Thursday, June 10, 2010

மழையே! மழையே!!

மழையை ரசிக்காதவர்கள் உண்டா?க‌டும் புய‌ல் ம‌ழையினாலும் வெள்ள‌த்தினாலும் பாதிப்புக‌ள் ஏற்ப‌டும் போதும் ம‌ழையைச் ச‌பித்தாலும்...வெப்ப‌த்தால் வாடி வெடித்திருக்கும் பூமி முத‌ல் மழையின் ஈர‌த்தைத் தாப‌த்துட‌ன் உறிஞ்சி மேனி சிலிர்த்து மணம் வீசும் போது... ஆஹா!
ம‌ழையில் ந‌னைவ‌து: என‌க்கு ரொம்ப‌ ஆசை. ஆசை தீர‌ நிறைய‌வே ந‌னைந்திருக்கிறேன். அதுவும் பெரும‌ழையின் போது ம‌ழைத்துளிக‌ள் சுள் சுள்ளென்று ஊசி போல் உட‌லைக் குத்துவ‌தை உண‌ர்ந்திருக்கிறீர்க‌ளா? குடையின்றி முற்றாக‌ ம‌ழையில் நனையும் சுக‌த்தை அதை அனுப‌வித்தால் தான் புரியும். அலுவலுக்குச் செல்லும் அவசரத்தில் அரைகுறையாக‌ ந‌னைவ‌து தான் எரிச்ச‌ல்!

ச‌ரி, விஷயத்துக்கு வ‌ருவோம். கீழே உள்ள‌ ப‌ட‌ங்க‌ளைப் பார்த்து ர‌சித்த‌ பின் அவ‌ற்றுக்குப் பொருத்த‌மான, உங்கள் நினைவுக்கு ச‌ட்டென்று வ‌ரும் த‌மிழ்த் திரைப்ப‌ட‌ப் பாட‌ல்வ‌ரிகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க‌ள். மிக‌வும் சிறந்த பின்னூட்டத்துக்கு ஒரு ச‌ர்ப்ரைஸ் ப‌ரிசு காத்திருக்கிற‌து!
Ok... ஸ்டார்ட் ம்யூஸிக்!


(பி.கு: க‌விஞ‌ர்க‌ள் க‌விதை கூட‌ச் சொல்ல‌லாம். ஆனால் அவை போட்டியில் சேர்த்துக் கொள்ள‌ப் ப‌ட மாட்டா!)




































































20 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

1.சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ...(என் சுவாச காற்றே)

2.மழை வருது மழைவருது குடை கொண்டு வா (ராஜா கைய வச்சா)

3.மேகம் கொட்டட்டும் ஆட்டம்
உண்டு..(எனக்குள் ஒருவன்)

4.துளித்துளி (பையா)

5.மழையே மழையே காதல் மழையே (ஈரம்)

6.ஓஹோ மேகம் வந்ததோ (மௌனராகம்)

ponraj said...

அந்தி மழை பொழிகிறது...

ஜெய்லானி said...

(1) வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நா வரண்டு பாடுகின்றேன்

(2) போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே

(3) வானத்தை பார்தேன் பூமியை பார்தேன் மனுஷனை இன்னும் பாக்கலையே

(4 ) சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ

(5)போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும்

(6)சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை

Riyas said...

"பிஞ்சு மழைச்சாரல்
கொஞ்சும் தமிழ் பேசும்.
கொஞ்சும் தமிழ் பேச
நெஞ்சில் புது ராகம்.
இங்கு மேகங்களை அள்ளிக்கொஞ்சும்
வெள்ளி நிலவே
முத்தமிட்டு தூளி கட்டும் தாயின் அழகே..

ஐ வட எனக்குத்தான்..

சந்தனமுல்லை said...

ப்ளீஸ்..எனக்காக கொஞ்சம் பாடல் வரிகள்னு மாத்த முடியாதா...:-)

பைதிவே, நல்லாருக்கு படங்கள்..ஆனா என்ன அது மாதிரி ரோடுலே நடந்துதான் போக முடியாது நம்மூரிலே! :))

Deepa said...

நன்றி வசந்த்!
3, 6 சேம் பின்ச்! நானும் இதே வரிகள் தான் நினைத்தேன்.

நன்றி பொன்ராஜ்!
(6 படங்கள், ஒன்லி ஒன் பாட்டு?)

ந‌ன்றி ச‌ங்க‌வி!


ஜெய்லானி!
ரொம்ப‌ வித்தியாச‌மா யோசிச்சிருக்கீங்க‌.
முத‌ல் பாட்டு அச‌த்த‌ல் பொருத்த‌ம்.

ரியாஸ்!
இன்னா இது? ஒரே ஒரு பாட்டைப் போட்டுட்டு வ‌ட‌ கேக்குறீங்க‌?

முல்லை!
நீங்க‌ ரொம்ப‌ பீட்ட‌ர்னு தெரியும். (தமிழ்ப் பாட்டே தெரியாதாமா!)
ப‌ர‌வால்லங்க... இங்கிலிபீஸு பாட்டா இருந்தாலும் சொல்லுங்க.

பரிசு முடிவுக‌ள் நாளை அறிவிக்க‌ப் ப‌டும்! (எப்டி பில்ட‌ப்பு?)

சு.சிவக்குமார். said...

1. தனியே தன்னந் தனியே....


2. மழை மழை என் உலகத்தில் பொழிகின்ற முதல் மழை


3. தென்மேற்குப் பருவக்காற்று தேனிப் பக்கம்

4. சின்ன சின்ன தூறல் என்ன...

5. மேகங்கருக்குது மழைவரப் பார்க்குது...சாரல் அடிக்குது

6. மழை பெய்யும்போது நனையாத யோகம்...

அம்பிகா said...

1.மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்.

2.மழையே! மழையே!
இளமை முழுதும் நனையும்
வரைக்கும் வா!

3தென்மேற்கு பருவக் காற்று
தேனிப் பக்கம் வீசும்போது

4துளித் துளித் துளி,
இது மழைத்துளி;


அந்திமழை பொழிகிறது-
ஒவ்வொரு துளியிலும்
உன்முகம் தெரிகிறது.

சின்ன சின்ன மழைத்துளிகள்
சேர்த்து வைத்தேனே

5என்மேல் விழுந்த முதல் மழையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

பொத்துக் கிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒட்டிகிட்டு கூட வர வேணும்

6வான்மேகம், பூப் பூவாய் தூவும்
தேகம் என்னவாகும்....

ponraj said...

நாங்க ஒரு பாட்டு சொன்னா,ஆறு பாட்டு சொன்ன மாதிரி!!!! (1=6)
இது எப்படி?
(உண்மையில் வேறு பாட்டு தெரியாது!!!)

பரிசுத்தொகை எப்போது கிடைக்கும்???

Deepa said...

ப‌ரிசுத் 'தொகையா'?? அப்ப‌டில்லாம் நான் சொல்ல‌லையே!

நன்றி அம்பிகா அக்கா!
மடை திறந்த வெள்ளமாய்ப் பாட்டுகளைக் கொட்டி இருக்கீங்க!
5 வ‌துக்கு கான்ட்ராஸ்டா இர‌ண்டு பாட‌ல்க‌ள். அருமை!!

முத‌லாவ‌து சொந்த‌ச் ச‌ர‌க்கா அக்கா? அப்ப‌டி ஒரு பாட்டு கேட்ட‌ மாதிரி இல்லியே?


சிவ‌குமார்!
க‌ச்சித‌மாக‌ப் ப‌ட‌ங்க‌ளுக்குப் பொருத்த‌மான‌ பாட‌ல்வரிகள்.
6 வ‌து பாட‌ல் என்ன‌ ப‌ட‌ம்?

6 பாட‌ல்க‌ள் அழகாகச் சொன்ன‌ எல்லாருக்குமே ப‌ரிசு வ‌ழ‌ங்குவ‌தாக‌ ந‌டுவ‌ர் குழு (நான்தான்) முடிவு செய்தாகி விட்ட‌து.

http://us.123rf.com/400wm/400/400/sumos/sumos0706/sumos070600335/1104429.jpg

இங்கே கிளிக்கி இந்த அரிய ப‌ரிசினை அன்புட‌ன் பெற்றுக் கொள்ள‌வும்!

ponraj said...

அம்பிகா அண்ணி,
உங்கள் பாடல் தொகுப்பு அருமை!!!
எனக்கு நிங்கள் தான் போட்டி!!!!
எப்படியும் எனக்குத்தான் பரிசு!!!!!
ஹி...ஹி...ஹி...

மாதவராஜ் said...

தீபா!

நீ நூறு படம் போட்டாலும் அம்பிகா பாடல் சொல்வாள் என நினைக்கிறேன். எத்தனை தடவை நான் தோற்று இருக்கிறேன்!!!

பொன்ராஜ்!
’சர்ப்ரைஸ்’ பரிசு என்றதும் உனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டதோ. :-)))

நீ ஒரு பாட்டுச் சொன்னதே எனக்கு சர்ப்ரைஸாக இருக்கிறது

அம்பிகா said...

தீபா,
அது ரொம்ப பழைய பாட்டு.
படம் நினைவில்லை.
சொந்தமா பாட்டு எழுத தெரிஞ்சா நாங்க சினிமாக்கே எழுதியிருப்போம்ல.

இனியா said...

தமிழ் சினிமாவின்
நிரந்திரக் கதா பாத்திரம்

வான தேவதை
தலைக் குளித்து
சிலிர்ப்பதில் சிதறும்
சிறு துளிகள்

பள்ளி மாணவர்களுக்குப்
பிடித்த விருந்தாளி

கவிஞர்களின் கற்பனைத்
தாகத்தை தீர்க்கும்
காவேரி

ஒரு குடையில்
நெருங்கி வர
புதிய காதலர்கள்
விரும்பும் அசௌகரியம்

அமிர்தவர்ஷினி
இசைத்தால்
ஓடி வரும் வானரசி

சாதிப் பாரா
சமத்துவப் புரட்சி

மதம் பிடிக்காத
மௌன சாட்சி

சாலைகளை சுத்தப்படுத்தி
சம்பளம் வாங்காத
அரசு ஊழியன்

மனங்களை
சுகப்படுத்தி
மாசு நீக்கும் மருத்துவன்

உலகை அழிக்கப்
பயன்படுத்தப் பட்ட
weapon of mass destruction (Nova)

உலகம் செழிக்க
பயன்படுத்தப் படும்
weapon of nature conservation

அ.முத்து பிரகாஷ் said...

1.விண்ணோடு மேளச் சத்தம் என்ன ?

2.அந்த ஐஸ்வர்யா ஆண்டி பாடுவாங்களே .. குரு படத்துல ... பாட்டு மறந்துடுச்சு ....

கோப்பைய காணோம் ... எடுத்துட்டு போயிட்டாங்க ... டம்ப்ளர் இருந்தா கொடுங்க தீபா ...

சு.சிவக்குமார். said...

6 வது பாடலின் படம் : ”ரேனிகுண்டா”

Dr.Rudhran said...

மயிலாட என்றா மேகங்கள்?

Dhanaraj said...

அந்தி மழை பொழிகிறது...

To get wet in the rain is a gift. And to enjoy getting wet in the rain is an extraordinary gift.

ViNo said...

"பெரும‌ழையின் போது ம‌ழைத்துளிக‌ள் சுள் சுள்ளென்று ஊசி போல் உட‌லைக் குத்துவ‌தை உண‌ர்ந்திருக்கிறீர்க‌ளா? குடையின்றி முற்றாக‌ ம‌ழையில் நனையும் சுக‌த்தை அதை அனுப‌வித்தால் தான் புரியும்."

ithu ovvoru mazhaiyin pozhuthum naan anubavippathu...

அன்புடன் நான் said...

ப்ரியமுடன்...வசந்த் said...

1.சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ...(என் சுவாச காற்றே)

2.மழை வருது மழைவருது குடை கொண்டு வா (ராஜா கைய வச்சா)

3.மேகம் கொட்டட்டும் ஆட்டம்
உண்டு..(எனக்குள் ஒருவன்)

4.துளித்துளி (பையா)

5.மழையே மழையே காதல் மழையே (ஈரம்)

6.ஓஹோ மேகம் வந்ததோ (மௌனராகம்)
June 10, 2010 11:15 PM //

மேகம் கருக்குது மழை வர பாக்குது...
வீசியடிக்குது காத்து.//

பரிச வசந்தோட பகிர்ந்துக்கொள்ளவா?