு ஒத்தூதினார்
ஒல்லிக்குச்சி நாய‌ன‌க்கார்;

பெரிய எடத்துப் பொல்லாப்பும்
பொச்சரிப்பும் நமக்கேன்னு
பொத்திக்கிட்டு தாள‌ம்போட்டார்
வழுக்கத் தலை த‌வில் வித்வான்.

அசலூர்லேந்து ஓட்டிவ‌ந்த
ச‌ண்டிக்கார‌க் குதிரை ஒண்ணு
ஊர்வ‌ல‌ம் போகையில‌ ஒருக்க‌ளிச்சுப் ப‌டுத்துக்கிச்சு;
ப‌ட்டு வேட்டி ச‌ட்டையெல்லாம் புழுதியால‌ க‌றைப‌டிய‌
பொக்கைவாய்த் தாத்தாவுக்குப் பொங்கி வந்துச்சு பெருங்கொபம்.

எல்லாக்கூத்தும் ஏற‌க்க‌ட்டி எண்ணி எட்டு நாளாச்சு;
அடுத்த முகூர்த்த‌ம் தேதி குறிச்சு, ப‌ந்த‌க்காலும் ந‌ட்டாச்சு!

25 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

தீபா சுத்தமா புரியலை

பின்நவீனத்துவ வாதி ஆயிட்டீங்க வாழ்த்துகள் தாயி....

ப்ரியமுடன் வசந்த் said...

கிழவன் ரெண்டாவது திருமணம் செய்ற கொடுமை பற்றியதா?

Hakuna matata said...

அப்படி போடு :-)

இரும்புக்குதிரை said...

இது சமிபத்துல நடந்த விழா பற்றியா?

ஆயில்யன் said...

பொச்சரிப்பு = நச்சரிப்பு ?

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்ம்..என்னத்தச் சொல்ல!!

தங்கள் சொல்லாடலும் நடையும் அருமை!

அண்ணாமலையான் said...

படிச்சு நாங்களும் சிரிச்சாச்சு...

"உழவன்" "Uzhavan" said...

தலைப்பிலேயே சொல்லிட்டீங்களே..

Vidhoosh said...

:) இது என்ன புது லூட்டி.. ரசித்தேன். ரசிக்கிறேன்.

andal said...

super!

ரிஷபன் said...

அடுத்த வருட பள்ளிப் புத்தகத்தில் எதிர்பார்க்கலாமா?!

ராகவன் said...

அன்பு தீபா,

நல்லாயிருக்கு தீபா இந்த கவிதை... சரளமான நடை, நையாண்டி எல்லாம் கலந்து கலங்க வைக்கும் ஒரு விஷயம் பேசுகிறது இந்த கவிதை!!

எகத்தாளமாய் பொய்க்கால் குதிரையில் ஊர்வலங்கள்...

வாழ்த்தும், அன்பும்
ராகவன்

ஜெய்லானி said...

யார் வீட்டு கல்யாணம்.

மதன் said...

வாழ்த்துகள்.. ரசித்தேன் மிகவும்!

vidivelli said...

பிரமாதம் உங்கள் கவிதை கணைகள்.பிடிச்சிருக்குங்க..........

எல் கே said...

nalla iruku

Uma said...

புரிஞ்சுதுங்க. Excellent work of art!

Dr.Rudhran said...

சபாஷ்

சிவாஜி சங்கர் said...

gud one :)

மாதவராஜ் said...

பிரமாதமாக இருக்கே.

Dr.Rudhran said...

ok write the next blog

அம்பிகா said...

அழகான நடை.
பொக்கைவாய் தாத்தா!!!!!
மீசக்கார மன்னாரு!!!!
சூப்பர்

vidivelli said...

supper....supper.........

SK said...

இது எதுக்கொன்னு தெரியாம இருந்தேன்.. அதுக்கா இருக்குமோன்னு யோசிச்சு படிச்சா ரொம்ப இன்டரஸ்டிங்கா இருக்கு :)

ஆயில்யன் சொன்னதை மட்டும் வழி மொழிஞ்சுக்கறேன்.

Unknown said...

Nice comment on Kalaignar, Rajini and Ajith.