Friday, December 19, 2008

ஒரு கால் சென்டரில் ஓரிரவு

One Night @ the Call Center
இந்த‌ப் புத்த‌க‌த்தைப் ப‌ற்றி வெகு நாட்க‌ளாக‌ அறிந்திருந்தாலும் 2 நாட்க‌ளுக்கு முன்பு தான் ப‌டிக்க‌ முடிந்த‌து.
இந்தியா முழுவதும் ப‌ல்வேறு சிறு ந‌க‌ர‌ங்க‌ளில் 18 முத‌ல் 30 வ‌ய‌து வ‌ரை சுமார் 300,000 இளைஞ‌ர்க‌ள் கால்சென்டர் துறையில் ப‌ணிபுரிகிறார்க‌ள்.அமெரிக்க நுகர்வோருக்கு வாஷின் மெஷினைப் பழுது பார்க்கவும் மைக்ரோவேவ் அவ‌னை உப‌யோகிக்க‌வும் தொலைபேசியில் பொறுமையாக‌ச் சொல்லித்த‌ர‌ வேண்டியது அவ்ர்க‌ள‌து வேலை. அவ‌ர்க‌ளுக்கு இவ‌ர்க‌ள் இந்திய‌ர்க‌ள் என்ப‌து எக்கார‌ண‌ம் கொண்டும் தெரிந்து விட‌க் கூடாது. அமெரிக்க‌ப் பெய‌ர்க‌ள் வைத்துக் கோண்டு அமெரிக்க‌ ஆங்கில‌ம் பேசுவ‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல், அன்னாட்டு ம‌க்க‌ளின் சின்னச் சின்னப் ப‌ண்டிகைக‌ள், லோக்க‌ல் செய்திக‌ள் ஆகிய‌வ‌ற்றிலும் அத்துப்ப‌டியாக‌ இருக்க‌ வேண்டும்.
அப்ப‌டி ஒரு கால்சென்ட‌ரில் இரவு நேர ஷிப்டில் ப‌ணிபுரியும் ஆறு ந‌ண்ப‌ர்கள், (மூன்று ஆண்க‌ளும் மூன்று பெண்க‌ளும்)அவ‌ர்க்ள‌து வாழ்வின் அவலங்கள்,அவ‌ர்க‌ள‌து கோளாறான‌ வாழ்க்கை முறை,அவர்கள் சந்திக்கும் அவமானங்கள், இவற்றில் இலகுவாகப் பயணிக்கிறது கதை. ஒரு நாள் இரவு அவர்களுக்கு வினோத‌மான் தொலைபேசி அழைப்பு வ‌ருகிற‌து. க‌ட‌வுளிட‌மிருந்து! அது அவ‌ர்களின் சிந்தனைகளிலும் செயல்களிலும் என்னவிதமான மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்பதைச் சுவாரசியமாகச் சொல்லி இருக்கிறார் இப்புத்தகத்தை எழுதிய சேத்தன் பகத்.
சின்ன நெருடல். கதை மாந்தரை வட மாநிலங்களின் க்ள்ப் கலாசாரங்களைப் பொதுவாக நம் நாட்டு இளைஞர்களின் கலாசாரமாகப் பொதுநிலைப் படுத்தியுள்ளதை ஏற்க முடியவில்லை. அதுவும் அவர்களின் கால்சென்டர் கலாசாரத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பு என்பதை ஆசிரியர் அழுத்தமாக முன்வைக்க வில்லை. இது போல் சில இடங்களில் பாத்திரங்கள் கொஞ்சம் அந்நியப்பட்டுப் பொகிறார்கள். மற்றபடி முற்போக்கு இல‌க்கிய‌ங்க‌ள் விரும்பும் வாச‌க‌ர்க‌ள் ப‌டிக்க‌ வேண்டிய‌ நூல்.
த‌மிழில் மொழிபெய‌ர்க்க‌த் த‌குந்த‌தா என்று ப‌டித்துவிட்டு (அல்ல‌து ஏற்க‌ன‌வே ப‌டித்த‌வ‌ர்க‌ள்) யாராவ‌து சொல்லுங்க‌ள்.

9 comments:

Anonymous said...

Deeps,

I read this book long ago. A bit cinematic in the end. I wanted to read this after I had completed Five Point Someone. Chetan's style of writing caught on me. Except his style (witty, satirical, etc), the story doesn't haunt you after you complete it. It is not meant to haunt you, I think.

Deepa said...

Yes Ramki. Even I found the end very cinematic. And to tell you the truth, the book was kind of a let-down to what I had expected it to be. It focused a lot more on Shyam's relationship with Priyanka rather than more serious issues faced by call-center employees.
and yes, it did not haunt me either!

ரஃபிக் ராஜா said...

வியாபார நோக்கத்துடன் வெளியிடப்பட்ட கதை புத்தகம், அதில் வேற என்ன எதிர் பார்க்க முடியும். :)

ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

Deepa said...

ம்...அப்படித்தான் தோன்றுகிறது ரஃபிக். ஆனால் மொத்தமாக அப்படி ஒதுக்கிவிட முடியாமல் அத்துறையில் வேலை பார்ப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துக்களும் இருந்தன.

ரஃபிக் ராஜா said...

ஹ்ம்ம்... ஆர்வத்தை தூண்டி விடீர்கள் தீபா. புத்தகத்தை படித்து விட்டு பின்பு பின்னூட்டம் இடுகிறேன்.

Deepa said...

:-)எனக்கும் நீங்கள் படித்த நல்ல நூல்கள் ஏதாவது சிபாரிசு செய்யுங்கள்.

மாதவராஜ் said...

தீபா!

புத்தகத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.
இதுபோன்ற புத்தகங்கள் முதலில் மிகத் தேவை என நினைக்கிறேன்.
கால் செண்டர் என்றால் என்ன அன்று அறியாத இந்தைய பிரஜைகள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புதுகை.அப்துல்லா said...

எனக்கு அந்தப் புத்தக்த்தில் முழு உடன்பாடு இல்லை சகோதரி. காரணம் நீங்களே சொல்லி இருக்கின்றீர்கள் :)

Deepa said...

உண்மை தான் uncle. ஆனால் நமது கலாசாரம் அப்படி சீரழிகிறது என்பது தான் நம் கவலையே. இந்தப் புத்தகத்திலோ நமக்கு அதிர்ச்சி தரும் பல விஷயங்கள் இயல்பாக உள்ளது போல் பொதுப்படையாக சொல்லப்படுகின்றன. அதை ஏற்க முடியாதவர்கள் பத்தாம்பசலிகள் என்று ஆசிரியரே தீர்மானித்துவிட்டது போல் இருக்கிறது. அது தான் கொஞ்ச‌ம் எரிச்சலுற வைக்கிறது.

சகோதரர் அப்துல்லா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.