விழ விழ சுகமாகத் தான் இருக்கிறது
காற்றில் மிதப்பது போல்,
எடையெல்லாம் இழந்தது போல்
தரையில் மோதிச் சிதறும் நொடி தான் உறைக்கிறது வீழ்ச்சியின் வலி!
ஆனாலும்..
யாரும் பார்க்கவில்லையே என உறுதி செய்து எழுந்து கொண்டே...
மீண்டும் இடம் பார்த்து விழவே விழைகிறது மனம்
14 comments:
அருமை!
விழக்கூடாது என்று எச்சரிக்கை கேட்டாலும், விழவே விரும்புகிறோம்.
அருவியை யாராவது நீர்வீழ்ச்சி என்றால் பதைக்கிறது மனம் என்னும் விக்கிரமாதித்தியனின் கவிதை ஞாபகத்துக்கு வருகிறது.
அதானெ இயல்பு..?
மீண்டும் இடம் பார்த்து விழவே விழைகிறது மனம்]]
அட ...
---------------
ஆனாலும்..
யாரும் பார்க்கவில்லையே என உறுதி செய்து எழுந்து கொண்டே]]
வீழ்ந்த வீழ்ச்சியைவிட இந்த சூழ்ச்சி தான் அவசியமாக வருது அதுவும் உடனே ...
மிகச்சாதாரணமாகச் சொன்னது போலத் தோன்றும்.
சுழி வரிகள்.மோதிச்சிதறும் வலிகள்.
கவிதைக்குள் திரும்பத்திரும்ப இழுக்கிறது. அருமை தீபா.
:-)) நல்லாருக்கு தீபா..
காமராஜ் அண்ணாவின் பின்னூட்டம் இன்னொரு கவிதையாவே இருக்கு!
விழ விழத்தான் வெற்றி அதிகமாக கிடைக்கும்...
உமது வரிகள் அழகாகவும், ஆழமாகவும் இருக்கிறது...
:)
நல்லாருக்குங்க..
/*ஆனாலும்..
யாரும் பார்க்கவில்லையே என உறுதி செய்து எழுந்து கொண்டே...
மீண்டும் இடம் பார்த்து விழவே விழைகிறது மனம்*/
:-)
:) சறுக்கு விளையாட்டுனாலே அப்படிதாங்க.
யாராவது பாத்தாதான் வலி அதிகமாகும்.
யதார்த்தத்தை.... சொல்லும் சறுக்கு மனதிற்கு வாழ்த்துக்கள்.
அழகு.சுழி!
அருமை தீபா.
Post a Comment