Tuesday, March 2, 2010

நேஹா நேரம்

"ஏ காக்கா, சூ போ! உன்ன‌க் கொன்னு!"
"நாமு நாமு, பா பா!" (ராமு என்கிற நாய்)

ஏன் இந்தப் பாரபட்சமோ தெரியவில்லை!


இர‌வு ப‌தினொரு ம‌ணியாகியும் தூங்காம‌ல் அவ‌ள் போட்ட‌ ஆட்ட‌ம் தாங்க‌ முடியாம‌ல் ப‌டுக்கைக்குத் தூக்கிச் சென்றேன். கதவைச் சாத்தி விள‌க்கை அணைத்த‌தும் க‌த்திக் கூப்பாடு போட்டாள். என்ன‌ செய்தாலும் ச‌ரி, க‌த‌வைத் திற‌‌‌க்க‌க் கூடாது என்று உறுதியாக‌ இருந்தேன். ச‌ற்று நேர‌த்துக்குப் பின்,
"அம்மா.. த‌ண்ணீ..."
அருகிலிருந்த‌ த‌ண்ணிபாட்டிலைத் த‌ந்தேன். வாங்கினாள்; குடிக்க‌வில்லை.

கொஞ்ச‌ நேர‌த்துக்குப் பின், "அம்மா.. பாலு, பாலு ஏனும்"
பால் பாட்டிலையும் ப‌க்க‌தில் வைத்திருந்தேன். அதையும் தந்த போது குடிக்க‌வில்லை.

"ஆ...அம்மா, டீஈ..டீஈ..பாட்டா பாட்டா...பும்பா..."
:((((

பார்க்கில் ந‌ன்கு விளையாடிய‌ பின் வீட்டுக்குத் திரும்ப‌ அழைத்தால்,
"ஆனாம், பை!" கை காட்டுகிறாள்.(நீ வேணா போ, நான் வ‌ர்ல‌)


மொழி ப‌ட‌ம் ஓடிக் கொண்டிருந்த‌து டிவியில். "காற்றின் மொழி" பாட‌ல் வ‌ந்த‌து தான் தாம‌த‌ம். அதுவரை தனக்குள் ஏதோ பேசிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த‌வ‌ள் கீச்சென்று கத்திக் கொண்டே ஓடி வ‌ந்து சோஃபாவில் ஏறினாள். அமைதியாக‌ச் சாய்ந்து அந்த‌ப் பாட‌ல் முடியும் வ‌ரை ல‌யித்துப் பார்த்தாள். !!!!


கோப‌ம் வ‌ந்தால் அடித்து விடுகிறாள். நாம் கோப‌மாக‌ முறைக்க‌வும், "சா..ரி" என்று க‌ழுத்தைக் க‌ட்டிக் கொண்டு ஒரு முத்தம்!
இத‌ற்காக‌வே அவ‌ளிட‌ம் அடிக்க‌டி அடி வாங்குகிறேன் நான்!

15 comments:

சந்தனமுல்லை said...

/கீச்சென்று கத்திக் கொண்டே ஓடி வ‌ந்து சோஃபாவில் ஏறினாள். அமைதியாக‌ச் சாய்ந்து அந்த‌ப் பாட‌ல் முடியும் வ‌ரை ல‌யித்துப் பார்த்தாள். !!/


ஆகா..விளையும் பயிர்!! :-)

சந்தனமுல்லை said...

ரசித்து படித்தேன்...

/"ஆ...அம்மா, டீஈ..டீஈ..பாட்டா பாட்டா...பும்பா.../


:-))யாரை எப்படி சமாளிக்கணும்னு நல்லாவே தெரிஞ்சுருக்கு...நேஹாக்குட்டிக்கு!

அண்ணாமலையான் said...

மகிழ்ச்சியான தருனங்கள்தான்

KarthigaVasudevan said...

//இர‌வு ப‌தினொரு ம‌ணியாகியும் தூங்காம‌ல் அவ‌ள் போட்ட‌ ஆட்ட‌ம் தாங்க‌ முடியாம‌ல் ப‌டுக்கைக்குத் தூக்கிச் சென்றேன். கதவைச் சாத்தி விள‌க்கை அணைத்த‌தும் க‌த்திக் கூப்பாடு போட்டாள். என்ன‌ செய்தாலும் ச‌ரி, க‌த‌வைத் திற‌‌‌க்க‌க் கூடாது என்று உறுதியாக‌ இருந்தேன். ச‌ற்று நேர‌த்துக்குப் பின்,
"அம்மா.. த‌ண்ணீ..."
அருகிலிருந்த‌ த‌ண்ணிபாட்டிலைத் த‌ந்தேன். வாங்கினாள்; குடிக்க‌வில்லை.

