இரவு ஒன்பதே கால் மணி. தெருவே வெறிச்சோடிக் கிடக்கிறது. வீடுகளில் டிவி சப்தம் சாப்பாட்டுத் தட்டுக்களின் சப்தம் தவிர வேறொன்றும் அதிகமாக இல்லை.
”அபி, நான் என்ன சொல்ல வரேன்னா?”
“வேண்டாம் தொல்காப்பியன்! நீங்க எதுவும்... ”
“மூனு ரூபா மிச்சமாச்சு. ஐஸ்கிரீம் சாப்டேன்! எதை வேண்டுமானாலும்...”
"The defence allocation saw Finance Minister Pranab Mukherjee increasing the pension for retired service personnel..."
"தீதி தேரா தேவர் திவானா...”
“போன காலருக்காக ஒரு அழகான பாட்டு பாத்தாச்சு இப்போ அடுத்த....”
ப்ளிஷ்! திடீரென்று நிசப்தமும் கும்மிருட்டும் சூழ்கிறது.
”அய்யோ!”
”ப்ச்! இந்த வாரத்துல இதோட எத்தனை தடவை?”
”எப்போ வருமோ..எல்லா இடத்திலயும் போயிருக்கா பாருங்க”
அரைமணி நேரம் ஆனது.
கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வீடுகளிலும் கேட்டுகள் திறக்கப் படுகின்றன. கைகளில் விசிறிகளுடன் புழுக்கத்தைப் போக்க முயன்ற படி...
“என்ன ஸார், ஃபோன் பண்ணீங்களா எம்.இ.எஸ்ஸுக்கு?”
“எங்கே ஸார், எங்கேஜ்டா இருக்கு. எடுத்து வெச்சிட்டான் போல.”
”கேபில் ஃபால்ட்டாம் ஸார். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல ஆவுமாம். இப்போத்தான் பண்ணிக் கேட்டேன்.”
ஆண்கள் ஒரு குழுவாய்ச் சேர்ந்து அரசியல், சினிமா, ஈ.பி காரர்களின் மெத்தனம் என்று பல துறைகளில் அரட்டையை ஆரம்பித்தார்கள்.
வீடு கட்டுவதற்காக ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணற் குவியல் மீது அமர்ந்து கூட்டத்தைத் துவக்கினர் பெண்கள். மேற்கூரிய டாபிக்குகள் தவிர குழந்தைகளின் படிப்பு, வீட்டினரின் உடல்நிலை ஆகியவையும் விசாரிக்கப்பட்டது இங்கே!
திடீரென்று கூண்டு திறக்கப்பட்ட பறவைகள் போல் உற்சாகம் தொற்றிக் கொள்ளத் தெருவில் இறங்கிய அந்தப் பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு இரவாவது பகலாவது?
விட்ட இடத்திலிருந்து தொடங்குவது போல் மும்முரமாக விளையாடத் தொடங்கிவிட்டார்கள்.
மண் குவியல் மேலேறி சறுக்க ஆரம்பித்தன சில வானரங்கள்.
பாண்டிக்கட்டம் வரைந்து நொண்டியடிப்பதில் ஈடுபட்டனர் இரு சிறுமிகள்.
குறுஞ்சிரிப்புடன் தாயின் இடுப்பிலிருந்து திமிறி இறங்கி அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தவழ்ந்து வந்தது சின்னக் குழந்தை ஒன்று.
“அம்மா, பாப்பாவைப் பாரும்மா, எங்க விளையாட்டைக் கெடுக்குது. தூக்கிட்டுப் போம்மா”
“அடி கழுதை. இந்த நேரத்துல என்னடி விளையாட்டு. பாப்பாவைப் பாத்துக்க” என்று அப்போது தான் மகளைக் கவனித்த மாதிரி கட்டளையிட்டு விட்டுத் திரும்ப பேச்சில் மூழ்கினார் அந்தத் தாய்.
அதற்குள் இந்தப் பக்கம் ‘தொம்’ மென்று ஒரு அம்மாவின் மேலே வந்து குதித்தார் அவரது செல்ல வானரம்.
“பிசாசே! இந்தப் பாழாப்போன கரண்ட் போனாலும் போச்சு. நமக்கு இருக்கற எரிச்சல்ல இதுங்க தொல்லை வேற..” சலித்துக் கொண்டார்.
நிலாவொளியில் அந்தத் தெருவே ஏதோ விழாக் கோலம் பூண்டது போலிருந்தது. பேச்சுச் சத்தமும், சிரிப்புச்சத்தமும், குழந்தைகளின் கூத்துக்களும்...
