அந்த அனுபவத்தின் பரவசம் இன்னும் தெளியவில்லை. பத்து ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த என் தோழி அன்று பார்த்ததே போல் இருந்ததையும், அவளுடன் பேசி மகிழ்ந்ததையும், இங்கு எழுதலாம்.
கல்லூரி வளாகம் முழுதும் சுற்றிப் பார்த்து அறிந்த மாற்றங்களையும், மாறாத தோற்றங்களையும் விவரிக்கலாம்.
ஆனால், உள்ளே நுழைந்தவுடன் அந்தப் பூவரச மரங்கள் உதிர்த்த மலர்களின் வாசமும், ஒருவர் மறந்து மற்றவரிடமிருந்து மீட்டெடுத்த சின்னச் சின்ன நினைவுகளின் பரவசத்தையும், மறந்தே போயிருப்பார்கள் என்று நினைத்த எங்கள் பேராசிரியர்கள் பார்த்தமாத்திரத்தில் அடையாளம் கண்டு ஆச்சரியமும் சந்தோஷமுமாய் வாஞ்சையைச் சொரிந்த கணங்களையும் அவற்றின் முழுவீச்சும் வெளிப்படும்படி என்னால் எழுதவே முடியாது.
எங்கள் கல்லூரி மாணவர்களால் மட்டுமே முக்கிய வளர்ச்சி பெற்ற பாபா ஸ்டோர்ஸ் பாபா கிஃப்ட் ஆர்டிகிள்ஸ் கடை யொன்றும் திறந்திருந்தது.
பழமுதிர் நிலையம் இருந்த இடத்தில் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடை வந்திருந்தது. பார்த்தவிடமெங்கும் யூனிநார் விளம்பரங்கள்.
விடுதியில்: இறுதியாண்டு மாணவியர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.
பார்வையாளர் கூடங்கள் கொசுவலைகள் அடிக்கப்பட்டு இன்டர்நெட் சென்டர் களாக மாற்றப்பட்டிருந்தன.
மாணவர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் மூன்று பேர் இருந்த அறையில் ஐந்து பேரும், ரீடிங் ரூம் எனப்படும் விஸ்தாரமான கூடமெங்கும் கட்டில்கள் போடப்பட்டு அங்கும் முப்பது மாணவியர் தங்கி இருந்தது கஷ்டமாக இருந்தது. இடநெருக்கடி சந்தேகத்துக்கிடமில்லாமல் இருந்தது. புதிய விடுதி அறைகள் கட்டும் பணி விரைவில் நடக்கப் போவதாகக் கூறினார்கள்.
எல்லோர் கையிலும் செல் ஃபோன்கள் இருந்தன. நாள்தோறும் மதியம் கடிதங்களும் கார்டுகளும் இறைந்து கிடக்கும் மேஜையில் பர்மிஷன் கார்டுகள் (ஊருக்குச் செல்ல)மட்டுமே வருவதாகக் கூறினார்கள்.
சிலர் அறைகளில் கம்ப்யூட்டரும் லேப்டாப்பும் கூட வைத்திருந்தனர்.
எல்லா அறைகளிலும் மின்விசிறி இருந்தது. (ஸாரி, இது ஓவர் தான், ஆனா நாங்கள் படிக்கும் போது இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன் யாரோ ஃபானில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார்களாம்.)
Civil: நாங்கள் படித்த காலத்தில் மதிப்புக் குறைந்திருந்த பார்க்கப்பட்ட சிவில் துறை டாப் லிஸ்டில் இருந்தது. உண்மையில் இது தான் ரொம்பச் சந்தோஷமாக இருந்தது.(மேடையேறி அறிமுகப்படுத்திக் கொண்ட போது சிவில் என்றதும் கண்மணிகள் போட்ட கரகோஷமே அதற்குச் சான்று!)
ஆனால் நாங்கள் அத்துறையை விட்டு விலகி விட்டதைத் தெரிவித்த போது ஏமாற்றமடைந்தனர்.
