Thursday, February 12, 2009

ஒரு க‌தை


ஒரு ஊரில் ஒரு புலிக்குட்டி இருந்தது. அது சுதந்திரமாக காட்டு மேட்டில் விளையாடித் திரிந்த போது ஒரு அழகான கன்றுக்குட்டியைப் பார்த்தது. இரண்டும் நட்பாகிக் காதலாகித் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தன.


அப்போது க‌ன்றுக்குட்டி சொன்ன‌து. "நான் என் ம‌ந்தையை விட்டுப் பிரிந்து வ‌ந்தால் என் ம‌ந்தை மாடுக‌ள் துய‌ர‌ம் தாங்காம‌ல் நோய்வாய்ப்பட்டு விடும். என்ன‌ செய்வது"

இர‌ண்டும் வேத‌னையுட‌ன் சிந்த‌னையில் ஆழ்ந்த‌ன‌.
அப்போது க‌ன்றுக்குட்டி மிக‌வும் த‌ய‌ங்கிய‌வாறே, "ஒரு வ‌ழி இருக்கு.. சொல்ல‌ட்டுமா?" என்றது.

"என்ன‌?"

"நான் ஒரு அழ்கான‌ ப‌சுத்தோல் கொண்டு வ‌ந்து தரேன். அதைப் போர்த்திக்கிட்டு நீயும் என் ம‌ந்தையோட‌ சேர்ந்துடு. நீ புலிக் குட்டி தானு தெரிஞ்சாலும் அதைப்பெருசா க‌ண்டுக்க‌ மாட்டாங்க. திருமணத்துக்குப் பின் நீ தோலைக் கழட்டிடலாம். "

புலிக்குட்டிக்குப் பெற்றோரும் உற்றாரும் இருந்தாலும் அவை ம‌ந்தைக‌ளாக‌ இருக்க‌வில்லை. க‌ன்றுக்கு இருந்த‌ க‌ட்டுப்பாடுக‌ள் எதுவும் த‌ன‌க்கு இருப்ப‌தாகப் புலிக்குட்டி எண்ண‌வில்லை.
நீண்ட‌ யோச‌னைக்குப் பின் புலிக்குட்டி ச‌ம்ம‌தித்து. எந்த‌க் கார‌ண‌ம் கொண்டும் க‌ன்றுக்குட்டியை இழ‌க்க‌ அது விரும்ப‌வில்லை.


ப‌சுத்தோல் போர்த்திய‌ புலிக்குட்டிக்கும் க‌ன்றுக்குட்டிக்கும் விம‌ரிசையாக‌த் திரும‌ண‌ம் ந‌ட‌ந்த‌து. புலிக்கூட்டமும் மாட்டு ம‌ந்தையும் ஒன்றாக ஆரவாரத்துடன் க‌ல‌ந்து கொண்ட‌ன‌.

புலிக்குட்டியும் க‌ன்றுக்குட்டியும் ம‌கிழ்ச்சியுட‌ன் குடித்த‌ன‌ம் ந்ட‌த்த‌த் தொட‌ங்கின‌. புலிக்குட்டி ச‌ந்தோஷ‌மாக‌த் தான் இருந்த‌து. மந்தை‌யோடு சேர்ந்து புல் வேறு தின்ன‌ப் ப‌ழ‌கி இருந்த‌து. தோல் கொஞ்சம் க‌ன‌த்த‌து. ஆனால் க‌ன்றுக்குட்டியின் அன்புக்கு முன் எதுவும் பெரிதாக‌த் தெரிய‌வில்லை. அது த‌ன‌து அன்பின் சின்ன‌ம் என்று சுக‌மாக‌ அந்த‌ச் சுமையைச் சும‌ந்து திரிந்த‌து.

சிறிது காலத்துக்குப் பிறகு, மாட்டுத் தோல் ரொம்ப‌ க‌ன‌க்க‌ ஆர‌ம்பித்த‌து. மழையில் நனைந்தும் புழுதியில் அழுக்காகியும் அந்தத் தோல் அழுக ஆரம்பித்தது. அத‌னால் முன் போல‌ச் சுத‌ந்திர‌மாக‌ ஓடியாட‌ முடிய‌வில்லை. மாடுகள் முகம் சுளிக்கத் தொடங்கின. புலிகளோ "நீயாச்சு உன் மாட்டுத் தோலாச்சு, இனி நீ மாடாவே இருந்துடு" என்று சொல்லிவிட்டன. கன்றுக்குட்டி தோலைக் க‌ழ‌ற்றி எறிய‌ச் சொல்லுமா என்று உள்ளுக்குள் ஏங்கியது, புலிக்குட்டி. ஆனால் மாட்டு ம‌ந்தைக்குள் எப்போது சேர்ந்த‌தோ அப்போதே அத்ற்குப் புரிந்து விட்ட‌து இனி தோலைக் க‌ழ‌ற்றி எறிவ‌து வாழ்நாளுக்கும் சாத்திய‌மில்லை என்று.

