அக்கினிக் கவிஞன் அவதரித்த நாளின்று!
"பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று"
பாடிய கவிஞன் வாழ்ந்த இம்மண்ணில் தான்,
பொன் வேண்டும், பொருள் வேண்டும், புகழ் வேண்டும்...
உயர்வைப் பற்றி எனக்கேன் கவலை என்று பொய் பகர்ந்து திரியும் பித்தர்கள் உலவுகிறார்கள்.
சத்தியத்தின் நாடி துடிக்க வேண்டும் கவிஞனது எழுத்தில்.
சீற்றம் அழகு
காதல் அழகு
காமம் அழகு
சோகம் அழகு
கவிதைக்கு மட்டுமல்ல, அலங்காரங்கள் எத்தனை புனைந்த போதும் பொய் என்றுமே அழகில்லை.
"கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும்
நடு வயதினனுக்குள்ள மனத் திடனும்
இளைஞனுடைய உத்ஸாகமும்
குழந்தையின் ஹ்ருதயமும்
தேவர்களே, எனக்கு எப்போதும்
நிலைத்திருக்கும்படி அருள் செய்க…”
"பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று"
பாடிய கவிஞன் வாழ்ந்த இம்மண்ணில் தான்,
பொன் வேண்டும், பொருள் வேண்டும், புகழ் வேண்டும்...
உயர்வைப் பற்றி எனக்கேன் கவலை என்று பொய் பகர்ந்து திரியும் பித்தர்கள் உலவுகிறார்கள்.
சத்தியத்தின் நாடி துடிக்க வேண்டும் கவிஞனது எழுத்தில்.
சீற்றம் அழகு
காதல் அழகு
காமம் அழகு
சோகம் அழகு
கவிதைக்கு மட்டுமல்ல, அலங்காரங்கள் எத்தனை புனைந்த போதும் பொய் என்றுமே அழகில்லை.
2 comments:
மகா கவியின் பிறந்த நாள்
சிறப்புக் கவிதை மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மனம் கவர்ந்த பதிவு
Post a Comment