Wednesday, February 10, 2010

A few pages from my teenage diary - தொடர் பதிவு

விருப்பமிருந்தால் தொடரலாம் என்று தான் சின்ன அம்மிணி அழைத்திருந்தார். எழுத வேண்டாமென்று தான் உறுதியாக இருந்தேன். "பின் என்ன இப்போ,எழுதுவோமே" என்று தோன்றியது.

பதின்ம பருவம் என்றில்லை எப்போதும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்ததில்லை. என்றாவது Dear God என்று தொடங்கிக் கடவுளுக்குக் கடிதம்எழுதுவேன்! பிரார்த்தனை ஒன்றும் இல்லை...என் மனதின் குப்பைகள், ஆசைகள், கவலைகள், குழப்பங்கள் எல்லாவற்றையும் காகிதத்தில் கிறுக்கிய பிறகு நிம்மதியாக இருக்கும். பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான்எழுதுவேன்; எப்படியும் காகிதம் விரயமாகப் போகிறது... குறைந்தபட்சம் மொழியையாவது விருத்தி செய்யலாமேயென்று.

பதின்மூன்று வயது முதல் பத்தொன்பது வயது என் மனதில் முக்கியமாக இருந்த விஷயங்கள்:

படிப்பு: ‍ (வேற‌ வழி?) இதைப் பத்திச் சொல்லப் புதுசா என்ன இருக்கு?எல்லாருக்கும் இருந்திருக்கும் பாடச்சுமையும் படபடப்பும் தான். ப்ளஸ் டூதேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.)
நன்றாகப் பாடமெடுக்கும் ஆசிரியரிடம் எப்போதும் infatuation இருக்கும். பள்ளியில் எல்லாருமே ஆசிரியைகள் தான். ஜெயா மிஸ், (முன்பே இவரைப் பற்றி எழுதி இருக்கிறேன்) +2 படிக்கும் சித்ரா மிஸ் என்ற அற்புதமான இயற்பியல் ஆசிரியை. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் அவர் மீது பயம் கலந்த மரியாதை. என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று அவரிடம் டியூஷன் படிக்கும் தோழிகள் சொல்லி அறிந்த அன்று மிகவும் பரவசப்பட்டேன்.

பிறகு +2 படிக்கும் போது சரியாக டெஸ்ட் எழுதாததால் இருபத்தைந்து 5 மார்க் கணக்குகளை பத்து முறை எழுதி வருமாறு (அடுத்த நாள் காலை ஐந்து மணிக்குள்) தண்டனை கொடுத்தார் ட்யூஷன் வாத்தியார். சாது சாமியார் போலிருந்த அவருக்குக் கோபம் வந்தால் காலி. நடுங்கிக் கொண்டே வீடு சென்று அன்றிரவு முழுதும் தூங்காமல் நானும் என் தோழியும் இம்போசிஷனை முடித்தோம். மறுநாள் காலை ஐந்து மணிக்குச் சென்று அவரிடம் கொடுத்த போது, வாங்கித் திருத்திய பின் “வெரி குட்” என்று எழுதி எங்களைப் பார்த்துச் சிரித்தார். அந்தக் கணம் முதல் என் infatuation லிஸ்டில் அவரும் அடக்கம்.

பாட்டு: ‍ இசை ரசனையும், ஒரளவு எனக்குப் பாட வரும் என்றும் உணர்ந்த பருவம் அது. அக்காவின் முயற்சியால் பாட்டு வகுப்புக்கும் சென்று கொண்டிருந்தேன். கல்லூரி ஆர்க்கெஸ்ட்ரா என் தாகத்தை ஓரளவு தணித்தது.

அம்மா: அம்மாவைப் ப‌ற்றித் த‌னி இடுகையே எழுத‌லாமென்றாலும் என்ப‌தின்ம‌ ப‌ருவ‌த்தில் தான் அம்மாவுட‌ன் மனரீதியான‌ நெருக்க‌மும் அம்மா என்ற‌ பெண்ணின் வாழ்க்கை என் ம‌ன‌தில் விசுவ‌ரூப‌மும் எடுக்க‌த் தொடங்கிய‌து. அப்பாவின் இன்னொரு ம‌னைவி (மாமி) அவ‌ர்க‌ளின் அர‌வ‌ணைப்பிலேயே இருந்த‌ நான், அம்மாவிடம் அன்பிருந்தாலும் மனத்தளவில் பெரிதாக‌ ஒட்டாமலே இருந்தேன்.

