வேலை, படிப்பு, அன்றாட அலுவல் தவிர
தினந்தோறும் கிறுக்குத் தனமாய்த் தேடுவது
தொலைந்து போன நினைவுகளை
மீட்டெடுக்கும் விதமாகத் தேடித் தேடித் தோற்பது
எல்.கே.ஜீ யில் தூக்கி வைத்துச்
சோறூட்டிய டீச்சரின் பெயரை
ரத்னபாலா பாலமித்ரா பழைய இதழ்கள் கிடைக்கும் இடங்களை
அமைதியான ஞாயிறொன்றில் தூக்கக் கலக்கத்துடன்
அம்மா மடியில் படுத்துக் கொண்டே பார்த்த
சோகமான மராத்திப் படத்தை
'எனிமி' என்று கருதிக் மல்லுக் கட்டி நின்றவன்
ஜுரத்தில் நான் படுத்த மறுநாள்
ஆளே மாறிய கூச்சத்துடன்
கணக்கு நோட்ஸ் கொண்டு வந்தானே
கள்ளமில்லா அந்த பால்ய சினேகத்தை...
Obsessed with the past என்பார்களே - அது இது தானா?
12 comments:
உங்கள் மலரும் நினைவுகளை ரசித்தேன்
ரசிக்க வைத்தது...
நல்லா இருக்கே!
அப்புறம் முதல் வரி மறந்த பாடலின் சரணங்களை...!
தேடல்/கூகுள் தொடர்கிறது; ஒவ்வொரு கணத்திலும், ஏதோவொரு சிறு கீற்றாய் வந்து செல்லும் வார்த்தைகளை தேடி...!
ஆஹா இந்த தேடல் சுகமானது.
கூகிள் எதை கொண்டு எல்லாம் பலரை இணைக்கிறது
இரசிப்பு :)
லேபிள்ஸ்.... படித்து ரசித்து சிரித்தேன்
ஆம். அது ஒரு சுகம் தான்.
அருமை
Your title is interesting.
இந்த சுகமான தேடல்கள் எல்லோருக்குள்ளும் இருக்கின்றன.
நல்லாயிருக்கு தீபா!
மலரும் நினைவுகள் .....அருமை
நிஜத்தில் தொலைந்த சிலேட்டுப் பென்சில்களை கனவில் தேடியது கூட நினைவுக்கு வருகிறது தோழி...
நினைவுத்துõளிகள் அசையும் போது, நிஜ உறக்கம் கலைந்து விடுகிறது.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே தோழியே...
Post a Comment