விடிய விடிய எங்கள் சிரிப்பையும் பேச்சையும் எதிரொலித்த விடுதி அறையையும்,
காய்ந்து போன ரொட்டிகளும் உருளைக்கிழங்கு குர்மாக்களும் மணத்த மெஸ்ஸையும்,
எங்கள் காட்டுக் காட்டுக் கத்தல்களை அஞ்சா நெஞ்சுடன் தாங்கிக் கொண்ட ஆர்க்கெஸ்ட்ராவையும்,
கலவரத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து உதட்டைப் பிதுக்கிக் கொண்ட தேர்வுக் கூடங்களையும்,
ஏனென்றே தெரியாமல் மைதானத்தைச் தலை தெறிக்க ஓடுவது போல் என்னையும்,
இத்தனை வருடங்களாக நூறு முறையாவது கனவுகளில் பார்த்திருப்பேன்.
என் பதின்ம வயதின் முக்கியமான நான்கு ஆண்டுகளை நான் கழித்த இடத்துக்குக் கடைசியாகச் சென்றது, மதிப்பெண் சான்றிதழ் வாங்கத் தான். அதன் பிறகு எத்தனையோ தீபாக்களையும் கவிதாக்களையும், பாலமுருகன், சக்திவேல்களையும் உருவாக்கி விட்டுக் கம்பீரமாய் நிற்கும் என் கல்லூரியையும் பேராசிரியர்களையும் மீண்டும் ஒரு முறை நாளை காணப் போகிறேன்.
படபடப்பாக இருக்கிறது. சொல்லத் தெரியாத சிலிர்ப்பாகவும்!
நேஹாவை அழைத்துச் செல்ல மிகவும் விரும்பினாலும் நடைமுறைச் சிக்கல்களால் முதன் முறையாக அவளை விட்டுச் செல்கிறேன். அவள் அப்பாவுக்கும் All the best சொல்லுங்கள்! :-)
13 comments:
நீங்கள் GCE Tirunelveli , civil department ? கண்டிப்பா திருநெல்வேலி பொறியியற்கல்லூரி . பாலமுருகன் சார் இப்போ GCT ல இருக்கார் .
வாழ்த்துக்கள் :)
//ஒருவரை ஒருவர் பார்த்து உதட்டைப் பிதுக்கிக் கொண்ட தேர்வுக் கூடங்களையும்,//
தேர்வுக்கூடங்கள் - அப்போதைய பார்வைக்கும் இப்போதைய பார்வைக்கும் வித்தியாசமாய் - பயம் என்ற போதை தெளிந்திருக்கும் - சென்று வந்து கூறுங்கள் அனுபவத்தினை :)
உங்க ஆசைப்படியே all da best
ஹை... கல்லூரிக்கு போறீங்களா? என்ன காலேஜ்? நிச்சயம் சந்தோஷமான விஷயம் இல்லையா? வந்து எப்படி இருந்ததுனு சொல்லுங்க
ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே..!! :-))
/தெரியாமல் மைதானத்தைச் தலை தெறிக்க ஓடுவது போல் என்னையும்/
நிறைய சொல்ல முடியாம விக்கிக்கிட்டு இருக்கற ஃபீலிங்ஸ் தெரியுது!! Happy re-union!
நல்ல விஷயம் போய் பாருங்க.
கல்லூரி எங்கேயிருக்குன்னு சொல்லவேயில்லையே.
Deepa madam நீங்க ஏன் என்னுடைய கமெண்ட் பப்ளிஷ் பண்ணலன்னு தெரியல . என்னோட ப்ளாக் வேற . இன்று அதில் எதோ பிரச்னை என்னால அத ஓபன் பண்ண முடியல . நீங்க படிச்ச அதே காலேஜ்ல அதே பவானி,அமராவதி விடுதியில் அதனை ஆட்டம் போட்டு வந்தவளே . அதே பாலமுருகனிடமும், சக்திவேலிடமும் Mechanics , Physics படிச்சு வந்தவள்தான் நான் . நான் படித்த அதே கல்லூரி என்றவுடன் மகிழ்ச்சியில் காலேஜ் பத்தி கேட்டேன் . தவறா இருந்தா மன்னிச்சுடுங்க . நான் 2007 civil pass out from GCE, Nellai.
அடடே!
போயிட்டு வந்து ஆட்டோகிராப்பை பதிவிடுங்க :)
என்மேல இப்போதான் நம்பிக்கை வந்ததா மேடம் ? நன்றி . நான் மதார் , என்னோட ப்ளாக் சொல்லத் துடிக்குது மனசு . இன்னிக்கு காலைல இருந்து என்னால ஏன் ஜிமெயில் , ப்ளாக் ஓபன் பண்ண முடியல . http://mathar-itsallaboutmine.blogspot.com என்னோட URL . காலேஜ் ல என்ன விஷேசம்? alumini meet ?
நன்றி Manju!
நான் கோவையில் படித்தேன். நீங்கள் நெல்லையில் படித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
பாலமுருகன் சக்திவேல் என்ற பெயரில் எங்கள் கல்லூரியிலேயே நிறைய பேர் உண்டு. உங்கள் கல்லூரியிலும் இருந்ததில் என்ன வியப்பு?
கவனக் குறைவால் உங்கள் முதல் கமெண்டை வெளியிடத் தவறிவிட்டேன். ஸாரிம்மா.
போயிட்டு வந்து சொல்லுங்க!
என் கல்லூரிக்கு அதே அறையில் போய் உட்கார்ந்தபோது..
எக்ஸாம் பயம் இல்லாமல் நிம்மதியாக இருந்தது.
வாழ்த்துகள்.
Post a Comment