Saturday, June 26, 2010

ராவணன்! ‍ அனுமாரை மிஞ்சிய கோமாளி




பார்த்தவர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் எல்லாரும் எச்சரித்தும் அசராமல் இருந்தேன். எனக்கொன்றும் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. பெரிதாக மெஸெஜ் இல்லாவிட்டால் என்ன, பொழுது போக்கு அம்சம் கூடவா இவ்வளவு பெரிய மல்டிஸ்டாரரில் இல்லாமல் போகும்? பார்த்து விடுவோம் என்று போனேன்.

ஹையோ ஹையோ! இரண்டரை மணி நேரம் ஓடிய படத்தில் ஒரு காட்சி கூட மனதில் நிற்கவில்லை. பார்க்கும் போதும் படத்தோடு ஒரு காட்சியில் கூட ஒன்ற முடியவில்லை.

கதையை விடுங்கள், முடிவை விடுங்கள், மற்ற பாத்திரங்களை விடுங்கள் வீராவின் பாத்திரப்படைப்பைக் கூடவா சரியாகச் செய்யமுடியவில்லை? வீராவைப் பற்றிய விஷயங்களை நான்கைந்து காட்டு வாசிகள் வாய்வழியே புகழ வைப்பதோடு சுலபமாக முடித்துக் கொண்டார் இயக்குநர். இதனால் விக்ரம் காட்டும் உடல்மொழியும், நடிப்பும் கோமாளிக் கூத்தாகப் போய்விட்டது. பிரியாமணி வரும் இடத்தையாவது கொஞ்சம் அழுத்தமாகக் கதை சொல்லப் பயன்படுத்தி இருக்கலாம். அதுவும் இல்லை.

ஐஸ்வர்யா, ஐஸ்வர்யாவாகவே இருக்கிறார். ராகினியாக இல்லை. ஏதோ ஹிந்திப் பட ஷூட்டிங்கிற்கு இடையே விக்ரம் அவரைக் கடத்தி வந்ததாகத் தான் படுகிறது. அழகு, நடிப்பு, நடனம் எல்லாவற்றிலும் ஏமாற்றி விட்டார்.

வீரா ராகினியின் மீது மையல் கொள்வதற்கு அழுத்தமான காரணங்கள் அல்லது சூழ்நிலை ஏற்படுத்தி இருந்தால் ஏற்கும்படியாக இருந்திருக்கும். அது இல்லாமல் போகவே இந்த ராவணன் மீதும் மதிப்பு ஏற்படவில்லை.

காட்டுக்குள் கதைக்களம் ஏற்படுத்தியது அருமையான லொக்கேஷனுக்காக மட்டுமே தான் போலும். காட்டு வாழ் மக்களின் துன்பங்கள், அவர்களின் வாழ்க்கையை ஒரு காட்சியில் கூடப் படம்பிடிக்க மெனக்கெடவில்லை இயக்குநர். இப்படி ஒரு ராமன் ராவணன் கதையை எடுக்கக் காட்டுக்குள் காமிராவைத் தூக்கிக் கொண்டு போவானேன்? சிட்டியிலேயே ஒரு ஃபைவ்ஸ்டார் ஹோட்டலுக்குள் எடுத்து முடித்திருக்கலாம்.

அனுமார், ராமன், சீதை, கும்பகர்ணன் இவர்களின் பிரதிகளாகப் பாத்திரங்கள் வருவது ஒப்புக்காகவும் சிறுபிள்ளைத் தனமாகவும் இருக்கிறது. நவீன ராமாயணம், மகாபாரதம் என்று பள்ளிப்பருவத்தில் போட்ட‌ காமெடி டிராமாக்கள் இதை விட எவ்வளவோ ரசனை மிகுந்ததாக இருந்திருக்கிறது.


இசை: ‍உசுரே போகுதே பாடலைப் பெரிதும் எதிர்பார்த்தேன். ஏ. ஆர் ரஹ்மான இசையில் அது ஒன்று தான் தேறியது. அதிலும் ஏமாற்றம். கொஞ்சம் கூடச் சிரத்தையுடன் படமாக்கப் படவில்லை அந்தப் பாடல். முழுதும் வரவும் இல்லை.

