"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
மரத்தின் பின் நின்று 1, 2, 3 எண்ணிக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.
"ஷ்! நான் ஒளிந்து கொண்டிருக்கிறேன்."
"அப்படியா? யாரிடமிருந்து?"
"என்னிடமிருந்தே."
"ஓ! எப்படி உன்னைக் கண்டுபிடிப்பாய்?"
"100 எண்ணி முடித்ததும் லேசாக எட்டிப் பார்ப்பேன்! பின் வெளியே வந்து விடுவேன்"
"நான் உன் கூட விளையாட வரவா?"
"ஓ! நீங்கள் அந்த மரத்தின் பின் நின்று உங்களிடமிருந்தே ஒளிந்து கொள்ளுங்கள்!" - உற்சாகமாகக் கூறினாள் சிறுமி.
13 comments:
அருமை:)!
ஏன் கொடுமைன்னு போட்டிருக்கீங்க? சின்னப்புள்ளைங்க இப்படித்தானே விளையாடுவாங்க?
பழைய நினைவுக்கு கொண்டு சென்றிங்க நன்றி
குழந்தைகள் உலகம் தனிதான்.....
நான் இன்னும் என்னை தேடிக்கொண்டே இருக்கிறேன். அனா இந்த அமெரிக்க காரன் என்ன கரக்டா கண்டுபிடித்து விட்டான் நல்ல அடி மாடுன்னு.
மிகப் பெரிய தத்துவத்தை
மிக லகுவாக கொடுத்திருக்கிறீர்கள்.
தேடிக்கிட்டே இருக்கேன். இன்னும் கண்டுபிடிக்க முடியல.
என்னன்னே தெரியலையா.
அருமையா, அழகான சொற்சித்திரம்
நன்றி ராமலக்ஷ்மி!
நன்றி ஹுஸைனம்மா!
சரி, அந்த லேபிலை எடுத்துடறேன்.
நன்றி நேசமுடன் ஹாசிம்!
நன்றி சித்ரா!
நன்றி GSV! :))
நன்றி மதுமிதா!
நன்றி அம்பிகா அக்கா!
நன்றி அங்கிள்!
நீங்களே சொன்னா சரிதான். :)
//ஏன் கொடுமைன்னு போட்டிருக்கீங்க? சின்னப்புள்ளைங்க இப்படித்தானே விளையாடுவாங்க? //
அதே தான்!
அந்தப் பாப்பா சொன்ன மாதிரி இன்னும் ஒளிஞ்சுக்கலையா?
ரொம்ப அழகானது,ரொம்பச்சின்ன உருவங்களில் கிடைக்கும் வசீகரம்.
சொல்,பொருள் ரெண்டுமே அழகு.
ஹுஸைனம்மா, அகிலா!
புரியவில்லையா?
குழந்தைகள் எப்போதுமே இப்படியா விளையாடுவார்கள்?
:(
நன்றி காமராஜ் அங்கிள்!
சர்தார்ஜி ஜோக் புக்ல இருந்து சுட்டது தான? உண்மைய சொல்லுங்க. :)
Nice...
Post a Comment