பொது வழி - 5 ரூபாய்
சிறப்பு தரிசனம் - 20 ரூ
அர்ச்சனை - 25 ரூ
- இது தான் கடவுளை அடையும் வழி என்று நாம் ஒத்துக் கொள்ளும் போது,
"இந்த இடத்துக்கு மேல் பிற மதத்தவர்க்கு அனுமதி இல்லை."
இது தான் ஒரு மதத்தின் தர்மம் எனும் போது,
கடவுள் பக்தி என்ற பெயரில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்ட நெரிசலில் நசுங்கிச் சாகும் போது,
பங்குத் தந்தைகளின் கேளிக்கைக்காகக் கேள்வி கேட்காமல் காணிக்கைகளை அள்ளி வழங்கத் தயாராயிருக்கும் போது,
சாமியார், துறவறம் என்பதன் பொருள் புரிந்தும் புரியாமலும், சாமியார் என்று சொல்லிக் கொள்பவர் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டியதன் அவசியமென்ன என்று நாம் கேள்வி கேட்காத போது,
புனிதம் என்று போற்றினாலும் அதில் கலந்து விட்ட வியாபாரத்தைக் கண்டும் காணாமல் போவதோடு அதற்கு ஒத்துழைப்பும் நாம் வழங்கும் போது (ஒரு புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்குவது உட்பட)
கலர் கலராகக் கண்ணாடிக் கற்களை ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்து வாங்கிக் கைகளில் அணிந்து அற்புதங்களுக்காகக் காத்திருக்கும் போது;
இது மட்டும் ஏன் அதிர்ச்சியாக இருக்கிறது?
சத்யம் மோசடிக்கும் இதற்கும் வேற்பாடு ரஞ்சிதாவா ராகசுதாவா என்ற கூடுதல் பரபரப்பு மட்டுமே.
அதனால் சாமியார் வியாபாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்:உங்கள் சாமியார் புனிதம் என்றால் அவருடன் சம்பந்தப்பட்ட அந்தப் பெண்கள் மட்டும் என்னவாம்? அவர்கள் சம்பந்தப்பட்ட சாமியாரின் திருச்செயல்களை மட்டும் ஏன் ரகசியமாய் வைத்திருக்கிறீர்கள்? அது தான் உங்களுக்கு ஆப்பு வைக்கப்படுகிறது!
இனி சாமியாரைத் தலையில் தூக்கி வைத்து ஆடும் முன், அவர்க்கு இன்னாருடன் இந்தமாதிரித் தொடர்பு இருக்கிறது; அவரது தெய்வீகச் சக்திக்கே இவர்கள் தான் காரணம் என்று சொல்லி அந்தப் பெண்களையும் சேர்த்தே விளம்பரப்படுத்துங்கள். அவர்களை ரிஷிபத்தினிகள் என்று சொல்லிக் கொள்ளலாம். மற்றபடி உங்களை நாங்கள் எதுவுமே கேட்கமாட்டோம்.
மொத்தமாக எல்லாருக்கும் வியாபாரம் ஆனமாதிரியும் இருக்கும், நாளை இப்படி ஏதாவது விடியோ லீக் ஆனால், அதையும் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொள்ளக் கூட்டமும் கிடைக்கும்.
பின்னே, கழுதை மூ....தைக் கூடப் பளபளக்கும் பாட்டிலில் அடைத்து, கலர்க்லராய் விளம்பரம் செய்தால், தலையால் வாங்கிக் குடிப்பதற்குத் தயாராக இருப்பவர்கள் தானே நாம்!
28 comments:
ஆம்! *த்திரத்தைக் குடிப்பதற்கும் தயாராக இருப்பவர் தான் நாம்!
செம ஹாட்டு மச்சி! :-)
சமூகம் தன்னை விமர்சனம் செய்துகொள்ள வேண்டிய தருணத்தை மிகுந்த ஆத்திரத்தோடு வெளிப்படுத்தி இருக்கிறாய். சபாஷ்!
காரம் குறையாத,
ஓங்கின கை மாறாத அடி.
வலிக்கணும்.
சாமியார்களுக்கல்ல பக்தர்களுக்கு.
ம்.நீங்களும் போட்டுடிங்களா!!!
//பின்னே, கழுதை மூ....தைக் கூடப் பளபளக்கும் பாட்டிலில் அடைத்து, கலர்க்லராய் விளம்பரம் செய்தால், தலையால் வாங்கிக் குடிப்பதற்குத் தயாராக இருப்பவர்கள் தானே நாம்! //
சவுக்கடி
உறைக்க வேண்டுமே இந்த முண்டங்களுக்கு...
//சாமியார், துறவறம் என்பதன் பொருள் புரிந்தும் புரியாமலும், சாமியார் என்று சொல்லிக் கொள்பவர் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டியதன் அவசியமென்ன என்று நாம் கேள்வி கேட்காத போது//
எதுக்குத்தான் சமூகம் கேள்வி கேட்டிருக்கு!?
விளைவுகளை மீட் பண்ணின பிறகுதான் ஆத்திரம் ஆத்திரமா வந்து, சமூகம் ஃபீல் பண்ணிட்டு அடுத்த டாபிக்குக்கு அப்பீட் ஆகிடறாங்களே!
