Tuesday, January 13, 2009

சுவ‌டுக‌ள்




எதிர்கால‌ங்க‌ளைப் ப‌ற்றிய‌ க‌ன‌வுக‌ள் எவ்வ‌ள‌வு சுக‌மோ க‌ட‌ந்து வ‌ந்த‌ கால‌த்தின் சுவ‌டுக‌ளும் அவ்வ‌ள‌வு இனிமை தான். தோல்வி, அவ‌மான‌ம், காய‌ங்க‌ள் எல்லாமே கால‌த்தின் எடைக்க‌ற்க‌ளில் பூக்களாக‌த்தான் நிறுக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌. அத‌னால் திரும்பிப்பார்க்க‌ என்றுமே கூச்ச‌ப்ப‌டுவ‌தில்லை நான்!
எனக்கு ஏன் இப்படி ஒரு மோகம் பழைய புத்தகங்கள் மீது? பழைய கடிதங்கள் மீது?ப‌டித்துப் ப‌டித்து ம‌ன‌ப்பாட‌ம் ஆன‌ க‌டித‌ங்களைக் கூட‌த் தூக்கிப் போட‌ ம‌ன‌மில்லை என‌க்கு. சிறு வ‌ய‌தில் படித்துக் கிறுக்கி, நைந்து போன கதைப் புத்தகங்கள் ப‌ல இருக்கின்றன என்றாலும் தொலைந்து போய் விட்ட காலம் கடத்திச் சென்று விட்ட ஏராளமான புத்தகங்களின் இழப்பின் ஏக்கம் இன்னும் என் நெஞ்சிலே.
ஆம். இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் சேர்த்து வைக்க‌ என்ன‌தான் இருக்கும்? உங்க‌ள் பிள்ளைக‌ள் விடுதியில் த‌ங்கிப் ப‌டிக்கிறார்க‌ளா? க‌டித‌ங்க‌ள் எழுதுங்க‌ள் மாத்மிரு முறையாவ‌து. அவ‌ர்க‌ளையும் எழுத‌ச் சொல்லுங்க‌ள்.
வீட்டை விட்டு வெளியில் த‌ங்கி வேலை பார்க்கிறீர்க‌ளா? செல்லில் ஓயாமல் பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். (புதுமை கண்டு அஞ்ச வேண்டாம்!) பெற்றோருக்கு, அண்ண‌ன் த‌ங்கை, அக்கா, த‌ம்பிக‌ளுக்கு, ந‌ண்ப‌ர்க‌ளுக்கு என‌ எப்போதாவ‌து க‌டித‌மோ வாழ்த்தோ அனுப்புங்க‌ள். ந‌ம் அன்பு இந்த‌ வெட்ட‌ வெளியில் மின்ன‌ணுச் சித‌ற‌ல்க‌ள‌க‌த் தொலைந்துவிட‌ வேண்டாம். சில‌ கால‌ங்க‌ளுக்காவ‌து பாதுகாக்கும்ப‌டி எழுத்தில் இருக்க‌ட்டும். உலகின் புகழ் பெற்ற இலக்கியங்களில் பல கடித்ங்களாகவும் நாட்குறிப்புகளாகவும் இருந்துள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். ந‌ம் ச‌ந்த‌திய‌ருக்கு அத‌ன் ம‌க‌த்துவ‌மே தெரியாம‌ல் போய்விட‌க் கூடாது.

4 comments:

மாதவராஜ் said...

தீபா!

உன் எழுத்தும், சிந்தனையும் அற்புதமானவையாக இருக்கின்றன.
அண்ணன், தம்பி, தங்கை, அம்மா, நண்பர்கள் அப்புறம் அம்மு எழுதிய கடிதங்களையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன்.படிக்க படிக்க சந்தோஷமாய் இருக்கும்.
எவ்வளவுதாம் செல்போனில் பேசினாலும், எஸ்.எம்.எஸ்கள் அனுப்பினாலும் "நலம்..நலந்தானே" என்று ஆரம்பிக்கும் கடிதங்களுக்கு இருக்கும் வசீகரம், இருப்பதில்லை.

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
லேகாவுக்கும், ஜோவுக்கும் சேர்த்துத்தான்.

Deepa said...

ந‌ன்றி uncle! உங்க‌ள் பாராட்டுக்க‌ள் ரொம்ப‌வும் ஊக்க‌ம் அளிக்கின்ற‌ன‌. உங்க‌ளுக்கும் எங்க‌ள் இனிய‌ பொங்க‌ல் ம‌ற்றும் த‌மிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்.

தேவன் மாயம் said...

உலகின் புகழ் பெற்ற இலக்கியங்களில் பல கடித்ங்களாகவும் நாட்குறிப்புகளாகவும் இருந்துள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். ந‌ம் ச‌ந்த‌திய‌ருக்கு அத‌ன் ம‌க‌த்துவ‌மே தெரியாம‌ல் போய்விட‌க் கூடாது. ///

கடிதங்கள்
அரிதாகிவிட்ட நிலையில்
உங்கள் பதிவு அருமை

Deepa said...

Thevanmayam!

த‌ங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!