Thursday, April 15, 2010

கதைகளைப் பேசும் விழியருகே...

அங்காடித் தெரு...எல்லாரும் சென்று சிக்கி மீண்டு கொண்டிருந்த நேரத்தில் போய்ச் சிக்கிக் கொண்டேன். இன்னும் மீள‌ முடியாம‌ல் அங்கேயே உழ‌ன்று கொண்டிருக்கிறேன்.

ஒரு படத்துக்குச் சென்று டிக்கெட் இல்லை ஹவுஸ் ஃபுல் என்று சொன்னதற்காக முதன் முதலில் மகிழ்ந்தது இதற்குத் தான்! ஆம், முதல் நாள் போய்க் கேட்ட போது "பையா" க்கு வேணா இருக்கு. அங்காடித் தெரு இரண்டு நாளைக்கு ஃபுல்." என்று சொன்ன போது ஏமாற்றத்தையும் மீறி ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. யதார்த்தமான நல்ல படத்துக்கு மக்கள் அங்கீகாரம் அதிகரித்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்? அடுத்த நாள் இரவுக் காட்சிக்குத் தான் செல்ல முடிந்தது.

ப‌ட‌த்தைப் ப‌ற்றிய‌ விமர்சனமோ என் பார்வையோ எழுத என்னால் முடியாது. அதிர்ச்சி க‌ல‌ந்த‌ உண‌ர்வுக‌ளின் க‌ல‌வை ம‌னதை அந்த‌ப் ப‌க்குவ‌த்துக்குக் கொண்டு வ‌ர‌வில்லை. சுற்றி உள்ள வாழ்க்கையையே முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பார்க்க வைத்த படத்தைத் தள்ளி நின்று எந்தப் பார்வை கொண்டு பார்ப்பது? எனக்கெல்லாம் இப்படிப்பட்ட படைப்புகள் பலவிதத்தில் பாடங்கள். பாடங்களை விமர்சிப்பதை விடவும அவற்றிலிருந்து ஏதாவது கற்க முடிந்தால் நலம்.

ஆனால் இசையைப் பொறுத்த‌வ‌ரை ம‌ட்டும் சொல்லக் கொஞ்சம் இருக்கிற‌து.
மூன்று பாட‌ல்க‌ள் போட்டி போட்டுக் கொண்டு ம‌ன‌தை ஆக்கிர‌மிக்கின்ற‌ன‌.

1. கதைகளைப் பேசும் விழியருகே - எப்போது கேட்டாலும் அற்புதமான அந்த ஒவ்வொரு காட்சியும் ம‌ன‌தில் திரையோடிக் க‌ண்க‌ளின் ஓர‌ம் க‌ரிக்கிற‌து.

2. உன் பேரைச் சொல்லும் போதே ‍- ஆஹா... ! சொல்ல‌ ஒன்றும் இல்லை. Wonderful rendering by Shreya Goshal and Haricharan.
இவ‌ர்க‌ள் இருவ‌ரையுமே என‌க்கு ரொம்ப‌வும் பிடிக்கும். வேற்று மொழிப் பாட‌கர்க‌ளில் த‌மிழைத் த‌மிழாக‌ப் பாடும் ஒரே பாட‌கி ஷ்ரேயா கோஷ‌ல் தான். அற்புதமான குரலும் திறமையும் ஒரு புறம்; மேலும் ஒரு மொழி தெரியாவிட்டாலும் அதன் ஜீவன் சிதையாமல் கற்றுக் கொண்டு பாடும் அவ‌ர‌து அந்த‌ சின்சியாரிடிக்கு Hats Off!

