Saturday, November 8, 2008

கற்றது சிவில்!

"க‌ற்ற‌து த‌மிழ்" ப‌ட‌ம் பார்த்தேன். ப‌ர‌ப‌ர‌ப்புக்காகப் ப‌ல‌ மிகைப்ப‌டுத்த‌ப் பட்ட காட்சிக்ளும் அதிர்ச்சி தரும் சைக்கோத்தனங்களும் இருந்தாலும் சொல்ல வந்த மையக் கருத்து என் இய‌ல்பு நிலையை வெகுவாக‌த் தொந்த‌ர‌வு செய்த்து. குறிப்பாக‌ ஐ.டி தொழிலை ந‌ம்பித் தான் நாங்க‌ளும் ஜீவ‌ன‌ம் ந‌ட‌த்துகிறோம் என்ப‌தால். த‌மிழில் தொட‌ங்கி வ‌ர‌லாறு, புவியிய‌ல், அறிவிய‌ல், தத்துவ‌ம் என்று எந்த‌ப் ப‌டிப்பினைப் ப‌டித்த‌வ‌னுக்கும் ந‌ம் நாட்டில் வேலை வாய்ப்பில்லை, ஆனால் "பொட்டி" த‌ட்டும் ப‌டிப்பினைக் கற்ற‌‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் வ‌ச‌தி மிகுந்த‌ வாய்ப்புக்க‌ள் கொட்டிக் கிட‌ப்ப‌தாக‌ நாய‌க‌ன் குமுறுவ‌து உண்மையில் சிந்திக்க‌ வேண்டிய‌ ஒன்று.

ஒரு ச‌ந்த‌தியே அயல்நாடுகளுக்கு கூலி வேலை செய்து பிழைக்கும் வ‌ண்ண‌ம் இருக்கிற‌து.

தேசிய‌ பொருளாதார‌ம், உல‌க‌ம‌ய‌மாக்க‌ல் இவை ப‌ற்றி எல்லாம் பேச‌ என‌க்கு அதிக‌ அறிவும் தெளிவும் போதாது. ஆகையால் அதை விட்டு விடுகிறேன்.
என் சொந்த‌ அனுப்வத்தை விவ‌ரிக்க‌ட்டுமா?

நான் 1999 ஆம் ஆண்டு சிவில் எஞ்சினிய‌ரிங் ப‌ட்ட‌ப் ப‌டிப்பை முடித்தேன். அப்போதே என்னுட‌ன் ப‌டித்த‌ ப‌ல‌ர் க‌ணிப்பொறி ப‌டிப்பையும் கையோடு முடித்து வேலை பெற்றிருந்தார்க‌ள். நானும் சில‌ரும் ப‌டித்த‌ க‌ட்ட‌ட‌ப் பொறியிய‌ல் துறையிலேயே வ‌ல்லுன‌ர்க‌ளாக‌ வேண்டும் என்று விரும்பி அந்த‌ப் ப‌க்க‌மே போக‌வில்லை. சிற‌ந்த‌ ம‌திப்பெண்க‌ள் பெற்று வெகு விரைவில் பெரிய‌ பெரிய‌ க‌ட்ட‌ட‌ங்க‌ளும் அணைக்க‌ட்டுக்க‌ளும் க‌ட்ட‌ப் போகும் க‌ன‌வுக‌ளுட‌ன் க‌ல்லூரி விட்டு வ‌ந்த‌ என‌க்கு எங்கு சென்றாலும் ஏமாற்ற‌ங்க‌ள் தான் மிஞ்சின‌.

