Wednesday, September 22, 2010

நேஹா நேரம்!

இப்போது நிறைய பேச ஆரம்பித்து விட்டாள். சொல்வதைப் புரிந்து கொண்டு தெளிவாகப் பதில் சொல்கிறாள். இயல்பான உரையாடலை அவளோடு நடத்த‌ முடிகிறது; அதனால் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியவில்லை. பலதை மறந்தும் விடுகிறேன். ஆனாலும் சிலவற்றைப் பதிய விரும்புகிறேன்.

***********************

த‌லையில் அடிப‌ட்டுத் தைய‌ல் போட‌ ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்ற‌ போது:
வ‌லி தாங்காம‌ல் அழுது கொண்டே: "அழ‌க்கோடாது..பேட் ஆபிட். பேட் ஆபிட். ஊசி வேண்டாம். ச‌ரியாப் பேயிரும்...ச‌ரியா?"

நாங்க‌ள் ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்ற‌டையும் வரை, நாங்களும் வருவோம் என்று சொல்லிக் கொண்டிருந்ததால், "தீபாம்மா ந‌ல்ல அம்மா. ஊசி போட‌ வேண்டாம். "

இதெல்லாம் சுற்றி இருந்த‌ ந‌ர்ஸ்க‌ளிட‌ம் அவ‌ள் சொன்ன‌தாக எங்க‌ளிட‌ம் சொன்ன‌து! குழ‌ந்தைக்கு அடி எப்ப‌டி இருக்கிற‌து என்ப‌தை விட‌ இதைத் தான் சுவார‌சிய‌மாக‌ முத‌லில் ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர்!

***********************

வீட்டுக்கு நான் வ‌ந்த‌தும் முத‌ல் வேலையாக இப்போதெல்லாம் ஒரு பாட்டு: "என்னா வாயின்ட்டு வ‌ந்துக்கே...என்னா வாயின்ட்டு வ‌ந்துக்கே..."சாக்லெட்டுகள் வாங்கிக் கொடுப்பது எனக்குப் பிடிக்காது. அதனால் ஒரு சின்ன‌ ப‌லூனோ, விக்ஸ் மிட்டாயோ, லாலி பாப்போ க‌ட்டாய‌ம் பையில் வைத்திருக்க‌ வேண்டி இருக்கிற‌து.

***********************

என்றாவது தான் வந்தவுடன் கொஞ்ச விடுகிறாள். பெரும்பாலும், "ஏய் கொஞ்சாதே, ஓடீஇருவேன்...போய் ஷாப்பிடு. குளிச்சு வா..." என்று அதிகாரம் தான்.

***********************

அவ‌ளைக் குளிய‌ல‌றையில் நிறுத்தி விட்டு வெந்நீர் எடுத்து வ‌ர‌ச் சென்றேன். கொண்டு வ‌ரும் போது, "பாப்பாக்குச் சுடு த‌ண்ணியா? இரும‌லுக்கு ந‌ல்லார்க்குமா??"

***********************
ச‌மைய‌ல‌றையில் வ‌ந்து நின்று கொண்டு:"அம்மா என்ன‌ செய்ற? ச‌மைய‌ல் ப‌ண்றியா?" "சிக்க‌ன் செய்றியா?" "அங்காய‌ம் உரிக்கிறியா..." ர‌ன்னிங் க‌மென்ட்ரி கொடுத்தாகிற‌து.

***********************

பால் அவ‌ளுக்குக் க‌ல‌ந்து கொடுத்த‌தும், "அம்மாக்கு?" நானும் கூட ட‌ம்ள‌ரைக் கையில் வைத்துக் கொண்டால் தான் குடிக்கிறாள்."அம்மா, க‌ண்ணு காமி, மூக்கு, காது"...என்று ஒவ்வொன்றாக‌த் தொட்டுச் செக் செய்கிறாள்.
"எல்லாம் ச‌ரியா இருக்கா?" - கேட்கிறேன்.
"ம்..பாப்பாக்கு?" என்று அவ‌ளுக்குச் செக் செய்ய‌ச் சொல்கிறாள்!

***********************

"த‌லை வ‌லிக்குதா, தேச்சு விட‌றேன்.. ச‌ரியாப் பேயிரும், இனிமே அழாத என்ன‌? "

***********************

சில‌ ச‌ம‌ய‌ம் ஏதாவ‌து விஷமம் செய்யும் போதோ, எடுக்கக் கூடாதது ஏதாவது கையில் வைத்துக் கொண்டிருந்தாலோ, அருகில் சென்றால், "ஏய் வேணாம்...கிட்ட‌ வ‌ராதே..ஒடீருவேன்!" என்று ஓடுகிறாள்.

***********************

On the downside :(: நான் ஏதாவ‌து பாட‌ வாய் திற‌ந்தாலே "பாடாதே.." என்று ஒரே கத்தல். பாத்ரூமுக்குள் கூட‌ப் பாட‌ விட‌மாட்டேனென்கிறாள். க‌த‌வ‌ருகே நின்று கொண்டு "பாடாதே, பாடாதே." ஒரு நாள் அப்படிச் சொல்லி விட்டு அவளாகவே "அம்மா பாடாதே சொல்ல‌க் கோடாது" என்றாள். நான் கொஞ்சம் ம‌கிழ்வ‌த‌ற்குள் "பாடாதீங்க‌ம்மாஆஆஆ" சொல்ல‌ணும் என்றாள்.
??!!!@#!@#

***********************

16 comments:

'பரிவை' சே.குமார் said...

