Monday, January 17, 2011

நேஹா நேரம்

சின்னக் குழந்தை பிறந்தவுடன் வந்து பார்த்த போது,
"ஆஹா...பாப்பா ஜம்ப் பண்ணி வந்துட்டியா...வந்துட்டியா!" என்றெல்லாம் கை தட்டிக் குதூகலித்தாள்.
"பாப்பாக்கு முத்தம் குடுக்கறேன் கை புடிச்சிக்கிறேன்" என்றெல்லாம் பாசமழை பொழிந்தாள். எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான்.
சில வாரங்களில் எதற்காவது பிடிவாதம் பிடித்து அழுகையில் போய்ப் பாப்பாவை அடித்து விடுவது, கையைப் பிடித்து இழுப்பது என்று செய்யத் தொடங்கினாள். ரொம்பவே பயந்து போனேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்த பழக்கம் குறைந்து வருகிறது என்றே நம்பவிரும்புகிறேன்!

ப்ளே ஸ்கூல் ரொம்பப் பிடித்து விட்டது அவளுக்கு.

"நேஹா! ஸ்கூல்ல உனக்கு யாரு ஃப்ரென்ட்ஸ்?"

"நேத்ரா, ராகவ், ம்ருத்துஞ்ஞ்ஞ்ஜெய், கனிஷ்கா..."

"ராம்?"

"ராம் பையன் புடிக்காது"

"ஏன்டா?"

"ராம் பையன் தல புட்ச்சி இழுக்க்க்க்க்க்குறான்"

"உங்க மிஸ் பேரென்ன?"

"அஞ்சும் மிஸ்..அஞ்சும் மிஸ் கிட்ட ஐ லவ் யூ சொன்னேன்."

"அம்மாவோட பொக்கிஷம் யாரு?"
"நேஹா"
"நேஹா வோட பொக்கிஷம் யாரு?"
"அம்மா"
இது அவள் நல்ல மூடில் இருந்தால் சொல்லிக் கொள்வது.
(ஓகே! ஓகே! நான் ட்ரெயினிங் கொடுத்துச் சொன்னது தான் :))

ஒரு நாள் இதைச் சொல்லிவிட்டு அவளாகவே நீள ஆரம்பித்தாள்:
"அப்பாவோட பொக்கிஷம் ஷைலா
மாது பெரியப்பாவோட பொக்கிஷம் ப்ரீத்து
அம்மு பெரிம்மாவோட பொக்கிஷம் நிகில்
டாரதி அத்தையோட பொக்கிஷம் சூர்யா"

"ஜான் மாமாவோட பொக்கிஷம்?" ‍ ‍
"ம்...டாரதி அத்தை"

"அப்பாயியோட (அவளுடைய பாட்டி) பொக்கிஷம்?"
"ம்...நெல்சன் தாத்தா!"

என் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்து விட்டு,
"மாது பெரியப்பா என்னை இப்பிடித்தான் கொஞ்சினாங்க" என்றாள்.
பின்பு, "நான் ப்ரீத்துவை அடிக்கவே மாட்டேன். மாது பெரிப்பா அடிப்பாங்க."

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, "நேஹா அந்த ஊறுகாய் பாட்டிலை எடுத்துத் தாடா" என்றேன்.

கொண்டு வந்து கொடுத்தாள். திறந்து எடுத்துக் கொண்டு மூடியைக் கீழேயே வைத்தேன்.
போகிற போக்கில் "மூடி வெச்சிடு, அது கொட்டிடும்" என்றாளே பார்க்கலாம், ஜோவின் எகத்தாளப் பார்வையை என்னால் எதிர்கொள்ளவே முடியவில்லை.

"நானே நானே" மேனியா ஆரம்பித்திருக்கிறது. எதையாவது தானே செய்ய விரும்பி அதில் இத்துனூன்டு நாம் செய்து விட்டாலும், கத்திக் கூப்பாடு போடுகிறாள்.
உதாரணம்: தோசை சுட்டுக் கொடுத்து விட்டு, நேரமாகிறதே என்று அவசரமாய் ஒரு துண்டு பிய்த்து வாயில் ஊட்டப் போனால் போச்சு! ஊரே இரண்டு படுகிறது. அவளாகவே அரை மணி கழித்து காய்ந்து போன‌ தோசையை ஊட்டிவிடச் சொல்வது வேறு கதை.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் மன்னிப்பாயா பாட்டு ரொம்பப் பிடிக்கும். சிம்பு நடித்த வேறேதோ படம் டிவியில் வந்த போது, அம்மா, "மன்னிப்பாயா மன்னிப்பாயா..." என்று கத்தியதோடு அவ்வப்போது "ஆமாம் கரெக்ட்.. கண்டுபிடிச்சிட்டேனே...." என்று கன்ஃபர்ம் வேறு செய்து கொண்டாள்.
சிம்புவை வில்லன்கள் அடித்த போது ஒரே அழுகை. "மன்னிப்பாயா அடிக்குறாங்க..." அவளுக்காக அன்றொரு நாள் சிம்பு ரசிகையாக மாறவேண்டி வந்தது!