அம்மாவிடம் நெருங்கி வளர்ந்த, மாமியிடம் ம‌ரியாதை த‌விர‌ அதிக‌ம் நெருங்காத‌ அக்காவின் அன்பிலும் நான் ந‌னைந்த‌தால் இந்த‌க்க‌ண்ணுக்குத் தெரியாத‌ திரைக‌ள் என்னைச் சிறுவ‌ய‌தில் பெரிதாக‌ப்பாதிக்க‌வில்லை.

அக்காவுக்குத் திரும‌ண‌மாகிச் சென்ற‌தும் தான் அம்மா த‌னியாக‌ ஆன‌து போல் தோன்றியது.

அம்மா ரொம்ப‌த் தைரிய‌மான‌ ம‌னுஷி. யாரிட‌மும் எதையுமே எதிர்பார்க்காத‌ அந்த‌த் த‌ன்ன‌ம்பிக்கையும், ம‌னைவி, தாய் என்ற‌ ஸ்தான‌ங்க‌ளுக்குண்டான‌ அடிப்ப‌டை உரிமைக‌ளைக் கூட‌ விட்டுக் கொடுத்து ஆனால் கடமைகளை நிறைவேற்றுவதில் உள்ள ஆர்வமும் வேறு யாரிடமும் பார்க்காத ஒன்று. எத்த‌னை க‌ஷ்ட‌ங்களைச் ச‌ந்தித்திருந்தாலும், "என‌க்கென்ன‌, என் வாழ்வுப‌ரிபூர‌மண‌மான‌து. நான் மிக‌ச் ச‌ந்தோஷ‌மான‌ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்" என்று உண்மையிலேயே சொல்லும் என் அம்மாவை ம‌க‌ளாக‌ இல்லாம‌ல் இன்னொரு பெண்ணாக‌ நான் பார்த்துப் பிர‌மிக்கிறேன்.

எல்லோரும் சொல்வ‌து தானென்றாலும் என‌க்கு ம‌ட்டுமே தெரியும், என் தாய் போல் ஒரு பெண் உல‌கில் இல்லை.

ஆனால் நான் அம்மாவைப் போல் இல்லை. நான் அம்மாவை நெருங்க நெருங்க‌, அம்மா என் மாற்ற‌த்தை உண‌ர்ந்து கொள்ள் வேண்டும். இத்தனை நாள் வில‌கி இருந்த‌ ம‌க‌ள் த‌ன்னிட‌ம் நெருங்குவ‌தை உண‌ர்ந்து அதீத‌ ம‌கிழ்ச்சி கொண்டு என்னைக் கொண்டாட வேண்டுமென்று விரும்பினேன்; எதிர்பார்த்தேன். என்ன‌ ஒரு பேதைமை? தாய‌ன்பை எவ்வ‌ள‌வு ம‌லிவாக‌ நினை‌த்து விட்டேன்?

என்றாவ‌து என் மீது அன்பு குறைந்திருந்தால் தானே அம்மாவுக்குத் திடீரென்று அதிக‌ரிக்க? அம்மா subtle ஆனவர். என் போல அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தெரியாது; பிடிக்காது.

இது புரியாம‌ல் வேத‌னைப்ப‌ட்டேன்; ச‌ண்டையிட்டேன். இயல்பாக அக்காவை நினைத்துக் கொண்டு அம்மா பேசினாலும் தாங்க முடியாமல் பொறாமைப் பட்டேன் ‍'அக்காவைத் தான் உன‌க்குப் பிடிக்கும்' என்று.இதெல்லாம் அம்மாவின் திடசித்ததுக்கு முன் எம்மாத்திரம்? ஆனாலும்என‌க்காக‌ வ‌ருந்தினார்கள். என்னைப் புரிந்து கொள்ள முயல்வதற்கு, அப்படிஒரு அவசியம் என் அம்மாவுக்கு ஏற்படுவதற்கு, என்னுடைய‌ இந்த‌ உண‌ர்ச்சி வெளிப்பாடுக‌ள் உத‌வின. அம்மா சிரித்துக் கொண்டே 'இந்தக் குணம் மட்டும்அப்பா மாதிரியே' என்று சொன்னதெல்லாம் அப்போது புரியவில்லை.