முத‌ல் கார‌ண‌ம், ஆண்க‌ள் ஆதிக்க‌ம் செலுத்தும் க‌ட்ட‌ட‌த் தொழிலில் பெண்களை வேலையில் எடுக்க‌த் த‌ய‌ங்கின‌ர். மேலும் உண்மையிலேயே வேலை வாய்ப்புகளும் மிக‌வும் குறைவாக‌ இருந்த‌ன. சரி, விரிவுரையாளர் வேலைக்கு முயன்றால் புதிதாகத் தொடங்கப்பட்ட க‌ல்லூரிக‌ளில் க‌ட்ட‌ட‌ப் பொறியிய‌ல் பாட‌மே இல்லை. பொறியிய‌ல் ப‌ட்ட‌தாரி என்ப‌தை ம‌ற‌ன்து விட்டு "ஏதோ ஒரு வேலை" என்று நாளித‌ழில் தென்ப‌ட்ட‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளைத் தொட‌ர்ந்து எங்கெங்கொ வேலை தேடி அலை‌‌ந்தேன். எதுவும் ப‌ய‌ன‌ளிக்க‌ வில்லை.

இத‌னிடையில் த‌ர‌ம‌ணி த‌ர்மாம்பாள் பெண்க‌ள் தொழில்நுட்ப‌ப் ப‌ட்ட‌ய‌ப் ப‌டிப்புச் சாலையில் ஆறு மாத‌ங்க‌ள் ப‌ணி புரிந்தேன். க‌ல்வி க‌ற்பிக்கும் அந்த‌ப்ப‌ணி ம‌ன‌துக்குத் திருப்தியாக‌ இருந்த‌ போதும் ச‌ம்ப‌ள‌மே இல்லாம‌ல் எவ்வ‌ள‌வு நாள் ப‌ணியாற்றுவ‌து?
ஆம், அங்கு நிர‌ந்த‌ர‌ விரிவுரையாள‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே ஒழுங்காக‌க் கைநிறைய‌ச் ச‌ம்ப‌ள‌ம் வ‌ரும். என்னைப் போல் கான்ட்ராக்ட்டில் ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ள் எங்க‌ள் வேலை நேர‌ங்க‌ளைக் குறிப்பெடுத்து மேல‌திகாரிக‌ளிட‌ம் கையொப்ப‌ம் பெற்று அலுவ‌ல‌க‌த்தில் ஒப்ப‌டைத்து‌ 15 நாட்க‌ளுக்குப் பின்பு ச‌ம்ப‌ள‌ம் வ‌ரும். ஆனால் என்ன‌ நேர‌மோ நான் வேலைக்குச் சேர்ந்து முத‌ல் மாத‌ம் ம‌ட்டுமே ஒழுங்க‌க‌ ச‌ம்ப‌ள‌ம் வ‌ந்த‌து. பின்ன‌ர் "அர‌சிடமிருந்து நிதி வ‌ராத‌" கார‌ண‌த்தால் 5 மாத‌ங்க‌ளுக்கு ச‌ம்ப‌ள‌மே வ‌ர‌வில்லை. மேலும் ஒன்றரை மணி நேரம் நகரப் பேருந்தில் நசுங்கிக் கொண்டு போய் வர வேண்டி இருந்தது. வெறுத்துப் போய் அந்த வேலையை விட்டேன்.(அந்தப் பணம் இன்னொரு ஆறு மாத‌ங்க‌ள் க‌ழித்து மொத்த‌மாக‌க் கிடைத்தது என்ன‌வோ உண்மை)

