Thursday, January 29, 2009

த‌லைகுனிகிறேன்

வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்கிறது.
குடிப்பதும் அரைகுறை ஆடைகளுடன் இரவு விடுதிகளில் நடனமாடுவதும் தான் நாகரிகமென்றும் இது தான் பெண் விடுத‌லை என்றும் ந‌ம்பி, பெண்களுக்கான தடைகள் எல்லாவற்றையும் மொத்தமாக வென்று விட்டதாக எண்ணி இறுமாந்திருந்த பெண்களை நினைத்தால் வேறு என்ன நினைப்பது?
அது க‌லாசார‌ப் பேர‌ழிவு என்றோ பார‌ம்ப‌ரியமாகப் பெண்களுக்குரிய லட்சணங்களை இவர்கள் துறந்து விட்டார்கள் என்றோ வருந்த வில்லை. எந்த நாட்டில் நாம் இருக்கிறோம், பெண்கள் பற்றிய பார்வை இங்கு எப்படி இருக்கிறது? பில்கிஸ் பானோவுக்கும், ப்ரியங்கா போட்மாங்கேவுக்கும், ஸ்மாலின் ஜெனிட்டாவுக்கும் இன்னும் நூற்றுக்கணக்கான இளம் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் நாள் தோறும் அநீதிகள் இழைக்கப்ப்ட்டு வருகிற சமுதாயத்தில் பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால் தங்கள் பாதுகாப்பையும் கௌரவத்தையும் எந்த நம்பிக்கையில் காற்றில் பறக்க விட்டனர் இப்பெண்கள்?
செருப்பால் அடிக்கத் தகுந்த அந்த அமைப்பைப் பற்றி நாம் பேசக்கூட வேண்டாம். அவர்களை சட்டம் பார்த்துக் கொள்ளும். அவர்கள் எதிர்பார்ப்பது விளம்பரம் தான். அதை இந்த‌ச் சிறு வலைப்பூவின் மூலம் கூடக் கொடுக்க‌ நான் விரும்பவில்லை. ஆனால் அவ‌ர்க‌ளின் ந்ட‌த்தையை அவ்வ‌ள‌வு சாம‌ன்ய‌மாக‌ புற‌ந்த‌ள்ளி விட‌ முடியாது. இப்படிப்பட்ட அத்துமீறல்களால் இரு அநியாயங்கள் நடக்க வாய்ப்புண்டு: நியாய‌மான‌ சுத‌ந்திர‌த்தைக் கூடப் பெறப் போராடும் பெண்கள் மேலும் கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்ட அந்த வகைப் பெண்கள் (க்ளப் கலாசார வகை) தங்களுக்குக் கிடைத்த அநுதாபங்களை வைத்துத் தங்கள் ந‌டத்தைக்கு நியாயம் தேடப் பார்ப்பார்கள்.

28 comments:

மாதவராஜ் said...

தீபா!

ரொம்ப நிதானமாகவும், முதிர்ச்சியோடும் இந்தப் பிரச்சினையை பார்த்திருக்கிறாய். இந்த அமைப்பில், இருக்கும் சூழலில் என்னென்ன விளைவுகள் ஏற்படுத்தக்கூடும் என்பதை ஆராய்ந்திருப்பது சரியே. தொடர்ந்து நிறைய எழுதணும்...

Deepa said...

நன்றி Uncle. அப்படியே ஆகட்டும்!

Anonymous said...

):
என்ன சொல்லுவது என்றுதான் புரியவில்லை

vijayakumaar said...

Good and Nice Deepa

Deepa said...

Thanks Vijayakumaar! Pls keep visiting.

தமிழ். சரவணன் said...

//இது தான் பெண் விடுத‌லை என்றும் ந‌ம்பி, பெண்களுக்கான தடைகள் எல்லாவற்றையும் மொத்தமாக வென்று விட்டதாக எண்ணி இறுமாந்திருந்த பெண்களை நினைத்தால் வேறு என்ன நினைப்பது?//

சில பெண்கள் பாதிக்கப்பட்ட சகோதரிகளுக்காக இயற்றப்பட்ட 498a என்னும் வரதட்சணை கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்தியும் நமது கலாச்சரத்தை சிரலிக்கின்றனர்

Deepa said...

