Wednesday, August 26, 2009

ஷார்ட் கமெர்ஷியல் ப்ரேக்!

டிவி யில் இதைக் கேட்ட மாத்திரத்தில் சேனல் மாற்றும் வழக்கம் போய் இப்போதெல்லாம் இதற்காகவே சேனல் சேனலாகத் தேடும் நிலைமையாகி விட்டது. காரணம் நேஹா.

விளம்பரங்கள் என்றால் கண் கொட்டாமல் பார்க்கிறாள்.
குழந்தைகள் நாய், பிராணிகள் வரும் விளம்பரமென்றால் கூக்குரலோடு!

சதா ஏதாவது செய்து கொண்டே இருக்கும் அவளைக் கொஞ்ச நேரம் அசர வைத்து விட்டு ஏதாவது வேலை பார்க்கவேண்டுமென்றால் ஆபத்பாந்தவர்கள் எனக்கு இந்த விளம்பரங்கள் தான்.

விளம்பரம் முடிந்து அவளுக்கு விருப்பமான பாடல்களில் ஏதாவது ஒன்றும் (அவை பற்றி வேறு ஒரு பதிவில்) வந்து விட்டால் கூடுதல் அதிர்ஷ்டம் தான்!

விளம்பரமோ இந்தப் பாடலோ முடிந்ததும் உடனே திரும்பி விடுவாள். அதற்குள் அவளைக் கண்காணிக்க ஓட வேண்டும்..
L

அதனால் சில காலமாக விளம்பரங்கள் தவிர வேறு எதுவுமே பார்க்க முடிவதில்லை. அதில் குறை ஒன்றும் இல்லை. எவ்வளவு கலையம்சத்துடன் சில விளம்பரங்கள் வருகின்றன? குழந்தைகள் அதிகமாகப் பயன்படுத்தப் படுவது குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவினாலும் வெகுவாக அனைவரையும் ஈர்ப்பவை குழந்தைகள் வரும் விளம்பரங்கள் தான்.


குறிப்பாக

ரோஸி மிஸ்ஸின் குறும்புக்காரச் மாணவன் செல்ல நாயாக நடித்து அவரைச் சிரிக்கச் செய்யும் விளம்பரம்

’மிச்சம் பண்ண மூனு ரூபாயில நான் ஐஸ்கிரீம் சாப்ட்டேன்’ என்று நாக்கை நீட்டும் சுட்டிப்பெண்

நிறைய குழந்தைகள் பாடி ஆடும் எண்ணெய் விளம்பரம்

ஒரு பறவைக் கூட்டில் முட்டைகள் பொரியும் நேரம் பார்த்துத் தன் தோழர்களைச் சிறுமி அழைப்பது

டீயில் தெர்மாமீட்டர் வைத்துக் கணவன் ஏமாற்றிவிட்டதைக் கண்டுபிடித்து விடும் பெண்ணும் அவரது முக பாவமும்


எரிச்சல் வரும் விளம்பரங்களும் நிறைய உள்ளன – அவற்றில் முக்கியமானவை:

இந்தப் பானத்தைக் குடித்தால் உங்கள் குழந்தை இரட்டிப்பு வேகத்தில் வளரும்! – யார் கேட்டது? இயல்பாக வளர்ந்தால் போதாதா? எங்களுக்கு வேண்டியது நார்மல் ஆரோக்கியமான பிள்ளைகள்; கடோத்கஜன்களோ ஆறு வயது அமிதாப் பச்சன்களோ அல்ல.

சிவப்பழகு சிவப்பழகு என்று செவிப்பறை கிழியும் அளவுக்கு நாகரிகமே இல்லாமல் நடக்கும் மறைமுகமான இனவெறி வன்முறை. அதற்காக விளம்பரப் படுத்தப்படும் க்ரீம்கள், லோஷன்கள், சோப்புகள் இன்னபிற கண்றாவிகள்.
சருமம் மென்மையாக, சுருக்கங்கள் இல்லாமலிருக்க என்று மட்டும் சொன்னாலென்ன?

மாடி வீட்டு அம்மாளை விருந்துக்கு அழைத்து விட்டுத் தந்திரமாக அவரையே சமைக்கச் செய்வது.

