Monday, April 19, 2010

இரண்டே இரண்டு வாழ்க்கை வேண்டும்!

தொடுவானம் வெறித்துச் சிற்றலைகள் கால்தழுவ,
கவனமாகக் காலூன்றிக் கரையோரம் நிற்க ஒன்று;
பொங்கியெழும் பிரவாகமும் 'ஹோ'வென்ற இரைச்சலுமாய்
கொந்த‌ளிக்கும் க‌ட‌லினுள்ளே பாய்ந்து செல்ல‌ இன்னொன்று

இருளட‌‌ர்ந்த‌ காட‌த‌னைக் க‌ட‌க்க‌ப் ப‌ய‌ந்து விடியும் வரை
ஆளரவம் காட்டாமல் கூடார‌த்தினுள் கிட‌க்க‌ ஒன்று
தீப்ப‌ந்த‌ம் கையிலேந்திக் காடே கிடுகிடுக்க,
ஏறுக‌ளும் அஞ்சியோட‌ வீறு ந‌டை ப‌யில‌ ஒன்று

சாலையோர‌ம் கையேந்தும் பச்சிளம் ம‌லரதனைப்
பார்த்தும் பார்க்காம‌ல் பெருமூச்சுடன் கடக்க‌‌ ஒன்று;
ஓடிச் சென்று அள்ளிய‌ணைத்து உற்றதோடு பெற்றதையும்
உயிராய் நினைத்தே அருமையுட‌ன் வ‌ள‌ர்க்க‌ ஒன்று

அடைப்பெடுக்க‌ வ‌ந்த‌வ‌ரைத் தெருவில் நிறுத்திக் கூலி தந்து
கைபடாமல் சோப்பும் தந்து முக‌ம்சுளித்து அனுப்ப‌ ஒன்று;
வெந்நீர்போட்டுக் குளிக்க‌வைத்து, வாய்க்குருசியாய் விருந்த‌ளித்துக்
குசலம்பேசிக் கும்பிட்டுக் கைகுலுக்கி அனுப்ப ஒன்று.

கட்டம்பார்த்துத் திட்டம்போட்டு, வெட்டுக்கஞ்சி எட்டி நின்று
சொக்கட்டான் காயாக அற்பமாக வாழ ஒன்று;
ம‌டியில் க‌னமுமின்றி வ‌ழியில் ப‌ய‌முமின்றி
ஒரு வாழ்வு ஒரு சாவென‌ப் போராளியாய் வாழ‌ ஒன்று.

23 comments:

AkashSankar said...

ஒன்று நாம் வாழும் வாழ்க்கை...மற்றொன்று...நாம் என்றுமே நினைத்தாலும் வாழமுடியாத வாழ்க்கை....

கவிதை என்று ஒன்று இல்லை என்றால் மிக மிக கடினம்தான் வாழ்கை...

Dr.Rudhran said...

இரண்டும் இணையும்.
வாழ்த்துகள்.

பனித்துளி சங்கர் said...

இரண்டு மனம் வேண்டும் என்று பாடல் கேட்டு இருக்கிறேன் .ஆனால் இரண்டே இரண்டு வாழ்க்கை வேண்டும்!" என்று ஒரு சிறப்பான சிந்தனை இப்பொழுதான் பார்க்கிறேன் . அருமை . பகிர்வுக்கு நன்றி .தொடருங்கள் மீண்டும் வருவேன் .

அண்ணாமலையான் said...

ஆமா வேண்டும்

Paleo God said...

இரு வேறாக ...

அருமை!

Anonymous said...

me the first
me the first
me the first



wait pls i go read..

after that i will....

VAruthapadtha vasippor sangam
complan surya

சந்தனமுல்லை said...

இரண்டு மனம் வேண்டும் மாதிரியா...! :-) நல்லாருக்கு!

அமுதா said...

வித்யாசமான சிந்தனை... nice

அம்பிகா said...

