Wednesday, October 22, 2008

சினிமா ரசிகரா நீங்கள்? மதுமிதாவின் அதிரடிக் கேள்விக் கணைக்குப் பதில் அளித்து மகிழுங்கள்! http://madhumithaa.blogspot.com/2008/10/blog-post_21.html

நான் ஆடிய ஆட்டம் இதோ!

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
2 அல்லது 3 வயதிருக்கலாம். எனக்கும் டிக்கெட் எடுத்து அழைத்துச் செல்வார்கள் வீட்டில். தண்டம்! படம் தொடங்கியதும் தூங்க ஆரம்பித்து விடுவேன்.


1. அ. நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா?
தூங்காமல் ரசித்த முதல் படம் ச‌ரியாக நினைவில்லை. ஞாயிறு மாலை தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் பல பழைய பட்ங்கள் வீட்டில் அனைவருடனும் அமர்ந்து ரசித்ததுண்டு. (குறிப்பாக அக்காவுடன்!)


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா? கல்லூரி. என் மகள் 8வ‌து மாதம் வயிற்றில் இருந்தபோது ஜோவுடன் (என் கணவர்) பார்த்தது. நல்ல‌ படம். விமர்சனம் என் ஆங்கிலப் பக்கத்தில்: http://deepajoe.blogspot.com/2008/01/i-am-great-fan-of-balaji-sakthivel-ever.html


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்? வெள்ளித்திரை. அக்கா வீட்டில். நல்ல கதை. பண்பட்ட கருத்துக்கள். அருமையான நடிப்பு (பிரகாஷ் ராஜ்)


4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா? - காதல், வீடு


5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்? சினிமா கதாநாயகர்களை நிஜ நாயகர்களாக அப்பாவி மக்கள் நம்பி ஏமாறுவது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?தொழில்நுட்பம் பற்றியெல்லாம் ரொம்ப அக்கறை இல்லை. காதலன் படத்தில் முக்காலா பாட்டு பார்த்து அதிசயித்திருக்கிறேன்.



6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா? ஹும்! எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் சினிமா செய்திகள் தானே. வாசிப்பதுண்டு!


7. தமிழ் சினிமா இசை?நல்ல இசை ரசிகர்களுக்கு முன்பு விருந்தாக இருந்தது. இப்போது மருந்து போல் அரிதாகிக்கொண்டு வருகிறது. ஆனாலும் நம்பிக்கை தருகிற இசை அமைப்பளர்களும் கவிஞர்களும் இன்னும் உண்டு.
பிடித்த பாடல்கள் பற்றி நானும் த்னியே எழுதுகிறேன்!

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஹிந்தி:

காமோஷி -‍ காது கேளாத பெற்றோருக்கு மகளகப் பிறந்து பெரிய பாடகியாகும் பெண்ணின் கதை. மனிஷா கொய்ராலா, நானா படேகர்.

ஹம் ஆப்கே ஹை கோன் ‍- பாட்டுக்கும் கூத்துக்கும் மட்டுமே ரசிக்கலாம்!

அப்புறம், வெகு சமீப காலமாகத் தான் ஆங்கிலப் பட‌ங்கள் பார்க்கிறேன். அதுவும் பெரும்பாலும் ஹாலிவுட் படங்கள்.அதில் பிடித்தவை:

Titanic - எதுவும் சொல்லத் தேவையே இல்லை!

Father of the Bride - ஒரு தந்தை தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் போது ஏற்படும் அனுபவங்கள்.

Three men and a Baby - மூன்று திருமணமாகாத ஆண்களிடம் ஒரு கைக்குழந்தை வந்து சேர்கிறது.

Life is beautiful - இது ஒரு இத்தாலியப் படம். ஒரு யூத இளைஞன் தன் புத்தி சாதுரியத்தலும் நகைச்சுவைத்திறனாலும் ஒரு இத்தலியப் பெண்ணைக் காதலித்து மணக்கிறான். அதே குணாம்சங்களினால் தன் மகனை ஜெர்மன் நாஜி முகமிலிருந்து காப்பாற்றும் கதை. இந்தப்படத்தைப் பல தடவை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கண் கலங்கி விடுவேன்.

Color of Paradise - http://mathavaraj.blogspot.com/2008/09/blog.html

7. தமிழ் சினிமா இசை? நல்ல இசை ரசிகர்களுக்கு முன்பு விருந்தாக இருந்தது. இப்போது மருந்து போல் அரிதாகிக்கொண்டு வருகிறது. ஆனாலும் நம்பிக்கை தருகிற இசை அமைப்பளர்களும் கவிஞர்களும் இன்னும் உண்டு.

