அவன் அழகான பட்டுக்கைக்குட்டை ஒன்று வாங்கி வந்தான்.
வெறுமையாக் இருந்த அதில் பூப்பின்னல் போட்டால் அழகாய் இருக்குமே என்று அவள் எம்ப்ராய்டரி போட ஆரம்பித்தாள்.
வண்ண வண்ண நூல் கோர்த்து, அழகழகான கோட்டோவியம் வரைந்து, அதன் மேல் பொறுமையாக ஊசியைச் செலுத்தி- ஒவ்வொரு விதமாக ஊசி துளைத்து வெளிவரும் போதும் ஒவ்வொரு விதமான வந்தது - மிக லாகவமாகப் போட்டுக் கொண்டிருந்தாள் பூத்தையல். அழகான வடிவம் ஒன்று முற்றுப் பெறும் நேரம் நூல் தீர்ந்து போனது. பொறுமையுடன் கத்தரித்து, முடிச்சிட்டு, மீண்டும் நூல் கோர்த்து..அப்பப்பா...ஒரு வழியாக முடித்து நிமிர்ந்த போது மூன்று மணி நேரமாகி இருந்தது. மிருதுவாக இருக்க வேண்டுமென்று ஸாடின் தையலாகவே போட்டிருந்த பூவிதழ்களைத் தடவிப் பார்த்தாள்; பெருமையும் பூரிப்புமாக இருந்தது.
அவன் பார்வை படும் இடத்தில் மடித்து வைத்தாள். பார்த்தவுடன் பூரிப்பான் என்று.
அவன் வந்தான். கைக்குட்டையை எடுத்துப் பார்த்து, என்ன இது ஒரே சிக்கலும் முடிச்சுமா? கையை வெச்சுக்கிட்டுச் சும்மா இருக்க மாட்டியா? இதை எப்படி உபயோகிக்கறது; உறுத்தாதா? அழகான கைக்குட்டை பாழாப்போச்சே”
கோபமும் ஏமாற்றமுமாய் வந்தது அவளுக்கு. ’சே, அவசரப்பட்டுட்டோமோ! பார்த்துப் பார்த்து செஞ்சோமே...’
பதட்டத்துடன் அருகே போனவளுக்குத் துணுக்கென்றது.
அவன் பார்த்துக் கொண்டிருந்தது எம்ப்ராய்டரியின் பின்பக்கத்தை!
அவள் ஒன்றும் பேசாமல் திரும்பிச் சென்று விழுந்து விழுந்து சிரித்தது ஏனென்று அவனுக்குப் புரியவே இல்லை.
13 comments:
அனுபவம்?
ரசித்தேன்! :-)
தீபா பட்டைப் போல் அழகாக இருக்கிறது இந்தப் பதிவு.....
வாழ்க்கையோட பல சிக்கல்களை, அனுபவங்களை, யதார்த்தத்தை 'நச்'சுனு சொல்லியிருக்கீங்க :)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
நன்றி அண்ணாமலையான்!
இல்லை.
நன்றி முல்லை!
நன்றி சங்கவி!
நன்றி பைத்தியக்காரன்!
வாழ்வின் உள்ளார்ந்த விசயங்களை சொன்னது நன்றாக உள்ளது
அருமையான சொற்சித்திரம். ரசித்தேன்.
Cluster of "images"
:)
அருமை. பின்னல்களை எந்தப் பக்கத்திலிருந்து பார்க்கிறோம் என்பதிலும் இருக்கிறது வாழ்க்கை.
இப்படித்தான் பலசமயம் மனிதர்களையும் தவறாகப் பார்க்கிறோம் இல்லியா?
paarvai kolaru . siriththu vitu ponal vambu illai. sandaikku ponaal thaan pirachchanai. anbu ethirparkaathu. ithu ponre sirikkum. nanraai irukkirathu.
சிறுகதையா இருந்தாலும், நிறைய அர்த்தம் இருக்கு.
வாழ்வின் எதார்த்தம் சொன்ன விதம் எத்தனை அழகு. சிறந்த வாசகர்கள் மிகச் சிறந்த எழுத்தாளர்களாக பரிணாமிக்கிறார்கள்.
Post a Comment