Thursday, October 23, 2008

நேஹாவுக்கு...!

சின்னஞ்சிறிய உனது கைகள் தூக்கி காற்றில் அளாவுகிறாய். தண்டை சப்தமிடும் உனது பிஞ்சுக்கால்களைத் தரையை உதைத்து உதைத்து எழுப்புகிறாய்.
விண்ணைத்தொடும் கனவுகள் காண இப்போதிலிருந்தே தொடங்கி விட்டாயா? கனவு காண்; அஞ்சாதே! யார் சொல்லியும், எதற்காகவும் உன் கனவுகளை விட்டுக் கொடுக்காதே!
ஆனால் கொஞ்சம் நிதானி மகளே! ஏனென்றால் உன் கனவுகள் உனக்கு மட்டுமே சொந்தமானவை. ஆம்! இப்படி சொல்வதற்காக கோபப்படாதே. அவ்வாறு நம்பினால் மட்டுமே உன் கனவுகளை நிறைவேற்றும் உறுதியும் துணிவும் நீ அடைய முடியும்.
உன் க‌ன‌வுக‌ள் ம‌க‌த்தான‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்ப‌து ம‌ட்டுமே உன்னைப் ப‌ற்றி நான் காணும் க‌ன‌வு! வாழ்த்துக்க‌ள் க‌ண்ணே.

10 comments:

மாதவராஜ் said...

தீபா!

என் வலைப் பக்கத்தை கொஞ்சம் சீரமைக்கத் துவங்கி, அது நேரத்தை எடுத்துக் கொண்டுவிட்டது.
அதுதான் உன் கனவைக் கேட்பபதற்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
பெரும்பாலும், இது போன்ற கனவுகள்தான் வாழ்வின் தொடர் ஓட்டத்திற்கான ஆதார சுருதியே!
நேஹா இன் கனவை நிறைவேற்றட்டும்.
ஆனால், நீ எங்கள் கனவாயிருக்கிறாயே?

மாதவராஜ் said...

தீபா!

நேஹா உன் கனவை நிறைவேற்றட்டும் என்பதற்கு "இன்' என டைப் அடித்து விட்டேன்.

Anonymous said...

just stumbled upon your blog. keep writing and be happy

maduraibabaraj said...

மதிப்பிற்குரிய தீபா j. அவர்களுக்கு வணக்கம்.

நேஹாவுக்கு

அருமையான சொல்லோவியம்.
கடைசி வரியில் உங்களது உண்மையான பொறுப்புள்ள கனவு தெரிகிறது.

மதுரை பாபாராஜ்

Deepa said...

Thank you Mr. Rudhran
Happy Diwali to you and your family

Deepa said...

அன்புள்ள பாபாராஜ்!
வணக்கம்.
மிக்க நன்றி.

அன்புடன்,
தீபா

Anonymous said...

Hey Deeps! Are you people living in Dreamland? Kidding... Ungal iruvarin kanavai ninaivakkiya Neha kanavu kaannkirala! Kaanattum. Let her dream big and achieve bigger things in life!

BTW, my pet peeve (hey, no, drop that cane ;)) Last sentence...is it "mahaththanathaka" or "mahaththanavaiyaka"?

Deepa said...

Yes Ramki! you are right abt the last line. Thanks for the correction.

Brindha Ranganathan said...

Hey deepa...So you are continuing to write in tamil? wow...and reading such things makes me wonder, tamil is lovely, sweet, and with a deeper sense of gravity than any other language...yup agreed that dreams make life much more pleasant for they let us look forward to something...

Deepa said...

Thanks Brindha? hey mail to me in detail. Let's catch up sometime