இந்தக் காலகட்டத்தில் தான் நான் சமையல், மற்றும் வீட்டு வேலைகளில் பங்கெடுப்பதும் நடந்தது. அம்மாவால் தனியாக முடியாது என்ற யதார்த்தம், அக்காவைப் போல் வீட்டுக்குப் பொறுப்பான பெண்ணாக இருக்க வேண்டும் என்ற உந்துதல் இரண்டுமே காரணம். அக்கா வரும்போது அம்மா நான் வேலை செய்வதைப் பற்றிச் சொல்வதைக் கேட்கும் போது ரொம்பச் சந்தோஷமாக இருக்கும்.

இதே நேரத்தில் தான் அம்மாவின் உட‌ல்நிலையிலும் பெரிய‌ பாதிப்பு ஏற்ப‌ட்ட‌து. வாத‌ நோயினால் அம்மாவின் கால்களும் கை விரல்களும் வீங்கி வளையத் தொட‌ங்கின. நான் ப‌ன்னிர‌ன்டாம் வ‌குப்புககு வ‌ந்த‌ போது அம்மா ப‌ள்ளி வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். சென்னையில் ராணி மேரிக்க‌ல்லூரியில் க‌ணித‌ம் ப‌டிக்க‌ ஆர‌ம்பித்த‌ என‌க்கு எதிர்பாராம‌ல் பொறியிய‌ல் க‌ல்லூரியில் இட‌ம் கிடைக்க‌ நான் கோவை செல்ல‌ வேண்டிவ‌ந்த‌து. விருப்பமே இல்லை என‌க்கும். ஆனால் அப்பாவும் ம‌ற்ற‌வர்க‌ளும் விரும்பியதாலும் ந‌ல்ல வாய்ப்பை விட்டு விடாதே என்று நண்பர்க‌‌ள் சொன்ன‌தாலும் கோவையில் ப‌டிக்க‌ச் சென்றேன்.

எதிர்பாலின‌ ஈர்ப்பு: ப‌ள்ளிப்ப‌ருவ‌ம் வ‌ரை நான் யாரையாவ‌து ஈர்த்தேனாஎன்று என‌க்குத் தெரியாது. என‌க்குத் தெரிந்து யாரும் என்னை ஃபாலோசெய்த‌தும் இல்லை. செய்திருந்தாலும் அதை அறிந்திருக்கும் படியான கூறும்எனக்குக் கிடையாது. பின்னே? எனக்கே மனசில ஆயிரம் கிர‌ஷ் இருந்தன‌. கமல்ஹாசன் முதல், பக்கத்து வீட்டுப் பாலகிருஷ்ணன் வரை; ஒதெல்லோ நாடகத்தில் அபாரமாக நடித்த சீனியர் மாணவனிலிருந்து இந்தி ட்யூஷனில் படித்த குறும்புக்கார மாணவன் வரை. சைக்கிள் ஓட்டிச் செல்லும் போது ஏதாவது பாட்டை முணுமுணுத்துக் கொண்டு அதை இவர்களில் யாராவது என்னை நினைத்துக் கொண்டு உருகி உருகிப் பாடுவதாகக் கற்பனை செய்து கொள்வது என் வழக்கம். (நான்பாடுவதாக அல்ல) ப‌ரீட்சை நேர‌த்தில் ச‌ம‌ர்த்தாக‌ இவ‌ர்க‌ளை எல்லாம் ம‌ன‌தில் இருந்து விர‌ட்டி அடித்து விடுவேன். இப்ப‌டி நானுண்டு என் ‘மைல்ட் ஃபான்ட‌ஸிக்கள்’ உண்டு என்று இருந்தது தான் என் பள்ளிப் பருவக் காதல்அனுபவம்(!). வ‌குப்பில் ச‌க‌ மாண‌வ‌ர்கள் எல்லாம் ம‌திப்பெண் எதிரிக‌ள் ம‌ட்டுமே.

க‌ல்லூரிக் கால‌ம் ப‌ல‌வ‌கையிலும் என‌க்குச் சிற‌ந்த‌ அனுப‌வ‌ங்க‌ளைத்த‌ந்தது. ப‌டிப்பிலும், ஆட்ட‌ம், பாட்ட‌ம், பிற க‌லைகளில் ஆர்வமும் இருந்தது. தோழிக‌ள், ந‌ண்ப‌ர்க‌ள் மத்தியில் செல்வாக்கும் அன்பும் நிறையவே இருந்தது.

