சென்னையில் அன்றாடம் வேலைக்கு, கல்லூரிகளுக்கு வெகு தொலைவு பயணிக்க வேண்டி இருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த ஷேர் ஆட்டோ ஒரு வரம் என்றே சொல்லலாம்.
ஷேர் ஆட்டோ என்றால் என்னவென்று தெரியாத சிலருக்காக ஒரு சின்ன அறிமுகம். சாதாரண ஆட்டோவை விட ஒன்றரை மடங்கு பெரிதாக இருக்கும். ஆனால் முன்று நான்கு மடங்கு அதிக நபர்களை ஏற்றிச்செல்லும் வல்லமை படைத்தது. ஒரு மினி வேன் போல் பின்னால் இரு வரிசைகள் எதிரில் ஒரு சின்ன வரிசை இருக்கும். சிலவற்றில் பின்னால் மட்டும் நான்கு பேர் அமரும் படி மினி ஷேர் ஆட்டோ வாக இருக்கும்.
சாதா ஆட்டோவில் 50 ரூபாய் ஆகும் இடத்துக்கு இதில் 5 ரூபாய் கொடுத்தால் போதும். பேருந்து நிறுத்தங்களில் காலை மற்றும் மாலை அவசர நேரங்களில் கிடைக்கும் ஷேர் ஆட்டோக்களில் (குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும்) ஏறி அவரவர் வேண்டிய இடங்களில் இறங்கிக் கொள்ளலாம்.
மாநகரின் எழுதாத விதிப்படி இதிலும் இவ்வளவு பேரைத் தான் ஏற்றலாம் என்ற வரை முறை இல்லை. எப்போதும் டிரைவருக்கு இருபுறமும் இருவர், பின்பு சீட்களில் நெருக்கியடித்து எவ்வளவு பேர் முடியுமோ அவ்வளவு. சில ஆட்டோக்களில் கட்டணம் வசூலிக்க ஒரு சிறுவன் (ஆம் குழந்தைத் தொழிலாளி தான்) இருப்பான்.
அன்று மாலை வழக்கம் போல் நானும் சக பயணி ஒருவரும் பேர்ந்து நிறுத்தத்தில் நின்றிருந்தோம். வெகு நேரம் கழித்து வந்தது ஒரு ஷேர் ஆட்டோ. அதிலிருந்து சிலர் இறங்கவும் நாங்கள் அடித்துப் பிடித்து ஏறினோம். மழை வேறு வரும் போலிருந்தது. ஆட்டோ புறப்பட்ட பின்பு தான் பார்க்கிறேன் பதின்மூன்று பதிநான்கு வயதிருக்கும் அவனுக்கு, ஆட்டோவின் வாசலைப் பிடித்து நின்றபடி வருகிறான். நன்றாகக் கவனியுங்கள் இது பஸ் இல்லை. மேலேயோ பக்கவாட்டிலோ பிடித்துக் கொள்ள கம்பிகள் இல்லை. நான் அதிர்ந்தே போனேன். ஏனென்றால் அவன் எழுந்து கொண்ட இடத்தில் தான் நான் அமர்ந்திருந்தேன். அவன் இறங்கவில்லை. கட்டணம் வசூலிப்பவன் என்று புரிந்தது.
பின்னால் அமர்ந்திருந்த பெண்மணிகளில் சிலர் "மடியில் தான் உக்கார்த்தி வெச்சுக்கணும் இவனை.." என்று கிண்டலடித்தபடி இருந்தார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கொஞ்சம் நகர்ந்து அவனை உட்காரும்படி சொன்னேன் (கீழே தான். சிட்டில் எனக்கே இடமில்லை) அவன் மறுத்து விட்டான். அவன் விழுந்துவிடக் கூடாதே என்று அனைவருமே தவிப்புடன் இருந்தோம். என் அருகில் இருந்த பெண் மட்டும் என் காதில் குனிந்து, "ஏய் கவலைப்படாதே. இதெல்லாம் இவர்களுக்கு ஸ்டைல்! பஸ்ஸில் பார்த்ததில்லை? இடமிருந்தால் கூட உட்காராமல் ஸ்டன்ட் காண்பிப்பார்கள்." ஏனோ எனக்கு முணுக்கென்று கோபம் வந்தது. "அது வேறு இது வேறு" என்று மட்டும் சொல்லிப் பேசாமல் இருந்து விட்டேன்.
