Tuesday, February 23, 2010

லூஸுப்பெண்ணே! லூஸுப்பெண்ணே!!

//மொட்டை வெயிலில் வியர்வையில் ஊறித் திளைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் டிராஃபிக் போலீஸ்காரர்களைப் பார்க்கும்போதெல்லாம் நம் செலவில் இளநீர் வாங்கிக்கொடுத்து இதமாக இரண்டு வார்த்தை பேசலாமென தோன்றும். ‘லூஸூப்பயல்’ என சரியாக நினைத்து விடுவார்களோ எனும் பயத்தில் தவிர்த்து விடுவேன்.// நன்றி: செல்வேந்திரன்.

இதே போல் எனக்கும் தோன்றி இருக்கிறது. அவருக்கே "லூசுப்பயல்" பட்டம் கிடைக்குமென்றால், பெண்ணான எனக்கு என்ன பட்டம் கிடைக்குமென்று யோசிக்கவே பயமாக இருக்கிறது.

அலுவலகத்தில் பக்கத்து சீட்காரர் இருக்கையை விட்டு எழுந்திருக்கையில் காலில் ஏதோ ஒயர் சுற்றி நிலை குப்புறக் கீழே விழுந்தார். பதறி எழுந்தாலும் அவரைக் கை கொடுத்துத் தூக்கி விடக் கைகளுக்குத் தயக்கம் வருகிறது. அதில் நியாய‌மும் இருக்கிற‌து.

ஏன் இந்த‌ நிலை?

ஓர் ஆண் இதைச் செய்யும் போது அவனது மனிதாபிமானம் மட்டுமே தெரிகையில் ஒரு பெண் செய்யும் போது ஆயிரம் உள்ளர்த்தங்களும் பல்வேறு எதிர்பார்ப்புகளும் கற்பனைகளும் வருவதற்கான சாத்தியங்கள் இருப்பது வேதனையான விஷயம்.


ஒரு பெண்ணின் அருகாமை (அவள் வயது, அழகு பற்றிய கணிப்பெல்லாம் அவரவர் தனிப்பட்ட விஷயம்) ஏன் ஆண்களை ஒரு தனி தளத்துக்குக் கொண்டு சென்று விடுகிற‌து?

பெண்கள் மனதிலும் சில தேவையில்லாத accessories உண்டு.
ஒரு பெண்ணாக‌த் தான் அங்கீக‌ரிக்க‌ப் ப‌டுவ‌தில், அழகு ஆராதிக்கப்படுவதில், பேதையென்று பரிவு காட்டப்படுவதில், குழந்தையென்று கொஞ்சப்படுவதிலெல்லாம் அவளுக்கு ஒரு மயக்கம் இருக்கிறது.

இது இயல்பு தானே. இதில் என்ன‌ த‌வ‌று இருக்கிற‌து என்று தான் நானும் நினைத்திருக்கிறேன். யோசித்துப் பார்த்தால், உண்மையில் அவள் அறிவுக்கு உகந்ததைச் செய்யவிடாமல் தடுப்பதும், சமூகத்தில் மதிப்பான அந்தஸ்தைப் பெற முட்டுக்கட்டையாக இருப்பதும் இந்த‌ வெட்டிப் புல்ல‌ரிப்புக‌ள் தாம்.

மேலும் அன்பு, கருணை, இரக்கம் ஆகிய குணங்கள் எல்லாம் பெண்களுக்கு இருக்க வேண்டும் ஆனால் அது அவர்களுடைய‌ குடும்பம் என்ற அளவில் குறுகியே இருக்க வேண்டும். (த‌வ‌றாக‌ப் புரிந்து கொள்ள‌ப்ப‌ட‌ நிறைய‌ சாத்திய‌க்கூறுக‌ள் இருக்கிற‌தென்று அறிந்தே இதை எழுதுகிறேன்.)

ச‌மூக‌த்தைப் பொறுத்த‌வ‌ரை இன்றும் பெண் என்ப‌வ‌ள் நுக‌ர‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒரு பொருள். அதை விட‌க் கொஞ்ச‌ம் ந‌ல்ல‌தாக‌ யோசித்தால் பாதுகாக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ஒரு பொருள். இந்த‌க் க‌ண்ணோட்ட‌ம் மாறும் போது பெண்க‌ளின் ம‌ன‌நிலையிலும் வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌ மாற்ற‌ங்க‌ள் நிறைய‌ வ‌ரும்.

20 comments:

அண்ணாமலையான் said...

வரும்.. வரனும்

DHANS said...

enakum thondriyathu ilani vangi kdukkum aavukuvasathi ilai endralum oru naal oru police kararuku lift koduthu kudika thanni koduthen appothu avar kangalil oru nandri........


matra padi neenga soliya ethuvume unmai thaan , penal endraal avagaluku kidaikum saluaigale avargalai inum mel kondu varamal irukindrana

Vidhoosh said...

:) மாறுதல் வரும். :)

Thamiz Priyan said...