சரவணன்!

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி!

வரதட்சணை கொடுமை சட்டத்தை நியாயமான முறையில் பயன்படுத்தக்கூட இயலாமல் ஏராளமான பெண்கள் உள்ளனர். அவ‌ர்க‌ளுக்கு என்ன‌ வ‌ழி?

தமிழ். சரவணன் said...

ஆம் இச் சட்டத்தை அதிகார வர்கமும் ஆள்பலமும் பணபலமும் நிறைந்த கெடுமதி பெண்கள் தவறாக பயன்படுத்திவருகின்றனர்...

உதாரணமாக என்னை தாம்பரம் காவல் நிலையத்தில் என்னை ஆய்வாளர் விசாரித்து(இதெல்லாம் காமேடி விசாரணை) கொண்டிருந்தபொழுது ஒரு சகோதரி கையில் குழந்தையுடன் அவர் கணவர் அவரை அடித்துவிரட்டி வீட்டை பூட்டி விட்டதாக புகார் செய்தார். என்னை விசாரித்த நேர்மையாண (???) ஆய்வாளர் அவரை என்ன செய்தார் தெரியுமா?

"போமா இதெல்லாம் ஒரு பிரச்சணையா போ போ நைட்டு உன் புருசன் வருவான் அப்போ வீட்ட தொரப்பான போ என்று சமாதனம் (??) செய்து அனுப்பி வீட்டார்" ஆனால் பொய்வழக்கில் என்னிடம் சுமார் இரண்டு முன்று மணிநேரம் விசாரணை"

இதுதான் நாட்டின் இன்றைய நிலைமை... சட்டம் எல்லாம் ஆளும் வர்கத்துக்கும் அதிகார துக்ஷ்பிரோய கூட்டடத்துக்கு மட்டும் தான்

வாய்பு கிடைத்தால் எதாவது ஒரு மகளிர் காவல் நிலையம் (இதில் சில விதிவிலக்குகளும் உண்டு) சென்று பாருங்கள் உண்மை நிலை புரியும்...

மற்றும் எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பியுடைய நண்பருடைய தாயர் கைதி செய்யப்பட்டு ஐந்து நாள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார், இதை தாம்பரம் நீதிபதியே தவறு என்று சொல்லி கடைசியில் சிறையில் அடைத்துவிட்டார்கள்.

முரளிகண்ணன் said...

நல்ல யோசிக்க வேண்டிய கருத்து

அமிர்தவர்ஷினி அம்மா said...

நியாய‌மான‌ சுத‌ந்திர‌த்தைக் கூடப் பெறப் போராடும் பெண்கள் மேலும் கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் தீபா.

வேதனையாகவும் வெட்கமாகவும் தான் இருக்கிறது. என்ன செய்ய மேல்தட்டு பெண்களுக்கு ”இது”வும் ஒரு பொழுதுபோக்காகிவிட்டது.

Anonymous said...

தீபா,

இரு பக்கத்தையும் சரியாக அலசி்யிருக்கிறீர்கள். சுதந்திரம் உண்மையிலேயே இல்லாமல் அல்லது மறுக்கப்பட்டுத் திண்டாடும் கூட்டம் ஒரு பக்கம். எது சுதந்திரம் என்பது பற்றிய அடிப்படை அறிவற்று கட்டற்று அலையும் கூட்டம் மறுபக்கம். உண்மையான சுதந்திரம் இவற்றுக்கிடையில் வெகுசிலரால் பாவிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

SK said...

அழகா பொறுமையா உணர்ச்சி வசப்படாம பாத்து இருக்கீங்க. வாழ்த்துக்கள். தொடரட்டும் பதிவுகள்.

Deepa said...

முரளிகண்ணன், அமிர்தவர்ஷினி அம்மா,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!