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித் தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச் சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வெகு சில பட்ங்கள் நம்பிக்கை தருவனவாக இருக்கின்றன. ஒரு பக்கம் எப்போது இல்லாத அளவு நல்ல படங்கள் வெற்றி பெறுகின்றன. அதே அளவு வியாபாரத்துக்காக மட்டுமே எடுக்கப்படும் குப்பைகளும் பெருமளவில் வெற்றி பெறுகின்றன.
ஆனால் பொதுவாகப் பெண்களின் நிலை படுமோசமாக உள்ளது. தேசிய விருது பெற்ற ஒரு நடிகை அப்படி ஒரு சிறந்த பாத்திரத்தில் நடித்ததற்காக வருந்தும் நிலையில் இருக்கிறார். பெரிய நடிகர்கள் குத்தாட்டம் போட அழைப்பதில்லை என்பதே அவரின் மிகப் பெரிய சோகம். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படித்தான் இருக்கிறது தமிழ்ச் சினிமா உலகம்.
ஆகவே பட்ங்களின் தரம் உயர்ந்தாலும் சினிமா உலகில் (எந்தத் துறையையும் போல்) பெண்களின் நிலை சரியாக (உயர்வது அடுத்த படி!) இன்னும் பல காலம் பிடிக்கும். நம்புவோம்!

5 comments:

மதுமிதா said...

போட்டாச்சா தீபா. சூப்ப்ப்ப்ப்பர்.

http://madhumithaa.blogspot.com/
அதில் இந்த இடத்தில்

http://madhumithaa.blogspot.com/2008/10/blog-post_21.html
இந்த லிங்க் குடுங்க..

ஏன்னா நான் இன்னொரு பதிவு போட்டுவிட்டால் என்னுடைய பதிவில் இந்த சினிமா லிங்க் மாறிவிடும். இப்போ கொடுத்த லிங்க் குடுத்து விட்டீர்களென்றால், நான் எத்தனை பதிவுகள் போட்டாலும் எப்போது க்ளிக்கினாலும் இந்த சினிமா லிங்க் கிடைக்கும்.

மகள் நலம் தானே... காதம்பரி, குழந்தைகள் எபப்டி இருக்கிறாங்க

பாலாஜி சக்திவேலின் விசிறியா நீங்க. நலல்படம் அது. பரத்தும் சந்தியாவும் கேரக்டராவே மாறி இருப்பாங்க.

டைட்டானிக் எல்லோருக்குமே பிடிச்சுடும். அதிலும் கப்பலில் இருகைகளையும் நீட்டி இருவரும் நிற்கும் சீன். இப்போ நினைச்சாலும் சிலிர்த்துப்போயிடுது.

வீடு அர்ச்சனா நடிப்பு, யாதார்த்த்மா பாலு மகேந்திரா எடுத்திருப்பார்.

மதுமிதா said...

தீபா சாரிப்பா. கல்லூரியை காதல்னு நினைச்சு எழுதிவிட்டேன்.

கல்லூரி இன்னும் பார்க்கவில்லை நான்.

செழியன் ஒளிப்பதிவு எப்படி இருந்தது.

Deepa said...

Thanks for giving the proper link. I was thinking aboput the same.

அக்கா! (இப்படியே அழைக்கட்டுமா?)மகள் நேஹா மிகவும் நலம். அம்மு அக்கா, ப்ரீத்து, நிகில் எல்லோரையும் சென்ற வாரம் தான் பார்த்து விட்டு வந்தோம். அனைவரும் நலம்.
நீங்கள் எப்ப்டி இருக்கிறீர்கள். ஒரே ஒரு முறை ராஜபாளையத்தில் அந்த நூல் நிலையத்தில் சந்தித்தது. உங்கள் இனிமையான குரலும் சுபாவமும் மறக்க முடியாதவை. சென்னை வந்தால் கட்டாயம் வீட்டுக்கு வாருங்கள்.

"காதல்" படம் எனக்கு "கல்லூரி" யை விட் மிகவும் பிடிக்கும்.

கல்லூரியில் ஒளிப்பதிவும் (மற்ற எல்லா அம்சங்களயும் போலவே) மிகவும் இயல்பாக (realistic) இருந்தது. கிராமத்துக் கல்லூரி வகுப்புக்களைக் கண் முன் நிறுத்தியது.

மதுமிதா said...

அய்யோ தீப்பு செல்லம். சென்னையில்தான் இருக்கிறேன் இப்போ இந்த அக்கா.

அப்பாவைப் பார்க்க வீட்டுக்கு வந்திருந்தேன். அது ஒரு 7, 8 மாதம் முன்பு. அப்போது நீங்க இல்லை.

சந்திரா அம்மாவிடம் மதுமிதான்னு சொல்லிட்டாங்க. அம்மாவுக்கு மதுமிதாவை யாருன்னு தெரியல:) மஞ்சுரெங்கனாதன்னு சொன்னபிறகுதான் தெரிஞ்சது:) ரொம்ப அன்பா பேசினாங்க. அப்பாவை 10 நிமிஷம் பார்த்துட்டு கிளம்பிட்டோம்.

மாதவராஜ் said...

திரும்ப திரும்ப கல்லூரியை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறாய். நானும் இன்னும் பார்க்கவில்லை.
பிரியாமணி மீது உள்ள கோபம் இன்னும் தீரவில்லை போலிருக்கிறது.
சினிமாவுக்கும், மனிதர்களுக்குமான உறவைப் பற்றி எழுதணும் போல இருக்கு.
உலகத்தின் முதல் சினிமாக் காட்சி என்றால், லூமியர் எடுத்த ஓடி வருகின்ற ஒரு புகைவண்டிதான்.
அந்த ரெயில் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது....