Monday, February 2, 2009

ப‌லியாடுக‌ள்
இந்த அரசியல் கட்சிகளின் சண்டைகளில் அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாகப் பாதிப்படைகிறார்கள். இவர்களுக்கு எது எதில் தான் அரசியல் பண்ணுவது என்ற வரைமுறை இல்லை?
பிஞ்சுக் குழ‌ந்தைக‌ளுக்கு போலியோ தடுப்புச் சொட்டு ம‌ருந்து அளிக்கும் ப‌ணி சில காலமாகவே ந‌ம் நாட்டில் நன்றாக‌ நட‌ந்து வ‌ருகிற‌து. எந்த‌ அர‌சு ஆட்சிக்கு வ‌ந்தாலும் இத்துறையில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஆர்வ‌த்துட‌ன் செய‌ல்ப‌ட்டு போலியோவை அற‌வே ஒழிக்க‌ச் சிற‌ந்த முறையில் பாடுப‌டுகிறார்க‌ள். இவ்வாறிருக்க‌ டிச‌ம்ப‌ர் 21 போலியோ தின‌த்த‌ன்று ஒரு பொறுப்பில்லாத‌ த‌னியார் தொலைக்காட்சி ப‌ர‌ப்பிய‌ பொய்ச் செய்தியால் (ம‌ருந்து கொடுக்க‌ப்ப‌ட்ட‌தால் ஒரு குழ‌ந்தை இற‌ந்து போன‌தாக‌)பீதி கிள‌ம்பிய‌து. பின்ன‌ர் அதன் போட்டித் தொலைக்காட்சி (அர‌சு சார்ந்த‌)அது வெறும் வதந்தி என்று ப‌டாத‌ பாடுப‌ட்டு நிரூபித்த‌து. ஆனால் இவர்களின் இந்த குடுமிபிடிச் சண்டையோடு முடிய‌வில்லை.
நேற்று (பிப்ர‌வ‌ரி 1) மீண்டும் போலியோ த‌டுப்பு தின‌ம். என்ன‌ கொடுமை...யாருக்காக‌ இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதோ அந்த‌ ஏழை எளிய‌ ம‌க்க‌ள் ப‌ய‌ந்து போய் முகாம்க‌ளைப் புற‌க்க‌ணித்துள்ள‌ன‌ர். த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளுக்குப் போய் ஆயிர‌ம் ஆயிர‌மாக‌ச் செல‌வ‌ழித்து ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ முடியுமா அவ‌ர்க‌ளால்? அவ‌ர்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ச் செய்ய‌ப்படுகின்ற‌ ஒரு பணி, நம் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, அவர்கள் வாழ்வில் இருள் சூழாதிருக்கும் பொருட்டு ஆற்றப்படும் ஒரு நல்ல செயல் கேவ‌ல‌மான‌ அர‌சிய‌ல் பூச‌ல்க‌ளினால் க‌றைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருக்கிற‌து.
வதந்தி பர‌ப்பிய‌ அந்த‌த் தொலைக்காட்சி மீது வ‌ழ‌க்குத் தொட‌ர‌ முடியுமா? யாராவ‌து சொல்லுங்க‌ளேன்.

10 comments:

மாதவராஜ் said...

தீபா!

நியாயமான கோபம்.தலைப்பும் மிக அருமை. அரசியல் சதுரங்கத்தில் மக்களே எப்போதும் வெட்டப்படுகிறார்கள்.

Anonymous said...

இந்த அரசியல் கட்சிகளின் சண்டைகளில் அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாகப் பாதிப்படைகிறார்கள். இவர்களுக்கு எது எதில் தான் அரசியல் பண்ணுவது என்ற வரைமுறை இல்லைடூ
//
சரியாக சொன்னீங்க போங்க. விவஸ்தை இல்லாதவர்கள் தான் அரசியல்வாதிகள். தேர்தல் வந்தாலே யாருடன் கூட்டு சேர்ந்தால் அதிக தொகுதி கிடைக்கும் என்று கணக்கு போட்டு மக்களை பகடை காயாக பயன்படுத்தி உருண்டுவது தான் அவர்களுடைய வேலை. என்ன செய்ய?

Deepa said...

Uncle!

க‌டைய‌ம் ஆன‌ந்த்!


த‌ங்க‌ள் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி!

நான் ப‌திவில் கேட்ட‌ கேள்விக்கு உங்க‌ள் ப‌தில் என்ன‌வோ?

narsim said...

பொது நல வழக்கு தொடரலாம்... ஆனால் தீர்ர்பு வருவதற்குள் அடுத்த தேர்தல் வந்து ஒருவேளை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு பொதுவாக நலமே இருக்காது..

வெட்கக்கேடான நிலை இதுதான்.. பை தி வே.. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க‌

Deepa said...

Narsim!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

//ஒருவேளை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு பொதுவாக நலமே இருக்காது//

:-)) உண்மை தான்!

butterfly Surya said...

எல்லா கட்சிகளும் இப்படிதான். முதலில் மக்கள் நலன் என்று ஆரம்பித்து பின்பு கபட நாடகங்களையும், கேலி கூத்துகளையும் நடத்தி விட்டு அதைவிட பிண்ங்களின் மீது ஏறி கூட தயாராகி நாற்காலிக்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணிந்து விடுகின்றனர். ஆனால் கண்டிக்க வேண்டிய மீடியாக்களே கேவலமாக நடப்பது வேதனை..

நமீதா படம் இல்லாத வார பத்திரிகைகள் உண்டா..

அழுது வடியும் சீரியல் இல்லாத தொலைக்காட்சி உண்டா..??

நடிகனுக்கு பாலாபிஷேகம், நடிகைக்கு கோயில்.. எங்கே போகிறான் தமிழன்...???


நல்ல உள்ளம் கொண்ட அனைத்து இந்தியர்களுக்கும் கடும் கோபத்துடன் கூடிய வேதனையும் வருத்தமும் கொண்ட ஒர் மன நிலை தற்போது உள்ளது என்பது தெள்ள தெளிவாகிறது..

நமக்கு தேவை:

"தன்னலமற்ற, ஊழலற்ற உறுதியான தலைவர் தான்" Not political parties..

அது யார் ...???

எப்போது..???

கண்டிப்பாக வருவார் என்ற எதிர்பார்புடன் ....

இந்தியாவை அதிகமாக நேசிக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுள் உங்களை போன்ற ஒரு சமானியன்...

Deepa said...

வண்ணத்துப்பூச்சியாரே!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ஆனால்...
//நமக்கு தேவை:

"தன்னலமற்ற, ஊழலற்ற உறுதியான தலைவர் தான்" Not political parties..

அது யார் ...???

எப்போது..???

கண்டிப்பாக வருவார் என்ற எதிர்பார்புடன் .... இந்தியாவை அதிகமாக நேசிக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுள் உங்களை போன்ற ஒரு சமானியன்...//

இப்ப‌டி க‌ன‌வு காண்ப‌து ம‌ட்டும் தானா 100 கோடி ம‌க்கள் அடங்கிய நமது "மானிடப்பெருங்கடல்" ஆற்றக்கூடிய‌ ஒரே செய‌ல்?

butterfly Surya said...

கனவா? நனவாகுமா தெரியாது..


எண்ணங்கள்.. செயலாகும் கண்டிப்பாக..

Anonymous said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

கார்க்கிபவா said...

வெட்ககேடான நிலை தான்.. :((