டிஷ்!
அணைக்கப்படாத சில டி.விக்களின் திடீர் அலறல்கள். வீடுகளில் விளக்குகள் பளிச் பளிச் சென்று எரியத் தொடங்கின.
“ஹப்பாடா” என்ற நிம்மதிப் பெரு மூச்சுக்களும் சிரிப்புக்களும். அவரவர் வீடுகளுக்குச் செல்வதற்காக எழுந்தனர்.
தொடர்ந்து சிறுவர்களும் மனமே இல்லாமல் வீட்டை நோக்கி ஓடினர்.
“வீல்” என்ற சத்தத்துடன் பேரழுகை. ஆட்கள் புடை சூழ, ஆனந்தமாகத் தெருவில் தத்தி நடை பழகிக் கொண்டிருந்த அந்தச் குழந்தைக்கு திடீரென்று இப்படி வீட்டுக்குள் திரும்ப இஷ்டமில்லை. கத்திக் கூப்பாடு போட்டது.
செல்லம் கொஞ்சி அதை ஆற்றுப்படுத்தி உள்ளே தூக்கிச் சென்ற அம்மா கதவைச் சாத்தினார்.
தெருவில் இப்போது மீண்டும் கும்மிருட்டு. நிசப்தம்.
நிலா மட்டும் தனியாக.
23 comments:
super:):):)
ரொம்ப நாளைக்கப்புறம் இன்னைத்தான் தமிழ்மணத்துக்கு வந்தேன் .. பார்த்தா உங்க பதிவு.. ஒரு curiosity லே தான் பதிவை படிக்க ஆரம்பிச்சேன்.. பதிவுகள் எல்லாமே அருமை .. வாழ்த்துக்கள்
நானும் தீபாதாங்க
அதான் தீபா - டு - தீபா ஒரு ஹலோ சொல்லலாம்ன்னு ..
வர்ட்டா..
:)
எஞ்சாய்
நன்றி ராப்!
நன்றி தீபா!
ஆகா..சூப்பர் தீபா! ;-) (எப்பூடி?!)
கதை நல்லாருக்கு தீபா...அது கதையென்பதை விட உண்மையில் அப்படித்தானே நடக்கிறது! :-)
நன்றி முல்லை!
//எப்பூடி?//
ஆமாம்! பசங்க படம் பார்த்ததன் இன்ஸ்பிரேஷன் தான் இந்தக் கதை. செம ஷார்ப்மா நீங்க!
****
நிலா மட்டும் தனியாக.
****
யாரு அந்த நிலா ?
குழந்தை அழுது அடம் பிடிப்பதுதான்
’நச்”.சிறுகதையின் கடைசி திருப்பம் போல.
சில சமயங்களில் உள்ளே வரும் போது மறுபடியும் பவர் போகும்.
எங்க ஏரியாவில் மக்கள் கரண்ட் போன கூட வெளியில் வரமட்டேங்கரங்க...ஆவ்வ்வ்...
நல்லாயிருக்கு....
நல்லாயிருக்கு தீபா.
நன்றி மணிகண்டன்!
நன்றி அமித்து அம்மா!
நன்றி ரவிஷங்கர்!
நன்றி மயில்!
நன்றி அங்கிள்!
நன்றி வித்யா!
பின்னுறீங்க யக்கா! வாழ்த்துகள்! சூப்பர் நடை! keep rocking:)
ரொம்ப அழகு ....
அருமையா எழுதிறீங்க தீபா
நன்றி தமிழ்மாங்கனி!
நன்றி விதூஷ்!
என்னது இது கதையா????
வெறும் புனைவென்று இதனை ஒத்துக்கொள்ள முடியவில்லை.
//செல்லம் கொஞ்சி அதை ஆற்றுப்படுத்தி உள்ளே தூக்கிச் சென்ற அம்மா கதவைச் சாத்தினார்.
தெருவில் இப்போது மீண்டும் கும்மிருட்டு. நிசப்தம்.
நிலா மட்டும் தனியாக//
எல்லாரும் பார்த்து பழக்கப்பட்ட விஷயம் தான் என்றாலும் நீங்கள் சொல்லியிருக்கும் விதம் அழகு.
//நிலா மட்டும் தனியாக//
ஒரு பஞ்ச் வச்சாப்பல இருக்கு. அருமை.
:)
நன்றி மணிநரேன்!
ஆமாம், கதை மாதிரி இல்லையோ?
நன்றி கைப்புள்ள!
:) nice!
நன்றி மணிப்பக்கம்!
அருமை.
nice :)
சூப்பர்
Post a Comment