இறுதியாண்டு சிவில் மாணவர்களில் பாதிப்பேருக்கு அதே துறையில் வேலை ஏற்கெனவே கிடைத்திருந்தது. மேலும் அவரவர் படிக்கும் பொறியியல் (core) துறையிலேயே வேலை பார்க்கும் ஆர்வம் அதிகம் உள்ளவர்களாகத் தெரிந்தார்கள். தயக்கமின்றி மேடையேறிப் பலரும் பேசினார்கள். (தமிழிலும் ஆங்கிலத்திலும்) எங்கள் காலத்தில் யாராவது ஒரு சிலரே இதற்குத் தயாராக இருப்பார்கள். அதுவும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடியவர்கள் மட்டுமே.
ஆர்க்கெஸ்ட்ரா: இதைப் பற்றிக் கேட்டதுமே மற்ற மாணவர்கள் உற்சாகமாகப் பேசினார்கள். பல போட்டிகளில் கலந்து கொண்டதாகவும் எல்லாருமே ரொம்பவும் திறமைசாலிகளாக இருப்பதாகவும் சொன்னார்கள். பூட்டியிருந்த அந்த அறைக்குள் செல்ல நான் விரும்புவதாகச் சொன்னதும் ஓடிப்போய் சாவி எடுத்து வந்து திறந்தனர். பியானோ மட்டும் அப்படியே இருந்தது. நாங்கள் உபயோகித்த அந்த ட்ரம் செட் இல்லை. தங்கள் சொந்த கிட்டார், மற்றும் வயலின் வைத்திருந்தார்கள். ஏனைய கருவிகளை நிக்ழச்சிகள் நடத்தும் போது ஓரிரு வாரங்களுக்கு மொத்தமாக வாடகை எடுத்துக் கொள்வதாகக் கூறினார்கள். எங்கள் ஆசைக்காகக் "கரிகாலன் காலப் போல" பாட்டையும் அழகாகப் பாடிக் காண்பித்தனர்.
1970 களிலும் 80களிலும் படித்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து அளவளாவிக் கொண்டிருந்த போது கடந்த சில ஆண்டுகளில் படித்தவர்கள் சொற்பமான எண்ணிக்கை தான். அது ரொம்பவும் வெட்கமாகவும் வருத்தமாகவும் இருந்தது. அனைவரையும் ஒன்று திரட்டி திட்டமிட்டு ஒருமுறை வரவேண்டும் என்றி நினைத்துக் கொண்டோம்.
பெண்கள் விடுதி மாலை 6.30 மணிக்குப் பூட்டப்பட்டு விடும் என்ற விதியில் இம்மியளவும் மாற்றம் ஏற்படவில்லை! அடுத்திருக்கும் வேளான் பல்கலை வளாகமே தெரியாத அளவு அடர்ந்திருக்கும் மரங்களில் நிறைய வெட்டப்பட்டிருந்தன.
சிவில் துறை என்னதான் முன்னேறி இருந்தாலும் வேலைக்குத் தேர்வு செய்ய வரும் நிறுவனங்கள் இன்னும் பெண்களை உதாசீனப்படுத்துவது பத்து ஆண்டுகளாகியும் கொஞ்சமும் மாறாமல் இருப்பது நம்பவே முடியாத கொடுமை. "ABC யும் பாய்ஸ் மட்டும் தாங்கா எடுத்தாங்க. XYZ கம்பெனி எங்களை இன்டர்வ்யூவே அட்டென்ட் பண்ண விடலை" என்று அழாக்குறையாக மாணவிகள் சொன்ன போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாங்கள் சொன்ன அதே வார்த்தைகள்.
இதற்குக் கல்லூரி நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து ஏதாவது செய்ய முடியுமா என்று தெரியவில்லை.
மாலை நான்கு மணிவரை கல்லூரியில் சுற்றி விட்டு ஒருவருக்கொருவர் விடைபெற்றோம். அதன்பின் நிகழந்தது இன்னொரு மறக்கமுடியாத அனுபவம். முன்பின் பார்த்தறியாத நபர் ஒருவரிடம் ஆண்டாண்டு காலமாய்ப் பழகியதே போன்ற உள்ளன்புடனும் உரிமையுடனும் பழக ஒரு சிலரால் தான் முடியும். விஜி ராம் அவர்கள் அப்படிப்பட்ட ஒரு தனிப்பிறவி. அவர்களைச் சந்தித்தது பற்றித் தனி இடுகையில்!
