Tuesday, June 22, 2010

ஆணா பொண்ணா? கறுப்பா சிவப்பா?

மைத்துனருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. ஆரோக்கியமான அழகான பெண் குழந்தை. உற்சாக‌த்துட‌ன் ம‌கிழ்ச்சியைப் ப‌கிர்ந்து கொண்ட‌வ‌ர் சொன்னார், "ந‌ல்ல‌ வேளை, அண்ணி! எல்லாரும் ஆண் குழ‌ந்தை தாங்க‌ற‌ மாதிரி சொல்லிட்டிருந்தாங்க‌. என‌க்குப் பொண்ணு தான் வேணும்னு இருந்துச்சு" என்றார். என் வாழ்த்துக்க‌ளையும் ம‌கிழ்ச்சியையும் தெரிய‌ப் ப‌டுத்திவிட்ட‌ பின் யோசித்தேன்.

ஆமாம், நேஹா வ‌யிற்றிலிருந்த‌ போதும் இப்ப‌டித்தான். சில‌ பேர் பார்த்த‌ மாத்திர‌த்தில் ஸ்கேன் எடுத்து விடுவார்க‌ள். வ‌யிறு உருண்டு ஃபுட்பால் மாதிரி இருந்தா பைய‌னாம்! (ஏன்னா ப‌ச‌ங்க‌ தானே ஃபுட்பால் விளையாடுவாங்க‌!) படர்ந்து விரிஞ்சு இருந்தா பொண்ணாம்.

அது கூட‌ப் ப‌ர‌வாயில்லை. எத்த‌னை பேருக்கு எத்த‌னை நாள் ஆசையோ! என் முக‌ம் பார்க்க‌ ச‌கிக்கலையாம். சுண‌ங்கிப் போயி என்ன‌மோ மாதிரி இருக்காம். அப்ப‌டி இருந்தா நிச்ச‌ய‌ம் பைய‌னாம். இப்ப‌டியே ஒன்ப‌து மாச‌ம் சொல்லிட்டு வ‌ந்த‌வ‌ங்க‌ளை நேஹா பிற‌ந்த‌வுட‌னே தேடிப் போய் அடிக்க‌ணும்னு நென‌ச்சேன்! பொண்ணு பிற‌ந்த‌துக்காக‌ இல்ல‌, ரொம்ப‌த் தெரிஞ்ச‌ மாதிரி ஆருட‌ம் சொல்றேன்க‌ற‌ பேர்ல‌ இஷ்ட‌த்துக்கும் வெறி கொட்டிக்கிட்டாங்க‌ளே அதுக்குத் தான்! :)

க‌ர்ப்ப‌மா இருக்க‌ற‌ பொண்ணோட‌ வ‌யித்தைப் பாத்து "உன‌க்கு ஆண் குழ‌ந்தை" ந்னு சொல்ற‌து தான் ஆசிர்வாத‌ம்னு நினைக்க‌றாங்க‌ போல‌.இந்த‌க் கால‌த்துலையும் ஆண்குழ‌ந்தை பிற‌ந்தா தான் பெருமைன்னு நினைக்கிற‌வ‌ங்க‌ இருக்காங்க‌ன்னு தெரிஞ்ச‌ப்போ ரொம்ப‌ ஆச்ச‌ரிய‌மா இருந்துச்சு. ஆத்திர‌மெல்லாம் வ‌ர‌லை. ஏன்னா என்னைப் பொருத்த‌வ‌ரைக்கும் அவ‌ங்க‌ல்லாம் காமெடி பீஸுங்க‌ தான்!

உற‌வுக்கார‌ர்க‌ளில் ஒருத்த‌ர், ரொம்ப‌ப் ப‌டிச்சுப் பெரிய‌ ப‌த‌வியில‌ இருக்க‌ற‌வ‌ர், நேஹா பிற‌ந்த‌ப்போ, ஜோ கிட்ட‌ வ‌ந்து " க‌வ‌லைப் ப‌டாதேப்பா, அடுத்த‌ த‌ட‌வை பாத்துக்க‌லாம்" னாராம்! சந்தோஷத்துல இருந்த ஜோவுக்கு முத‌ல்ல‌ ஒண்ணுமே புரிய‌லை. புரிஞ்ச‌வுட‌னே வ‌ந்த‌து பாருங்க‌ கோப‌ம்! ஹூம்! இவங்கல்லாம் எப்பத் தான் திருந்துவாங்களோ!

