Monday, July 13, 2009

உள்ளிருந்து ஒலிக்கும் இசை

நம் எல்லோரையுமே இசை ஏதோ ஒரு வகையில் தன் வசப்படுத்தக் கூடியது தான். சிலருக்கு எப்போதுமே பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கப் பிடிக்கும். காலை எழுந்தவுடன், வேலை செய்யும் போது, பயணம் செய்யும் போது, என்று.

சிலருக்கு ஓய்வாகத் தனிமையில் இருக்கும் போது காதோடு மட்டும். சிலருக்கு ஊருக்கே கேட்கும் படி அலற வைத்து கூடவே தன்னை மறந்து ஆடவும் பிடிக்கும்.
அதே போல் இசையில் பல்லாயிரக்கணக்கான வகைகளும் உண்டு.

இருந்தாலும் எண்ணற்ற தமிழர்களைப் போல் நானும் இந்திய, தமிழ்ச் சினிமா இசையின் தீவிர ரசிகை.

சில பாடல்கள் முதல் தடவை கேட்கும் போதே மனதை வெகுவாகக் கொள்ளை கொள்ளும். சில பாடல்கள் கேட்கக் கேட்கப் பித்துப் பிடிக்க வைக்கும்.

ஆனால் வெகு சில பாடல்கள் தாம் நமது மனதின் அலைகள் வெளியே வந்து உலவுவது போல, அவற்றுக்கு நாமே இசை உருவம் கொடுத்தது போல, ஆழ்ந்த தியானத்துக்கு இட்டுச்செல்வது போல, உயிரைத் தட்டி எழுப்புவது போல நம் ஆன்மாவுடன் இரண்டறக் கலந்து விடும்.

பாடலின் வார்த்தைகளும் இதற்கு சில நேரம் முக்கியக் காரணமாக இருக்கலாம்; ஆனால் புரியாத மொழியிலும் கூட இந்த விந்தை நிகழ்வது சாத்தியமே!

இதில் மகா வித்தகர் இசைஞானி இளையராஜா அவர்கள்.
அவரது இசையில் என்னுள் அவ்வப்போது ஒலிக்கும் பாடல்கள் இவை.உங்களுக்குள்ளும் நிச்சயம் ஒலித்திருக்கும். முடிந்தால் கேட்டு ரசியுங்கள்.

இளங்காத்து வீசுதே - பிதாமகன்

ஓம் சிவோஹம் - நான் கடவுள்

கொடியில மல்லியப்பூ - கடலோரக் கவிதைகள்

புன்னகை மன்னன் தீம் இசை

ஓம் நமஹ - இதயத்தைத் திருடாதே

என் வானிலே - ஜானி

26 comments:

கே.என்.சிவராமன் said...

தீபா,

அலுவலகத்தில் ஆணி பிடுங்கும் வேலை கண்ணை கட்டுகிறது. பதிவை படிக்கவில்லை. ஆனால், எழுத வந்திருக்கிறீர்கள் என்பவதே சந்தோஷமாக இருக்கிறது.

வெல்கம்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வால்பையன் said...

//கொடியில மல்லியப்பூ - கடலோரக் கவிதைகள்
என் வானிலே - ஜானி//

இது ரெண்டும் ரொம்ப பிடிச்ச டியூன்




//ஓம் நமஹ - இதயத்தைத் திருடாதே//

யாரோ ஒரு பதிவர் காலர் டியூனா வச்சிருந்தார், பேரு ஞாபகம் வரல!

Vidhoosh said...

ஜென்சியின் பாடல்களை விட்டுடீங்களே???

நட்புடன் ஜமால் said...

ஆம்! இசை

இது செய்யும் ஜாலங்கள் தான் எத்தனை.

நீங்க கொடுத்த லிஸ்ட் ரொம்ப அருமை

அதிலே ரொம்ப டாப்

ஜானி ...

Joe said...

நல்ல இடுகை, தீபா.

இசையை ரசிப்பதற்கு மொழி தடையாக இருக்காது.

பாடல்களின் லிங்க்களை இணைப்பது சட்ட விரோதமில்லையே?

சந்தனமுல்லை said...

மனதை உருக்கும் பாடல்கள்தான் - நல்லாருக்கு உங்க தொகுப்பு! பாடலைக் கேட்டுக்கொண்டு பயணம் செய்வது ரம்மியமாக இருக்கும் இல்லையா!

Deepa said...

வருகைக்கும் கருத்துக்கும்

நன்றி பைத்தியக்காரன்!
நன்றி வால்பையன்!
நன்றி விதூஷ்!
நன்றி நண்பர் ஜமால்!
நன்றி ஜோ!
நன்றி முல்லை!

மாதவராஜ் said...

தீபா!
உன்னைப் போல இசை ஞானமும், பாடும் கலையும் வாய்க்கப்பெற்றவர்கள் சொல்லும்போது கூடுதல் சிரப்பாய் இருக்கிறது.
இசையைப் பற்றி இன்னும் நீ அழகாகவும், ஆழமாகவும் எழுதமுடியும் என நினைக்கிறேன்.
இசைக்கென மொழி, வர்ணம், தருணங்கள் இருக்கின்றன. அவை பற்றியெல்லாம் எழுது.

