Wednesday, February 3, 2010

நேஹா நேரம்!

”அம்மா! தண்ணீ கொட்டீச்சி, ஏனும்..தண்ணி ஏனும்” (அவளே கொட்டி விட்டு, இன்னும் வேண்டும் என்பதற்காய்)

”கொச்சு...அவ் கச்சி!” (கொசு அவ் என்று கடித்ததாம்)

”எம்பு..அவ்வ் கச்சி!” (எறும்பு)

”கொச்சு பேட்டு...கொச்சு பேட்டு...” (கொசு பேட் வைத்து அடிக்க வேண்டுமாம். )

”அப்பா, எந்தி...எந்தி...” - தொடர்ந்து சரமாரியாக முதுகில் அடி.
(அப்பாடா, எனக்கு இனி வேலை மிச்சம்! )

தனியாய் அமர்ந்து விஷமம் செய்து கொண்டிருக்கும் போது அருகே போனால்..வீல் என்று ஒரு கத்தல்.
கூடவே அவசர அவசரமாய்க் கையை ஆட்டிக் கொண்டு.. “பை பை டாட்டா...”
அழுக்குத் துணிக் கூடையைத் திறந்து துணியை எடுத்து, “துணி, காய்” என்று காய வைக்கப் போகிறாள்.

”நேஹா, இது என்ன?”
”கக்காலி” (தக்காளி)

”என்னடா சாப்டே”
“பத்தச்சி” (சப்பாத்தி)

சமையலறையில் போய் சம்படங்களை உருட்டிக் கொண்டிருந்தாள்.

“நேஹா என்ன பண்ற?”
திரும்பி அழகாய்ச் சிரித்து.. “சா....ப்ட.... “
ஹையோ! என் மகளே!

23 comments:

கவி அழகன் said...

வாசிக்கும் போது குழந்தை அருகில் இருப்பது போல் உள்ளது மகிழ்ச்சி

சந்தனமுல்லை said...

/(கொசு அவ் என்று கடித்ததாம்)

“பத்தச்சி” (சப்பாத்தி)
/

:-)) சோ க்யூட்!

மாதவராஜ் said...

இப்படி மழலையில் நனைந்து கொண்டே இருக்க எவ்வளவு சுகமாய் இருக்கு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\என்னடா சாப்டே”
“பத்தச்சி” (சப்பாத்தி)//
சத்தங்களை இடம்மாத்தி போடறது அங்கயும் நடக்குதா..
எங்கவீட்டுல நடக்கறத முன்னாடி இப்படித்தான் எழுதி இருந்தேன்..

பைக் - கைப்
காஜு- ஜாகூ :))

அம்மாக்களுக்கு மட்டும் அது என்ன என்று கண்டிப்பாக தெரிஞ்சுடும்..

gulf-tamilan said...

/“சா....ப்ட.... “/
cute!!!

adhiran said...

simple, direct and true expresions are the basic of great litrature. you have that kind of write up. nice to read. thanks.

sathishsangkavi.blogspot.com said...

குழந்தையுடன் இருப்பது போல் ஒர் அனுபவம்....

☀நான் ஆதவன்☀ said...

:))

//
அம்மாக்களுக்கு மட்டும் அது என்ன என்று கண்டிப்பாக தெரிஞ்சுடும்..//

கொடுத்து வைத்தவர்கள்!

Radhakrishnan said...

பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கொஞ்சிப்பேசி மகிழும்படியான குழந்தை கால வாழ்க்கையை எங்களையும் உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாய் மதித்து சொல்லும் விதத்திற்கும், அதன் மூலம் நாங்கள் அடையும் மகிழ்ச்சிக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நேஹா என்ன பண்ற?”
திரும்பி அழகாய்ச் சிரித்து.. “சா....ப்ட.... //

நேஹாவை ஒரு கடி கடிக்கனும் போல இருக்கே :))))

andal said...

/தனியாய் அமர்ந்து விஷமம் செய்து கொண்டிருக்கும் போது அருகே போனால்..வீல் என்று ஒரு கத்தல்.
கூடவே அவசர அவசரமாய்க் கையை ஆட்டிக் கொண்டு.. “பை பை டாட்டா...” /

சமத்து :)

காமராஜ் said...

காலமிது காலமிது என்று
சேமித்துக்கொள்ளும் தருணம்.
யாழினிய பாடல்களை.
குழந்தை...செல்லம், செல்வம்.
நேகாவுக்கு அன்பு.

அண்ணாமலையான் said...

மழலையில் நனைவதே ஒரு சுகம்தான்

பா.ராஜாராம் said...

:-))))))))))))))))))

ஹையோ என் மருமகளே!

நேசமித்ரன் said...

//ஹையோ! என் மகளே//

என்ன எழுதி என்னங்க பிரயோஜனம் ஒத்தசொல்லுல உசுர நெரப்பிட்டு நிக்குறது இவுங்களால மட்டுந்தானே முடியுது

”சம்புடம் என்ற சொல்லாட்சி” !!!!

உங்களின் வார்த்தைகள் வாழ்விலிருந்து எடுக்கப் படுகிறது மகிழ்ச்சி சகோதரி

அம்பிகா said...

\\ முத்துலெட்சுமி/muthuletchumi said...

அம்மாக்களுக்கு மட்டும் அது என்ன என்று கண்டிப்பாக தெரிஞ்சுடும்..\\

உண்மை தான்.

:-)) சோ க்யூட்! நேஹா!!!

Anonymous said...

குழந்தைகளின் சொல்லகராதி அம்மாக்கு மட்டுமே புரியும்.

:))) நேஹா டைம்ஸ் தொடர்ந்து எழுதுங்கள் :))

எல் கே said...

ungal magalin vayathu enna??? en magalum ithe pondru sorkalai pesugiral.. enakum puriya villai en manaivikum puriya vilai

அமிர்தவர்ஷினி அம்மா said...

“நேஹா என்ன பண்ற?”
திரும்பி அழகாய்ச் சிரித்து.. “சா....ப்ட.... “
ஹையோ! என் மகளே! //

:)))))

நேஹாவுக்கு சுத்தி போட்டுருங்க, கூடவே உங்களுக்கும் தான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மயில் said...

நேஹா டைம்ஸ் தொடர்ந்து எழுதுங்கள் //

ம்ம், ஆமா.

ponraj said...

மழலையில் சிரிப்பில் இறைவனை காண்போம்

அருமை!!! அருமை!!!

PONRAJ-TUTICORIN

Deepa said...

நன்றி கவிக்கிழவன்!

நன்றி முல்லை!

நன்றி அங்கிள்!

நன்றி முத்துலெட்சுமி!
உங்க வீட்லயும் இதே கதை தானா?

நன்றி gulf-tamilan!

நன்றி adhiran!

நன்றி சங்கவி!

நன்றி சூரியா!

நன்றி ராதாகிருஷ்ணன்!

நன்றி அமித்து அம்மா!
கூட்டிட்டு வரேன். நல்லாக் கடிச்சுக்கோங்க! :)

நன்றி ஆண்டாள்!

நன்றி காமராஜ் அங்கிள்!

நன்றி அண்ணாமலையான்!

நன்றி ராஜாராம்!

நன்றி நேசமித்ரன்!

நன்றி அம்பிகா அக்கா!

நன்றி மயில்!

நன்றி LK!
என் மகளுக்கு இரண்டு வயதாகப் போகிறது.

நன்றி பொன்ராஜ்!

எல் கே said...

@deepa

kitta tatta en pennin vayathuthan... avargal pechai keppathe tani inbamn. tarpoluthu en divikuttiku pidicha varthai aanaam(vendam)