சமையல் தளங்கள்!
இரண்டு நாட்களாக வேறு பக்கமே பார்க்கவில்லை.
தமிழ் ஆங்கிலம், தென்னாடு, வடநாடு, சைவம், அசைவம், இத்தாலியன், சைனீஸ் என்று ஒரு சமையல் பக்கம் விடாமல் மேய்ந்து கொண்டிருக்கிறேன்.முக்கியமாக இந்தியப் பெண்களின் பக்கங்கள் தான்.
சமையல் குறிப்புகள் ஏதும் கற்கவா? இல்லை, சும்மா சப்புக் கொட்ட!
ஆனால் ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை பெண்கள், பெரும்பாலும் வெளிநாட்டில் வசிப்பவர்கள் எத்தனை சமையல் குறிப்புப் பக்கங்கள் வைத்திருக்கிறார்கள். சமைப்பதே கஷ்டம். அதை அழகாகச் செய்து, படங்கள் பிடித்து, குறிப்பு எழுதி வலையேற்றி...அப்பாடி!
இதில் அவ்வப்போது போட்டிகள் வேறு. Show me your breakfast event, Rice recipes challenge இத்யாதிகள்! யாராவது ஒரு பதிவர் போட்டி நடத்தி பரிசு வழங்க வேண்டும். தமிழில் சமையல் பக்கங்கள் வைத்திருப்பவர்களும் இதைச் செய்யலாமே! (சும்மா free advice!)
நேஹா!
இப்போது அநியாயத்துக்குப் பேசுகிறாள். யாரிடமிருந்து கற்றுக் கொண்டு வந்தாள் என்று தெரியவில்லை (பின்னே என் கிட்டேர்ந்துன்னு ஒத்துக்கவா போறேன்!) யாரையோ பார்த்து "எடுமை மாடே" என்று கத்தினாள்.
"நேஹா அப்படில்லாம் சொல்லக் கூடாது, அம்மா அடிப்பேன்." - கோபம் காட்டுகிறேன்.
"அம்மா...ஐ லவி யூ! " உடனே சிரித்துக் கொண்டு வந்து கட்டிக் கொள்கிறாள்.
போச்சுடா! எதற்காவது கொஞ்சம் கண்டித்தால் போதும், இதையே சொல்லி ஆளைக் கவிழ்த்து விடுகிறாள்.
ராவணன்!
ரொம்ப நாள் கழித்து ஒரு பெரிய பேனர் படத்தை ஆவலுடன் எதிர்பாக்கிறேன். காரணம் விக்ரம்! ஜோ என்ன தான் விக்ரம் இமேஜை என்னிடம் உடைக்கப் பார்த்தாலும் என் ஃபேவரிட் ஹீரோ விக்ரம் தான். ஐஸ்வர்யாவும் கொள்ளை அழகாக இருக்கிறார். பாடல்கள் தான் ஈர்க்கவில்லை. ஆனால் ரஹ்மானின் பல பாடல்கள் கேட்கக் கேட்கப் பிடித்துப் போகும். பார்ப்போம்.
சரி, தேவையில்லாம இவ்ளோ பெனாத்திட்டேன். அதற்குப் பரிகாரமாக இந்த நெகிழவைக்கும் தகவலைப் பகிர்ந்து கொள்கிறேன். பன்னிரண்டு வயதுச் சிறுவன் சிந்தித்திருப்பதைப் பாருங்கள்!
http://news.rediff.com/report/2010/jun/15/twelve-yr-old-summons-anderson.htm
Please read and spread it across!
7 comments:
/*அம்மா...ஐ லவி யூ! */
நேஹா சோ ஸ்வீட்
:)
நானும் சமையல் பக்கங்களை பார்த்து அசந்துதான் இருக்கிறேன்.எத்தனை விதம்..
உசிரே போகுது கூடவா?
//Madumitha said...
உசிரே போகுது கூடவா?
//
அந்தப் பாட்டு இப்போது அலைக்கழிக்க ஆரம்பித்திருக்கிறது! உண்மை தான். :)
ஹேய்...நேஹா சொல்றதை கேக்க ஆசையா இருக்கு...கொஞ்சம் ரெக்கார்ட் பண்ணி போஸ்ட் பண்றது?!
அப்புறம்....உதிரிப்பூக்கள் ரொம்ப ரேராதான் வருதே..ஏன்?! :-)
நாங்க இன்று ராவணன் படம் பார்க்க போறோமே....
:-)))))
Post a Comment