Thursday, March 18, 2010

நேஹா நேரம்

அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் கண்டபடி தரையில் இறைந்து கிடந்தன.

"யாரோட வேலை இது?" என்று அதட்டல் போட்டேன்.

ஓடி வந்து என் முகத்தைத் தொட்டுத் திருப்பி,"அப்பா! அப்பா... அப்பா!" என்று அவள் அப்பாவைக் கை காட்டுகிறாள். பிழைத்துக் கொள்வாளோ?!
________________________________________


"அம்மா! முய் ஏனும்..." (முறுக்கு)
எடுத்துத் தந்தேன்.

"தட்டு ஏனும்..."
தட்டில் வைத்துத் தந்தேன்.

"பூன்..பூன் ஏனும்"

ஸ்பூனால் முறுக்கு சாப்பிடுப‌வ‌ர்க‌ளைப் பார்த்திருக்கிறீர்க‌ளா?
____________________________________________

"நேஹா, ஏ ஃபார்?"
"ஆப்பிள்"

"பி ஃபார்?"
"பேபி"

"சி ஃபார்?"
"காண்டில்"

"டி ஃபார்?"
"நாய்" !!!


"ஈ ஃபார்?"
"ம்..ம்.. முட்டை!"

________________________________

அவள் பேசப் பேச மொபைலில் ரெகார்ட் செய்தேன். திரும்ப‌ ஒலிக்க‌ச் செய்த‌ போது மேட‌முக்கு உற்சாக‌ம் தாங்கவில்லை.. என் கையிலிருந்து ஃபோனைப் பிடுங்கிக் காதில் வைத்து "ஹலோ" என்றாள்.

"ஃபோன்ல யாரும்மா பேச‌றாங்க?"

"நேக்கா"

:)
________________________________________________

25 comments:

Anonymous said...

இதெல்லாம் எத்தனை ரசித்தாலும் தீராது ;))

சந்தனமுல்லை said...

நேஹா நேரம் - செம! எவ்ளோ இன்னொசன்ட் இல்லே! சூப்பர்! :-)

ஜெய்லானி said...

அட.. அட.. நல்ல டைமிங் ஸென்ஸ்..

Uma said...

முறுக்கை சீக்கிரமே சாப்ஸ்டிக் வச்சு சாப்பிடற அளவுக்கு நேஹா பிராக்டிஸ் பண்ணட்டும் விடுங்க!
ஒரு lesson learnt: நேஹா குரல் ரெகார்டிங்-ஐ அலார்ம் ட்யூனா மட்டும் செட் பண்ணிடாதீங்க. நான் தினம் காலைல நரேனை திட்டிக்கிட்டே எழுந்துக்க ஆரம்பிச்சிட்டேன் :(

ராமலக்ஷ்மி said...

//"டி ஃபார்?"
"நாய்" !!!


"ஈ ஃபார்?"
"ம்..ம்.. முட்டை!"//

இது சூப்பர்:))))!

Anonymous said...

//ஸ்பூனால் முறுக்கு சாப்பிடுப‌வ‌ர்க‌ளைப் பார்த்திருக்கிறீர்க‌ளா?//

ஓ, எங்க வீட்ல ரெண்டு வாண்டுகளும் ஸ்பூன்லதான் முறுக்கை எடுத்துச் சாப்பிடுது ;)

Anonymous said...

Loved the muttai part!! :P

வடுவூர் குமார் said...

வாவ்! அருமை.நாங்களும் கூட இருப்பது போல் இருந்தது.
அப்பா! அப்பா! - பிழைத்துக்கொள்வாள். :-)

Deepa said...

நன்றி மயில்!
நன்றி முல்லை!
நன்றி ஜெய்லானி!
ந‌ன்றி உமா!
//அலார்ம் ட்யூனா மட்டும் செட் பண்ணிடாதீங்க. நான் தினம் காலைல நரேனை திட்டிக்கிட்டே எழுந்துக்க ஆரம்பிச்சிட்டேன் :(//
:)))))

ந‌ன்றி ராம‌ல‌ட்சுமி!

ந‌ன்றி சொக்க‌ன்!
உங்க‌ வீட்ல‌யும் இதே க‌தையா? :)

நன்றி நாஸியா!
நன்றி வடுவூர் குமார்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

மயில் said...
இதெல்லாம் எத்தனை ரசித்தாலும் தீராது

ஆம், வழிமொழிகிறேன்.

ஈ பார் முட்டை.... ச்சோ ச்வீட் நேஹா டியர்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நேஹாவைப் பற்றிப் படிக்கும் பொழுது எங்கள் மகனின் வளர்ச்சியையும், மழலையையும் எதிர்நோக்கியுள்ளோம் :) தொடருங்கள்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) சுவாரசியம்..