எல்லாம் இருந்தாலும் பல விஷயங்களில் தெளிவும் திடசித்தமும் இல்லாததாலும், சில inferiority மற்றும் superiority complex களாலும், ஓர் ஆணின் ம‌ன‌தை முழுமையாக‌ ஆக்கிர‌மிப்பது தான் என் ஆளுமையின் அங்கீகார‌ம் என்ற‌ ப‌க்குவ‌மில்லாத‌, வெட்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ சிந்த‌னை ம‌ன‌தின் ஓர‌ங்க‌ளில் நீங்காம‌ல் இருந்ததாலும், அப்ப‌டி ஒரு அங்கீகார‌ம் கிடைத்த‌ ம‌று நொடியே அது ச‌க‌ல‌ செல்வாக்கும் இழ‌ந்து அக‌ம்பாவமும், குற்ற‌ உண‌ர்ச்சியும் க‌ல‌ந்த‌ க‌ல‌வையே ம‌ன‌தில் நில‌விய‌தாலும் என் டீனேஜ் ட‌ய‌ரியின் சில‌ ப‌க்க‌ங்க‌ள் க‌ச‌ங்கியே காண‌ப்ப‌டுகின்ற‌ன‌. சுய‌ ப‌ரிசீல‌னைக்காக‌வும், சும்மாவும் அவ‌ற்றை நான் அடிக்க‌டித் திரும்பிப் பார்த்துக் கொள்ள‌த் த‌ய‌ங்காவிட்டாலும், உங்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொள்ளும‌ள‌வு மனப்ப‌க்குவ‌ம் என‌க்கு ஏற்ப‌ட‌வில்லை. ஏற்ப‌டும் நாள‌ன்று எழுதலாம்.

இதுவ‌ரையில் பொறுமையோடு ப‌டித்த‌ அன்புள்ள‌ங்க‌ளுக்கு ந‌ன்றி!

இந்தச் சங்கிலியைத் தொடங்கி வைத்த பதிவுலகின் trend setter சந்தனமுல்லைக்கு நன்றி!

நான் இப்போது அறிந்து கொள்ள விரும்புவது இவர்களின் பதின்ம பருவ நாட்குறிப்பை:

டாக்ட‌ர் ருத்ரன்

க. நா. சாந்தி

நாஸியா

ஆயில்யன்


அன்பானவர்களே, கட்டாயமில்லை...விருப்பமிருந்தால் எழுதுங்கள்!

33 comments:

sathishsangkavi.blogspot.com said...

உங்கள் இளமைக்காலம் சுவரஸ்யமாக இருந்தது...

அம்பிகா said...

தீபா,
ஒரு சுயபரிசோதனையின் வெளிப்பாடாகவே தோன்றியது உன் பதிவு. அதுவும் அம்மாவை பற்றியதான மதிப்பீடு, ஏற்கெனவே அம்மு மூலம் அறிந்திருதாலும், மிகவும் அருமை. மிக நெகிழ்வான இடுகை தீபா.

அம்பிகா said...

தீபா,
ஒரு சுயபரிசோதனையின் வெளிப்பாடாகவே தோன்றியது உன் பதிவு. அதுவும் அம்மாவை பற்றியதான மதிப்பீடு, ஏற்கெனவே அம்மு மூலம் அறிந்திருதாலும், மிகவும் அருமை. மிக நெகிழ்வான இடுகை தீபா.

சந்தனமுல்லை said...

தீபா!

பிரமிக்க வைத்துவிட்டீர்கள்! இப்படி சுவாரசியமாகக் கூட எழுதலாமென்று தங்கள் இடுகையிலிருந்து புரிய வைத்திருக்கிறீர்கள்! நிறைய இடங்களில் அட என்று இருந்தது....என்னை மாதிரியே என்று! ;-) குறிப்பாக டீச்சருக்கு பிடிக்குமென்று தெரிந்ததும்!!

/என்றாவ‌து என் மீது அன்பு குறைந்திருந்தால் தானே அம்மாவுக்குத் திடீரென்று அதிக‌ரிக்க?//

செம!!

அண்ணாமலையான் said...

