Wednesday, December 31, 2008

அத்தாட்சி


"நான் என்னவோ வேண்டுமென்றே தொலைத்து விட்டதாகப் பழி போட்டாயே எல்லாம் இங்கே தான் இருக்கிறது. அறையைச் சுத்தம் செய்யும் போது கிடைத்தது; இந்தா." ஒரு கற்றை பழைய காகிதங்களை நீட்டினார் அவர். அதை வாங்கும் முன் அவரது மனைவியிடமருந்து பறித்துக் கொண்டாள் அங்கு வந்த அவரது மகள். "இதெல்லாம் என்ன? உங்கள் காதல் கடிதங்களா? நான் படித்து விட்டுத் தருகிறேன். வாங்கிக் கொண்டு ஓடும் மகளைச் சலனிமின்றி பார்க்கின்றனர் அந்தத் தம்பதியர். அது நாகரிகம் இல்லை என்று தடுக்க அவர்களுக்கு மனமில்லை. அவள் நினைவு தெரிந்து சண்டையும் மனக்கசப்புகளுமே பகிர்நது வந்த தாங்கள் கூட ஒரு காலத்தில் காதலித்து மகிழ்ந்து மற்ற பெற்றோரைப் போல் இருந்து இருக்கிறோம் என்று தங்கள் மகள் புரிந்து கொள்ள‌ இந்த நைந்து போன காகிதங்கள் உதவட்டுமே என்று நினைத்தார்கள் போலும்.

அவள் அக்கடிதங்களை வெகு நேரம் பிரிக்காமலே கையில் வைத்துப் பார்த்தபடி இருந்தாள். "எதுக்குத் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? எப்பப் பாரு சண்டை?" என்று தனது விமர்சனங்களுக்கு எப்போதும் ஆளாகும் பெற்றவர்கள் என்றாவது ஒரு காலத்தில் மனமொத்து இருந்திருப்பார்கள் என்று அறிந்து உணர்ந்து கொள்ளும் தீராத ஏக்கம் தீரப்போகிறது என்று நினைத்து வாங்கிக் கொண்டு வந்த போது இருந்த உற்சாகம் மொத்தமாக வடிந்து போய் இருந்தது. அதுவும் மறுப்பேதும் சொல்லாமல் அவர்கள் அவளிடம் தந்து விட்டது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தான் என்றுமே பார்த்திராத யாரோ அந்நியரைச் சந்திக்கப் போகும் அனுபவமாகத் தோன்றியது அக்கடிதங்கள். நிமிட நேரத்தில் அவளுக்கு அக்கடிதஙளைப் படிக்கும் ஆர்வம் சுத்தமாக அற்றுப் போனது. தான் அவர்களைப் பற்றி ஒன்றுமே அறிந்திருக்கவில்லையோ என்று கூடத் தோன்றியது.அந்த‌ர‌ங்கம் புனித‌மான‌து என்ற‌ க‌தை ஞாப‌க‌ம் வ‌ந்த‌து.
"அம்மா! சாரிம்மா. நான் எதையும் ப‌டிக்க‌ல‌. இந்தா ப‌த்திர‌மா வெச்சுக்கோ. ஆனா என்னிக்காவ‌து தூக்கிப் போடணும்னு தோணினா என் கிட்டே குடு. உங்க‌ளுக்கு இது எப்படியோ என‌க்கு இது ரொம்ப‌ முக்கிய‌ம். என்னைப் பெற்றவ‌ர்க‌ள் ஒருவ‌ரை ஒருவ‌ர் காத‌லித்து இருக்கிற‌ர்கள் என்ப‌து என‌க்கு ரொம்ப‌ முக்கிய‌மான‌ விஷ‌ய‌ம்." சொல்லிவிட்டு ந‌க‌ரும் ம‌க‌ளைக் க‌ண்ணில் நீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த‌த் தாய்.

Labels: ,

5 Comments:

At December 31, 2008 at 11:18 AM , Blogger மாதவராஜ் said...

தீபா!

புத்தாண்டில் நான் படித்த முதல் பதிவு இது!
கண் கலங்கியது.
சந்தோஷமாகவும் இருந்தது.
மிக மிக நுட்பமான பதிவு.
வாழ்த்துக்கள்.


சரி....
வலைப்பக்கம் ஏன் தலைப்பில்லாமல் இருக்கிறது?

 
At December 31, 2008 at 11:19 AM , Blogger மாதவராஜ் said...

This comment has been removed by the author.

 
At January 2, 2009 at 6:57 AM , Blogger Deepa J said...

கருத்துக்கு நன்றி uncle. வலைப்பக்கத்துக்கு நீங்களே ஒரு நல்ல தலைப்பு சொல்லுங்களேன்!

 
At January 2, 2009 at 7:00 AM , Blogger Deepa J said...

நீங்க்ள் இந்த ஆண்டில் படித்த முதல் பதிவு என்னுடையது என்பதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன் (அதனாலேயே இன்னும் நன்றாக எழுதி இருக்கலாமே என்றும் நினைக்கிறேன்!)

 
At January 5, 2009 at 6:17 AM , Blogger புதுகை.அப்துல்லா said...

உண்மை முகத்தில் அரைகின்றது. சொல்ல ஒன்றும் இல்லை.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home