ஸ்ரீ கோல்ட் பருப்பு வகைகளுக்கான‌ விளம்பரம். அதில் ஒரு சிறுவன் பாக்ஸிங் பழகிக் கொண்டிருந்தான். உன்னிப்பாகக் கவனித்த அவள், "அம்மா எனக்கும் நீ ஸ்ரீ கோல்ட் பருப்பு வாங்கிக் குடுக்குவேல்ல? நானும் டிஷ்யூம் டிஷூம் பண்ணுவேன்!" குழந்தைகளை மிகச் சரியாகத் தான் டார்கெட் செய்கின்றன விளம்பரங்கள்.

அவளுக்குப் பிடித்தது எதையாவது செய்து தர ஆரம்பித்தால் ஒரே கொஞ்சல் தான். கையில் தட்டோடு சமையல் கட்டு வாசலிலேயே நிற்கிறாள்."அம்மா, பாப்கார்ன் செய்றியா, நான் இங்கியே நிக்கவா? ஸோ ஸ்வீட்மா." (ரொம்பச் சமத்தாம். உள்ளே வந்து தொந்தரவு செய்ய மாட்டாளாம்!)
அதே போல் செய்து தருவது பிடித்திருந்தால், "அம்மா, சூப்பரா இருக்கும்மா..நீயே செஞ்சியா, சான்ஸே இல்லம்மா..."




20 comments:

Chitra said...

அதே போல் செய்து தருவது பிடித்திருந்தால், "அம்மா, சூப்பரா இருக்கும்மா..நீயே செஞ்சியா, சான்ஸே இல்லம்மா..."

.......சான்சே இல்லை...... சமத்து கமென்ட்!

Unknown said...

Nice Neha.

அம்பிகா said...

ஆஹா.. நேஹா...
சூப்பர். குட்டீஸ் க்கு வாழ்த்துக்கள்.

Sriakila said...

நேஹாவின் ஒவ்வொரு பேச்சும், செய்கையும் ரசிக்க வைக்கிறது. ஆடியோவில் நேஹாவின் மழலைக்குரல் ரொம்ப அழகு. இதை நேரிலேயே என்னிடம் பாடிக்காண்பித்தாள். அந்த மழலை குரலை ஆடியோவில் கேட்பதற்கும் ரொம்ப சூப்பரா இருக்கு தீபா.

குழந்தைகளின் உலகத்தைப் பார்த்தால் எனக்குப் பொறாமையா இருக்கு. குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகத்துக்குள் நானும் ஒரு குழந்தையாக மாறிவிட ஆசை. சிறுவயதில் நான் எதிர்பார்த்த ஏக்கங்களை குழந்தைகளுடன் சந்தோஷமாக விளையாடிப் போக்கிகொள்கிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

// செய்து தருவது பிடித்திருந்தால், "அம்மா, சூப்பரா இருக்கும்மா..நீயே செஞ்சியா, சான்ஸே இல்லம்மா..."//

ஆஹா!!.. ;-)))

Philosophy Prabhakaran said...

பதிவைக் காட்டிலும் நீங்கள் இணைத்திருந்த உங்கள் மழலையின் ஆடியோக்கள் அருமை அம்மா... இரண்டையும் முழுமையாக கேட்டேன்... சிலிர்க்க வைத்தது... அடுத்த முறை வீடியோவை இணையுங்கள்...

Philosophy Prabhakaran said...

ஏன் இன்னமும் இன்ட்லியில் இணைக்கவில்லை...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ அரை மணி கழித்து காய்ந்து போன‌ தோசையை ஊட்டிவிடச் சொல்வது வேறு கதை.//:))

\\சான்ஸே இல்லை// .. சூப்பர்

மாதவராஜ் said...

அழகு!
ஆனாலும் ‘மாது பெரிப்பா அடிப்பாங்க’என்பதெல்லாம் ஓவர்! :-))))

Deepa said...

:)) அவள் சொன்னதைத் தான் பதிவு செய்திருக்கிறேன். விஷயம் அதுவல்ல; யார் மீது யாருக்குப் பிரியம் என்பதை எப்படி நோட் செய்திருக்கிறாள் என்பது தான்!

எல் கே said...

நானே மேனியா எல்லாக் குழந்தைகளுக்கும் உண்டு. என் பொண்ணும் இதுதான் பண்ணுவா .

எல் கே said...

மாது பெரியப்பா ஏன் அடிக்கறீங்க ??

செல்வநாயகி said...

Congratulations Deepa.

அருண் பிரசாத் said...

so Sweet

சந்தனமுல்லை said...

நேஹா ரொம்ப க்யூட்டா வளர்ந்துக்கிட்டு வர்றாங்க...Lovely updates, Deepa!

'பரிவை' சே.குமார் said...

சூப்பர். நேஹா குட்டிக்கு வாழ்த்துக்கள்.

அமுதா said...

க்யூட் நேஹா.... மேடமின் “அவ்வ்வ்...” கண் முன்னால் நிற்கிறது

கவி அழகன் said...

உணர்வு பூர்வமான படைப்

Anbunesan said...

Deepa carefull... Now a days they will be very possessive when its coming on sharing their love with you and joe...
take care of Shyla... keep watching.

Kojals is very nice.....

Enga... ennoda mirattal part kaanum...? to make her to have her break fast.

Kiruthika said...

supero super deeps..very eager to see your kutties!!