அப்போது தான் இந்த‌ இன்ட‌ர்னெட் புர‌ட்சி சூடு பிடிக‌த் தொட‌ங்கி இருந்த‌ நேர‌ம் நான் வெட்டியாக‌த் தானே இருந்தேன். வேலை தேட‌, சும்மா வேலையில் இருந்த‌ என் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் "ச‌ட்" செய்ய‌ என்று பிரௌசிங் சென்ட‌ருக்குச் செல்வ‌து என் வ‌ழ‌க்க‌மாகி இருந்த‌து. அப்ப‌டி நான் வ‌ழ‌க்க‌மாக‌ச் செல்லும் இட‌த்தின் முத‌லாளி என் ந‌ண்ப‌ராகி இருந்தார். அவ‌ர் தான் என‌க்கு ஒரு நாள் சொன்னார். "நீ ஏம்மா சிவில் துறையையே பிடிச்சுக் கிட்டு இருக்கே. க‌ம்ப்யுட்ட‌ர் ப‌டிப்பு ஏதாவ‌து ப‌டி. ந‌ல்லா வ‌ருவே." என்றார். ஏற்க‌ன‌வே என் மீது அகறை உள பல பேர் சொல்லி இருந்தாலும் அன்று ஒரு வேக‌ம் வ‌ந்த‌து. சைக்கிளை எடுத்து நேரே விட்டேன், அருகில் இருந்த‌ க‌ம்ப்யூட்ட‌ர் ட்ரெய்னிங் சென்ட‌ருக்கு!

அங்கேயே ப‌டித்து, பின்பு அங்கேயே ஒரு வேலையும் பெற்று, பின்பு ப‌டிப்ப‌டியாக‌ முன்னேறி இப்போது ஓர‌ள‌வு வாழ்வில் காலூன்றி நிற்க‌ முடிந்த‌து என்றால் அது நான் பாதை மாறி வ‌ந்த‌தால் தான்.
ஆனால், இப்போது ஒரு க‌ட்ட‌ட‌ப் ப்ளானைப் பார்த்தால் என்ன‌ ஏது என்று ஒன்றும் புரிய‌வில்லை. சுத்த‌மாக‌ எல்லாம் ம‌ற‌ந்து விட்ட‌து!

12 comments:

மாதவராஜ் said...

தீபா!

நீ எழுதியிருந்தது அனைத்தையும் மிக நெருக்கமாய் அறிந்திருந்தாலும்,
அப்போதெல்லாம் தோன்றாத விஷயங்கள் இப்போது உறைக்கின்றன.
தட்டிக் கொடுக்கத் தோன்றுகிறது.
முயற்சியும், புதியவைகளில் ஆர்வமும், தேடலும் இருந்தால்
வாழ்க்கை நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.

Deepa said...

நன்றி Uncle. ஆனால் நான் எழுத வந்ததை முடிக்க வில்லை.
என்னைப்போல் எத்தனையோ பேர் படித்த படிப்புக்குத் தொடர்பில்லாத வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நான்கு வருடங்கள் நான் படித்த தொழில்நுட்பப்படிப்பு வீண் ஆனது தான்.


நான் வேலையில்லாத கொடுமையினால் இத்துறைக்கு வந்தேன். ஆனால் டாக்டருக்கும் வகீலுக்கும் படித்து விட்டு, அதிக சம்பளத்துக்காகவும், அயல்நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புக்காகவும் எத்தனை பேர் எத்துறைக்கு வருகிறார்கள். இதனால் நம் நாடு அந்தந்த துறையில் உள்ள அறிவளர்களை இழக்கிறதே.

இத‌ற்கு என்ன‌ செய்ய‌ முடியும்? இத‌ன் முடிவு தான் எங்கே?

ஆயில்யன் said...

/ ஏம்மா சிவில் துறையையே பிடிச்சுக் கிட்டு இருக்கே. க‌ம்ப்யுட்ட‌ர் ப‌டிப்பு ஏதாவ‌து ப‌டி. ந‌ல்லா வ‌ருவே." //



உண்மைதான் அதுவும் நீங்கள் படித்து முடித்து வெளி வந்த காலத்தில் இருந்த கம்ப்யூட்டர் துறை மீதான பற்றுக்கள் மிக அதிகம் (ஆனாலும் அந்த நேரத்தில் கூட ஐடி துறை இந்தளவு பிரம்மாண்டம் அடையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்!)

இப்பொழுது சிவில் துறையிலும் நல்லதொரு முன்னேற்றம் பல கம்ப்யூட்டர் சார்ந்த பொறியாளர்களின் தேவை சிவில் துறையில் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது!