விக்ரமுக்கு ஒரே ஒரு அட்வைஸ்: பெர்ஃபார்மன்ஸிக்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் இனியாவது தயவு செய்து பெரிய பானர்களை விடுத்துச் திறமை மிகுந்த சின்ன இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அது தான் உங்களுக்கும் உங்கள் ரசிகர்களுக்கும் நீங்கள் செய்யக்கூடிய உபகாரம். இல்லாவிட்டால் அடுத்த மணிரத்னம் அல்லது ஷங்கர் படத்தில் அப்பா/அண்ணன் வேடம் செய்யத் தயாராகுங்கள். (ஆமாம், அவ்வளவு ஆண்டுகள் ஆகிவிடுமே)

20 comments:

Swengnr said...

விக்ரமுக்கு ஒரே ஒரு அட்வைஸ்: பெர்ஃபார்மன்ஸிக்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் இனியாவது தயவு செய்து பெரிய பானர்களை விடுத்துச் திறமை மிகுந்த சின்ன இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அது தான் உங்களுக்கும் உங்கள் ரசிகர்களுக்கும் நீங்கள் செய்யக்கூடிய உபகாரம். இல்லாவிட்டால் அடுத்த மணிரத்னம் அல்லது ஷங்கர் படத்தில் அப்பா/அண்ணன் வேடம் செய்யத் தயாராகுங்கள். (ஆமாம், அவ்வளவு ஆண்டுகள் ஆகிவிடுமே)//

அப்படியே உண்மை இது! நன்றி!

வடுவூர் குமார் said...

ஹூம்! அவ்வ‌ள‌வு மோச‌மா!!

வடுவூர் குமார் said...

இட‌து ப‌க்க‌ நான் வ‌ள‌ர்கிறேனே ம‌ம்மி‍ -ந‌ன்றாக‌ இருக்கு.

Madumitha said...

பாவம் ராவணன்...

Buvan said...

//பார்த்தவர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் எல்லாரும் எச்சரித்தும் அசராமல் இருந்தேன். எனக்கொன்றும் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை//

பிறகு இதைப்பற்றி பேச என்ன இருக்கு....?

//வளரும் இயக்குனர்களுக்கு வாய்ப்பை கொடுங்கள்// ஏற்றுகொள்ள வேண்டிய விஷயம்................

அன்புடன் மலிக்கா said...

நிஜமான உண்மைங்கோ படமே எப்பவாவது மிக அரிதாக பார்க்கும் நான்கூட இப்படத்தை பார்கலாமேன்னு பார்த்தா சத்தியமா ஒன்னும்புரியலை. விக்ரமண்ணா. கதை கதை கதையப் பாத்து நடிங்கோ..

ரிஷபன் said...

அப்பாடி.. நான் பார்க்கல.. தப்பிச்சுட்டேனா?!

Anonymous said...

ம்ம்ம் இப்ப என்ன பார்க்கவா? வேணாமா?

ViNo said...

//இசை: ‍உசுரே போகுதே பாடலைப் பெரிதும் எதிர்பார்த்தேன். ஏ. ஆர் ரஹ்மான இசையில் அது ஒன்று தான் தேறியது. அதிலும் ஏமாற்றம். கொஞ்சம் கூடச் சிரத்தையுடன் படமாக்கப் படவில்லை அந்தப் பாடல். முழுதும் வரவும் இல்லை.//

athey :( sothappal...

VijayaRaj J.P said...

அனுமார் ஒரு கோமாளி என்று
நான் இதுவரை கேள்விப் பட்டதே
இல்லை.

தகவலுக்கு நன்றி,தீபா.

ஜெய்லானி said...

தமிழ் விமர்சனம்தான் சரியில்லை ஒரு வேளை ஹிந்தியில நல்லா வந்திருக்குமோன்னு பாத்தால் அதே கோமாளி படம்தான்.

