Monday, May 16, 2011

மீட்சி

சரியாய் வரவில்லை என்று கசக்கி எறிந்த கவிதை ஒன்று
ஏதோ சிந்தனையின் இடையினிலே இடறியது
செதுக்காத சொற்கள், சமனில்லா வரிகள்...
முற்றுப் பெறவில்லை, முடியவும் வழியில்லை
ஆனாலும்...
எழுத வைத்த கணம் வந்து மின்னல் போல் வெட்டியது
சுருக்கங்கள் நீவி எடுத்து நினைவடுக்கில் சேமித்தேன்.

10 comments:

Chitra said...

எழுத வைத்த கணம் வந்து மின்னல் போல் வெட்டியது
சுருக்கங்கள் நீவி எடுத்து நினைவடுக்கில் சேமித்தேன்.


......அருமை.

ரிஷபன் said...

எழுத வைத்த கணம் வந்து மின்னல் போல் வெட்டியது

அந்த கணம் தான் கவிதை உயிர்த்த நேரம்..
அருமை..

ராமலக்ஷ்மி said...

அருமை.

ponraj said...

அருமையான நினைவுகள்!!!
அருமையான கவிதை!!!
அருமையான பதிவு!!!

பா.ராஜாராம் said...

ஹல்லோ,

தலைப்பு மட்டும்தாங்க கவிதை மாதிரி இருக்கு. ;-(

Deepa said...

நன்றி சித்ரா!
உங்க வெட்டிப்பேச்சைக் கேட்டு ரொம்ப நாளாச்சு.

நன்றி ரிஷபன்!
நான் ஒழுங்கா சொல்லாட்டியும் அழகா புரிஞ்சுகிட்டீங்க.

நன்றி ராமலக்ஷ்மி!
நீங்க பெங்களூரா?

ந‌ன்றி ராஜாராம்!
ஆமாம், இதுவும் நினைவ‌டுக்குக்குப் போக வேண்டியது தான். :-)))
உண்மையான விமர்சனத்துக்கு ரொம்ப நன்றி பா.ரா.

நன்றி ராஜ்!
:-)

கவி அழகன் said...

அருமையான கவிதை

சின்னப்பயல் said...

//சுருக்கங்கள் நீவி எடுத்து நினைவடுக்கில் சேமித்தேன்.//

ம்...நல்லாருக்கு..!

பா.ராஜாராம் said...

இல்ல. நேத்து அவசரப் பட்டுட்டுட்டேனோன்னு தோணுது தீபா. மேலும் தலைப்பை நீட்சி என அர்த்தம் பண்ணியதும் கூட காரணமாக இருக்கலாம். மறுவாசிப்பில், //எழுத வைத்த கணம் வந்து மின்னல் போல் வெட்டியது// இந்த வரிகள் 'மீட்சி' யை விளங்கத் தந்து.

good one! & sorry :-(

உண்மையான விமர்சனம் அல்ல. அவசரமான விமர்சனம். :-)

ராமலக்ஷ்மி said...

ஆம் தீபா. வசிப்பது பெங்களூரு:)!