Saturday, July 9, 2011

வாத்தும் மீனும்...

குட்டை வற்றி மூச்சு முட்டியது
வெளியேறிய வாத்துக்கோ
கரையின் வெம்மை பொசுக்கியது
நீரின்றியமையாத‌ மீனோ
சேற்றுக்குள் அமுங்கிய‌து
வட்டமிடும் கழுகுக்கும் மீன்பிடி வலைகளுக்கும்
இரண்டுமே இரையல்ல, உயிர் தானென்பது புரியுமா?

7 comments:

ponraj said...

அருமையான கவிதை!!!!

நானானி said...

வற்றிய குளமும் சுடும் வெயிலும்...ஒவ்வொருவர்க்கும் அவரவர் பிரச்சனை. நல்லாருக்கு.

Deepa said...

Thank you Ponraj.
How is Sam? Hope he is fully recovered now.

Thank you Naanaani.

கவி அழகன் said...

கவி அழகு கருத்து நெஞ்ச உறுத்துது

அன்புடன் அருணா said...

அட! நல்லாருக்கு தீபா!

ஜெய்லானி said...

யோசிக்க வைத்த கவிதை :-)

சாய்ரோஸ் said...

வட்டமிடும் கழுகுக்கும் மீன்பிடி வலைகளுக்கும்
இரண்டுமே இரையல்ல, உயிர் தானென்பது புரியுமா?//

ஆறறிவு மனிதர்களுக்கே
மீனும், ஆடும்
கூண்டிலிருக்கும் கோழியும்
இரையல்ல உயிரென்பது
இன்னமும் புரியவில்லை...
பாவம் கழுகுக்கும் வலைக்குமா
புரிந்துவிடப்போகிறது?...


இருந்தாலும் கவிதை வித்தியாசமான சிந்தனை... நல்ல முயற்சி...