Kutties mazhalai mozhi oru sugam thaan. negha pechchu ungal ezhuththil azhaga vanthirukku...

Dr.Rudhran said...

beautiful.. but
த‌லையில் அடிப‌ட்டுத் தைய‌ல் போட‌ ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்ற‌ போது: ???

சிந்தையின் சிதறல்கள் said...

எதார்தத்தைப்பேசியிருக்கிறீர்கள்

R. Gopi said...

//நான் கொஞ்சம் ம‌கிழ்வ‌த‌ற்குள் "பாடாதீங்க‌ம்மாஆஆஆ" சொல்ல‌ணும் என்றாள்.//

Super

ஹுஸைனம்மா said...

ஸ்வீட்!!

//எதை எழுதுவது எதை விடுவது // அப்படித்தான் ஆகிடும்!!

விக்ஸும் குழந்தைகளுக்கு நல்லதில்லை; குறைச்சுக்க முடிஞ்சா நல்லது.

ஏன் சின்னப் புள்ளைய பாடி பயமுறுத்துறீங்க?

Sriakila said...

தீபா!

நேஹா குட்டி பேசறதப்ப‌த்தி நான் இன்னும் நினைச்சு நினைச்சு சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.

//வ‌லி தாங்காம‌ல் அழுது கொண்டே: "அழ‌க்கோடாது..பேட் ஆபிட். பேட் ஆபிட். ஊசி வேண்டாம். ச‌ரியாப் பேயிரும்...ச‌ரியா?"//

so sweet!

அழகாப்பாடுற உங்களையே அவ பாட வேண்டாம்னு சொல்றான்னா இவ அதைவிட பெரியப் பாடகியாத்தான் வருவான்னு நினைக்கிறேன்.

நேஹாவோட அத்தனை மழலைப் பேச்சையும் செல்போனிலாவது ரெக்கார்ட் பண்ணுங்க தீபா. மழலைப்பேச்சு முடிந்து தெளிவாப் பேச ஆரம்பிச்சிட்டா இந்த அழகு மொழியை மிஸ் பண்ணிடுவோம்.

கண்டிப்பா ரெக்கார்ட் பண்ணுங்க..இதன் தேவை பின்னாடி புரியும். அவள் மொழியை அவளே கேட்டு ரசிப்பாள்.

அம்பிகா said...

\\இப்போது நிறைய பேச ஆரம்பித்து விட்டாள். சொல்வதைப் புரிந்து கொண்டு தெளிவாகப் பதில் சொல்கிறாள். இயல்பான உரையாடலை அவளோடு நடத்த‌ முடிகிறது;\\
வாழ்த்துக்கள்.
\\த‌லையில் அடிப‌ட்டுத் தைய‌ல் போட‌ ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்ற‌ போது: \\
என்னாச்சுப்பா?

Chitra said...

தாலாட்டில் பயந்துட்டாளா? ஹா,ஹா,ஹா,....

Smart girl!

செல்வநாயகி said...

ஏன் சின்னப் புள்ளைய பாடி பயமுறுத்துறீங்க :))

த‌லையில் அடிப‌ட்டுத் தைய‌ல் போட‌ ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்ற‌ போது :((

Deepa said...

நன்றி குமார்!

Yes, Doctor. It happened a couple of weeks back. Cut her forehead on the gate and had to get two sutures done. Pefectly alright now.

நன்றி ஹாசிம்!

நன்றி கோபி!

நன்றி ஹுஸைனம்மா!
>:-)

நன்றி அம்பிகா அக்கா!
கேட்ல இடித்துச் சின்ன அடி தாங்கா.
ரென்டு தையல் போட வேண்டி இருந்தது.
இப்போது நன்கு ஆறி விட்டது.

நன்றி சித்ரா!
>:-)

அழகி said...

இன்றுதான் உங்களின் வலைப்பகுதியைப் பார்த்தேன் எழுத்து நடை இயல்பாக உள்ளது.

அமுதா said...

cute neha!!!!

GSV said...

எங்க வீட்டுலயும் இரண்டு குட்டீஸ் இருக்காங்க... missing lot after reading this...

//பாடாதீங்க‌ம்மாஆஆஆ //
இது டாப்பு !!! :) வாய்ஸ் ச ரெகார்ட் செய்துவைக்கவும்.

பாற்கடல் சக்தி said...

விக்ஸ் மிட்டாய் குழந்தைக்கு அடிக்கடி கொடுப்பது பற்றி ஒருமுறை பரிசீலியுங்கள் சகோதரி

Vijiskitchencreations said...

என் முதல் வருகை. பாப்பாவுக்கு தையல் தலையில் அடி என்றென்லாம் பார்த்தும் முழுவதுமாக படிக்க தோன்ற்யது படித்தேன்ப்பா.
நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கேட்கும் கேள்வி நானும் சும்மா தான் கேட்கிறேன். தலையில் அடிபடும் வரை நிங்க எங்கேங்க. சரி இப்படிதாங்க குழந்தைங்க இடித்து,விழுந்து வாரி எல்லாம் வளருகிறது. நம்ம வீட்டிலும் இதெல்லாம் அடிக்கடி நடக்கும்.

www.vijisvegkitchen.blogspot.com

Anbunesan said...

enna deepa. . . unna poi paada vaendaamnnu sooluraalaaa? ? ! ! !
oru vaelai ul naatu sadhiyaa irukkalaam..... yeah, i think her dad would ask her to tell this to you.....