அடுத்தது கலர்! காது க‌ல‌ரைத் திருப்பித் திருப்பிப் பாக்க‌ற‌து; அம்மா க‌ல‌ர் வ‌ர‌லை. அப்பா க‌ல‌ர் வ‌ர‌லைன்னு எதையாவ‌து உள‌ர்ற‌து! தாங்க‌ முடியாத‌ எரிச்ச‌ல் இது தான். ஆனா இவ‌ங்க‌ளையும் காமெடி பீஸா எடுத்துக்க‌ வேண்டிய‌து தான். ஏன்னா இதுக்கெல்லாம் கோப‌ப்ப‌ட்டா ந‌ம‌க்கும் அந்த‌ ஆத‌ங்க‌ம் இருக்குன்னு ஒத்துக்க‌றா மாதிரி!

நேஹாவைப் பாக்க வந்த ஒருத்தங்க‌ அவ‌ க‌ல‌ர் க‌ம்மின்னு ரொம்ப‌ நேர‌ம் புல‌ம்பிட்டிருந்தாங்க‌. 'ந‌ல்ல‌ வேளை அக்கா, நல்ல கலர் மட்டும் இருந்து மூஞ்சியும் முழியும் உங்களை மாதிரி இருந்திருந்தா? யோசிச்சுப் பாருங்க...' அப்படின்னு சொல்ல நினைச்சு வேண்டாம்னு விட்டுட்டேன்.

ஸோ! இனிமே உங்க நெருக்கமானவங்களுக்குக் குழ‌ந்தை பிற‌ந்த‌ செய்தியை யார் கிட்டெயாச்சும் சொல்லும் போது "குழந்தை என்ன‌ க‌ல‌ர்னு கேட்டாங்க‌ன்னா" ஸ்கின் கலர்னு சொல்லுங்க! மண்ட காயட்டும்.

21 comments:

AkashSankar said...

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்...

யூர்கன் க்ருகியர் said...

வீட்டுக்கு பொண்ணு பொறந்தா லட்சுமியே வந்த மாதிரி ....
என்னுடைய வாழ்த்துக்கள் !!

Riyas said...

//ஸோ! இனிமே உங்க நெருக்கமானவங்களுக்குக் குழ‌ந்தை பிற‌ந்த‌ செய்தியை யார் கிட்டெயாச்சும் சொல்லும் போது "குழந்தை என்ன‌ க‌ல‌ர்னு கேட்டாங்க‌ன்னா" ஸ்கின் கலர்னு சொல்லுங்க//

சரிதாங்க..

வால்பையன் said...

புதுசு புதுசா ஜோசியம் சொல்றாங்களே!

காமராஜ் said...

நல்ல சவுக்கு சத்தம் உய்ங் உய்ங் னு கேக்கு. எனக்குத்தெரிஞ்ச ஒருத்தங்க தன் சம்பாத்யத்தில் முக்கால் பகுதியை ஃபேர் அண்ட் லவ்லிக்குசெலவழிச்சாங்க.

படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லைங்கறத அவங்க மூலம் உறுதிசெய்துகொண்டேன்னைதுவும் கூட மூட நம்பிக்கைதானே தீபா.

'அங்கவை பொங்கவை ங்கிற' சிவாஜி படத் திமிரை எத்தனை பேர் எதிர்த்தார்க ளென்று தெரியல. காரணம் ஒன்னு ரஜினி,ரெண்டு உலகமஹா சங்கர்.

ஜெய்லானி said...

எது பிறந்தாகும் நம் பிள்ளைதான் . சுகமாய் நல்ல விதமாய் பிறக்கட்டும் அப்படி இருக்க ஆண் , பெண் என்று பிரித்து பேசுபவர்களை கண்டால் எனக்கும் எரிச்சலாய் வரும்.

அம்பிகா said...

இப்பவே பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம், ஆண்குழந்தைகளை விட குறைந்து வருகிறதாம். 107 ஆண்குழந்தைகளுக்கு 100 பெண்குழந்தைகள் என்ற விகீதத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இன்னும் பெண்குழந்தைகள் வேண்டாம் என்றால்...?

அமுதா said...

