Sunday, October 24, 2010

என்ன கொடுமை ஸார் இது?

http://www.zeenews.com/news662852.html

இந்துக்கள் நம்புவதாலேயே ராமர் பிறந்த இடமென்று அறிவித்தது.
இப்போது மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விடுவார்கள் என்று பயந்து வரதட்சணை கொடுத்தால் அது குற்றமல்ல என்கிறது. இதில் எது மிகப்பெரிய அபத்தம் என்று பட்டிமன்றமே நடத்தலாம் போல.
இதே நிலை தொடர்ந்தால் என்ன ஆவது? யோசித்துப் பார்க்கலாமா?

1. கொலை மிரட்டலுக்குப் பணிந்து லஞ்சம் கொடுக்கலாம்.

2. ஆட்டோ அனுப்புவேன் என்று அச்சுறுத்தினால் கஞ்சா கடத்தலாம்

3. அட, உன் பிள்ளைக்கு ஸ்கூலில் அட்மிஷன் கிடையாது என்று பயமுறுத்தினால் ஊழலுக்குத் துணை போகலாம்.

இப்ப‌டி அடுக்கிக் கொண்டே போக‌லாமே?

வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுப்ப‌தும் வாங்குவ‌தும் குற்ற‌ம் என்ற‌ ச‌ட்டமே எழுத்தளவில் தான் இருக்கிறது. அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கே நமது பலவீனமான சமுதாயத்தால் முடியவில்லை. ஏற்கென‌வே ஆயிர‌ம் ஓட்டை உடைச‌ல்க‌ள் இருக்கும் ச‌ட்ட‌த்தை இப்படி நெளித்து விட்டால் என்ன ஆவது?

Labels: ,

13 Comments:

At October 24, 2010 at 11:48 PM , Blogger அமைதிச்சாரல் said...

வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுப்ப‌தும் வாங்குவ‌தும் குற்ற‌ம் என்ற‌ ச‌ட்டமே//

என்னோட கேள்வியும் இதுதான்.. ஏற்கனவே இப்படி ஒரு சட்டம் இருக்கும்போது, இப்ப புதுசா ஒரு தீர்ப்பு வந்திருக்கே.. அப்படீன்னா, பழைய சட்டத்துக்கு என்ன மதிப்பிருக்கு??

 
At October 25, 2010 at 1:27 AM , Blogger மாதவராஜ் said...

மாற்றி மாற்றி கன்னத்தில் அறைந்திருக்கிறாய்.. இன்னும் அறையணும் போலத்த்தான் இருக்கு....

 
At October 25, 2010 at 2:10 AM , Blogger ஹுஸைனம்மா said...

பெரும்பாலான பெண் வீட்டினரிடையே (அட்லீஸ்ட், நடுத்தர/கீழ்த்தட்டு மக்கள்) இப்படியான மறைமுகக் காரணங்களால்தான் வரதட்சணை கொடிகட்டிப் பறக்கிறது. எனினும், இந்த வழக்கில், பெண் வீட்டினர் மீது எஃப்.ஐ.ஆர். போட்ட காவல்துறை, வரதட்சணை வாங்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

கடைசி நேரத்தில், மிரட்டப்பட்டதாலேயே வரதட்சணை கொடுத்தேன் என்று பெண்ணின் தகப்பனார் சொல்வதைக் கணக்கில் எடுத்தே நீதிபதி, தண்டனை தராமல், அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளார் என்று நினைக்கிறேன். எத்தனை பேர் அந்தச் சம்யத்தில் தைரியமாக எதிர்த்து நிற்பார்கள்? செய்திகளில் ஒன்றிரண்டு தென்படுவதுண்டு. ஆனால், இதுபோல பணிந்து போகிறவர்களே அதிகம்.. வாணலியில் தெரிந்தே விழும் அவர்களைக் கண்டு பரிதாபப் படுவதைத் தவிர என்ன செய்ய?

 
At October 25, 2010 at 3:42 AM , Blogger யாதவன் said...

நல்ல இருக்கு

 
At October 25, 2010 at 4:58 AM , Blogger ponraj said...

" வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுப்ப‌தும் வாங்குவ‌தும் குற்ற‌ம் "


நல்ல வேளை நான் தப்பித்துக்கொண்டேன்!!!

 
At October 25, 2010 at 7:15 AM , Blogger சந்தனமுல்லை said...

ம்ம்....வாங்க சொல்லி மிரட்டினதாலதான் வரதட்சிணை வாங்கினேன்னு கூட சொல்லலாம்..;‍-)

 
At October 25, 2010 at 11:03 AM , Blogger எஸ்.கே said...

கொடுப்பது வாங்குவது இரண்டுமே குற்றம் என்று ஏற்கனவே சட்டம் உள்ள நிலையில் இப்படி வருவது சட்டத்திற்கும் இழுக்கு சமூகத்திலும் பிரச்சினை வரும்/அதிகரிக்கும்!

 
At October 25, 2010 at 11:35 AM , Blogger ராஜவம்சம் said...

சட்டம் இருக்கும் போது மட்டும் என்னத்த கிலிச்சோம் என்று நினைத்து இந்தச்சட்டம் போட்டிறுப்பார்களோ.

 
At October 25, 2010 at 9:41 PM , Blogger Sriakila said...

//ஏற்கென‌வே ஆயிர‌ம் ஓட்டை உடைச‌ல்க‌ள் இருக்கும் ச‌ட்ட‌த்தை இப்படி நெளித்து விட்டால் என்ன ஆவது? //

செமத்தியான கேள்வி.

ஆனால் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கும் நாட்டில் தான் நாம் இருக்கிறோமா?

 
At October 25, 2010 at 11:55 PM , Blogger ponraj said...

நேரம் கிடைத்தால் என் பதிவை பார்கலாமே..

 
At October 26, 2010 at 9:10 AM , Blogger மதுரை சரவணன் said...

nalla sinthanai.... sattam oru iruttarai....

 
At October 28, 2010 at 4:24 AM , Blogger RVS said...

அதனாலத் தான் நீதி தேவதைக்கே நாங்க கண்ணை கட்டி காட்ல சீ.. நாட்ல விட்ருக்கோம். ;-)

 
At October 28, 2010 at 8:50 AM , Blogger Thanglish Payan said...

Sattathil kurai koramal..

Sattathai eppadi amalakkuvuthu enru alosani kurinal nanraga irukkum...

ellorum vanga mattom yenru solla thayanguvathu yen...

kelvi kelungal ungaludan and pathil kandu pidingal...

Anyway its good.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home