பெண் என்பவர் பலவீனமானவர் என்ற கருத்தாக்கம் நம்மிடையே ஆழமாக இருக்கின்றது. அதையே தானே நம் சந்ததிகளுக்கும் போதிக்கின்றோம்? .. அது அபப்டியே வருகின்றது. நீங்களே சிறிது சுய ஓப்பீடு செய்து ஒரு பதிவு எழுதுங்கள்.. நேகா ஒரு ஆண் குழந்தையாக இருந்தால் அவரை வளர்க்கும் முறையில் ஏதும் மாற்றம் இருந்திருக்குமா? என்று

பாலாஜி சங்கர் said...

""""ஓர் ஆண் இதைச் செய்யும் போது அவனது மனிதாபிமானம் மட்டுமே தெரிகையில் ஒரு பெண் செய்யும் போது ஆயிரம் உள்ளர்த்தங்களும் பல்வேறு எதிர்பார்ப்புகளும் கற்பனைகளும் வருவதற்கான சாத்தியங்கள் இருப்பது வேதனையான விஷயம்."""

நீங்கள் சொல்வது மிகவும் சரி 

தங்கள் கருத்து நன்றாக உள்ளது 

யாசவி said...

nice and amen

Radhakrishnan said...

இந்தியாவில இருக்குற வரைக்கும் அதுவும் தமிழ்நாட்டுல இருக்கறவரைக்கும் அப்படித்தேன்! அப்படியே தமிழ்வாசனையை உலகம் பூரா எடுத்துட்டுப் போன அங்கே போனாலும் நம்ம ஆளுக அப்படித்தேன்.

நல்லதொரு சிந்தனை. அடுத்தவங்க பேசுறாங்கனு நாம என்ன நமக்குப் பிடித்த செயல்களை செய்யாம அப்படியே நிறுத்திடுறோமா? விழுந்தவர் ஆடவரோ, மகளிரோ, குழந்தையோ, முதியவரோ தூக்கி விட்டுட்டுப் பேசுங்க தீபா. மத்தவங்க பேச்சுல மனிதாபிமானம் இல்லாம இருந்தா அதைப்பத்தி கவலைப்படாதீங்க.

Anna said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். பெண்ணை ஒரு சக மனிதப்பிறவியாகப் பார்க்க/வளர்க்க‌ எமது சமூகம் முயற்சி செய்யும் வரை இது தொடரும் என்றே தோன்றுகிறது.

"ஒரு பெண்ணாக‌த் தான் அங்கீக‌ரிக்க‌ப் ப‌டுவ‌தில், அழகு ஆராதிக்கப்படுவதில், பேதையென்று பரிவு காட்டப்படுவதில், குழந்தையென்று கொஞ்சப்படுவதிலெல்லாம் அவளுக்கு ஒரு மயக்கம் இருக்கிறது."

இவ்வாறே எமது சமூகத்தில் பெண்கள் பிறந்ததில்லிருந்து வளர்க்கப்படுகிறார்கள். அவளைத் தனித்துவமாக, சுயமாகச் சிந்திக்கத்தக்கவளாக, தனது காலில் நிற்கக்கூடியவளாக, சுய மரியாதை உள்ளவளாக வளர்ப்பின் அவள் தன்னை யாரும் பேதை என்று பரிவு காட்ட வேண்டும் என யோசிக்க மாட்டாள்.

"உண்மையில் அவள் அறிவுக்கு உகந்ததைச் செய்யவிடாமல் தடுப்பதும், சமூகத்தில் மதிப்பான அந்தஸ்தைப் பெற முட்டுக்கட்டையாக இருப்பதும் இந்த‌ வெட்டிப் புல்ல‌ரிப்புக‌ள் தாம்."

Very well said!

சந்தனமுல்லை said...

சரியா சொல்லியிருக்கீங்க தீபா. அதுவும் 'நீ ரொம்ப இன்னொசன்ட் குழந்தை மாதிரி'-ன்னு சொல்லிட்டா போதும்! :-))

/யோசித்துப் பார்த்தால், உண்மையில் அவள் அறிவுக்கு உகந்ததைச் செய்யவிடாமல் தடுப்பதும், சமூகத்தில் மதிப்பான அந்தஸ்தைப் பெற முட்டுக்கட்டையாக இருப்பதும் இந்த‌ வெட்டிப் புல்ல‌ரிப்புக‌ள் தாம்./

ரொம்ப சரி!

நச்-னு சொல்லியிருக்கீங்க...

சந்தனமுல்லை said...

இந்த மனநிலைக்கு ஒரு ஆணை ஆணாகவும் பெண்ணை உடலாகவும் காணும் போக்கும், பெண்ணின் உடலைக் குறித்து அவளிடம் தோற்றுவிக்கப்படும் வெட்கமுமே காரணமாக தோன்றுகிறது.

adhiran said...

please read my blog and tell some opinion. I am your follower. so I simly ask you. I just want your opinion on my blog. thank you.

