Tuesday, February 2, 2010

என்ன பேசுவது?

என்றோ கூடப் படித்த தோழியை
காதல் சொல்லித் தோற்றவனை
நெருங்கிப் பழகிப் பின் சண்டையிட்டுப் பிரிந்தவளை
பிரசவம் பார்த்த டாக்டரை
ரோல்மாடலாக இருந்த ஆசிரியரை
தினமும் கனவில் பார்ப்பதால்
என்றாவது சந்தித்தால் என்ன பேசுவது?

16 comments:

வடுவூர் குமார் said...

உங்க‌ளையெல்லாம் நினைத்து இந்த‌ மாதிரி வலைப்ப‌திவு எழுதியிருக்கேன் என்று சொல்லிவிட‌ வேண்டிய‌து தான்.
:-)

அண்ணாமலையான் said...

யோசிக்க வேண்டிய விஷயம்தான்..

சந்தனமுல்லை said...

/நெருங்கிப் பழகிப் பின் சண்டையிட்டுப் பிரிந்தவளை/
சண்டை போட்டவங்களை பார்த்தாக் கூட பேசிடலாம்..ஆனா சண்டையே போடாம பிரிஞ்சவங்களை பார்த்தாத்தான் எனக்கு என்ன பேசறதுன்னு தெரியாது!!

Dr.Rudhran said...

you need not say anything, it will be understood

☀நான் ஆதவன்☀ said...

உங்க ப்ளாக் அட்ரஸ் கொடுத்துறவேண்டியது தான். நாலைஞ்சு ஹிட்ஸ் கிடைக்கும் :) இப்பெல்லாம் நான் அப்படி தான் செய்யிறேன் :))

பா.ராஜாராம் said...

இங்கு இரண்டு கவிதைகள் தீபா.

ஒன்று உங்களுடையது.

இரண்டு,முல்லையின் பின்னூட்டம்.

துபாய் ராஜா said...

நியாயமான கேள்வி... :)

Sakthi said...

தினமும் கனவில் பார்ப்பதால்//

nalla thoongiye romba naal aachu..!

மாதவராஜ் said...

கவிதையில் ரொம்ப யோசிக்கிற மாதிரி இருக்கே... :-)))))))

தேவன் மாயம் said...

வித்தியாசமான சிந்தனைதான்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல கேள்விகளும் நல்ல நல்ல பதில்களும் :)

உங்களுக்கு எக்கச்சக்க நியாபக சக்தி போலயே..

Radhakrishnan said...

ஆஹா, என்னவொரு அற்புதமான சிந்தனை. நேரில பார்க்கறவங்கல்லாம் கனவில வராம இருக்கறவரைக்கும் பிரச்சினை இல்லை.

Deepa said...

நன்றி வடுவூர் குமார்!
இது நல்லாருக்கே.

நன்றி அண்ணாமலையான்!

நன்றி முல்லை!
ராஜாராம் பின்னூட்டம் பாத்தீங்களா?
:-)

Thank you Doctor!
Very true.

நன்றி சூர்யா!
என்ன சொல்றீங்க?

நன்றி ராஜாராம்!
அவங்க எப்போவுமே இப்படித்தான். சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டிடுவாங்க. :)

நன்றி துபாய்ராஜா!

நன்றி சக்தி!

நன்றி அங்கிள்!
(என்ன அப்படி ஒரு சிரிப்பு? சொல்லிட்டுச் சிரிங்களேன்.)
:)

நன்றி TV.இராதாகிருஷ்ணன்!
நீங்களுமா?

நன்றி தேவன்மாயம்!

நன்றி முத்துலெட்சுமி!
அய்யோ நான் ஒரு மறதி மன்னாரு :)

நன்றி இராதாகிருஷ்ணன்!
சரியாச் சொன்னீங்க.

அமுதா said...

நல்ல கேள்வி... நானும் யோசிக்கிறேன்...
சில சமயம் மெளனம் பேசும்
சில சமயம் புன்னகை பேசும்
சில சமயம் தான் வார்த்தைகள் வேண்டும்...

ராகவன் said...

Anbu Deepa,

nallayirundhadhu indha kavithai. ellaa uravukalin irudhiyilum oru kaarpulli thaan irukkiradhu, mutruppulli alla...

pirindhavar meendum serndhidum podhu azhudhal konjam nimmadhi... kaiya pidichukkittu pesaama nikkalaam. sandaiyittu pirindha ellorukkullum thirumba pesa oru vetkam kalandha aasai irukkum endru ninaikkiren...

anbudan
Ragavan

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களின் கவிதையும் ருத்ரன் சாரின் பின்னூட்டமும் ஏதோ பேசுகிறது எனக்குள்