ஒரு சோப்போ, ஷேவிங் லோஷனோ, பெர்ஃப்யூமோ பூசிக் கொண்டவுடன் ஆண்கள் அதி மன்மதர்கள் ஆகிவிடுவதாகவும் அதைத் தொடர்ந்து பெண்களை எவ்வளவு கேவலமாகக் காட்ட முடியுமோ அவ்வளவு கேவலமாகக் காட்டுவதும்..

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் என்ன மாதிரியான விளம்பரமானாலும் பெரும்பாலும் அவை மட்டுமே மனதில் நிற்கின்றன. அவை எடுத்துச் சொல்லும் பொருட்கள் மறந்துவிடுகின்றன. Purpose defeated!

32 comments:

அமுதா said...

/*சிவப்பழகு சிவப்பழகு என்று செவிப்பறை கிழியும் அளவுக்கு நாகரிகமே இல்லாமல் நடக்கும் மறைமுகமான இனவெறி வன்முறை*/
எனக்கும் மிக எரிச்சல் தரும் விளம்பரம். சிவப்பு தான் அழகா? அது தான் தன்னம்பிக்கை தருமா? முட்டாள்தனம்

/*அவை எடுத்துச் சொல்லும் பொருட்கள் மறந்துவிடுகின்றன. Purpose defeated!
*/
:-)

ஆயில்யன் said...

//விளம்பரங்கள் என்றால் கண் கொட்டாமல் பார்க்கிறாள்.
குழந்தைகள் நாய், பிராணிகள் வரும் விளம்பரமென்றால் கூக்குரலோடு!//

சமீபத்திய விடுமுறையில் அண்ணன் வீட்டில் இருந்த சில நாட்களில் இது போன்ற காட்சிகளை மிகவே ரசித்தேன்! விளம்பர சப்தங்களும் நாடக டைட்டில் சாங்குகளும் அண்ணன் மகளை அப்படியே கவனத்தை ஒரே திசைக்கு கொண்டு சென்றிருக்கிறதை நினைத்தால் ஆச்சர்யம்! (அப்படியே வைச்ச கண்ணு எடுக்காம பாக்குறான்னு சொல்லுவாங்களே அதுமாதிரி !)

:))

ஆயில்யன் said...

//விளம்பரமோ இந்தப் பாடலோ முடிந்ததும் உடனே திரும்பி விடுவாள். அதற்குள் அவளைக் கண்காணிக்க ஓட வேண்டும்//

இதற்காகவே தனியாக ஒரு வீடியோ பாடல் கலெக்‌ஷன் போட்ட்டு வைச்சிருக்கோம்ல :)) ரொம்ப அழுகை அல்லது அடம் பண்ணினா ஸ்டார் த மியூஜிக்தான் :))

Deepa said...

நன்றி அமுதா!

//அது தான் தன்னம்பிக்கை தருமா? முட்டாள்தனம்//
சரியாச் சொன்னீங்க

நன்றி ஆயில்யன்!

//இதற்காகவே தனியாக ஒரு வீடியோ பாடல் கலெக்‌ஷன் போட்ட்டு வைச்சிருக்கோம்ல :)) //

நல்ல ஐடியா! :-) நானும் நினைத்ததுண்டு. ஆனால் அது கொஞ்சம் டூ மச்சாகிவிடுமே என்று விட்டு விட்டேன்!

குடுகுடுப்பை said...

என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணின் குழந்தை பெயர் நேகா, என் பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தை பெயர் நேகா, இந்தப்பெயர் இப்போது அதிகமாக வைக்கிறார்கள் இந்த பெயருக்கு என்ன பொருள்.

குடுகுடுப்பை said...

சிவப்பழகு சிவப்பழகு என்று செவிப்பறை கிழியும் அளவுக்கு நாகரிகமே இல்லாமல் நடக்கும் மறைமுகமான இனவெறி வன்முறை. அதற்காக விளம்பரப் படுத்தப்படும் க்ரீம்கள், லோஷன்கள், சோப்புகள் இன்னபிற கண்றாவிகள்.
சருமம் மென்மையாக, சுருக்கங்கள் இல்லாமலிருக்க என்று மட்டும் சொன்னாலென்ன?//

அந்தக்காலத்திலேயே நான் மருதானியெல்லாம் போட்டு குளிச்சு ஏமாந்தவன், என்னை மாதிரி ஆட்களை உருவாக்கி எந்தகருமத்தையாவது வித்துருவானுங்க.

Deepa said...

நன்றி குடுகுடுப்பை!