உங்களோட வெளிப்படையான எழுத்துக்கு என் வணக்கங்கள்....

வினவு said...

//எல்லாம் இருந்தாலும் பல விஷயங்களில் தெளிவும் திடசித்தமும் இல்லாததாலும், சில inferiority மற்றும் superiority complex களாலும், ஓர் ஆணின் ம‌ன‌தை முழுமையாக‌ ஆக்கிர‌மிப்பது தான் என் ஆளுமையின் அங்கீகார‌ம் என்ற‌ ப‌க்குவ‌மில்லாத‌, வெட்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ சிந்த‌னை ம‌ன‌தின் ஓர‌ங்க‌ளில் நீங்காம‌ல் இருந்ததாலும், அப்ப‌டி ஒரு அங்கீகார‌ம் கிடைத்த‌ ம‌று நொடியே அது ச‌க‌ல‌ செல்வாக்கும் இழ‌ந்து அக‌ம்பாவமும், குற்ற‌ உண‌ர்ச்சியும் க‌ல‌ந்த‌ க‌ல‌வையே ம‌ன‌தில் நில‌விய‌தாலும் என் டீனேஜ் ட‌ய‌ரியின் சில‌ ப‌க்க‌ங்க‌ள் க‌ச‌ங்கியே காண‌ப்ப‌டுகின்ற‌ன‌.//

தீபா,

பதின்வயது டயரிக் குறிப்பை அப்படியே விவரங்களுடன்தான் எழுத வேண்டுமென்பதில்லை. இன்றைய புரிதலை வைத்து கூட அன்றைய நாட்களை நினைவு கூரலாம். இரண்டுக்குமுள்ள சுயபரிசீலனையே கூட பயனுள்ளதாகவும் மட்டுமல்ல சுவராசியமனதாகவும் இருக்கலாம். மேற்கோளிட்ட மேற்கண்ட பத்தி இப்படி யோசிக்க வைக்கிறது

மாதவராஜ் said...

உன் பதிவைப் படித்து நெகிழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் எனக்கும் சில விஷயங்களை நேர்மையாக முன்வைக்கத் தோன்றுகிறது.

எனக்கும், உன் அக்காவுக்கும் திருமணமாகி, அவளை அழைத்துக்கொண்டு, உங்களளவில் கேள்விப்படாத ஒரு குக்கிராமத்திற்கு அழைத்துச் செல்ல இருந்த அந்த சாயங்காலத்தில் உன் தந்தையின் கண்களில் கூட நான் கண்ணீரைப் பார்த்தேன். அப்போது கூட இருந்த பலரிடம் வருத்தமும், இழப்பின் வேதனையையும் நான் பார்த்தேன். ஆனால் துளிக்கூட வருத்தத்தை காட்டாமல் அம்முவின் அருகில் வந்து அவளைத்தட்டிக் கொடுத்து “தைரியமா இரு” என்று சொல்லி சலனமில்லாமல் நின்றிருந்த உன் அம்மாவைப் பார்த்து அந்தக் கணத்தில் பிரமித்துப் போனேன். அவர்கள் பிரம்மாண்டமாய் நின்றிருந்தார்கள்.

சில மாதங்கள் கழித்து திரும்ப சென்னை வந்த போது “அம்முவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று கேட்டார்கள் உன் அம்மா. எட்டு வருடம் காதலித்து, பழகியிருந்தாலும், இந்த சில மாதங்களில் அவள் எப்படித் தெரிகிறாள் உங்களுக்கு என்ற கேள்வி அதில் தொனித்தது. “சில சமயங்களில் அவள் குழந்தை, சில சமயங்களில் பாட்டி” என்றேன், சிரித்துக்க்கொண்டார்கள். அதில் ஒரு நிம்மதியைப் பார்த்தேன். இந்த 21 வருட தாம்பத்தியத்தில் அவர்களின் சிரிப்பின் ரேகைகள் ஒடிக்கொண்டு இருக்கிறது,

இப்பொதைகு இவ்வளவே. இன்னும் சொல்வேன் பிறகு....

ஆயில்யன் said...

அழகான தொகுப்பாக விரிவடைந்திருக்கிறது கொசுவர்த்தி :)

பதின்ம பருவத்து ஞாபகங்கள் எப்பொழுதும் எல்லோரும் நினைவலைகளில் சுற்றிக்கொண்டிருக்கும் அந்த சூழல்தானே வாழ்வின் தொடக்கம் !

