Sunday, February 7, 2010

ஜன்னல்கள்

ஜன்னல்கள் தான் எத்தனை வகை?

விசிறி மடிப்புடன் அழகாகப் பூச்சீலைகள் போர்த்தி
காற்றில் படபடக்கும் சீலைகளின் வழியே எட்டிக் கொஞ்சம் பார்க்கலாம்.
இரும்புக் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைய முடியாது.

அடர்ந்த நிறமுள்ள ஜன்னல்கள், முன் நின்றால் இருட்டாக முகம் தெரியலாம். உள் இருப்பது, ஊஹூம்!

இருக்குமிடம் தெரியாமல் ரகசியமாய்ச் சில ஜன்னல்கள்;
நீ செல்லுமிடமெல்லாம் வேவு மட்டும் பார்க்கும்.

புதிர் போலச் சில ஜன்னல்கள், ஆர்வத்தைத் தூண்டி உள்ளே இழுத்துப் போடும். விழுந்தால் எழுவதென்பதே முடியாது.

ஏதோ ஒரு சில ஜன்னல் தான் அருகே சென்றதுமே அகலத் திறக்கும். உள் இருக்கும் ஒளியை வெளியெங்கும் பரவச்செய்து, உன் முகமும் காட்டி உள்முகமும் காட்டும்.

18 comments:

பா.ராஜாராம் said...

நல்ல வெளிச்சமும்,காற்றும் தீபா.திறந்த ஜன்னலில்...

கையேடு said...

ஆஹா.. என்ன சொல்றதுன்னு தெரியலைங்க.

பலமுறை வாசித்துவிட்டேன், ஒவ்வொரு முறையும் புதிய காட்சியுடன் திறக்கிறது.

ஜன்னல்கள் எப்போதும் நெருக்கமானவை..
(அவகாசமும் விருப்பமும் இருந்தால்)
http://kaiyedu.blogspot.com/2007/10/blog-post_17.html

அண்ணாமலையான் said...

நல்ல நாலு விஷயம் உள்ளே வர உதவுது..

sathishsangkavi.blogspot.com said...

சொல்லிய விதம் அழகு....

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லாருக்கு தீபா...கடைசி வரிகள் கவர்ந்தன!

மாதவராஜ் said...

அழகாகவும், அர்த்தமாகவும் சொல்லியிருக்கிறாய்.

இன்னும் கூட ஜன்னல்கள் பல இருக்கின்றன.

மூடியே இருக்கும் ஜன்னல்கள்,
திறந்திருந்தாலும், வலையடித்த ஜன்னல்கள்,
உள்பக்கமாக திறக்கும் ஜன்னல்கள்,
வெளிபக்கமாக திறக்கும் ஜன்னல்கள்,
யோசித்தால் நிறையவே வருகின்றன.

ஆனால் ஜன்னல்கள் வழியாக வீடுகள் சுவாசித்துக் கொண்டு இருக்கின்றனவாம்!
:-))))))

காமராஜ் said...

எத்தனை ஜன்னல்கள் இருந்தாலும் உள்ளே ஒளியும் காற்றும் உலாவ விடவில்லையென்றால்.
அது சுவரில் விழுந்த ஓட்டை.
கடைசிச் சன்னலே சன்னல்.

அம்பிகா said...

தீபா,
பாதுகாப்புக்காக மூடியே வைத்தாலும்,
கடைசி ஜன்னல் மட்டுமே அழ்கானது.

☀நான் ஆதவன்☀ said...

//சிறு முயற்சி//

இது சிறுமுயற்சியா?

ரொம்ப நல்லா இருக்குங்க தீபா.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஒவ்வொரு ஜன்னலும் ஒவ்வொரு அர்த்தத்தைத் தருகிறது. அழகாக சொல்லியிருக்கீங்க தீபா..

Dr.Rudhran said...

beautiful

கவி அழகன் said...

இருக்குமிடம் தெரியாமல் ரகசியமாய்ச் சில ஜன்னல்கள்;
நீ செல்லுமிடமெல்லாம் வேவு மட்டும் பார்க்கும்.

Nice nice nice words

ponraj said...

அருமையான பகிர்வு!!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இருக்குமிடம் தெரியாமல் ரகசியமாய்ச் சில ஜன்னல்கள்;
நீ செல்லுமிடமெல்லாம் வேவு மட்டும் பார்க்கும். //

:))

சாந்தி மாரியப்பன் said...

//ஏதோ ஒரு சில ஜன்னல் தான் அருகே சென்றதுமே அகலத் திறக்கும். உள் இருக்கும் ஒளியை வெளியெங்கும் பரவச்செய்து, உன் முகமும் காட்டி உள்முகமும் காட்டும்//

அருமை.. அழகு!!!!

Radhakrishnan said...

ஜன்னல்கள் காதலின் ஓர் அடையாளம்.

அன்புடன் நான் said...

ஜன்னல்.... மனதையும் திறக்கிறது.

Unknown said...

அழகாய், அர்த்தம் பொதிந்ததாய், மொத்தத்தில் ஜன்னல் ரொம்பப் பிரகாசமாய்...

அருமை தீபா.