நேகா அல்ல, நேஹா.. அன்பு என்று பொருள். (நேசம் என்ற வார்த்தையின் வேறுபாடாக இருக்கலாம்)

தமிழ்ப்பெயர் வைக்கவேண்டும் என்று தான் விரும்பினோம். ஆனால் வீட்டில் அனைவருக்கும் இந்தப் பெயர் பிடித்திருந்தது. மேலும் அன்பு என்ற பொருள் வருவதால் எனக்கும்! அன்புக்கு ஏது மொழி? ;-)

மாதவராஜ் said...

பொதுவாகவே சட் சட்டென்று மாறும் காட்சிகளின் மீது குழந்தைகளுக்கு ஈர்ப்பு உண்டாகும். விளம்பரங்கள் பெரும்பாலும் குழந்தைகளை ஈர்ப்பது இப்படித்தான்.

//என்ன மாதிரியான விளம்பரமானாலும் பெரும்பாலும் அவை மட்டுமே மனதில் நிற்கின்றன. அவை எடுத்துச் சொல்லும் பொருட்கள் மறந்துவிடுகின்றன//

அருமை!

Venkatesh Kumaravel said...

//டீயில் தெர்மாமீட்டர் வைத்துக் கணவன் ஏமாற்றிவிட்டதைக் கண்டுபிடித்து விடும் பெண்ணும் அவரது முக பாவமும்//
ட்ரிவியா: இதில் வரும் ஆடவர் துள்ளுவதோ படத்தில் தனுஷ் தவிர படத்திலிருந்த கதாநாயகர். ரஜினிகாந்த் மருமகன்/ டீ விளம்பர மாடல். உலகம் சுழல்கிறது.

காமராஜ் said...

//இந்தப் பானத்தைக் குடித்தால் உங்கள் குழந்தை இரட்டிப்பு வேகத்தில் வளரும்! – யார் கேட்டது? இயல்பாக வளர்ந்தால் போதாதா? எங்களுக்கு வேண்டியது நார்மல் ஆரோக்கியமான பிள்ளைகள்; கடோத்கஜன்களோ ஆறு வயது அமிதாப் பச்சன்களோ அல்ல.//

இந்த கனமான நேரத்தில்,
சிரிக்கவைத்துவிட்ட வார்த்தைகள்.
வரிகள் எனக்கு ஒலிவடிவில் கேட்கிறது.
காரணம் ..? கூப்பிடுதூரத்தில் இருக்கிறது.
பக்கத்து வீட்டில் இன்னும்
இரண்டு தீபாக்கள் இருக்கிறார்கள்.

Deepa said...

நன்றி அங்கிள்!

நன்றி வெங்கி ராஜா!

நன்றி காமராஜ் அங்கிள்!
யார் அந்த இரண்டு தீபாக்கள்?

யாத்ரீகன் said...

//இந்தப் பானத்தைக் குடித்தால் உங்கள் குழந்தை இரட்டிப்பு வேகத்தில் வளரும்! – யார் கேட்டது? இயல்பாக வளர்ந்தால் போதாதா? எங்களுக்கு வேண்டியது நார்மல் ஆரோக்கியமான பிள்ளைகள்; கடோத்கஜன்களோ ஆறு வயது அமிதாப் பச்சன்களோ அல்ல.//

:-))))))))))))))))))) serious post mathiri irundhu.. idhula kalakiteenga

ராஜ நடராஜன் said...

//யார் அந்த இரண்டு தீபாக்கள்?//

யார் அந்த காமராஜ்? நான் போட வச்சிருந்த பின்னூட்ட அடைப்பானுக்கு முந்திகிட்டது!

//இந்தப் பானத்தைக் குடித்தால் உங்கள் குழந்தை இரட்டிப்பு வேகத்தில் வளரும்! – யார் கேட்டது? இயல்பாக வளர்ந்தால் போதாதா? எங்களுக்கு வேண்டியது நார்மல் ஆரோக்கியமான பிள்ளைகள்; கடோத்கஜன்களோ ஆறு வயது அமிதாப் பச்சன்களோ அல்ல.//

ராஜ நடராஜன் said...

//இந்தப் பானத்தைக் குடித்தால் உங்கள் குழந்தை இரட்டிப்பு வேகத்தில் வளரும்! – யார் கேட்டது? இயல்பாக வளர்ந்தால் போதாதா? எங்களுக்கு வேண்டியது நார்மல் ஆரோக்கியமான பிள்ளைகள்; கடோத்கஜன்களோ ஆறு வயது அமிதாப் பச்சன்களோ அல்ல.//

முந்தைய பின்னூட்டத்துக்கு இன்னுமொரு யாத்ரிக போட்டியா அடைப்பானுக்கு!!!