/*ஆனா இவ‌ங்க‌ளையும் காமெடி பீஸா எடுத்துக்க‌ வேண்டிய‌து தான். ஏன்னா இதுக்கெல்லாம் கோப‌ப்ப‌ட்டா ந‌ம‌க்கும் அந்த‌ ஆத‌ங்க‌ம் இருக்குன்னு ஒத்துக்க‌றா மாதிரி!

*/
உண்மை தான்

ஸோ! இனிமே உங்க நெருக்கமானவங்களுக்குக் குழ‌ந்தை பிற‌ந்த‌ செய்தியை யார் கிட்டெயாச்சும் சொல்லும் போது "குழந்தை என்ன‌ க‌ல‌ர்னு கேட்டாங்க‌ன்னா" ஸ்கின் கலர்னு சொல்லுங்க! மண்ட காயட்டும்
:-))


ஆனால் இது சீரியஸான விஷயம் தான். நந்தினி கைகுழந்தையா இருக்கும் பொழுது பக்கத்து வீட்டு பையன் , அவனுக்கு எட்டு வய்சு இருக்கும்... எல்லாருக்கும் நந்தினியைப் பிடிக்குதுனு சொன்னப்ப “ஏன் பிடிக்காது அவள் தான் பெளர்ணமி மாதிரி நிறமா இருக்காளே” அப்படீன்னான். எனக்கு அது ரொம்ப பாதிச்சிடுச்சு. ஆனால் நிறம் பத்தி பேச்சை தவிர்க்கிறது கஷ்டமா இருக்கு. இப்ப எல்லாரும் நந்தினி நிறம் கம்மி... யாழினி நல்ல நிறம்னு சொல்லும்பொழுது அவங்க சொல்லி முடிக்கிற வரை என்னால் தடுக்க முடியறது இல்லை. நிறத்தில் ஒண்ணும் இல்லைனு நான் சொன்னாலும் குழந்தைகள் முன் இது போன்ற பேச்சுக்கள் எப்படி எடுத்துக்கப்படும் அப்படீங்கற கவலை எனக்கு எப்பவும் உண்டு.

சந்தனமுல்லை said...

நீயும் நல்லாவே வெறி கொட்டியிருக்கே தீபா! :-) செம ஜாலியா பேசிக்கிட்டே ஊசி போட்டிருக்கே!

காது கலர் - எனக்கும் நடந்திருக்கு. நானும் முகிலுமே கருப்புதான்..ஆனா முகில் கொஞ்சம் லெஸ் கருப்பு..:)

ஸ்கின் கலர் - :-))

Rithu`s Dad said...

வந்தவங்க, பார்த்தவங்க, சொன்னவங்க, போனவங்க.. எல்லோரும் சொல்லி அத மறந்தும் போயிருப்பாங்க.... ஆனா நாம??

இந்த விசயங்களை மறக்கவும் இல்லை மாறவும் இல்லையோ? ஒருவேலை நாமும் இதை தான் உள்மணதில் என்னிக்கொண்டிருக்கிறோமோ???

எல்லாமே, மத்தவங்க என்ன சொல்றாங்கங்ரதுல இல்லை தானே?? நான் உண்டு என் குழந்தை உண்டு.. உங்க வேலையை பாருங்கனு விட்டுட்டு முன்னாடி போய்ட்டே இருக்கனும் தானே??

அமுதா கிருஷ்ணா said...

முழுசா, ஒரு ஊனமும் இல்லாமல் ஒரு குழந்தை பிறப்பதே அதிசயமான நிகழ்வு.சின்னதாய் ஒரு ஊனம் இருத்தாலே அந்த குழந்தை அடைய போகும் துன்பம் அதிகம்.நிறம் ஒரு ஊனம் இல்லை என்பது நம் உலக மக்களுக்கு எப்பதான் புரியுமோ...இப்போது இந்தியாவில் அம்பிகா சொன்னது மாதிரி பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிக குறைவு..இது ஒரு 10 அல்லது 15 வருடத்தில் மிக பெரிய சமூதாய பிரச்சனையை உண்டு செய்ய போகுது..அப்போதாது நம் மக்கள் மாறுகிறார்களா என்று பார்ப்போம்..

ponraj said...

அப்படியா?
இப்படிப்பட்ட பதிவுகளை படித்தால் தான்,
உலக நடப்பே தெரிகிற்து!!!! :-)

//"குழந்தை என்ன‌ க‌ல‌ர்னு கேட்டாங்க‌ன்னா" ஸ்கின் கலர்னு சொல்லுங்க!//

நன்று!!