நான் என்பையன் பாடின ஜானி ஜானி தான் ட்ய்யூனா வச்சிருக்கேன்.. பல நேரம் பர்ஸுகுள்ள இருந்து வர சன்னமான குரலைக்கூட அவன் கண்டுபிடிச்சு சொல்வான்..அம்மா ஜானி ஜானி பாடுது எடுன்னு :))

பா.ராஜாராம் said...

//அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் கண்டபடி தரையில் இறைந்து கிடந்தன.

"யாரோட வேலை இது?" என்று அதட்டல் போட்டேன்.

ஓடி வந்து என் முகத்தைத் தொட்டுத் திருப்பி,"அப்பா! அப்பா... அப்பா!" என்று அவள் அப்பாவைக் கை காட்டுகிறாள். பிழைத்துக் கொள்வாளோ?!//

:-))

//"அம்மா! முய் ஏனும்..." (முறுக்கு)
எடுத்துத் தந்தேன்.

"தட்டு ஏனும்..."
தட்டில் வைத்துத் தந்தேன்.

"பூன்..பூன் ஏனும்"

ஸ்பூனால் முறுக்கு சாப்பிடுப‌வ‌ர்க‌ளைப் பார்த்திருக்கிறீர்க‌ளா?//

ஹல்லோவ்..உங்க முறுக்கு அப்படி இருந்திருக்கும்!எங்க குட்டி ஸ்பூன் கேட்டிருந்திருப்பா...இல்லையா நேகா? :-))

//"டி ஃபார்?"
"நாய்" !!!


"ஈ ஃபார்?"
"ம்..ம்.. முட்டை!"//

தமிழ் பற்றுங்க..இதுக்கு போயி.. :-)

அன்புடன் அருணா said...

நேக்கா! ஷோக்கா!

ரிஷபன் said...

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா

அமுதா said...

/* மயில் said...
இதெல்லாம் எத்தனை ரசித்தாலும் தீராது ;))
*/
ரிப்பீட்டு

பத்மா said...

சூப்பர் மா .என்னை கேட்டா வீட்ல எப்பவும் ஒரு ஒன்னரை வயசு குழந்தை இருந்துகிட்டே இருக்கணும்

நேசமித்ரன் said...

வீட்டில் பாட்டி ரிப்பீட்டு என்கிறார்கள்
முன்னம் நாம் செய்ததை நினைவில் வைத்து.... கதைகள் கிடைக்கின்றன குழந்தைகளுக்கு

:)

Deepa said...

நன்றி அமித்து அம்மா!
நன்றி செந்தில்வேலன்!
நன்றி முத்துலெட்சுமி!
ந‌ன்றி அருணா!

ந‌ன்றி ராஜாராம்!
//உங்க முறுக்கு அப்படி இருந்திருக்கும்!//
அட‌க்கி வாசிங்க‌ண்ணா! அது எங்க‌ மாமியார் சுட்ட‌ முறுக்கு.. :))
நல்லா தான் இருந்துச்சு.

ந‌ன்றி ரிஷ‌ப‌ன்!

ந‌ன்றி அமுதா!

ந‌ன்றி ப‌த்மா!

ந‌ன்றி நேச‌மித்ர‌ன்!

செல்வநாயகி said...

அருமை.

Romeoboy said...

ரெகார்ட் பண்ணியதை எங்களுக்கும் அனுப்புங்களே. நாங்களும் ரசிப்போம்ல

Anonymous said...

//ஸ்பூனால் முறுக்கு சாப்பிடுப‌வ‌ர்க‌ளைப் பார்த்திருக்கிறீர்க‌ளா?//

ha ha. So sweeeeeet...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகு. மழலை எப்போதும் அழகு தான். எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

sathishsangkavi.blogspot.com said...

தீபா

உங்களை என் தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். தொடர் பதிவை எழுத வேண்டுகிறேன்...

http://sangkavi.blogspot.com/2010/03/blog-post_19.html

பனித்துளி சங்கர் said...

/////"அம்மா! முய் ஏனும்..." (முறுக்கு)
எடுத்துத் தந்தேன்.

"தட்டு ஏனும்..."
தட்டில் வைத்துத் தந்தேன்.

"பூன்..பூன் ஏனும்"

ஸ்பூனால் முறுக்கு சாப்பிடுப‌வ‌ர்க‌ளைப் பார்த்திருக்கிறீர்க‌ளா?/////


நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க போங்க