தீபா,
முதலும், கடைசியும் ரொம்ப பிடிச்சிருக்கு.
லேபில்ல கொடுமைய எடுத்திரலாமே!

adhiran said...

ninaiththu vaazha onru
maranthu vaada onru

enru eppozhuthum thappaaithaan ezhuthi varukiraarkal.

maranthaal vaada mudiyaathu. ninaiththaal vaazhamudiyaathu.

enna kodumai sir ithu.
irandu manam vendum enkira ungalin otrai nianaippu vaazhaka.


nanri.

Dhanaraj said...

"Life is a bundle of missed oppertunities."

I read this sentence somewhere. But from then on it has stayed in my mind.

We live a life and that is different from the life that we want to live. There is only one choice available.

May be that is why life is a mystery.

மாதவராஜ் said...

தீபா!

அடேயப்பா. அசந்துதான் போய் நிற்கிறேன். காலம் காலமாய் நமக்குள் ஊறிக்கிடப்பவைகளுக்கும், பிரக்ஞையினால் அவற்றை உடைத்திடும் ஆசையும் பாடலில் அருமையாய் வந்திருக்கிறது.

நிச்சயமாய் கொடுமை இல்லை. நல்லா இருக்கு.

அன்புடன் அருணா said...

அடிக்கடி நினைப்பதுதான்.பூங்கொத்து தீபா!

Radhakrishnan said...

பல தருணங்களில் இப்படித்தான் நமது வாழ்க்கை இரண்டு என்ன பல விதமாக அமைந்து விடுகிறது. நல்ல சிந்தனை தீபா.

sathishsangkavi.blogspot.com said...

இரண்டும் வேண்டும்.....

நல்லாயிருக்கு....

Anonymous said...

"ஓடிச் சென்று அள்ளிய‌ணைத்து உற்றதோடு பெற்றதையும்
உயிராய் நினைத்தே அருமையுட‌ன் வ‌ள‌ர்க்க‌ ஒன்று"

ethuthan thaimainu choluvanga..great..rumba nalla erukku..

Varthigal pravegam
oru oru varigalum
arthangalai..

nandri valga valamudan
varuthapadtha vaasippor sangam
complan surya.

VijayaRaj J.P said...

நல்ல கவிதை..

தீபாவிடம் உள்ள மனம் எது?

Uma said...

//கட்டம்பார்த்துத் திட்டம்போட்டு, வெட்டுக்கஞ்சி எட்டி நின்று
சொக்கட்டான் காயாக அற்பமாக வாழ ஒன்று;//
ரொம்ப அழகா சொல்லிட்டீங்க!

அமிர்தவர்ஷினி அம்மா said...

சாலையோர‌ம் கையேந்தும் பச்சிளம் ம‌லரதனைப்
பார்த்தும் பார்க்காம‌ல் பெருமூச்சுடன் கடக்க‌‌ ஒன்று;
ஓடிச் சென்று அள்ளிய‌ணைத்து உற்றதோடு பெற்றதையும்
உயிராய் நினைத்தே அருமையுட‌ன் வ‌ள‌ர்க்க‌ ஒன்று //

நிதர்சனம் தீபா.

இப்படி ரெட்டை வாழ்க்கை இருந்தா நல்லாதான் இருந்திருக்கும், அதுவும் குழந்தைகள் விஷயத்தில்.

கடைசி வரிகள் நச்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

//கட்டம்பார்த்துத் திட்டம்போட்டு, வெட்டுக்கஞ்சி எட்டி நின்று
சொக்கட்டான் காயாக அற்பமாக வாழ ஒன்று;//

!!!!!!! :) ம்ம்ம்ம்

vasan said...

நினைவுக்கும், நிக‌ழ்வுக்குமான‌
நெகிழ்ச்சியான‌ முர‌ண்.
ந‌ல்ல‌ முய‌ற்சி.

தமிழ்நதி said...

சமூக அக்கறைக்கும் சுயநலத்துக்கும் இடையிலான வெளியில்தான் வாழ்கிறோம். அங்கும் போகமுடியாமல் இங்கும் வாழவொட்டாமல்... கவிதையில் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Bibiliobibuli said...

தீபா,

உங்கள் கவிதை அற்ப மனிதவாழ்கைக்கும் மனிதத்திற்கும், ஆசைக்கும் நிராசைக்கும் இடையேயுள்ள தூரத்தை அழகாக அளந்திருக்கிறது.