ஹ‌ரிச‌ரண்: காத‌ல் ப‌ட‌த்தில் பாடிய‌து முத‌லே இவ‌ர் all time favorite ஆகி விட்டார். எத்தனையோ பாடகர்கள் பெருகி விட்டாலும் உண‌ர்ச்சி, பாடலின் பாவ‌ம் உண‌ர்ந்து பாடுவ‌தில் இவ‌ருக்கு நிகர் இவர் தான். (உனக்கென இருப்பேன் ‍- காதல், தொட்டுத் தொட்டு என்னை ‍- காதல், சரியா தவறா ‍- கல்லூரி.)

3. அவ‌ள் அப்ப‌டி ஒன்றும் அழ‌கில்லை - ர‌ம்மிய‌மான‌ தாலாட்டைப் போல் இருக்கிற‌து. ஓகே!

இந்த அளவுக்குச் சிலாகித்துப் பின்னணி இசையைச் சொல்ல முடியவில்லை. உண்மையிலேயே பல இடங்களில் காட்சியுடன் ஒன்றுவதைத் தடுக்கும் வகையில் உறுத்தியது. அதனாலேயே அதன் பிழை கவனத்தையும் ஈர்த்தது.

கனியும் லிங்குவும் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார்கள். மறக்கவே முடியாத பாத்திரப்படைப்பு. உயிர் கொடுத்த அஞ்சலிக்கும் மகேஷுக்கும்.. ஓஹோ! பிரமிக்க வைக்கும் நடிப்பு.
மாரிமுத்து வாக வந்த் "பாண்டி" அடேயப்பா... இவருக்குள் இத்தனை திறமையா? Overall, brilliant cast.

(பி.கு 1: ராம‌னாத‌ன் தெருவுக்குச் சென்று அந்த‌ மெஸ் இருக்கிற‌தா என்றும் அதைப் பார்வையிட‌ வேண்டும் என்றும் தோன்றிக் கொண்டே இருக்கிற‌து. செய்வேனா என்று தெரியவில்லை.

பி.கு 2:
எத‌ற்காக‌ இந்த‌த் த‌லைப்பு என்று கேட்ப‌வ‌ர்க‌ள் இங்கே செல்ல‌வும்:
http://www.youtube.com/watch?v=tBkmKr0iVQk

இறுதியாக, நன்றி வசந்தபாலன்! மிக்க நன்றி.

12 comments:

பனித்துளி சங்கர் said...

நீங்கள் சொல்வது உண்மைதான் . மிகவும் சிறப்பானதொரு படம் .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

சுடுதண்ணி said...

அருமை :).

/கதைகளைப் பேசும் விழியருகே/

தலைப்பு அருமை. செல்பேசியின் அழைப்பொலியாக தினமும் சலிக்காமல் கேட்டுக் கொண்டிருக்கிறேன். காட்சிகளின் பாதிப்புகள் அகல பல நாட்கள் ஆகும் போல் தெரிகிறது.

ரிஷபன் said...

இன்னும் பார்க்கல.. உங்க பதிவு பார்த்து உடனே பார்க்கணும்போல இருக்கு..

Dhanaraj said...

We will expect more from young directors. The time for Tamil cinema to prove itself is fast approaching. It is a good sign.

I saw the film on the first day. You would not believe that it was full and there were applause for many scenes.

Dr.Rudhran said...

well expressed. the film despite flaws( technical) is able to touch raw emotions..i thought your third song was the best!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்தப் படத்தினைப் பற்றிய பல தரப்பட்ட விமர்சனங்களே என்னை இந்தப்படம் பார்க்கவிடாமல் செய்கிறது.
இந்தப்படத்தை பார்க்கும் மனோதிடம் எனக்கில்லை தீபா.

நல்லவேளையாய் படத்தை பற்றி அதிகம் சொல்லாமல் நீங்கள் பாடல்கள் பக்கம் போய்விட்டீர்கள், பகிர்வுக்கு நன்றி

அவள் அப்படியொன்றும் அழகில்லை - நிச்சயமாய் தாலாட்டுதான். மிகவும் ரசித்தேன்.

பாலாஜி சங்கர் said...