//வேதனையாகவும் வெட்கமாகவும் தான் இருக்கிறது. என்ன செய்ய மேல்தட்டு பெண்களுக்கு ”இது”வும் ஒரு பொழுதுபோக்காகிவிட்டது.//

உண்மை தான். இத‌ற்குக் கிடைக்கும் ஊட‌க‌க் க‌வ‌ன‌ம் தான் க‌வ‌லைப்ப‌ட‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம். உண்மையில் க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ எவ்வள‌வோ விஷ‌ய‌ங்க‌ள் ம‌ற‌க்க‌ப்ப‌டுகின்ற‌ன. இந்த நேரத்தில் அவ‌ற்றை நினைவுப‌டுத்த‌ வேண்டிய‌ க‌ட‌மையில் நாம் இருக்கிறோம்.

Deepa said...

வட‌க‌ரை வேல‌ன்,
வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி!
// எது சுதந்திரம் என்பது பற்றிய அடிப்படை அறிவற்று கட்டற்று அலையும் கூட்டம் மறுபக்கம். //
100/100 உண்மை.

Deepa said...

SK,

நன்றி! உங்கள் பாராட்டுக்கள் ஊக்கமளிக்கின்றன.

தமிழ். சரவணன் said...

////வேதனையாகவும் வெட்கமாகவும் தான் இருக்கிறது. என்ன செய்ய மேல்தட்டு பெண்களுக்கு ”இது”வும் ஒரு பொழுதுபோக்காகிவிட்டது.//

ஆனால் இன்னும் எத்தனையோ பாதிக்கப்பட்ட சகோதரிகள் சட்ட விழிப்புணர்வு இல்லாமலூம் அப்படியே இருந்தாலூம் அது அதிகார துக்ஷ்பிரயோக அதிகாரிகளால் மிரட்டப்பட்டும் அவர்களுடைய வாழ்வியல் கேள்விக்குறியாகின்றது

Anonymous said...

அருமையான கருத்துக்கள்!!

//பாதிக்கப்பட்ட அந்த வகைப் பெண்கள் (க்ளப் கலாசார வகை) தங்களுக்குக் கிடைத்த அநுதாபங்களை வைத்துத் தங்கள் ந‌டத்தைக்கு நியாயம் தேடப் பார்ப்பார்கள்.//

இதுவே என்னுடைய கருத்தும்.

மேலை நாட்டு கலாசார திணிப்பையும், நம் நாட்டு கலாசார வன்முறையையும் எதிர்த்து ஒரு சேர குரல் கொடுப்போம்.

வாழ்த்துக்கள் நண்பரே!

God of Kings said...

உங்களை போல் அனைவரும் புரிந்து கொண்டால் போதும். உங்களது கருத்தை அனைவருக்கும் சென்றடைய வேண்டும் சகோதரி தீபா அவர்களே. நன்றி.

Unknown said...

//தங்களுக்குக் கிடைத்த அநுதாபங்களை வைத்துத் தங்கள் ந‌டத்தைக்கு நியாயம் தேடப் பார்ப்பார்கள்.//

மிகச்சரியான வார்த்தை ஆனால் அதில் அது போன்ற சூழலுக்குள் அகப்பட்ட பெண்களின் மனோ ரீதியான காரணங்களையும் பார்க்க வேண்டும், மிக உயர் வர்க்க குடும்பங்களின் குழந்தைகள் இழந்த ஏதோ ஒன்றை ஈடு செய்ய இப்படி தவறான பாதைக்குள் புதைந்து கொள்கிறார்கள், அதன் சரியான காரணம் மிகுந்த சமுதாய விவாதத்துக்க்கு உட்படுத்தவேண்டும்

Deepa said...

த‌மிழ். ச‌ர‌வ‌ண‌ன்!

Veerantamil!

God of Kings!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வீ. எம் said...

தெளிவான பார்வை, ஒரு தவறை எதிர்க்க இன்னுமொரு தவறை செய்திடல் கூடாது !


//நியாய‌மான‌ சுத‌ந்திர‌த்தைக் கூடப் பெறப் போராடும் பெண்கள் மேலும்
கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்ட அந்த வகைப் பெண்கள் (க்ளப் கலாசார வகை) தங்களுக்குக் கிடைத்த அநுதாபங்களை வைத்துத் தங்கள் ந‌டத்தைக்கு நியாயம் தேடப் பார்ப்பார்கள்//

நிதர்சனமான வரிகள்

Deepa said...