ரிஷபன் said...

என் நண்பனின் மனைவி போபாலில் வளர்ந்தவர். அவர் கேட்ட முதல் கேள்வி.. அது ஏங்க பாராட்டி கையைக் கொடுத்தா அடுத்த தடவை என்ன சொல்லி கையைப் பிடிக்கலாம்னு அலையறீங்க இங்க.. சுட்டது.

அன்புடன் அருணா said...

ரொம்பவும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் தீபா!

ராஜ நடராஜன் said...

தமிழக மனநிலையிலா அல்லது உலகளாவிய பெண்களின் நிலையிலிருந்து சொல்கிறீர்களா என்று தெரியவில்லை.

எந்த மண்ணிலும் பெண்ணின் அங்கீகாரம்,அழகு ஆராதிக்கப்படுவதிலிருந்து பெண் தப்பிப்பதில்லையென்றே நினைக்கின்றேன்.

அப்புறம் கூர்ந்து கவனித்ததில் ஆண் கூட்டமாக செயல்படக் கற்றுக்கொண்டுள்ளான்.அதன் காரணம் கொண்டும் பெண்களின் தனிக்கூடு மனப்பான்மையால் பெண்ணின் ஆளுமை உலகளாவிய நிலையில் தெரியாமல் போய்விடுகிறது.

அம்பிகா said...

V.Radhakrishnan said... \\விழுந்தவர் ஆடவரோ, மகளிரோ, குழந்தையோ, முதியவரோ தூக்கி விட்டுட்டுப் பேசுங்க தீபா. மத்தவங்க பேச்சுல மனிதாபிமானம் இல்லாம இருந்தா அதைப்பத்தி கவலைப்படாதீங்க.\\
:-}}
மனிதாபிமானத்துக்கு பின் தான் மற்றதெல்லாம்.

/யோசித்துப் பார்த்தால், உண்மையில் அவள் அறிவுக்கு உகந்ததைச் செய்யவிடாமல் தடுப்பதும், சமூகத்தில் மதிப்பான அந்தஸ்தைப் பெற முட்டுக்கட்டையாக இருப்பதும் இந்த‌ வெட்டிப் புல்ல‌ரிப்புக‌ள் தாம்./

அர்த்தமுள்ள வரிகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா எழுதி இருக்கீங்க தீபா..

selventhiran said...

நீங்கள் ஒரு மயக்கம் என்கிறீர்கள். நான் பெரு மயக்கம் என்கிறேன். பெண் நம்மைப் போலவே இப்பழுதடைந்த பூமியில் வாழத் தலைப்பட்டிருக்கும் சக உயிரி். இதில் உயர்வு தாழ்வு வேற்றுமைகள் என்ன வேண்டி கிடக்கிறது என்று என் ஆணாதிக்கம் தலைதூக்கம் சமயங்களிலெல்லாம் மெள்ள சொல்லிக் கொள்வதுண்டு.

Romeoboy said...

\\ச‌மூக‌த்தைப் பொறுத்த‌வ‌ரை இன்றும் பெண் என்ப‌வ‌ள் நுக‌ர‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒரு பொருள். அதை விட‌க் கொஞ்ச‌ம் ந‌ல்ல‌தாக‌ யோசித்தால் பாதுகாக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ஒரு பொருள்.//

உண்மையான வரிகள்

ponraj said...

மனதளவில் யோசிக்கவைத்த பதிவு!!!

//மேலும் அன்பு, கருணை, இரக்கம் ஆகிய குணங்கள் எல்லாம் பெண்களுக்கு இருக்க வேண்டும் ஆனால் அது அவர்களுடைய‌ குடும்பம் என்ற அளவில் குறுகியே இருக்க வேண்டும்.//

//ச‌மூக‌த்தைப் பொறுத்த‌வ‌ரை இன்றும் பெண் என்ப‌வ‌ள் நுக‌ர‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒரு பொருள். அதை விட‌க் கொஞ்ச‌ம் ந‌ல்ல‌தாக‌ யோசித்தால் பாதுகாக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ஒரு பொருள்.//

இந்த நிலைமை என்று மாறும்????

அமுதா said...

/*சமூகத்தில் மதிப்பான அந்தஸ்தைப் பெற முட்டுக்கட்டையாக இருப்பதும் இந்த‌ வெட்டிப் புல்ல‌ரிப்புக‌ள் தாம்*/
நல்லா சொன்னீங்க...


/*இந்த‌க் க‌ண்ணோட்ட‌ம் மாறும் போது பெண்க‌ளின் ம‌ன‌நிலையிலும் வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌ மாற்ற‌ங்க‌ள் நிறைய‌ வ‌ரும்.
*/
மாற வேண்டும். ஆனால் ப ஊடகங்களைப் பார்த்தால் எனக்கு வரும் மாற்றம் கூட மீண்டும் மாறி விடுமோ என்று தோன்றும்.