Deepa said...

நன்றி ராசராசசோழன்!

நன்றி யூர்கன்!

நன்றி ரியாஸ்!

நன்றி வால்பையன்!
ஏன் கேக்க‌றீங்க, இன்னும் இருக்கு. :)

நன்றி காமராஜ் அங்கிள்!
அய்யோ! கரெக்டா சொன்னீங்க.
ஷ‌ங்க‌ர் ம‌ன‌தில் உள்ல கேவலமான‌ ஊன‌ம் அந்த‌க் காட்சியில் வெளிப்ப‌ட்ட‌து. அவ‌ர் ஒரு வேஸ்ட் பீஸ்!

ந‌ன்றி ஜெய்லானி!

ந‌ன்றி அம்பிகா அக்கா!
முக்கிய‌மான‌ த‌க‌வலைப் ப‌கிர்ந்திருக்கிறீர்க‌ள்.

ந‌ன்றி அமுதா!
க‌வ‌லையே ப‌டாதீர்க‌ள். Nandini is too smart to be bogged down by these silly comments!

முல்லை!
அய்யோ! ஊசி போடணும்னு நெனைச்சேன். ஆனா போட‌ல!
எங்க‌ அம்மா நல்ல க‌றுப்பு; என்னையும் எங்க‌ அக்காவையும் விட அவங்க ரொம்ப‌ அழ‌கு. :) இதுக்கு மேல‌ என்ன‌ சொல்ல‌?

ந‌ன்றி Rithu's dad!
அட‌, ம‌ற‌க்காம மனசில வெச்சுக்க இதுல ஒண்ணுமில்லைங்க‌.
சும்மா இப்ப‌டியும் இருக்காங்க‌ன்னு ஒரு ப‌கிர்த‌ல் தான்.

ந‌ன்றி பொன்ராஜ்!

வல்லிசிம்ஹன் said...

தீபா, ஒருத்தர் வந்து குழந்தையின் கலரை விமர்சனம் செய்தா பாயவேணாமா.
என்னன்னு சொல்றது.
இந்த மாதிரி பெண்கள் வர்ணம் அடிப்பதை நிறுத்தினால் தேவலை.என் தங்கை கறுப்புனா அப்படியொரு கறுப்பு. ஆனால் அம்மன் போல அழகா இருப்பாள். அவளுக்கு அமைந்திருக்கும் புகுந்த வீடு அவளை உன்னதமாகத் தான் பார்க்கிறது.குணமிருந்தால் போதும் .

Unknown said...

"ஏன்னா இதுக்கெல்லாம் கோப‌ப்ப‌ட்டா"
----
திருப்பி எதுவாச்சும் சொன்னா, உடனே ‘காக்கைக்கும் தன் …’னு சொல்லிவிடுவாங்க. குழந்தை செய்வதை கொஞ்சம் பெருமையா சொன்னா கூட உடனே ‘காக்கைக்கும் தன் ..’. அதில என்ன ஒரு சுகமோ. என்னத்த சொல்ல !

பா.ராஜாராம் said...

நிறைய படிக்காம விட்டுப் போயிருக்கே தீபா.. :-(

விடுங்க, டைம் கிடைக்கும் போது வந்து வாசிப்பேன்.

கொஞ்சூண்டு டைம், குடும்பம் பெரிசு, இப்படி.

// நேஹாவைப் பாக்க வந்த ஒருத்தங்க‌ அவ‌ க‌ல‌ர் க‌ம்மின்னு ரொம்ப‌ நேர‌ம் புல‌ம்பிட்டிருந்தாங்க‌. 'ந‌ல்ல‌ வேளை அக்கா, நல்ல கலர் மட்டும் இருந்து மூஞ்சியும் முழியும் உங்களை மாதிரி இருந்திருந்தா? யோசிச்சுப் பாருங்க...' அப்படின்னு சொல்ல நினைச்சு வேண்டாம்னு விட்டுட்டேன்.//

:-))

//ஸ்கின் கலர்னு சொல்லுங்க!//

பன்ச்!

(beutiful சிரிப்புடன் நேகா அசத்துறாங்க)

சாந்தி மாரியப்பன் said...

