Saturday, January 29, 2011

மானமுண்டா இந்திய அரசே?!

எங்கள் கல்லூரியில் சில வட கிழக்கு இந்திய மாணவர்கள் படித்தார்கள். (சிக்கிம், மணிப்பூர், அருணாச்சல்பிரதேசம், நாகாலந்து, மேகாலயா முதலிய மாநிலங்கள்)
அவர்களுக்கு ஏனோ இந்தியர்கள் என்ற உணர்வு அதிகம் இருந்ததில்லை. விடுமுறையில் ஊரிலிருந்து கிளம்பும் போது இந்தியாவுக்குப் போகிறோம் என்று சொல்லிவிட்டு வருவார்களாம். அப்போதெல்லாம் அதைக் கேட்க எங்களுக்குக் கோபம் வரும். காரணம் கேட்டால் பெரிதாய் விவரிக்க மாட்டார்கள். உங்களுக்குப் புரியாது என்று சொல்லிவிடுவார்கள்.

தமிழ்நாட்டு மீனவர்களின் படுகொலையைக் கண்டும் காணாமல் கள்ளமௌனம் சாதிக்கும் இந்திய அரசின் போக்கும், ஊடகங்களின் பச்சைச் சுயநலப் போக்கையும் காணும் போது அவர்கள் சொன்னது புரிகிறது.

பெருந்தலைவர்களே, மகாநடிகர்களே! அயல்நாட்டு விமான நிலையங்களில் அவமானப்படுவதைச் சுரணையற்றுச் சகித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஓட்டுப் போட்ட பாவத்துக்காக நாங்களும் சகித்துக் கொள்ளலாம்.

எங்கள் இன்னுயிர் சகோதரர்கள், அப்பாவி மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் நீங்கள் இருப்பதை நாங்கள் எப்படிச் சகிக்க முடியும்? எங்கள் குரல் கேளாதது போல், உறங்குவது போல் நடிக்க வேண்டாம். தலையில் இடிவிழும் ஜாக்கிரதை!

12 comments:

காதர் அலி said...

நானும் அதை தானே சொன்னேன். என் பதிவை படிக்கவும் .நன்றி .

Ram said...

குரல் கொடுங்கள் அனைவரும்..

'பரிவை' சே.குமார் said...

ஒன்று படுவோம்...
வென்று காட்டுவோம்..!

Unknown said...

கலக்கிட்டீங்க தீபா

Mugundan | முகுந்தன் said...

தமிழன் "இலவச தூக்கத்திலிருந்து"
வீதிக்கு வந்து போராடும் காலம்
வெகு தொலைவில் இல்லை.

சீ.கோபிநாத் said...

http://www.savetnfisherman.org/wp-content/uploads/2011/01/banner.png

Neengalum intha padathai ungal blog'il inaithal nadraga irukkum.

Nandri.

Sriakila said...

நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையின் சிறு தீப்பொறியாக நம்முடைய கோபத்தில் ஒன்றுபடுவோம்!

PS Arjun said...

Your blog is a very good one, appreciating for your concern on social issues.

செ.சரவணக்குமார் said...

well said deepa.

ஜெய்லானி said...

நீங்க சொல்றது 100 சதம் உண்மைதான் ..

Thekkikattan|தெகா said...

Prabha40

When U make MONEY by KILLING ppl UR soul Die, when u fight for righteousness UR SPIRIT soars high so fight hard for #tnfisherman

ponraj said...

தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா???
தமிழனை காப்பாற்ற தமிழனால் முடியாதா?
நினைக்கும் போது, மனம் வேதனை அடைகிறது..