என் சிந்தனையை அவன் குரல் த்டை செய்தது. இடம் தரச் சொல்லிக் கேட்கிறானோ என்று நினைத்து "என்னப்பா?" என்றேன் நெகிழ்ந்து. ஒரு அலட்சியப் புன்னகையைச் சிதறவிட்டபடி "உம்? காசெடுங்க" என்று அதட்டினானே பார்க்கவேண்டும்! அப்போது தான் புரிந்தது; தான் விழுந்து விடுவோமோ என்பதை விடக் காசு தராமல் யாரும் இறங்கி விடக் கூடாது என்பதிலேயே அவனுக்கு அதிக கவன்ம் இருந்திருக்கிறது.
11 comments:
தீபா!
சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் விவரித்திருக்கிறாய்.
தொந்தரவு செய்கிற ஒரு பதிவு.
புதுமைப்பித்தனின் மெஷின் கதை ஞாபகத்திற்கு வந்தது.
வித்தியாசம் என்னெவென்றல், அவன் மெஷின் இல்லை, மனிதன் தான் என்று அவர் உணர்த்துவார்.
இங்கு, அவன் மனிதன் இல்லை, மெஷின் தான் என்று சொல்லியிருக்கிறாய்.
காலம் இப்படிப் பார்க்கச் செய்கிறது.
Title is very opt. Kalakkittappa. Cleared 16 feet in one jump:) Keep it up.
Oops! the previous Anony post was mine, Deeps! The Ubuntu + Firefox combo throws tantrums, sometimes:)
சிறுகதையாகவே எழுதி இருக்கலாம். நல்ல பதிவு மேடம் .
ரேகா ராகவன்
Uncle, Ramki, Raghavan, Thanks!
Uncle! இவனும் மனிதன் தான். ஆனால் அப்படித் தொங்கிக் கொண்டு வருவது அவனுக்குப் பழகிய ஒன்று. அவனுக்கு விழுந்துவிடுவோம் என்ற பயம் இல்லை. ஆனால் காசு வாங்க வேண்டியது அவனது பொறுப்பு. அதில் தவறவே கூடாது என்று அவன் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறான். அதனால் தான் அவனை எந்திரன் என்று அழைத்தேன்.
ஷேர் ஆட்டோவின் தாய்வீடு புதுச்சேரிதான். அங்கு இது போன்ற பையன்களை சர்வசாதாரனமாக பார்க்கலாம் இப்போதெல்லாம் அது போல் பையன்களை அங்கு கூட பார்க்க முடியவில்லை. இப்போதெல்லாம் வண்டி ஓட்டும் டிரைவர்களே சில்லரை கொடுங்கள் என்று வண்டி நிறுத்தி வசூலித்து கொள்கறார்கள். ஆனால் இது போல் கொள்ளை அடிக்கமாட்டாக்ள். இரண்டுகிலோமீட்டருக்க 3ரூபாய்தான் என் அங்கு டீசல் லிட்டருக்கு 5 ருபாய் கம்மி. அன்னா பல்கலை கழகத்தில் இருந்து கிண்டி வரும் வரை ஒரு நபருக்க பத்து ரூபாய் இது அநியாய கொள்ளை அல்லவா
000000000
அசுரத்தனமான ஆட்டோவின் பதிவு அருமையாக இருக்கிறது
நன்றி "நான்"!
மாறுபட்ட சிந்தனை.
Post a Comment