அவனது முழுப்படமும் பார்க்க இன்னும் கூடுதல் விலையாம். தூ..
ஆத்திரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். கோபத்தில் எழுத வரவில்லை.
கரெக்டா சொன்னீங்க...
சன் டீவி பண்ணுவது உச்ச கட்ட வன்முறை. படங்ளுடன் தேவையா? அதுவும் 7 மனி நியூஸில்? இதை யார் கேட்பது? இந்த பின்ணுட்டம் இடும் நேரம் சன் நியூஸ்-ல் இதுதான் தலைப்பு செய்தி!
\\அவரது தெய்வீகச் சக்திக்கே இவர்கள் தான் காரணம் என்று சொல்லி அந்தப் பெண்களையும் சேர்த்தே விளம்பரப்படுத்துங்கள். அவர்களை ரிஷிபத்தினிகள் என்று சொல்லிக் கொள்ளலாம். மற்றபடி உங்களை நாங்கள் எதுவுமே கேட்கமாட்டோம்.\\
இது நல்லா இருக்கே. நிறைய ரிஷி பத்தினிகளையும் தரிசிக்கலாம்
பதிவு ரொம்பா சூடு
நறுக்குதெரித்தாற் போல கூர்மையான விமரிசனங்கள்! நன்றி!
நல்ல இடுகை..
சாமியாருங்க மேலத் தப்பே கிடையாது.. அவனுங்க பொழைக்கத்தெரிஞ்சவனுங்க.. ஏமாறவங்க இருக்கற வரைக்கும் ஏமாத்துரவங்க இருக்கத் தான் செய்வாங்க..
//சாமியார், துறவறம் என்பதன் பொருள் புரிந்தும் புரியாமலும், சாமியார் என்று சொல்லிக் கொள்பவர் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டியதன் அவசியமென்ன என்று நாம் கேள்வி கேட்காத போது,//
110% சரி.. இது ஏன் நம்ம மக்களுக்குத் தோணவே மாட்டேங்குதுன்னு எனக்கு புரியவேஇல்லை..
தீபா...
முதலில் சாமியார் பின்னாடி போகிறவங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்...
கடந்த வாரம் இதே சாமியார் கோவையில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார் அரங்கம் நிரம்பிது அதில் கலந்து கொண்ட நண்பனை இன்று பார்த்தேன் அவன் சொன்ன பதில் "என்னை செருப்புல அடிக்கனும்"
:-( என்ன நடந்தாலும் இன்னும் ஆசாமிகளைத் தலையில் வைத்தாடும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது
Very well said! :)
என்ன வில்லத்தனம்
நாளை இப்படி ஏதாவது விடியோ லீக் ஆனால், அதையும் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொள்ளக் கூட்டமும் கிடைக்கும்.
- P
andru oru premanandha
indru oru nithaynanda
inimelavathu makkal thirunthinaal sari
andru oru premanantha
indru oru nithyanantha
- iniyaavathu thirunthuvaargalaa?
(Makkal)
well said sister.
சூடான பதிவு!!!
இப்போது பலரின் மனதில் உள்ள ஆதாங்கத்தை,
இந்த பதிவு வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.
இந்த பதிவை அனைவரும் படிக்க வேண்டும்.
பொது வழி - 5 ரூபாய்
சிறப்பு தரிசனம் - 20 ரூ
அர்ச்சனை - 25 ரூ
Kadaisiya, CD free....
பொது வழி - 5 ரூபாய்
சிறப்பு தரிசனம் - 20 ரூ
அர்ச்சனை - 25 ரூ
Kadaisiya, CD free....
NJAHA said...
பொது வழி - 5 ரூபாய்
சிறப்பு தரிசனம் - 20 ரூ
அர்ச்சனை - 25 ரூ
Kadaisiya, CD free....
:)))))))))
உண்மையா பசியில இருக்கறவனுக்கு பத்து ரூபா போட யோசிச்சு நியாயதர்மம் பேசும் நல்லவர்கள் தான் அதிகப்படியாக
ஆயிரம், பத்தாயிரம்னு செலவு செய்து இந்த மாதிரி ஆளுங்க பின்னாடி போவாங்க. :(((((
பக்தகோடியா அவன் பின்னாடி போனாங்க பாருங்க அவங்களுக்குத்தான் இந்த விஷயம் ஷாக், நமக்கெல்லாம் பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டான் அப்படிங்கற அணுகுமுறைதான்.
உங்களின் பதிவு சரியான சாட்டையடி.
//பொது வழி - 5 ரூபாய்
சிறப்பு தரிசனம் - 20 ரூ
அர்ச்சனை - 25 ரூ
//
திருச்செந்தூரில் இதைவிட ரேட் அதிகம்.
நெத்தியடி தீபா.
அமித்து அம்மாவை வழிமொழிகிறேன்.
lilypie பார்த்தேன். நேகாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்
"ங்குத் தந்தைகளின் கேளிக்கைக்காகக் கேள்வி கேட்காமல் காணிக்கைகளை அள்ளி வழங்கத் தயாராயிருக்கும் போது"
ivanga eppa maatta poraangalo theriyalai !!!!
Post a Comment