தொடர்கிறேன்! :)

ஜெய்லானி said...

அட சீக்கிரம் முடிச்சிட்டீங்களே! இன்னும் கொஞ்சம் கூட எழுதி இருக்கலாம்.

When it is high time said...

//அம்மா ஒரு தைரியமான் மனுஷி//

Taking her as an individual and not your mom, I disagree with the statement.

All that you have written about her, as a loving mother etc. are beyond criticism.

But the above single statement is not corroborated.

Because, how come she accepted the status of the other woman, or accepted sharing her husband with another woman?

For her to qualify for the label of தைரியமான் மனுஷி, she should have walked out of the marriage with her children, and led a life independently, come what may. Thus, she should have become a shining example to her children not to accept humiliation in marriage.

I hope I have not hurt you. If I am incorrect in facts, you may correct me.

www.myownquiver.blogspot.com

When it is high time said...

Psychologists aver that there is no such complex called SUPERIORITY COMPLEX. According to them, if any one poses to be superior to others, (or, to use your word Superiority Complex), he or she is indeed suffering from inferiority complex and their complex embodies in their behavior of pose.

Avoid the word SUPERIORITY COMPLEX

சாந்தி மாரியப்பன் said...

அழகான வெளிப்படையான,சுவாரஸ்யமான எழுத்து,தீபா..

Anonymous said...

எழுதியமைக்கு நன்றி தீபா.
உங்கள் அம்மாவைப்போலவே என் அம்மாவுக்கும் வாதம் வந்தது. ஆனால் அதிலிருந்து அவர்கள் மீளவேயில்லை.அப்போதெல்லாம் அக்கா தான் வீட்டு வேலை செய்வாள். கடைக்குட்டி என்று எப்படியாவது வேலைகளிலிருந்து தப்பிவிடுவேன். என் நினைவுகளை திரும்பிப்பார்ப்பது போலிருந்தது.
படிப்பு, எதிர்பாலின ஈர்ப்பு என்று கட்டம் கட்டி எழுதிவிட்டீர்கள்.

Vidhoosh said...

தீபா: உங்கம்மா நிஜமாவே ஒரு பிரம்மாண்டம். அவருக்கு என் நமஸ்காரங்கள்.

கவி அழகன் said...

வார்த்தை ஏதும்

வரவில்லையே...!

சுவரஸ்யமாக இருந்தது...

SurveySan said...

//இசை ரசனையும், ஒரளவு எனக்குப் பாட வரும் என்றும் உணர்ந்த பருவம் அது. அக்காவின் முயற்சியால் பாட்டு வகுப்புக்கும் சென்று கொண்டிருந்தேன்.//

interesting :)

nalla pagirvu.

ஹுஸைனம்மா said...

/சுய‌ ப‌ரிசீல‌னைக்காக‌வும், சும்மாவும் அவ‌ற்றை நான் அடிக்க‌டித் திரும்பிப் பார்த்துக் கொள்ள‌த் த‌ய‌ங்காவிட்டாலும், உங்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொள்ளும‌ள‌வு மனப்ப‌க்குவ‌ம் என‌க்கு ஏற்ப‌ட‌வில்லை.//

எனக்கும் (ஏன் எல்லாருக்குமே) இம்மாதிரிப் பக்கங்கள் உண்டு. அவற்றைப் பொதுவில் பகிர்ந்துகொள்ளவேண்டிய அவசியமில்லைதான். சில பொக்கிஷங்கள் ரகசியமாக மட்டும் இருக்கவேண்டியவை. ;-)

Dr.Rudhran said...

i am amazed. i wonder if i can write like this about my teens!

நாஸியா said...

நீங்க சிறுவயதில் படிப்பென்னும் கயிற்றை இறுக்கமாக பிடித்துக்கொண்டு மற்ற விஷயங்களை தோளில் இருக்கும் தூசு போல சாதரணமா உதறி தள்ளிட்டு வந்ததை படிக்க மிகவும் இனிமையாக இருக்கு..

தொடர அழைத்ததுக்கு ரொம்ப நன்றி.. இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவை போட்டுடறேன்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

மற்ற உங்களின் பதிவுகளைப் போலில்லாமல் இந்த இடுகை உங்களை ரொம்பவும் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது தீபா.