கொஞ்ச‌ நேர‌த்துக்குப் பின், "அம்மா.. பாலு, பாலு ஏனும்"
பால் பாட்டிலையும் ப‌க்க‌தில் வைத்திருந்தேன். அதையும் தந்த போது குடிக்க‌வில்லை.

"ஆ...அம்மா, டீஈ..டீஈ..பாட்டா பாட்டா...பும்பா..."
:((((//

குழந்தைகளால் பீதிக்கு ஆளாகும் அம்மாக்கள் சங்கம் ஒன்னு ஆரம்பிச்சா என்ன?! இந்தக் கதை பொதுக் கதை. சோதனை கால கட்டம் தான் குழந்தைங்க அசந்து தூங்கற வரை!
:)

Deepa said...

//விளையும் பயிர்??
நம்புவதற்கு ஆசை தான், இல்லையா முல்லை?
:))

ந‌ன்றி அண்ணாம‌லையான்!
ந‌ன்றி கார்த்திகா!
ஆமாங்க‌, க‌ண்டிப்பா ஆர‌ம்பிக்க‌லாம்.
:(

SK said...

:) :)

அம்பிகா said...

தீபா,
என் பையன் குழந்தையாயிருந்த போது இரவு இரண்டு மணி வரை தூங்காமல் விளையாடி விட்டு , `டயடா இக்கு, குலுகோஸ் தா’ன்னு கேட்டது நினைவு வருகிறது.
நேஹாகுட்டி மழலை அழகு.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

இந்த நாள் திரும்பக்கிடைக்காதும்மா! அனுபவிங்க!

Romeoboy said...

படிக்கும் போதே தெரிகிறது, தாய் பாசத்தின் அருமை

காமராஜ் said...

சந்தனமுல்லை said...

/கீச்சென்று கத்திக் கொண்டே ஓடி வ‌ந்து சோஃபாவில் ஏறினாள். அமைதியாக‌ச் சாய்ந்து அந்த‌ப் பாட‌ல் முடியும் வ‌ரை ல‌யித்துப் பார்த்தாள். !!/

aamen

ponraj said...

குழந்தை பருவம் இனிமையானது!!!

//கோப‌ம் வ‌ந்தால் அடித்து விடுகிறாள். நாம் கோப‌மாக‌ முறைக்க‌வும், "சா..ரி" என்று க‌ழுத்தைக் க‌ட்டிக் கொண்டு ஒரு முத்தம்!
இத‌ற்காக‌வே அவ‌ளிட‌ம் அடிக்க‌டி அடி வாங்குகிறேன் நான்!//

படித்து அல்ல, நினைத்து ரசிக்க வைத்த பதிவு!!!
அருமை!!!!

☀நான் ஆதவன்☀ said...

//"ஆ...அம்மா, டீஈ..டீஈ..பாட்டா பாட்டா...பும்பா..."//

அம்மா டீ போட்டு கொடும்மா? :)))))

//இத‌ற்காக‌வே அவ‌ளிட‌ம் அடிக்க‌டி அடி வாங்குகிறேன் நான்!//

நானும் அடி வாங்கனும் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

பார்க்கில் ந‌ன்கு விளையாடிய‌ பின் வீட்டுக்குத் திரும்ப‌ அழைத்தால்,
"ஆனாம், பை!" கை காட்டுகிறாள்.(நீ வேணா போ, நான் வ‌ர்ல‌)//

nehaaa cho chweet!

கோப‌ம் வ‌ந்தால் அடித்து விடுகிறாள். நாம் கோப‌மாக‌ முறைக்க‌வும், "சா..ரி" என்று க‌ழுத்தைக் க‌ட்டிக் கொண்டு ஒரு முத்தம்!
இத‌ற்காக‌வே அவ‌ளிட‌ம் அடிக்க‌டி அடி வாங்குகிறேன் நான் //

அது, அந்த சரண்டர் இருக்கட்டும் ;)

அமுதா said...

/*இத‌ற்காக‌வே அவ‌ளிட‌ம் அடிக்க‌டி அடி வாங்குகிறேன் நான்!
*/
ம்.. அடி வாங்கிக் கொண்டே இருக்கலாம்

ரிஷபன் said...

நேஹா.. ஆஹா..