தவநெறிச்செல்வன்!


//மிக உயர் வர்க்க குடும்பங்களின் குழந்தைகள் இழந்த ஏதோ ஒன்றை ஈடு செய்ய இப்படி தவறான பாதைக்குள் புதைந்து கொள்கிறார்கள்//
இல்லை நண்பரே! தேவைக்கு மிக அதிகமாகப் ப‌ண‌ம் கொட்டிக் கிட‌க்கிற‌து என்ப‌தைத் த‌விர வேறூ நியாயமான காரணம் எனக்குத் தெரியவில்லை.
ஏழைக‌ள் தாங்க‌ள் இழ‌ந்த‌வ‌ற்றுக்கெல்லாம் ஈடு செய்ய‌ த‌வ‌றான‌ பாதையைத் தேர்ந்தெடுத்தாலென்ன‌ ஆகும் என்று சிந்தித்துப் பாருங்க‌ள்.

Deepa said...

வீ. எம்!
//ஒரு தவறை எதிர்க்க இன்னுமொரு தவறை செய்திடல் கூடாது !//

மிக‌வும் ச‌ரி! வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி!

hariharan said...

"வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்கிறது.
குடிப்பதும் அரைகுறை ஆடைகளுடன் இரவு விடுதிகளில் நடனமாடுவதும் தான் நாகரிகமென்றும் இது தான் பெண் விடுத‌லை என்றும் ந‌ம்பி, பெண்களுக்கான தடைகள் எல்லாவற்றையும் மொத்தமாக வென்று விட்டதாக எண்ணி இறுமாந்திருந்த பெண்களை நினைத்தால்"

இளைஞிகளை சிந்திக்கவைக்கும் பதிவு.

Unknown said...

ஏழைகளின் இழப்பை அவர்களிடையே உள்ள அன்பு ஈடு செய்து விடுகிறது, ஆனால் பணம் படைத்த சமூகம் முதலில் இழப்பது பரஸ்பர அன்பைதான். அதன் பாதிப்புதான் அவர்களை அப்படி ஓர் வழிக்கு கொண்டு செல்வதாக நினைக்கிறேன்,
தங்களை கட்டுப்படுத்த முயல்பவர்களின் மீது ஒரு பற்று இல்லாமல் குழந்தைகள் வளர்கிறார்கள், என்ற நோக்கில்தான் எழுதினேன், மேலும் பணத்திமிர்தான் இதற்கு காரணம் என்றால் பணக்காரர்களை ஒழிப்பதுதான் அதற்கு தீர்வு என்பது போல் ஆகிவிடும்.

தங்களின் பதிலுக்கு நன்றி

Deepa said...

சோம‌‌சுந்த‌ர‌ம்!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க ந‌ன்றி.

த‌வ‌நெறிச்செல்வ‌ன்!

//ஏழைகளின் இழப்பை அவர்களிடையே உள்ள அன்பு ஈடு செய்து விடுகிறது, ஆனால் பணம் படைத்த சமூகம் முதலில் இழப்பது பரஸ்பர அன்பைதான். அதன் பாதிப்புதான் அவர்களை அப்படி ஓர் வழிக்கு கொண்டு செல்வதாக நினைக்கிறேன்//

உண்மை தான்.

இப்னு ஹம்துன் said...

தெளிவான பார்வை, சரியான வார்த்தைகளில். பாராட்டுகள்.

இதே கருத்தை ஒரு ஆண் எழுதினால் வேறு கோணத்தில் தான் பார்க்கப்படுகிறது.

Deepa said...

ந‌ன்றி இப்னு ஹம்துன்!
உண்மை தான். பெண்களின் பிரச்னைகள் அவர்களின் கோணத்திலேயே தீர்வு காணப்பட வேண்டும். ஆனால் இங்கு பெண்கள் கூட‌ ஆண்களின் கோணத்திலேயே பார்க்கிறார்கள்.