நானும் இந்த படத்தை பார்த்துவிட்டு வெளி வரும்போது என் நண்பன் அடுத்த காட்சி பையா பார்த்துவிட்டுத்தான் வருவேன்

இந்த படம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்றான்

ஆக மக்கள் நல்ல சில படங்களை ஏற்கின்றனர்

அம்பிகா said...

நிறைய விமர்சனங்கள் படித்து விட்டோம். உன் விமர்சனம் வித்தியாசமாய், நன்றாக இருந்தது தீபா.

மாதவராஜ் said...

தீபா!

ரசித்தேன்.
தொலைக்காட்சியில், ‘அவள் அப்படியொன்று அழகில்லை’ என்ற பாடல் குறித்து நடிகை சுஹாசினி பேசும்போது ஏன் ‘அவன் அப்படியொன்றும் அழகில்லை, தைரியமானவன் இல்லை என்றெல்லாம் ஏன் எழுத மாட்டென்கிறார்கள்’ எனச் சொல்லி கமெண்ட அடித்தார்கள். சும்மா, ஒரு தகவலுக்கு.

Deepa said...

ந‌ன்றி ப‌னித்துளி ச‌ங்க‌ர்!

ந‌ன்றி சுடுத‌ண்ணீ!

ந‌ன்றி ரிஷ‌ப‌ன்!

ந‌ன்றி த‌ன்ராஜ்!

ந‌ன்றி டாக்ட‌ர்!

ந‌ன்றி அமித்து அம்மா!
நீங்க‌ள் இப்போது பார்க்க‌ வேண்டாம். சில‌ மாத‌ங்க‌ளுக்குப் பிற‌கு பாருங்க‌ள்.
:)

ந‌ன்றி பாலாஜி!

ந‌ன்றி அம்பிகா அக்கா!


நன்றி அங்கிள்!
ஆம், நானும் கேள்விப்பட்டேன். வித்தியாசமான பார்வை சுஹாசினிக்கு!ஆனால், அந்தப் பாடலைக் காட்சியோடு கவனித்தால் புரியும். அவள் அப்படி ஒன்றும் அழகில்லை எனும் போது படத்தில் காட்டுவது "ஐஸ்வரியா ராய் மற்றும் பிற நடிகைகளின் படங்களை. "அப்படி" என்றால் அவள் இவர்களைப் போன்ற அழகில்லை. இயற்கையான எளிய‌ அழகுடன் இருக்கிறாள் இந்தக் கதாநாயகி. "அவளுக்கு யாரும் இணையில்லை...": அந்த நடிகை மாதிரி, இவளை மாதிரி என்றெல்லாம் அவளைச் சொல்ல முடியாது.

ஆனாலும் சுஹாசினி சொன்னதில் ஒரு விஷயம் யோசிக்கத் தான் வேண்டும்!
:)) தெள்ளத்தெளிவான உண்மையை எப்படி எழுதுவார்கள்? நம் கதாநாயகர்கள் பதறி விடமாட்டார்களா?
அறுபது எழுபது வயதில் கூட மேக்கப்பும் விக்குமாய் இளமைத் தோற்றம் காட்டி வருபவர்களைச் "சந்திரனே, சூரியனே, இளம் புயலே" என்று சொன்னால் தானே அது கவிதை! பாவம், உண்மையைச் சொல்லிக் குத்திக் காட்ட முடியுமா? ;-)

சந்தனமுல்லை said...

தீபா..வித்தியாசமாக இருக்கிறது - பாடால்களை பற்றிச் சொன்னதும்...! "கனாக்காணும் காலங்களில்" -ஆயாவும் நானும் பாண்டிக்கு ஃபேன்..இதிலும்! நல்ல பகிர்வு!

அமுதா said...

நல்ல பகிர்வு... நான் இன்னும் பார்க்கவில்லை. ஹெவி சப்ஜெக்ட் என்பதால் காண மனதைத் தயார்படுத்த வேண்டி உள்ளது