14 comments:
//சிவில் என்றதும் கண்மணிகள் போட்ட கரகோஷமே !!//
ஊய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் பின்னே சிவில்ன்னா ச்சும்மாவா! :))))
//ஆனால் நாங்கள் அத்துறையை விட்டு விலகி விட்டதைத் தெரிவித்த போது ஏமாற்றமடைந்தனர். //
:(((((((((
நல்ல பதிவு...
பசுமை நிறைந்த நினைவுகளே...
// விஜி ராம் ஒரு தனிப்பிறவி //
உங்களுக்கு இப்பத்தான் தெரியுமா? :)
அந்தக் கல்லூரிக்கு நானும், அம்முவும் உன்னைப் பார்க்க ஒருமுறை வந்தது, மரங்களின் அடர்த்தியாலும், செறிவாலும் வளாகம் நிறைந்திருந்தது எல்லாம் நினைவுக்கு வருகிறது. பூவரச மரங்களிலிருந்து ஆரம்பித்த இந்த பதிவு சட்டென்று உள்ளிழுத்துக்கொண்டது. அங்கேயே சில வருடங்கள் அலைந்து, திரிந்து, பழகிக் களித்த காலங்கள் எத்தனை இனிமையானவையாய் இருந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. உனக்கு இந்த வாய்ப்பு அமைய, உறுதுணையாய் இருந்த தம்பி ஜோவுக்கும் என வாழ்த்துக்கள்.
//விஜி ராம் அவர்கள் அப்படிப்பட்ட ஒரு தனிப்பிறவி. அவர்களைச் சந்தித்தது பற்றித் தனி இடுகையில்! //
அவங்களை பாத்ததுக்கப்பறமும் தெளிவா இருக்கீங்களே :)
ம்ம்ம்ம் (வேறென்ன...பெருமூச்சு தான்) நாங்கெல்லாம் எப்ப மீட் பண்ண போறோமோ.
என்ன தான் இருந்தாலும் மெக்கானிகல் போல வருமா :))
அருமையான பகிர்வு.
//சிவில் துறை என்னதான் முன்னேறி இருந்தாலும் வேலைக்குத் தேர்வு செய்ய வரும் நிறுவனங்கள் இன்னும் பெண்களை உதாசீனப்படுத்துவது பத்து ஆண்டுகளாகியும் கொஞ்சமும் மாறாமல் இருப்பது நம்பவே முடியாத கொடுமை.///
இது மட்டும் இல்லீங்க. பெண்களுக்கு பேறுகால விடுப்பும், பேறுகாலத்துக்கு பிறகு மீண்டும் வேலை கிடைப்பதுமே கூட ரொம்ப அரிதுதான். :( மாற்றங்கள் மேலோட்டமாகத்தான். மற்றபடி இன்னும் எதுவும் மாறவில்லை.
`ஞாபகம் வருதே’ நல்ல இருந்தது தீபா. சந்தோஷமான நினைவலைகள்.
`ஞாபகம் வருதே’ நல்ல இருந்தது தீபா. சந்தோஷமான நினைவலைகள்.
ஆஹா...ஜாலிதான்!
/எங்கள் ஆசைக்காகக் "கரிகாலன் காலப் போல" பாட்டையும் அழகாகப் பாடிக் காண்பித்தனர்./
:-)
/*அவற்றின் முழுவீச்சும் வெளிப்படும்படி என்னால் எழுதவே முடியாது.
*/
உண்மைதான். நல்ல பகிர்வு.
அழகிய நினைவுப் பயணம், பழைய கல்லூரியைப் பார்ப்பது என்றாலே அத்தனை அழகு.
இதெல்லாம் அநியாயம்.. என்னையும் அழைத்துப் போயிருக்கலாம்.. சொக்கா.. நமக்குக் குடுப்பனை இல்லையே.. :)
Post a Comment