Wednesday, April 1, 2009

நானும் ஒரு பட்டாம்பூச்சி!


ஆமாம். எனக்கும் பட்டாம்பூச்சி தந்து சிறகடிக்க வைத்து விட்டார் அகநாழிகை. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான் மிகவும் ரசிக்கும் பதிவராகிய அவர் மூலமாக இவ்விருதினைப் பெறுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் ஆங்கிலத்தில் வலை பதியத் தொடங்கி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றன. அது ஒரு மாதிரி தன்னந்தனியாக என் சிந்தனைகளுக்கு வடிகாலாகவும் எப்போதாவது யாராவது இரண்டொரு பின்னூட்டங்கள் இடும் பாலையாகவே இருந்தது.


தன்னை வலையுலகத்துக்கு நான் அழைத்து வந்ததாக திரு. மாதவராஜ் குறிப்பிட்டுள்ளார். நான் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்று மட்டுமே சொன்னேன். ஆர்வத்துடன் அதில் ஈடுபட்டு, தமிழ் யூனிகோட் பதிவு, திரட்டிகள், டெம்ப்ளேட், இன்ன பிற widgets, என்று அனைத்தையும் எனக்கு அன்புடன் அறிமுகப் படுத்தித் தமிழ் வலையுலகச் சோலையில் என்னை உலவ விட்ட அவருக்கு நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன்.


சரி, இப்போது நான் இவ்விருதினைத் தர விரும்புவது:
யாத்ரா


http://yathrigan-yathra.blogspot.com/2009/03/blog-post_24.html
மானுட புரிதலை நோக்கி இவரது பயணம் தெளிந்த நீரோடை போன்ற கவிதைகள் வழியாகச் சென்று கொண்டிருக்கிறது.
இணைய இதழ் உயிரோசையில் இவரது பல கவிதைகள் வெளி வந்துள்ளன.மிகவும் நுட்பமான உணர்வுகளைப் ரத்தினச் சுருக்கமாகச் சொற்களில் வடிப்பது ஒரு தனிக்கலை. அது யாத்ராவுக்கு அழகாகக் கை வந்திருக்கிறது.
எனக்கு மிகவும் பிடித்த இரண்டு (சாம்பிளுக்கு இங்கே)
இரக்கப்படாதீர்கள்

தனிமையிலேயே விட்டுவிடுங்கள்என் பேரன்பும் மரக்கிளையினின்று சுழன்றபடி உதிரும் பழுப்பு இலை போன்ற என் பிரிவும் கொன்றுவிடக்கூடும் உங்களை.


இது இன்னொரு இவள்
அழும் குழந்தையைதூக்கி கொஞ்சி ஓயப்படுத்தியபடி அது தான் நான் வந்துவிட்டேன்அல்லவா அழக்கூடாது எனவாசலுக்கு வருகிறாள், நின்றது மழை.

இவரது கவிதை மலர்களில் பட்டாம்பூச்சி ஆசையோடு அமர்ந்து தேனருந்தட்டும்.

கிருஷ்ணபிரபு

http://online-tamil-books.blogspot.com/

வலையுலகம் தந்த மிகச் சிறந்த வரம் நம் எல்லோருக்கும் எழுதும் ஆர்வமும் வாசிக்கும் ஆர்வமும் வந்தது தான். எழுதுவதற்கு இப்போதைக்கு இந்தக் களம் போதுமானதாக இருந்தாலும் வாசிப்பு மட்டும் இணையத்தோடே நின்றுவிடக் கூடாது. அதற்கு எல்லையே இல்லை.
வாசகர்களின் வாசிப்பு அனுபவத்தை விரிவு படுத்தும் விதமாக தன் ரசித்த பல தரப்பட நல்ல நூல்களை அறிமுகம் செய்து வைக்கிறார் கிருஷ்ணப்பிரபு. தலை சிறந்த அமெரிக்க எழுத்தாளரான சார்ல்ஸ் டிக்கன்ஸின் ஆலிவர் ட்விஸ்ட் முதல் இனப்பிரச்னை குறித்து பா. இராகவன் எழுதிய நிலமெல்லாம் இரத்தம் வரை பரந்து பட்ட பல நூல்களின் அறிமுகம் இவரது பக்கங்களில்.
”தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு”
என்ற குறளுக்கு ஏற்ப ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் சிறந்த எழுத்துக்களை வெளிக் கொணரும் என்பதில் ஐயமில்லை. வாசிக்கும் வழக்கம் இல்லாமலே சிறப்பாக எழுத வந்து விட்டவர்கள் கூட இப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நல்லது.