மணிநரேன் said...

//...ஏதாவது வேலை பார்க்கவேண்டுமென்றால் ஆபத்பாந்தவர்கள் எனக்கு இந்த விளம்பரங்கள் தான்.//

;)

//...இயல்பாக வளர்ந்தால் போதாதா? எங்களுக்கு வேண்டியது நார்மல் ஆரோக்கியமான பிள்ளைகள்; கடோத்கஜன்களோ ஆறு வயது அமிதாப் பச்சன்களோ அல்ல//

நன்றாக கூறியுள்ளீர்கள்.

Unknown said...

உங்க வலைப்பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமா அப்போ உங்க பதிவுகளை tamil10.com தளத்தில் இணையுங்கள் .பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்

Deepa said...

நன்றி யாத்ரீகன்!

அய்யோ இது ரொம்ப சீரியஸ் பதிவெல்லாம் இல்ல. மொக்கை தான். ஆனா அந்த லேபில் எனக்குக் கொஞ்சம் அலர்ஜி, அதான் போடல. ;-)

நன்றி ராஜ நடராஜன்!

நன்றி மணி நரேன்!

தினேஷ் ராம் said...

Award winning AD to preserve our planet Earth.

Words of a 3 year old girl:
"Save the Earth. Its the only planet that has chocolate..."

இது SMS ஆக வந்திருந்தது. தமிழ் சேனல்களில் இத்தகைய அழகானதொரு விழிப்புணர்வு விளம்பரங்கள் வந்ததாக தெரியவில்லை. படிக்கும் பொழுதே மிகவும் பிடித்திருந்தது. இது நம்மூர் சேனல்களில் ஒளிபரப்பாகி இருந்தால், கண்டிப்பாக என்னை போல் நேஹாவிற்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன் :-) .

சந்தனமுல்லை said...

:-) ரசித்தேன் தீபா! நல்ல பகிர்வு!குட்டீசை டார்கெட்டாக வைத்துதான் விளம்பரங்கள் எடுப்பார்கள் போல!! எ.காக, இந்த kinder joy - விளம்பரம்..பார்த்து, பப்பு அது வேண்டுமென்பாள்!
நீங்கள் சொல்வது போல சில விளம்பரங்கள் எரிச்சலூட்டுகின்றன! அதுவும் இரட்டிப்பு என்று சொல்லிக்கொண்டு எல்லோரும் ஓடுவது...மகா கேவலமாக இருக்கிறது!

பொ.வெண்மணிச் செல்வன் said...

அக்கா வீட்டிலும் இதே கதைதான். ஒசத்தி கண்ணா ஒசத்தி மருமகளின் favorite.
இதென்ன இப்படி ஒரு ரசனை என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஊரெல்லாம் இதே கதைதானா? அக்காவிடம் இந்த பதிவை வாசிக்கச் சொல்கிறேன்.

தினேஷ் said...

/ரோஸி மிஸ்ஸின் குறும்புக்காரச் மாணவன் செல்ல நாயாக நடித்து அவரைச் சிரிக்கச் செய்யும் விளம்பரம்//

இதை பார்க்க நல்லாவா இருக்கு சிறுவன் நாய் மாதிரி ?

ஆனால் மிக்சிறந்த விளம்பரங்கள் பல குழந்தைகளை எளிதில் கவ்ர்ந்துவிடுகிறது வயதானவர்களை விட..

Deepa said...

நன்றி சாம்ராஜ்யப்ரியன்!
நல்ல வாசகம். ஆனால் இங்கு ஒளிபரப்பு ஆன மாதிரி தெரியவில்லையே. youtube ல் தேடிப் பார்க்கிறேன்.


நன்றி முல்லை!

//அதுவும் இரட்டிப்பு என்று சொல்லிக்கொண்டு எல்லோரும் ஓடுவது...மகா கேவலமாக இருக்கிறது!// :-)) LOL!!

நன்றி வெண்மணிச் செல்வன்!
உங்கள் அக்கா மகளும் இதே கதையா?

நன்றி சூரியன்!