நிறைய இடங்களில் வெளிப்படையாய் எழுதியது தான் இந்தப் பதிவின் வலிமையே.

(கொஞ்சம் பாதிக்கவும் செய்தது.)

Radhakrishnan said...

மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. எல்லோர் வாழ்விலும் சில நிகழ்வுகள் இதுபோன்று நடந்திருக்கக்கூடும்.

Deepa said...

நன்றி சங்கவி!

நன்றி அம்பிகா அக்கா!

நன்றி முல்லை!

நன்றி அண்ணாமலையான்!

நன்றி வினவு!
கொஞ்சம் அப்படித் தான் முயன்றிருப்பதாக நினைக்கிறேன்.

நன்றி அங்கிள்!

ந‌ன்றி ஆயில்ய‌ன்!

ந‌ன்றி ஜெய்லானி!

Thank you Sword Fish!
I would just like to recall what one of my wise friends wrote sometime ago. "You can't judge anybody's life without having lived it exactly the way they had."

I don't want to argue with you for making such an absolute statement about my mother, knowing hardly anything about her, and based only on what little I've written over here. (I may not have done complete justice to her personality!)
I see it only as an expression of your righteousness and your strong advocacy of feminism. Keep it up.

ந‌ன்றி அமைதிச்சார‌ல்!

ந‌ன்றி சின்ன‌ அம்மிணி!

ந‌ன்றி விதூஷ்!

ந‌ன்றி யாத‌வ‌ன்!

ந‌ன்றி Surveysan!

ந‌ன்றி ஹூஸைன‌ம்மா!

Thank you Doctor!

ந‌ன்றி அமித்து அம்மா!

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

நீங்க சொன்னதுக்காக எழுதியிருக்கன்.படிங்க.உங்க தலை எழுத்து.பாவம்ப்பா நீங்க

ponraj said...

//இசை ரசனையும், ஒரளவு எனக்குப் பாட வரும் என்றும் உணர்ந்த பருவம் அது. அக்காவின் முயற்சியால் பாட்டு வகுப்புக்கும் சென்று கொண்டிருந்தேன். கல்லூரி ஆர்க்கெஸ்ட்ரா என் தாகத்தை ஓரளவு தணித்தது.//

//அம்மா ரொம்ப‌த் தைரிய‌மான‌ ம‌னுஷி. யாரிட‌மும் எதையுமே எதிர்பார்க்காத‌ அந்த‌த் த‌ன்ன‌ம்பிக்கையும், ம‌னைவி, தாய் என்ற‌ ஸ்தான‌ங்க‌ளுக்குண்டான‌ அடிப்ப‌டை உரிமைக‌ளைக் கூட‌ விட்டுக் கொடுத்து ஆனால் கடமைகளை நிறைவேற்றுவதில் உள்ள ஆர்வமும் வேறு யாரிடமும் பார்க்காத ஒன்று.//



//என்றாவ‌து என் மீது அன்பு குறைந்திருந்தால் தானே அம்மாவுக்குத் திடீரென்று அதிக‌ரிக்க?//

//பல விஷயங்களில் தெளிவும் திடசித்தமும் இல்லாததாலும், சில inferiority மற்றும் superiority complex களாலும், ஓர் ஆணின் ம‌ன‌தை முழுமையாக‌ ஆக்கிர‌மிப்பது தான் என் ஆளுமையின் அங்கீகார‌ம் என்ற‌ ப‌க்குவ‌மில்லாத‌, வெட்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ சிந்த‌னை ம‌ன‌தின் ஓர‌ங்க‌ளில் நீங்காம‌ல் இருந்ததாலும், அப்ப‌டி ஒரு அங்கீகார‌ம் கிடைத்த‌ ம‌று நொடியே அது ச‌க‌ல‌ செல்வாக்கும் இழ‌ந்து அக‌ம்பாவமும், குற்ற‌ உண‌ர்ச்சியும் க‌ல‌ந்த‌ க‌ல‌வையே ம‌ன‌தில் நில‌விய‌தாலும் என் டீனேஜ் ட‌ய‌ரியின் சில‌ ப‌க்க‌ங்க‌ள் க‌ச‌ங்கியே காண‌ப்ப‌டுகின்ற‌ன‌. சுய‌ ப‌ரிசீல‌னைக்காக‌வும், சும்மாவும் அவ‌ற்றை நான் அடிக்க‌டித் திரும்பிப் பார்த்துக் கொள்ள‌த் த‌ய‌ங்காவிட்டாலும், உங்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொள்ளும‌ள‌வு மனப்ப‌க்குவ‌ம் என‌க்கு ஏற்ப‌ட‌வில்லை. ஏற்ப‌டும் நாள‌ன்று எழுதலாம்.//

வெளிப்படையான,சுவாரஸ்யமான எழுத்துக்கு...