கோமதி

http://nilaraja.blogspot.com/
தாய்மை என்பது எவ்வளவு அற்புதமானது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். ஏனோ அவளைப் பற்றி அழ்காகக் கொஞ்சலாகப் பதிவெழுதுவது எனக்குக் கைகூடுவதில்லை. ஆனால் பிற அம்மாக்கள் எழுதும் தங்கள் மழலைகளின் குறும்புகளை விரும்பிப் படிப்பேன். அமித்து அம்மா, சந்தன முல்லை ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
நிலாக்காலம் அத்தகைய ஒரு ரம்மியமான பக்கம். கோமதி தன் மகள் நிலாக் குட்டியின் ஒவ்வொரு அசைவையும் அழகாகப் பதிகிறார்கள். சுகானுபாவம். தாய்மையின் விகசிப்பையும் பூரிப்பையும் அவர்களின் எழுத்துக்களில் பார்க்கும் போது ஆண்கள் பொறாமைப் படுவார்கள்! தங்களால் தாய் ஆக முடியாதே என்று!
அவருடைய குட்டி நிலா விளையாடுவதற்காக ஒரு பட்டாம்பூச்சி!


வாழ்த்துக்கள் யாத்ரா, கிருஷ்ணபிரபு, கோமதி


அப்புறம், விகடன் குழுமத்துக்கு மிக்க நன்றி. என் பதிவை “குட் ப்ளாக்” ஆக அறிவித்ததற்கு. (நேற்று home page - ல் இருந்தது. இன்று தூக்கிப் பரணில் வைத்து விட்டார்கள்.)

http://youthful.vikatan.com/youth/bcorner.asp13 comments:

நட்புடன் ஜமால் said...

இரண்டுக்கும் வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் அனைவருக்கும்!!

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துக்கள்.

ஆ.சுதா said...

வாழ்துக்கள்
பட்டாம்பூச்சி பெற்ற அனைவருக்கும்

அகநாழிகை said...

தீபா,
குட் பிளாகில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்,

பட்டாம்பூச்சி விருது பெற்ற சக பதிவர்களுக்கும்
என் அன்பான வாழ்த்துக்கள்.

யாத்ரா said...

பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய தீபா அவர்களுக்கு மிக்க நன்றி, தங்களின் பட்டாம்பூச்சி விருதில் மிகவும் மகிழ்ந்து நெகிழ்ந்திருக்கிறேன், தொடர்ந்த அன்பு மழையில் நனைந்துகொண்டிருக்கிறேன் வலையுலகிற்கு வந்த இந்த ஒரு மாத காலமாக. இந்த அன்பையெல்லாம் எப்படி எதிர்கொள்வது என்று அறியாது, இதற்கெல்லாம் எப்படி கைம்மாறு செய்யப்போகிறேன் என்று தெரியாமலும் திகைத்த வண்ணமிருக்கிறேன். மனம் நிறைந்த மகிழ்ச்சியில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை, தங்களின் அங்கீகாரத்திற்கும் பாராட்டுக்கும் அனேக நன்றிகள்.

ராம்.CM said...

அனைவருக்கும் வாழ்த்துகள்

தமிழன்-கறுப்பி... said...

மொத்தமாய் வாழ்த்துக்கள்...

Jackiesekar said...

எல்லாருக்கும் ஒரு ராயல் சல்யுட்

Suresh said...

இரண்டுக்கும் வாழ்த்துகள் :-) நானும் அந்த பதிவை படித்து :-)அனுபவித்தேன்

Unknown said...

வணக்கம் திவ்யா,

நீங்கள் அளித்த விருதுக்கு மகிழ்ச்சி. எனது புதிய பதிவில் அதைப் பற்றிய குறிப்பு எழுதியுள்ளேன். தவறாமல் பார்க்கவும்.

http://online-tamil-books.blogspot.com/2009/04/mouna-puyal-vaasanthi.html

அமிர்தவர்ஷினி அம்மா said...

விருது பெற்ற உங்களுக்கும், வாங்கிய அனைவருக்கும்!!

வாழ்த்துகள்