//"குழந்தை என்ன‌ க‌ல‌ர்னு கேட்டாங்க‌ன்னா" ஸ்கின் கலர்னு சொல்லுங்க!//

நச் பதில்!!!. என் பெண் பிறந்தப்பவும், கலர் கம்மி, பெண், என்ற காரணங்களால் நிறையப்பேர் அவளை பாக்கக்கூட வரலை. தேவதையின் தரிசனம் கிடைக்க கொடுத்து வைக்காதவர்களாகத்தான் அவர்களை நான் நினைத்தேன்..

ஒரு பெண் தனக்கு கலர்கம்மியா பெண் பிறந்தாலும், சந்தோஷம்தான் படறா.. அதே பெண் மாமியாராகும்போது, தன் பையனுக்கு பௌர்ணமி மாதிரிதான் பெண் வேணும்ன்னு நினைக்கிறா. ஏன், எங்கிருந்து ஆரம்பமாகிறது இந்த முரண்பாடு. யாராவது சொல்லுங்களேன்!!!!

Deepa said...

நன்றி வல்லிய‌ம்மா!

பாய்ஞ்சு என்ன‌ ப‌ண்ற‌து. அவங்களுக்கு அறிவு அவ்வளவு தான். ஆனா நிச்ச‌ய‌ம் ஏதோ சொல்லி இருப்பேன்னு வைங்க‌. ஆனா இந்த‌க் க‌மென்டை சொல்ல‌லை.

ந‌ன்றி சேது!

உண்மை தான் :)

ந‌ன்றி ராஜாராம்!
வாங்க‌, மெதுவா ப‌டிங்க‌. பெரிசா ஒண்ணுமே எழுதிட‌ல‌ நான்.

ந‌ன்றி அமைதிச்சார‌ல்!

ந‌ம்ம‌ குழ‌ந்தை எப்ப‌டி இருந்தாலும் ந‌ம‌க்குப் பிடிக்கும் தான்; பெருமை தான். ஆனா பொதுவா க‌ல‌ர் தான் அழ‌குன்னு ஒரு அழுக்குப் பிடிச்ச பார்வை எல்லார் ம‌ன‌திலும் இருக்க‌ற‌து தான் அதுக்குக் கார‌ண‌ம். அது மாற‌ணும்.

Thank you Maria!

Anna said...

:) என் மகன் பிறக்கும் போது சந்தேகப்படுமளவு வெள்ளை :) Probably because he was almost two weeks overdue, but I think most babies are fair when they are born. ஆனால் அவன் வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக எமது நிறத்திற்கு வந்துவிட்டான். அண்மைக்காலங்களில் சனம் எனக்குச் சொல்வது 'மகன் நிறம் குறைஞ்சிட்டான் என்ன. கவலைப் படாதைங்கோ", "சிலவேளைகளில் 20 வயதிற்கு மேல் திரும்பவும் நிறப்பான்' (?!) have no idea where they got that info from. Most common one "ஆம்பிளைப்பிள்ளை தானே பரவாயில்லை." Grrrr. அறையோணும் போல் இருக்கும்.நான் 'ஒன்றும் designer baby உருவாக்கவில்லை. எமது நிறம் எதுவோ அப்படியேதானே இருப்பான். மாறிப் பிறந்தால் தானே கவலைப்படவெண்டும்" என்பேன். எனக்கு மட்டும் சொன்னால் பரவாயில்லை. I can just be amused at their ignorance. ஆனால் என் மகனுக்கு முன்னால் சொல்லும் போது தான் கோபம் பொத்திக் கொண்டு வரும்.

مكتب said...

dear deepa ,
mmm itz so nice
itha mathiri oru mukyamana color problem athanala yerpatta mana valinu oru periya kadha iruku but enga eluthurathunu than thinking blog create pannalamna yaarpa atha padika poranu oru thinking enna pannalaam?

VELU.G said...

//ஸோ! இனிமே உங்க நெருக்கமானவங்களுக்குக் குழ‌ந்தை பிற‌ந்த‌ செய்தியை யார் கிட்டெயாச்சும் சொல்லும் போது "குழந்தை என்ன‌ க‌ல‌ர்னு கேட்டாங்க‌ன்னா" ஸ்கின் கலர்னு சொல்லுங்க! மண்ட காயட்டும்
//

சரிங்க......யப்பா எவ்வளவு கோபம்