வாழ்த்துக்கள்!!!!

அமுதா said...

பதின்ம பருவத்தின் பல உணர்வுகளை அழகாகக் கூறியுள்ளீர்கள்

Sugumarje said...

நல்ல எழுத்து, நல்ல நடை... வாழ்த்துகள்...(தாமதமான கண்டுபிடிப்புக்காக வருந்துகிறேன்...)

Deepa said...

நன்றி சாந்தி லெட்சுமணன்!

நன்றி பொன்ராஜ்!

நன்றி அமுதா!

நன்றி Sugumarje!

Thank you Uma!
:-)

அகநாழிகை said...

அனுபவப்பதிவுகளை வாசிப்பதே ஒரு சுகானுபவம். நன்றாக தடங்கலின்றி பதிந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

Uma said...

தூக்கக் கலக்கத்தில் என் commentஐ delete செய்து விட்டு விழிக்கிறேன். மன்னிக்கவும் :) undelete செய்ய வழியிருந்தால் சொல்லவும்.

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருந்தது பகிர்வு தீபா.

//எல்லாம் இருந்தாலும் பல விஷயங்களில் தெளிவும் திடசித்தமும் இல்லாததாலும், சில inferiority மற்றும் superiority complex களாலும், ஓர் ஆணின் ம‌ன‌தை முழுமையாக‌ ஆக்கிர‌மிப்பது தான் என் ஆளுமையின் அங்கீகார‌ம் என்ற‌ ப‌க்குவ‌மில்லாத‌, வெட்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ சிந்த‌னை ம‌ன‌தின் ஓர‌ங்க‌ளில் நீங்காம‌ல் இருந்ததாலும், அப்ப‌டி ஒரு அங்கீகார‌ம் கிடைத்த‌ ம‌று நொடியே அது ச‌க‌ல‌ செல்வாக்கும் இழ‌ந்து அக‌ம்பாவமும், குற்ற‌ உண‌ர்ச்சியும் க‌ல‌ந்த‌ க‌ல‌வையே ம‌ன‌தில் நில‌விய‌தாலும் என் டீனேஜ் ட‌ய‌ரியின் சில‌ ப‌க்க‌ங்க‌ள் க‌ச‌ங்கியே காண‌ப்ப‌டுகின்ற‌ன‌. சுய‌ ப‌ரிசீல‌னைக்காக‌வும், சும்மாவும் அவ‌ற்றை நான் அடிக்க‌டித் திரும்பிப் பார்த்துக் கொள்ள‌த் த‌ய‌ங்காவிட்டாலும், உங்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொள்ளும‌ள‌வு மனப்ப‌க்குவ‌ம் என‌க்கு ஏற்ப‌ட‌வில்லை. ஏற்ப‌டும் நாள‌ன்று எழுதலாம்.//

இங்கு ஒரு அவதாரமாக எழுகிறீர்கள்.

Uma Rudhran said...

I am glad I did not miss reading this post and your response to the comments so far. Your clarity of thoughts and perspective, and the daring honesty to admit what you are not ready for, all the more having been given in a very readable fashion - simply sweet!

Deepa said...

நன்றி அகநாழிகை!

நன்றி ராஜாராம்!

”அது ஒரு அவதாரம்”னு திட்டுவாங்களே! அப்படியா :))

மீண்டும் நன்றி உமா!

When it is high time said...

Just came back here and found your amazing response. Many thanks, ma'm.

'Keep it up' - I don't accept your advice, sorry.

Because I am not after feminism. Indeed I abhor the word feminism itself as it is discriminatory.

I am after basic human dignity of every individual - whether man or woman, boy or girl! I keep that passion up myself, without being encouraged or discouraged!!

BTW, who is the author of the quote in your response? Such a surprising quote could have been accompanied with the name of the author, madam.

This may not be mistaken for a wanton argument, pleeeease.