(என்று என் கண்களுக்குப் படுகின்றன... உங்களுக்கு?)
காதல் வழியும் ஆணின் கண்கள்
திமிர் தெறிக்கும் பெண்ணின் கண்கள்
பெருமிதம் பொங்கும் தாயின் கண்கள்
பாசம் மின்னும் தந்தையின் கண்கள்
திருப்தியுறாத ஓவியனின் கண்கள்
கண்ணாடியை ரசிக்காத நடிகனின் கண்கள்
சற்றே பேதலித்த கவிஞனின் கண்கள்
சிந்தனை ஊறிய அறிஞனின் கண்கள்
உறக்கம் தழுவும் முதியோரின் கண்கள்
பசியாறிய உழைப்பாளியின் கண்கள்
சிறுமை கண்டு பொங்கும் கண்கள்
சிரித்து மகிழும் நட்பின் கண்கள்
கண்டிப்பும் பரிவும் சமமாய்க் கலந்த
அறிவார்ந்த ஆசானின் கண்கள்
குற்றம் உணர்ந்து வருந்தும் கண்கள்
கருணையை உணர்ந்த பிராணியின் கண்கள்
பார்க்கப் பார்க்கக் கிறங்கடிக்கும்
குறும்பு கொப்பளிக்கும் மழலையின் கண்கள்
இறுதியாக, நிச்சயமாக,
இப்பதிவைப் பொறுமையுடன் படித்த
அன்புக்குரிய உங்களின் கண்கள்
18 comments:
மொத்த கண்களும் கண்டிப்பாக வியக்கும் வரிகள்தான்
//இப்பதிவைப் பொறுமையுடன் படித்த
அன்புக்குரிய உங்களின் கண்கள் //
இதுவும் கூட....!
:))
அருமை!
உடலுக்கு சிரசு பிரதானம். அது போல், சிரசுக்கு கண்களே பிரதானம். கண்கள்தான் மனதின், ஆன்மாவின் நிலையை வெளிக்கொணரச் செய்யும் அற்புத புலன்.
அழகிய கண்களின் தொகுப்பு அருமை. அதிலும், கண்களுக்குள் நீங்கள் பகிர்ந்து கொண்ட உணர்வுகள் உயர்வு நிலை.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
அத்தனை கண்களுமே
அழகுதான். எல்லோருக்கும்
இக்கண்கள் விருப்பமானதாய் இருக்கும்
//உறக்கம் தழுவும் முதியோரின் கண்கள்
பசியாறிய உழைப்பாளியின் கண்கள்//
இக்கண்களின் சிந்தனை மெச்சதகும்.
\\காதல் வழியும் ஆணின் கண்கள்\\
இப்படி எங்கும் படித்த நினைவு இல்லை.
மிக அழகுங்க இந்த வரி.
அழகு கண்களை அழகாக சொல்லி விட்டு ...
\\இறுதியாக, நிச்சயமாக,
இப்பதிவைப் பொறுமையுடன் படித்த
அன்புக்குரிய உங்களின் கண்கள்\\
இதுவும் அருமை.
//இப்பதிவைப் பொறுமையுடன் படித்த
அன்புக்குரிய உங்களின் கண்கள்//
மக்கா...touch பண்ணிட்டீங்க!:)
கடைசி வரி ஹி ஹி ரொம்ப சரி:)
அழகா இருந்தது....கவிதை!!
கடைசி வரி..ஹி..ஹி..நீங்களும் பதிவுலகத்தோடு அதுவும் எங்களை மாதிரி மொக்கைஸ் கூட ஐக்கியமாகிட்டீங்கன்னுத் தெரியுது! :-)
//திமிர் தெறிக்கும் பெண்ணின் கண்கள்//
இது எப்படிங்க அழகு?
தைரியம் மிளிரும் பெண்ணின் கண்கள் அழகு என்றால் ஒத்துக்கொள்ளலாம் :)
நன்றி ஆயில்யன்!
உதயதாரகை!
தங்கள் முதல் வரவுக்கும் அன்பான பகிர்வுக்கும் நன்றி!
ரொம்ப நன்றி முத்து ராமலிங்கம்!
மிக்க நன்றி ஜமால்!
வாங்க தமிழ்மாங்கனி! நன்றி.
(ஹை! நல்லாருக்கே உங்க பேர்!)
வாங்க வித்யா...ரொம்ப சோதிச்சுட்டேனோ? ;-)
நன்றி முல்லை! உங்க கூட பழகிட்டேன்ல.. வேற வழி! :-))
பிரேம்குமார்!
நீங்க சொல்வது சரி தான். ஆனால் ”திமிர்” ன்னா என்னன்னே தெரியாத எனக்கு அந்தக் கண்கள் பிடித்திருக்கின்றன! :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ஓட்டு மட்டும் போட்டு விட்டு எஸ்கேப் ஆனவருக்கும் என் நன்றிகள்!
மிக எளிமையான வார்த்தைகளில், உன் கண்களில் எதெல்லாம் அழகு என்று அழகாகச் சொல்லியிருக்கிறாய்.
இந்த பரிமாணமும் சிறப்பு.
பிரேம்குமார்!
திமிர் என்பது... ’பாரதியின் நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ என்னும் திமிர். அது அழகுதான்.
நல்லா இருக்குங்க.
நன்றி அங்கிள்!
“எளிமையான வார்த்தைகள்...ம் என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது! :-(
நன்றி நர்சிம்.
நல்ல ரசிப்புதன்மைங்க உங்களுக்கு....
கவிதை நல்லா இருந்துச்சி.
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா, அமுதா!
தீபா,
பிறர் கண்களில் இவ்வளவு அழகையும் கருத்தாழத்தையும் பார்க்கும் உன் கண்கள் அனைத்திலும் மிக அழகு.
பெண்மையையும் 'பணி'வையும் மட்டுமே இணைத்துப் பார்க்கும் உலகிற்க்கு மாதவராஜ் அவர்களின் பாரதிப் பார்வை தெரியாது.
தீபு!
டச் பண்ணிட்டடா! நன்றி.
//பெண்மையையும் 'பணி'வையும் மட்டுமே இணைத்துப் பார்க்கும் உலகிற்க்கு மாதவராஜ் அவர்களின் பாரதிப் பார்வை தெரியாது.//
உண்மை தான்.
//இப்பதிவைப் பொறுமையுடன் படித்த
அன்புக்குரிய உங்களின் கண்கள் //
:)
இப்படி முடித்தது அழகோ அழகு..
Post a Comment