அகநாழிகை said...

தீபா,
அமைதியாக இருக்கின்ற தருணங்களில் கூட நம் விருப்பமான பாடல்கள் காதில் ஒலித்துக் கொண்டேயிருப்பது போன்றதொரு எண்ணம் ஏற்படும்.
இசைக்கு மயங்காத இதயம் யாருளர்.

உங்களது விருப்பத்தில், இளங்காத்து வீசுதே, என் வானிலே, இரண்டும் ரொம்பப் பிடிக்கும்.

நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்கள்,
1. பூவே வாய்பேசும் போது (12பி)
2. உன் அழகுக்கு நான் பொறுப்பு (ஆளவந்தான்)
3. இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ (வைதேகி காத்திருந்தாள்)
4. பூமாலையே தோள் சேரவா (பகல் நிலவு)
5. அடுக்குமல்லி எடுத்து வந்து (ஆவாரம் பூ)
இன்னும் இருக்கிறது. சொல்லிக்கொண்டே போகலாம். (எனது தேர்வில் இல்லாத பாடலே இல்லை எனலாம்)

இனிய பகிர்தலுக்கு நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

சிலருக்கு ஓய்வாகத் தனிமையில் இருக்கும் போது காதோடு மட்டும்.

நம்ம ரசனை இதுதாங்க.

பாடல்கள் தேர்வு நல்லா இருந்துது.

உயிரோடை said...

//ஆனால் வெகு சில பாடல்கள் தாம் நமது மனதின் அலைகள் வெளியே வந்து உலவுவது போல, அவற்றுக்கு நாமே இசை உருவம் கொடுத்தது போல, ஆழ்ந்த தியானத்துக்கு இட்டுச்செல்வது போல, உயிரைத் தட்டி எழுப்புவது போல நம் ஆன்மாவுடன் இரண்டறக் கலந்து விடும்.//

சரியாக சொல்லி இருக்கின்றீர்கள்.

rapp said...

3,4,6 என்னோட பேவரிட். சூப்பர் தீபா

Deepa said...

நன்றி அங்கிள்!
நன்றி அகநாழிகை!
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா!

அபி அப்பா said...

தீபா அருமையான பதிவுன்னு சொல்ல வரலை. ஆனா நீங்க எழுத வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நானும் இது மாதிரி பதிவு போட வேண்டிகுங்க!

Unknown said...

ஜானியில் “காற்றில் எந்தன் கீதம்” பாட்டைக் கேளுங்கள்.இசையின் உச்சம்.


இவரின் ஒரு பழையப் பாட்டை பற்றி:-

http://raviaditya.blogspot.com/2009/07/blog-post_05.html

Dr.Rudhran said...

go on

ரவி said...

ஆமா...இப்போது உள்ள ஐபாடு போன்ற சமாச்சாரங்கள் துல்லியமான ஒலியை இன்னும் அருகே கொண்டுவந்துவிடுவதால், பழைய பாடல்களை கூட மீண்டும் மீண்டும் எடுத்து ரசிக்கவேண்டும் போல உள்ளது...

குடுகுடுப்பை said...

நான் கடவுள் பாடலைத்தவிர அனைத்தும் அதிக முறை கேட்டு ரசித்த பாடல்கள்.

ஞாபகம் ஊட்டியமைக்கு நன்றி

லெமூரியன்... said...

காதலின் தீபமொன்று ஏற்றினாலே என்னெஞ்சில்.....,ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப் பூ இருக்குதுங்க.....போன்ற பாடல்கள் பட்டியலில் இருந்தால் இன்னும் சிறப்பு தீபா..!

தமிழன்-கறுப்பி... said...

பாடல்கள் காலத்தை மறக்க செய்வன...

எழுதுங்கோ தீபா...!

RRSLM said...

வாழ்த்துகள் தீபா!

☀நான் ஆதவன்☀ said...

எல்லாம் நல்ல இனிமையான பாடல்கள்.

சென்ஷி said...

ராஜா எப்போதுமே ராஜாதான்..

//கொடியில மல்லியப்பூ - கடலோரக் கவிதைகள்//

எப்ப மனசு சரியில்லைன்னாலும் இந்த பாட்டை கேக்குறது பழக்கம்.

பகிர்விற்கு நன்றி..

அகநாழிகை அண்ணன் எழுதிய பாடல்களில் 12பி -யில் வரும் பூவே வாய் பேசும்போது.. வாஹ்.. அருமையான பாடல். கண்ணுக்கு இனிமையாக படத்திலும் இடம்பிடித்திருக்கும் பாடல்!

Sanjai Gandhi said...

வரிக்கு வரி வழிமொழிகிறேன். தினசரி வாழ்க்கை இசையோடு ஆரம்பித்து இசையோடு தான் முடிகிறது.. வாழ்க்கையும் கூட.. :))

சந்தனமுல்லை said...

தீபா,

விருது கொடுத்திருக்கிறேன்!

http://sandanamullai.blogspot.com/2009/07/blog-post_15.html

வாழ்த்துகளுடனும், நன்றிகளுடனும்
முல்லை!

Deepa said...

மிக்க நன்றி முல்லை!

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.