க‌ன‌த்த‌ தோலை இழுத்துக் கொண்டு திரிந்த‌து. க‌ன்றுக்குட்டி எதையும் க‌ண்டு கொள்ள‌வில்லை. அது புலிக்குட்டியிட‌ம் மிகுந்த‌ அன்பாக‌வே இருந்த‌து. ஆனால் தோலைப் ப‌ற்றி ம‌ட்டும் பேச்சே இல்லை.

அந்த செத்த மாட்டுத் தோலில் தானா த‌ங்க‌ள் காத‌ல் ஊச‌லாடுகிற‌து என்று ம‌ன‌ம் வெம்பிய‌து புலிக்குட்டி. உட‌லும் ம‌ன்மும் சோர்ந்து வாயில் புல்லோடு ப‌ரிதாப‌மாக‌ ஊளையிட்ட‌து. தூர‌த்தில் ஓநாய்க‌ள் சிரித்துக் கொண்ட‌ன‌.
பி.கு. இந்த‌க் க‌தைக்கும் விடுத‌லைப் புலிக‌ளுக்கும் யாதொரு தொட‌ர்பும் இல்லை.

11 comments:

மாதவராஜ் said...

தீபா!


புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் காதல் வந்தால் புல்லையும் தின்னும் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.ம்... காதலர் தின ஸ்பெஷல் கதையா?
சரி, பெண்கள் தங்களை மறைத்துக்கொண்டு அல்லது சுருக்கிக்கொண்டு இப்படித்தான் புகுந்த வீட்டில் இருக்கிறார்களா?
ரசிக்கவும், சிந்திக்கவுமான கதைதான். பி.கு எதற்கு?

Deepa said...

Uncle!

ந‌ன்றி, ந‌ன்றி! வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும்..

இந்தப் புலி பசித்ததால் புல் தின்னவில்லை. மாடுகளுடன் தனது இசைவை நிலைநாட்டும் பொருட்டுத் தின்று பார்த்தது. அது ரொம்ப‌வும் உண‌ர்ச்சிவ‌ச‌ப்ப‌ட‌க் கூடிய‌ புலி! (முட்டாள் என்பதை டீசன்டாகச் சொல்கிறேன்!)

அப்ப‌டி வேறு ஏதாவ‌து புலிக‌ள் காத‌ல் ம‌ய‌க்க‌த்தில் இருப்பின் அவ‌ற்றுக்கு ஒரு எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ட்டுமே என்று இதை எழுதினேன்.மண‌ வாழ்க்கையில் யாராவது ஒருவர் இன்னொருவருக்கு விட்டுக்கொடுப்ப‌து மிக‌வும் எளிது. எதை விட்டுக் கொடுக்கிறோம் என்று அறிந்து புரிந்து விட்டுக் கொடுக்க‌ வேண்டும். முக்கிய‌மாக‌ எதையும் பிர‌திப‌ல‌னாக‌ எதிர்பார்க்காம‌ல் விட்டுக் கொடுக்க‌முடிந்தால் ச‌ரி. இல்லாவிட்ட‌ல்
கூடாது. இல்லையேன்ற‌ல் இருவ‌ருக்குமே அது பெரிய‌ ச‌ங்க‌ட‌மாக‌ இருக்கும்.

இது தான் அந்த‌ப் புலிக்குட்டி மிக‌ மிக‌த் தாம‌த‌மாக‌க் க‌ற்றுக் கொண்ட‌ பாட‌ம்.

பி.கு. புலிக்குட்டி இப்போது தோலைக் க‌ழ‌ற்றி வீசி விட்ட‌து.ஆனால் இன்னும் தோல் ப‌ட்ட‌ இட‌ங்க‌ள் கொஞ்ச‌ம் ர‌ண‌மாக‌... அவை காத‌ல் விழுப்புண்க‌ள் என்று ச‌மாதான‌மாகிற‌து!

Deepa said...

//பி.கு எதற்கு?//

இல்லை புலி என்ற‌வுட‌ன் எல்லாருக்கும் நினைவுக்கு வ‌ருவ‌து அவ‌ர்க்ள் தானே. எச்ச‌ரிக்க‌க்காக‌ இல்லாஇ குழ‌ப்ப‌ம் இல்லாம‌லிருக்க‌த் தான் அந்த‌ப் பி.கு.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

அவன்யன் said...

சொல்லவே இல்லே உங்களுக்கு இது மாதிரி எல்லாம் கதை எழுத தெரியுமா

butterfly Surya said...

நல்லாயிருக்கு.

வாழ்த்துகள்.

Deepa said...

அவன்யன்!

எனக்கே தெரியாது! அதுவா வந்துச்சு!
பை த‌ வே, இதைக் க‌தை என்று ஒத்துக் கொண்ட‌த‌ற்கு ந‌ன்றி!!

Deepa said...

நன்றி வண்ணத்துப்பூச்சியாரே!

மாதவராஜ் said...

வாழ்த்துக்கள்!

இந்தப் பதிவு விகடனின் good blogல் வந்திருக்கிறது.
முகவரி:
http://youthful.vikatan.com/youth/index.asp

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

Deepa said...

அமிர்த‌வ‌ர்ஷினி அம்மா!

வ‌ருகைக்கு ந‌ன்றி;

:-)- அப்ப‌டீன்னா??