கம்யூட்டர் துறைக்கு ஆசைப்பட்டு சிவில் துறையினை துறக்க மனமின்றி,இப்பொழுது நல்லதொரு பணியில் (கம்ப்யூட்டர் படிச்சிருந்ததால) இருக்கிறேன்! அவ்வப்போது நினைத்து மகிழ்ந்துக்கொள்கிறேன் - எடுத்த முடிவு சரிதான் என்று :)

ஆயில்யன் said...

பெண்கள் சிவில் துறையில் - கொஞ்சம் தடைகள் அதிகம்தான்! ஆனால் போகப்போக அது கண்டிப்பாய் மாறும் வாய்ப்புக்கள் பிரகாசமாய் இருக்கிறது :)))

Deepa said...

//கம்யூட்டர் துறைக்கு ஆசைப்பட்டு சிவில் துறையினை துறக்க மனமின்றி,இப்பொழுது நல்லதொரு பணியில் (கம்ப்யூட்டர் படிச்சிருந்ததால) இருக்கிறேன்! //

மனமார்ந்த பாராட்டுக்கள்!

//பெண்கள் சிவில் துறையில் - கொஞ்சம் தடைகள் அதிகம்தான்! ஆனால் போகப்போக அது கண்டிப்பாய் மாறும் வாய்ப்புக்கள் பிரகாசமாய் இருக்கிறது :)))//
முற்றிலும் உண்மை.

gils said...

i can relate to this easily..naan maths padichitu maths teachera ponumnu aasapatu kadisila potti thatra velaiku vanten :) no regrets tho.

gils said...

india vida netherlandsla etho course iruku..athu panna nalla value sonanga
...neenga ipo en athu try panakudathu?? if u r financially secured..if u want i can get u details..or rather ungaluku inum easya kedaikum..its abt urban development..ipo semma hot topic athan kelvi paten. and athula neria ladies irukanga..some of my frnds frm newcollege,chennai who have done their b.arch are doing this course

Busy said...

I thing u missed ur Golden Opportunity, Because now a days Real estate is booming & sw/share market loss all the thing now to reduce man power in it, But in Civil its good opportunity,

Y girls dnt come to architect, but in Dubai most of the companies architectures r girls, !!

Whts ever past is past,

Best of luck for ur future!!

Deepa said...

Gils & Busy: You may be right. But I have moved on. Let's say I was not destined to be an architect or a Civil Engr.

And one more thing, I am not a hard-core s/w professional. My forte is "writing". I happen to do it for the IT field.

மே. இசக்கிமுத்து said...

படித்தவை கைகொடுக்கவில்லையென்றால் மற்ற துறைக்கு மாறுவது நடைமுறைதானே!

priyamudanprabu said...

/////
என்னைப்போல் எத்தனையோ பேர் படித்த படிப்புக்குத் தொடர்பில்லாத வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நான்கு வருடங்கள் நான் படித்த தொழில்நுட்பப்படிப்பு வீண் ஆனது தான்.
//////

சரியா சொன்னீங்க

வடுவூர் குமார் said...

பரவாயில்லை!மாற உங்களுக்கு நேரம் கிடைத்திருக்கு.
என்னை மாதிரி ஆளுங்க “விட்ட ரயில்” மாதிரியாகிப்போச்சு IT துறை.
சிங்கையில் பல பெண்கள் கட்டுமானத்துறையில் இருக்கிறார்கள்,ஏன் துபாயில்(இப்போது இருக்கும் இடத்தில்) ஒரு பொறியாளர் “பெண்” தான்.நம்மூரில் கொஞ்சம் கஷ்டம் தான் ஏனென்றால் ஆண்கள் மாதிரி 10 மாடி ஏறனும்,குரங்கு மாதிரி ஸ்டேஜிங் யில் ஓடனும் என்று எதிர்பார்க்கிற முதலாளிகள் இன்னும் நம்மூரில் இருக்கிறார்கள்.