Jayadev Das said...

Good Vimarsanam.

Rithu`s Dad said...

நல்ல விமர்சனம் தான்.. ஆனால் தலைப்பு தான் சரியில்லை.. பாவம் அனுமார்!!!

திரு புவன்.. //
//பார்த்தவர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் எல்லாரும் எச்சரித்தும் அசராமல் இருந்தேன். எனக்கொன்றும் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை//

இல்லை என்றால் .. இருக்கு என்று அர்த்தம்.. :)

ponraj said...

///நீங்கள் இனியாவது தயவு செய்து பெரிய பானர்களை விடுத்துச் திறமை மிகுந்த சின்ன இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அது தான் உங்களுக்கும் உங்கள் ரசிகர்களுக்கும் நீங்கள் செய்யக்கூடிய உபகாரம்///

Nice advice in right time to vikram!!!

விக்ரம் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள்,தீபா உள்பட அனைவருக்கும் ஏமாற்றம்!!!
அடுத்த படத்தில் விக்ரம் ஏமாற்ற மாட்டார்!!! நம்புவோம்...

குகன் said...

ஒரு பக்கம்...விஜய் நடிக்க மாட்டேன் சொல்லி ரசிகன கொல்லுறான்.

இன்னொரு பக்கம்... விக்ரம் நடிச்சே ரசிகன கொல்லுறான்.

என்ன கொடுமை சார் இது !!

AkashSankar said...

நல்ல சொன்னீங்க...

காமராஜ் said...

//ஏதோ ஹிந்திப் பட ஷூட்டிங்கிற்கு இடையே விக்ரம் அவரைக் கடத்தி வந்ததாகத் தான் படுகிறது. அழகு, நடிப்பு, நடனம் எல்லாவற்றிலும் ஏமாற்றி விட்டார்.//

அடடா, தூக்கலான நையாண்டியும் விமர்சனமும் தீபா....

சந்தனமுல்லை said...

நல்லா வேணும்..:)))

அப்புறம்..இந்த நக்கல் நையாண்டியெல்லாம் செமையா பண்ண ஆரம்பிச்சுட்டே!

Deepa said...

நன்றி Software Engineer!

நன்றி வடுவூர்குமார்!

நன்றி ம‌துமிதா!

நன்றி புவ‌ன்!

நன்றி ம‌லிக்கா!

நன்றி ரிஷ‌ப‌ன்! ஆமாம்.

நன்றி மயில்!
இவ்வ‌ள‌வு சொன்ன‌ப்புற‌மும் இப்ப‌டி ஒரு கேள்வியா?
ச‌ரி ச‌ரி, ர‌ஸ்க் சாப்பிடுங்க‌..சீ ரிஸ்க் எடுங்க!

நன்றி வினோ!

நன்றி விஜி அங்கிள்!
ந‌க்க‌ல் தானெ உங்க‌ளுக்கு? :)

நன்றி ஜெய்லானி!
அட‌க்க‌ட‌வுளே, ஹிந்தில வேற‌ பாத்தீங்க‌ளா? பாவ‌ங்க‌ நீங்க.

ந‌ன்றி ஜெய‌தேவா!

ந‌ன்றி ரிது'ஸ் டேட்!

நன்றி பொன்ராஜ்!

நன்றி குக‌ன்!
சூப்ப‌ர்! :)) ஆனா விக்ர‌ம் கொல்ல‌லீங்க‌. அவ‌ரை வேஸ்ட் ப‌ண்ணி இந்த இயக்குனர்கள் கொல்றாங்க‌.

நன்றி ராச‌ராச‌சோழ‌ன்!

நன்றி காம‌ராஜ் அங்கிள்!

நன்றி முல்லை!
எல்லாம் சேர்வார் தோஷ‌ம். என்ன‌ ப‌ண்ற‌து? :))

Anonymous said...

Hi Deepa,
I like your review. If you find time, read mine also: http://ramyamani.wordpress.com/2010/07/03/raavanan-review/
thanks,
Ramya