இந்தப் பாடலில் மகாகவியின் சீற்றமும் வேகமும் அதிகமாக வெளிப்பட்டாலும் எப்போது இதைப் படித்தாலும் மனதில் இனம்புரியாத சாந்தமும் அமைதியும் நிலவுகிறது.
என்ன ஒரு எழுத்து? தமிழ் தேனும் அமுதும் மட்டுமல்ல தீயைப் போல் கனன்று எரியவும் வல்லது என்பதை பாரதியின் எழுத்துக்களில் தான் முழுமையாகக் கண்டுணர்ந்தேன்!
ஏனோ இன்று இதைத் தேடி எடுத்துப் படிக்கவும் பகிரவும் தோன்றியது.
உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ ?
மாயையே - மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ ! - மாயையே !
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே - நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ ? - மாயையே!
என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே ! - நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் - மாயையே !
சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே ! - இந்தத்
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய் ! - மாயையே !
இருமை யழிந்தபின் எங்கிருப்பாய், அற்ப
மாயையே ! - தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ ? - மாயையே !
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே - சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை - மாயையே !
என்னிச்சை கொண்டுனை யெற்றி விட
வல்லேன் மாயையே ! - இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண் - மாயையே !
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே ! - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை - மாயையே !
(மீள்பதிவு)
என்ன ஒரு எழுத்து? தமிழ் தேனும் அமுதும் மட்டுமல்ல தீயைப் போல் கனன்று எரியவும் வல்லது என்பதை பாரதியின் எழுத்துக்களில் தான் முழுமையாகக் கண்டுணர்ந்தேன்!
ஏனோ இன்று இதைத் தேடி எடுத்துப் படிக்கவும் பகிரவும் தோன்றியது.
உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ ?
மாயையே - மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ ! - மாயையே !
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே - நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ ? - மாயையே!
என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே ! - நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் - மாயையே !
சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே ! - இந்தத்
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய் ! - மாயையே !
இருமை யழிந்தபின் எங்கிருப்பாய், அற்ப
மாயையே ! - தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ ? - மாயையே !
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே - சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை - மாயையே !
என்னிச்சை கொண்டுனை யெற்றி விட
வல்லேன் மாயையே ! - இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண் - மாயையே !
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே ! - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை - மாயையே !
(மீள்பதிவு)
2 comments:
கருத்தாளமுள்ள வரிகள் பகிர்வுக்கு நன்றி
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே ! - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை - மாயையே !//
மெய் சிலிர்க்க வைக்கும் வைர வரிகள்
பாரதியின் இது வரை நான் படித்திராத பாடல்படித்து மகிழ்ந்தேன்
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
Post a Comment