//இதை பார்க்க நல்லாவா இருக்கு சிறுவன் நாய் மாதிரி ?//

:-)))))) நான் என்ன செய்வது? நேஹா அதற்குத் தான் பயங்கரப் பரவசமாகி ஆ ஊ என்று கத்திக் கொண்டு பார்ப்பாள். ஆகவே எனக்கும் பிடித்து விட்டது!

அமிர்தவர்ஷினி அம்மா said...

விளம்பரங்கள் தான் குட்டீஸ் சாய்ஸ் போல, இங்கேயும் அதுதான் :)


AXE என்ற ஒரு ஃபெர்ப்யூம் விளம்பரத்தை கண்டாலே அப்படி ஒரு எரிச்சல் வரும் எனக்கு :(((((((((

நேசமித்ரன் said...

எண்ணங்களை பிரதி பலிக்கும் பதிவுகளாகப் போடுகிறீர்கள்
நாய் போல நகரும் சிறுவன் விளம்பரம் மட்டும் எனக்கு முரண்
:)

கண்மணி/kanmani said...

சரி சரி நாமதான் இப்படி விளம்பரங்களைக் கண்டு அலட்டிக்கிறோமோன்னு நெனச்சேன்.யூ டூ.
ஆனால் சீரியல்களை விட சிலசமயம் நல்லாவே இருக்கு.
அமேஸ் ப்ரெய்ன்ஃபுட்,கவின்ஸ் மில்க்,சமீபத்திய லைஃப்பாய்[ரெண்டு பிலாக்]
இப்படி அசாதரணங்கள் எரிச்சல் தரும்.

Deepa said...

நன்றி நேசமித்ரன்!

அந்த நாய் போல் சிறுவன் நடிக்கும் விளம்பரம் பலருக்கும் பிடிக்கவில்லை; சீரியஸாகப் பார்த்தால் அது கொஞ்சம் bad taste தான். ஆனால் நான் சொன்ன மாதிரி, அது என் ஒன்றரை வயது மகளின் விருப்பம்!

நன்றி கண்மணி!

யெஸ்! மீ டூ! :-)

Radhakrishnan said...

அட, விளம்பரப் பிரியராக வளர்கிறாரே நேஹா.

விளையாட்டுப் பொருள்கள், புத்தகங்களுடன் நேஹாவை வளரச் செய்தல் நல்லது என்று கருதுகிறேன்.

குழந்தைகளுக்கு addictive மனப்பான்மை வெகுவிரைவில் தொலைகாட்சிகள் கற்றுத்தந்துவிடுகின்றன.

பல விளம்பரங்களை மிகவும் ரசிப்பதுண்டு. எரிச்சலூட்டும் விளம்பரங்களும் உண்டு அதிலும் குறிப்பாக 'ஹமாம் இருக்க பயமேன்' எனும் விளம்பரம் அதிகமாகவே எங்களை பயமுறுத்தியதுண்டு. அந்த விளம்பரம் வந்தாலே சேனல் மாறிவிடும்.

மிக்க நன்றி.

Deepa said...

நன்றி இராதாகிருஷ்ணன்!

//விளம்பரப் பிரியராக// சிலேடை அருமை!

//விளையாட்டுப் பொருள்கள், புத்தகங்களுடன் நேஹாவை வளரச் செய்தல் நல்லது என்று கருதுகிறேன்.
குழந்தைகளுக்கு addictive மனப்பான்மை வெகுவிரைவில் தொலைகாட்சிகள் கற்றுத்தந்துவிடுகின்றன.
//

100/100 சரி. என் பயமும் அது தான். நாம் கொஞ்சம் மெனக்கெட்டால் தவிர்க்கலாம். கண்டிப்பாகச் செய்கிறென்.

குறிப்பு: நேஹாவுக்கு விளையாட்டுகளிலும் விருப்பம் அதிகமே.

வருகைக்கும் அவசியமான நல்ல கருத்துக்கும் மீண்டும் மிக்க நன்றி.

Deepa said...

நன்றி அமித்து அம்மா!

//விளம்பரங்கள் தான் குட்டீஸ் சாய்ஸ் போல, இங்கேயும் அதுதான் :)//

:-)

Deepa said...

நன்றி தமிழினி!

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

நாஞ்சில் நாதம் said...

குட்டீசை டார்கெட்டாக வைத்துதான் விளம்பரங்கள் எடுக்கிறார்கள்.

அப்பதான் அதிகமாக போணியாகும் விளம்பரமும் பொருளும்.