எழுத்தாளர் திரு மாதவராஜ் அவர்களின் கேள்விகளுக்கு எனது பதில்கள்:
1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது ? ஏதோ ஒரு பாக்கெட் நாவல். ராஜேஷ் குமாரோ ராஜேந்திர குமாரோ நினைவில்லை.
2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்? 8 அல்லது 9 வயதில்.
3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?
அ. சமூக நாவல்கள்
இ. ஹரிபாட்டர் _ இதற்கு மட்டும் நான் தீவிர ரசிகை. இவ்வகையான எல்லா நாவல்களும் அல்ல.
4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?
அ. ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு
இ. நாவலாசிரியரின் பேரைப் பார்த்து
ஈ. நாவலின் முன்னுரையைப் படித்துப் பார்த்து
5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
ஆ. சொல்லப்படும்ம் கதையின் கால எல்லை
6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?
ஆ.எழுத்தாளரின் முன்வைப்பிலிருந்து
7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?
200 முதல் 300
8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?
அவ்வளவு அதிக நேரம் ஒதுக்கிப் படிக்கும் அளவுக்குத் தகுதி வாய்ந்த்தா என்று யோசிப்பேன்! ஆம் எனில் விட்டு விட்டாவது படித்து முடிப்பேன்.
9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?
இல்லை. வேறு வழி இல்லாமல் பொழுதைக்கழிக்க பாக்கெட் நாவல்கள் படித்த சில சமயங்களில் மட்டும்.
10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
வீட்டில் மற்ற வேலைகளெல்லாம் ஓய்ந்த பின்பு.
11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை? பல இருக்கின்றன. குல்சாரி, புத்துயிர்ப்பு, சிவகாமியின் சபதம், இன்னும் பல.
12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?
பாட்டிமார்களும் பேத்திமார்களும் _ ஜெயகாந்தன்ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் _ ஜெயகாந்தன்பெர்சுவேஷன் _ ஜேன் ஆஸ்டென்
13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை? போரும் அமைதியும் _ டால்ஸ்டாய் மோகமுள் _ ஜானகிராமன்
14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?
சில நேரங்களில் சில மனிதர்கள், யாருக்காக அழுத்தான், எனக்காக அழு (குறுநாவல்கள்) _ ஜெயகாந்தன், காளான், sivaசங்கரி
முற்றுகை _ மேலாண்மை பொன்னுச்சாமி
15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?
காட் ஆஃப் ச்மால் திங்ஸ் _ அருந்ததி ராய்.
16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?
Little Women, Da Vinci Code, ஜமீலா, நமது இதயங்கள், அன்னை வயல், Uncle Tom's Cabin, Pride and Prejudice, Harry Potter (parts 1-6 ), Agatha Christie's many novels, Crime and Punishment
17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?
Little Women, Jamila, நமது இதயங்கள்
18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?
ஆம்
19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.
இல்லை
20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?
கலாசாரம்
21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?
-
22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?
நமது இதயங்கள்
23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?
அ.எழுத்து மொழி ஆ.பேச்சு வழக்கு இ.வட்டார வழக்கு - நாவலின் தன்மையைப் பொறுத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை? பெண்களின் மனதின் நுட்பமான உணர்வுகள், மனித நேயம்
25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது? அப்படிஎதுவும் இல்லை.
26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா? சூழ்நிலையயும் நாவலின் சுவாரசியத்தையும் பொறுத்தது.
27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை? ஜெயகாந்தன், ஹாரிபாட்டர் நாவல்கள் (ஜே.கே. ரௌலிங்)
28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது? அப்படி எதுவும் தோன்றியதில்லை
29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.
இல்லை
30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா? இல்லை. சிறுகதைகள் தாம் என்னை அதிகம் பாதித்திருக்கின்றன.
31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது? :-) வெகு நாட்கள் ஆகின்றன... படிக்க வேண்டும்!
32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?
உண்டு.
33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை? அந்தத் தகுதியை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல கருப்பொருள் கிடைக்க வேண்டும்.
சரி. படித்து விட்டீர்களா? முடிந்தால் நேர்மையாக பதில் சொல்லுங்கள். அல்லது நேர்மையாக மௌனமயிருங்கள். ஆனாலும் ஒன்றை நீங்கள் கண்டிப்பாக செய்தாக வேண்டும். முடிந்தவரையில் உங்கள் நண்பர்கள் இந்தக் கேள்விகளைப் படிக்கச் செய்யுங்கள். தமிழ் இலக்கியத்துக்கு நீங்கள் செய்யும் சிறு தொண்டாக அது இருக்கலாம்.
4 comments:
பதில் போட்டாச்சா.. இதோ அடுத்த ஆட்டத்துக்கு வாங்க தீபா:)
http://madhumithaa.blogspot.com/2008/10/blog-post_21.html
பாஸாகி விட்டாய்.
மதுமிதாவின் அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகி விட்டாயா?
ஆனாலும் அவங்க ரொம்பவே ஆடுறங்கல்ல?
ஆமாம் அங்கிள்! ஆனால் உங்களை விடவா? :-)
எழுத்து பற்றிய எண்ண பரிமாற்றங்கள் அருமை.
Post a Comment