Monday, April 5, 2010

நேஹா நேரம்!

ஒரு நாள் வீட்டுக்கு வந்தவுடன் "அம்மா.. மணீ ஊந்துத்தான்... ஊந்துத்தான்..."

"எங்க‌ம்மா?"
"ஜூலா..ஜூலா...டொம் ஊந்த‌த்தான்." உதட்டைப் பிதுக்கிச் சோகமாகச் சொன்னாள்.

மறுநாள் விசாரித்ததில் உண்மையில் மணி ஊஞ்சலிலிருந்து விழுந்து தலையில் அடியும் பட்டிருக்கிறது.

அறையிலிருந்த‌ ஃபான் ரிப்பேருக்காக க‌ழ‌ற்ற‌ப்ப‌ட்டிருந்த‌து.
"அம்மா!
ஃபான் பிஞ்சிட்டா! கானும்!"

"நேஹா! சிம்ப‌ன்ஸி வ‌ந்தா என்ன‌டா‌ சொல்லுவே?"

"ஏய், பாப்பா உன்னை அடி...கொன்னு!"

வீட்டுக்கு வ‌ந்த‌தும் அவ‌ளை ம‌டியில் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தேன்.

"அம்மா போ! த‌ண்ணி ஊத்திக் குளிச்சி...டெச்சு மாத்தி..."


"படிச்சி" யுடன் இப்போது "எழுதி...எழுதி" யும் ஆர‌ம்பித்திருக்கிறாள். க்ர‌யான்ஸைக் கொண்டு வீடு பூராக் கிறுக்கியாகிற‌து.

'என்ன‌ எழுதி இருக்கே' என்று கேட்டால் தெரிந்த‌ எல்லாவ‌ற்றையும் வரிசையாகச் சொல்கிறாள்.

ஃபோன் ரிப்பேர் ஆகிவிட்டதென யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த இவள்,
"அம்மா த‌ண்ணீ கொட்டீட்டா.. !"
வாரன்டி சர்வீஸ் செய்யப் போகும் போது இவளை அழைத்துச் செல்லக் கூடாது!

10 comments:

Uma said...

//"அம்மா த‌ண்ணீ கொட்டீட்டா.. !"
வாரன்டி சர்வீஸ் செய்யப் போகும் போது இவளை அழைத்துச் செல்லக் கூடாது!// LOL :)

ஸ்ரீ said...

@@@My Toddler is 2 Years Old. Congratulations!@@@

Congratulations :)

பாபு said...

//My Toddler is 2 Years Old.//

manymore happy returns of the day

சந்தனமுல்லை said...

செமயா இருக்கு..சமத்துக்குட்டி நேஹா...ஹஹ்ஹா! குழந்தைங்க பொய் சொல்ல மாட்டாங்களாமே!! :-)))

நேசமித்ரன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் :)

adhiran said...

again. you are a very good nerator. thank you.

Ramachandranwrites said...

Fantastic,

Now I understand what are all I have missed when my daughters grown up - alas it is now too late

B K Ramachandran

அமிர்தவர்ஷினி அம்மா said...

"அம்மா!
ஃபான் பிஞ்சிட்டா! கானும்!"

!!!!!!!!!!

அம்மா த‌ண்ணீ கொட்டீட்டா.. !"
வாரன்டி சர்வீஸ் செய்யப் போகும் போது இவளை அழைத்துச் செல்லக் கூடாது!
:))))))))

படிக்க படிக்க சந்தோஷமா இருக்கு தீபா.

பா.ராஜாராம் said...

ஹா..ஹா..

எவ்வளவு அற்புத உலகம்!

அமுதா said...

குழலினிது யாழினிது என்பர்...